வளரிளம்பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வளரிளம்பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜூலை, 2014

ஆறாவது படிக்கிற பையன் லவ் பண்ணினா தப்பா?

          




        அவன் அந்த சின்ன வயதில் எப்படி இவ்வளவு பெரிய மனுசத்தனத்தோடு இருக்கிறான் என வியப்பாய் இருக்கும். சத்துணவு உணமாட்டான். சீருடை தரமாட்டோம் என ஆசிரியர்கள் கோபம் கொண்டால் அமைதியாய் தலையை குனிந்து கொள்வான். மற்றவர்கள் போல நீயும் வாங்கி முடிந்த அளவு சாப்பிட்டுவிட்டு கொட்டவேண்டியது தானே? ஏன் திட்டு வாங்குற? என கேட்டால், சாப்பாட்டை வீணாக்குவது பெரிய பாவம். உணவை மதிக்காத வேலையை நான் செய்யமாட்டேன் என்று சொல்லாலே எனக்கும் ஒரு அறைகொடுத்தான். ஆனால் அவனது தோரணையே அவனுக்கு சில பிரச்சனைகளை தேடித்தந்தது. அவன் மீது சில டீச்சர்கள் மட்டும் எரிச்சலில் இருந்தார்கள்.