கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 ஏப்ரல், 2014

ஒரு ஐடியா சொல்லுங்க


"கதிர், முருகவேல், சுதாகர், ஸ்வேதா எல்லோரும் பிரசன்ட்டா?" என்றபடி வந்தான் தீபக். "எப்படீடா மச்சான் லேட்டா வந்தாலும் சின்சியர் மாதிரியே சீன்  போடுற?"  என்று கலாய்த்த கதிரை அசடு வழிய பார்த்துவிட்டு "மேட்டரைச் சொல்லுடா" என்றான் தீபக்.

ஞாயிறு, 2 மார்ச், 2014

உங்கள் உடையின் மூலம் என்ன சொல்லவிரும்புகிறீர்கள் ?

                                 திங்கள்கிழமை எனக்கு ரொம்ப பிடிக்கும். மனசுக்கு  பிடிச்ச வேலையே தொடங்க போறோம்னு ஒரு உற்சாகம். போன வாரம் கிளாசில் ரொம்ப லேட்டா வகுப்புக்கு வந்த விக்கி தயங்கி தயங்கி "மே ஐ கம் இன் மிஸ்"என்றான். ஒண்ணுமே சொல்லாமல் அவனை தலையில் இருந்து கால் வரை ஒரு லுக் கொடுத்தேன். குனித்து பார்த்து வேகவேகமாக தன் சட்டையின் முதல் பட்டனை போட்டுகொண்டு, சாரி மிஸ் என்றான். அவனை அனுமதித்து அட்டன்டன்ஸ் முடித்தவுடன் "மிஸ் மண்டே முதல் கிளாஸ் கதை சொல்லுங்க" என அகிலா ஆரம்பிக்க "ஆமா மிஸ் " என ஒரு கோரஸ் .

வியாழன், 12 டிசம்பர், 2013

நிலோ காத்திருக்கிறாள்

                    { இந்த கதை ஆனந்தஜோதி சென்ற ஆண்டு நடத்திய சிறுகதை போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு வாங்கித்தந்தது .}
                                                                                                                                                                                                                               
                                                                                                                                                                        சுற்றம் மறந்து பார்வை மாநாடு நடத்திக் கொண்டிருந்த கிரேக்க காதலர்களின் கோர்த்த விரல்களுக்கிடையே இருந்த இதய வடிவ கடிகாரத்தில் இரண்டு அம்புகளும், ஒன்றையொன்று முத்தமிட்டு மணி 12 என்றது. நிலோபர் செல்போனை எடுத்து மணி பார்த்தாள். அதுவும் மேசையில் இருந்த கிரேக்க கடிகாரம் சொன்னதைத்தான் வழிமொழிந்தது. நிலோ அந்தக் கடிகாரத்தில் ஒருபோதும் மணி பார்ப்பதில்லை. ரகு அதை பரிசளித்த நாளாய் அந்தக் காதலர்களை ரகுவும் நிலோவுமாக மாற்றும் கற்பனையிலேயே ஆழ்ந்துவிடுகிறாள்.


புதன், 28 ஆகஸ்ட், 2013

ஜெயாம்மாவும்,கண்ணன் கதையும்.


           இது ஒரு நட்புக்கு, நட்பான இதயத்துக்கு சமர்ப்பணம். ஒப்பனை மனிதனின் தெய்வம் எழுதியவள் கண்ணன் கதை எழுவது விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி போல் ஸ்டான்ட் என்று தோன்றலாம். ஆனால் அதற்கு முன் ஜெயாம்மா.
 

புதன், 21 ஆகஸ்ட், 2013

ஞாபகம் வருதே !ஞாபகம் வருதே !


                                                 இன்று என் பழையவீட்டை பார்த்து வர விருப்பம் மேலெழும்பியது.கருக்கலில் புறப்பட்டு விட்டேன் .முன்பிருந்த இடம் நகர நெரிசலின்றி அமைதி பூசியிருக்கும் .ஆனால் அங்கும் நெருக்கடி மிகுந்த போது அமைதிவேண்டிதான் இவ்விடம் விட்டு நகர்ந்தேன்.முதுமை பிராயத்தில் இயல்பாய்  எழும் பெரு விருப்பாய்  என் இளமை காலத்தில் வாழ்ந்த இடத்தை பார்க்க வேண்டும் என சிலநாட்களாய் ஏனோ வெகு விருப்பம்.
                  வானம் வெளுப்பதற்கு முன்பே கிளம்பிவிட்டேன் .வழக்கமான சந்தில் வளைகயில் நகரின் அசுர வளர்ச்சி பயத்தை கிளப்பியது.அதோ தெரிகிறதே அந்த இடம் தானா?குழம்பியவாரேதான் உள் நுழைந்தேன் .அதோ வேப்பமரம்!!.என் மண் வீடு இருந்த இடத்தில் இன்று பெரிய காரை வீடு!!.ஏதேதோ சிந்தனையில் உலன்றவாறு நின்றுகொண்டிருக்கும்போதே என் தலையில் பலமாய் ஒரு அடி.யாரோ கட்டையால் தாக்கிஇருந்தனர் .நான்  மயங்க தொடங்கினேன்.என் காதுகளில் அவர்கள் கூக்குரல் தேய்ந்து ஒலித்தது ''பாம்பு  ,பாம்பு "          
                                                   -கஸ்தூரி      




பி.கு
        இது காமெடி போல இருக்கலாம்.ஆனா உண்மையாவே நாம் மற்ற உயிர்களிடமிருந்து இப்படி தான் வாழ்விடங்களை பறிக்கிறோம்.