உங்கள் கவனத்திற்கு . டைனமைட் என்பது ஒரு வெடிபொருள் .என்ன ஒரு
வெடிமருந்தை கொஞ்சிக்கொண்டிருக்கிறேன் என்று பார்த்தீர்களா?பின்னே
கட்டுரையை படியுங்கள் உங்களுக்கும் பிடிக்கும். டைனமைடை கண்டுபிடித்தவர் ஆல்பிரெட்
நோபல் .இவர் பல வெடிமருந்துகளை கண்டுபிடித்திருந்தாலும் பொருளையும் ,புகழையும்
தேடிதந்ததென்னவோ டைனமைட் தான் .இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் இவரது
கண்டுபிடிப்புக்கு ஏக கிராக்கி .அப்புறம் என்ன காசு ,பணம்,துட்டு,மணி மணி தான்.
இந்த இரண்டாம் பருவம் தொடங்கும் போது வழக்கமான குறுஞ்செய்தியில் கூடுதலாக ஒரு தகவலை அனுப்பியிருந்தன பல ஆசிரியர் சங்கங்கள் .அது 'joy of giving week' கொண்டாட வேண்டும் என்பதே.அறிக்கை சமர்ப்பிக்க கோரப்படததால் பலரும் அதனை கவனித்தார்களா என தெரியவில்லை.