ஒரு வார்த்தை அது யாரால் சொல்லப்பட்டது என்பதைப் பொருத்து அர்த்தம் கொள்கிறது இல்லையா
அதுமனப்பாடப்பகுதி எனஅறியுமுன்னே எனக்கு மனனமாகத்தொடங்கிய முதல் பாடம் காலக்கணிதம். அர்த்தமுள்ள இந்து மதத்தைப் படித்துவிட்டு இறைமறுப்பாளரானRavi Annaravi ரவிசாரிடம் கருத்து மோதுவேன். சற்றும் அலட்டாமல் வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் வாசித்து விட்டாயா?என கேட்டுத் திகைக்க வைப்பார் அவர். என்னமனுசன்டா இந்த கண்ணதாசன்? இவரை நம்பி இப்படி போருக்குக் கிளம்பினோமே எனவெட்கிப்போன நாளில் அதற்கு "மாற்றம் எனது மானிடத் தத்துவம்;மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!" என நான்கே வரியில் கண்ணதாசன் இதே பாடலில் விளக்கம் தருவார்.இதெல்லாம் ஒரு பிழைப்பாஎனக் கேட்பீர்களா"கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;" என உங்களை மேலும் பதற வைப்பார்."நானே தொடக்கம்; நானே முடிவு;நானுரப் பதுதான் நாட்டின் சட்டம்!" என அவர் அந்த கவிதையைமுடிக்கையில் அந்த ஞானச் செருக்கு என்னை வியப்பின் உச்சியில் நிறுத்தியது. சரியாகச்சொல்வதென்றால் இந்த கவிதை ஒருகதைவடிவெனில் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடல் திரைக்கதை எனலாம். அந்தமுழுப்பாடலையும் பின்னூட்டத்தில் தருகிறேன். விருப்பம் உள்ளோர் படித்துக்கொள்க!உள்ளம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும் என்ற வரிகள் இன்று வாசித்தாலும் கமழ்கிறதில்லை!நிறை கேட்பாள் "ஐந்து, எட்டு என்றெல்லாம் எப்படித்தான் அம்மா அந்த காலத்தில் இதுபோலச் சிறிய வீடுகளில் குழந்தைகள் இருந்தார்கள்? கண்ணதாசனிடம் கடன் வாங்கித் தான் பதில் தருவேன் "மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம், வழியிருந்தால் கடுகுக்குள்ளேமலையைக் காணலாம்". எம்.எஸ்.வி மெட்டமைக்ககண்ணதாசன் காற்றின் தீராத பக்கங்களில்பிரமிளின் பறவையைப்போல்சிறகசைத்து இறகுதிர்த்துக்கொண்டேயிருக்கிறார் . அந்த பாடல்கள் ஒரு வேளை P.B.ஸ்ரீநிவாஸால் பாடப்பட்டிருந்தால் இது கண்ணதாசன் பாஷையில் சொன்னால்சர்க்கரைப்பந்தலில் பொழிந்திட்ட தேன் மாரி.காலையில் நண்பர்Prakash Shankar இற்றை ஒன்றில்அத்தியாவசிப்பணி ,அநாவசியப்பணி என ஒரு ஆங்கிலப்பத்திரிக்கை ஐந்து பணிகளை முறையே பட்டியலிட்டதைப் பகிர்ந்துநாயமரே என்றிருந்தார். அதில்அநாவசியப்பணியில் முதலிடம் Artist. அதாவது கலைஞன்! கண்ணதாசனின் பிறந்த நாளில் இப்படியொரு செய்தியா எனநொந்து வந்தது. வாழ்வின் விளிம்பு நிலை எப்படிக் கடந்தீர்கள் என்ற வினாவுக்கு,கைப்பற்றிக் கரையேற்றியதாகசொர்ணலதாவையோ , இளையராஜாவையோ, வடிவேலுவையோ காட்டுபவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். என்வரையில் என் அம்மா தன்கடைசிக் காலங்களில்ஆஸ்துமாவால் அவதிப்பட்டு இரவெல்லாம் இருமிய படியிருப்பார்.ரெயின் போ பண்பலையில்தேன்கிண்ணம் தொடங்கும்.பதினோரு மணிக்கு உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பதுஎன சீர்காழி பாடத்தொடங்குகையில்நகைமுரணாய் பைய என் அம்மா தூங்கத்தொடங்குவார். இதோமகிக்குக்கூட பிடித்துத்தான் இருக்கிறது கண்ணதாசனின்கடைசிப் பாடலான கண்ணே கலைமானே!உனக்கே உயிரானேன்... எந்நாளும்எனை நீ மறவாதே என்ற வரிகளை நான் பாடும் போதெல்லாம்,நெற்றியில் முத்தமிட்டு அந்த பாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறாள் மகி!ஆம் கவியரசே நீங்கள் புவியில்புகழுடைத் தெய்வம் தான்!