சில சமயங்களில் இப்படி நிகழ்ந்து விடுவதுண்டு. பெருநகர மழை என்றொரு வார்த்தை என் புத்திக்குள் இருந்து கொண்டு என் எல்லா கவிதைகளில்
தலை நீட்ட தொடங்கியது சில காலமாய். பின் அதன் தொந்தரவு தாங்காது அதற்காகவே ஏதேனும் எழுதிவிடலாம் என தோன்றிய நாளில், காத்திருந்த தென்றலாய் பேனாவை தழுவிது இக்கவிதை!?
கை நீட்டி களித்திருக்க
உழவர் பெற்ற மக்கள் இல்லை
காகிதத்தில் கப்பல் விட
முற்றம் வைத்த வீடு இல்லை
ஓய்ந்தபின்பு பார்த்திருக்க
ஒளிர்பச்சை இலைகள் இல்லை
சாலை எங்கும் நீர் பெருக
சாக்கடையும் அடைத்துக்கொள்ள
வேலைநாளில் வந்துவிட்ட
வேண்டாத விருந்தினர் போல்
வெறுப்புக்கும், சலிப்புக்கும்
ஆளாகிறது -பெருநகரில் என்
விருப்ப மழை நாட்கள் !!
மீள்பதிவு தான் மேலும் வருத்தத்துடன்......