கடிகாரச்சுற்றாய் தமிழ் எழுத்துக்களும்
எதிர்ச்சுற்றாய் ஆங்கிலமும்
இரண்டும் கலந்து எண்ணுருக்களும்
என சக்கரவியூகத்தில் சிக்கிய மகிகுட்டி
வீட்டுப்பாட ஏட்டை மூடுகையில்
கூர் நகம் மழுங்கி
கோரைப்பல் சீராகி
உருத்திய விழியும்
துருத்திய நாக்கும் நிலைபெற
இயல்பு நிலைக்கு மீள்கிறது
அவளது குழந்தைமையும்
எனது தாய்மையும் !!
வீட்டுப் பாடத்தின் நிதர்சனம் - எத்தனை பயங்கரம்!..
பதிலளிநீக்குதாயும் சேயும் இயல்பு நிலைக்குத் திரும்பியமை குறித்து மகிழ்ச்சி!..
மகி குட்டியின் சித்திர எழுத்துக்கள் என் கண்களில் தெரிகிறது !
பதிலளிநீக்குத ம 1
இயல்பு நிலைக்கு மீள்கிற க்ஷணம்
பதிலளிநீக்குஇனிமை கொள்கிறது..கவிதையாய்..!
சிறந்த கருத்துப் பதிவு
பதிலளிநீக்குதொடருங்கள்
//அவளது குழந்தைமையும் எனது தாய்மையும்//நல்ல உவமானம் வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குதாய்க்கும், மகளுக்கும் உள்ள நிலைப்பாடு.
பதிலளிநீக்குஎனது பதிவு ''விசித்திகன்''
அடடா வீட்டுப்பாடம் செய்யும் நேரத்தில், வீட்டுப்படதோட சேர்த்து manicure, orthodontist அப்பாய்ண்ட்மெண்ட்ஸ் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் முடித்துவிட்ட மகி, சமர்த்துதான்!! :)
பதிலளிநீக்குஅவ யார் மாதிரி சமர்த்து? அம்மா மாதிரியா? இல்லை அப்பா மாதிரியா?னு எனக்குத் தெரியலை. :)
அம்முக்குட்டி என்னே கற்பனை! என்னே வார்த்தை பிரயோகம்.
பதிலளிநீக்குஎங்கு கற்றுக்கொண்டாயம்மா இக் கலையை. தொடரட்டும் தொடரட்டும்! அசத்தல் கலை. வாழ்த்துக்கள் ....!
அருமை சகோதரியாரே
பதிலளிநீக்குஅருமை
தம 4
பதிலளிநீக்குஹப்பா ஒரு வழியா மகிக் குட்டியோட உட்கார்ந்து ஹோம்வொர்க் முடிச்சீங்களா?!!! பாவங்க..மகி....நீங்க டீச்சரா இருக்கலாம்....அதுக்காக மகிக்குச் சக்கரவ்யூகம் எதுக்குங்க? வெளில விட்டுருங்க.....இதுக்குத்தான் நாங்கல்லாம் பிள்ளைங்களுக்கு வீட்டுப்பாடமே கொடுக்கறது இல்ல....கொடுத்தாலும் செய்யப்போறதில்லைங்கறது வேற விஷயம்...எல்லாம் நம்ம தோளுக்கு மிஞ்சினவங்க...
பதிலளிநீக்குவூட்டுபாடம் தர மாட்டீங்களா? எந்த மகா ராஜனே நான் படிக்கும் போது நீங்கள் எவ்விட போயி..ஞான் உங்கலண்டை க்ளாலில் படிக்க வேண்டும் என்று என் மனதில் ஆசை வந்து... அந்த ஆசையை எந்த குருவாயுரப்பன் தான் வந்துதான் நிறைவேத்தி தரணும்
நீக்கு
நீக்குநாம சின்ன புள்ளையாய் இருக்கும் போது ஹோம்வொர்க் பண்ணாம தப்பி வந்தாச்சு ஆனா இப்ப நம்ம புள்ளைங்களுக்கு ஹோம் வொர்க் தராங்க அதை நாமும் அவர்கள் கூட சேர்ந்து பண்ண வேண்டியிருக்கிறது
ஹாஹாஹாஅ...வரு மோனே இப்போழ்தும் நிங்கள் வராமல்லோ...எண்ட க்ளாசினு....ஆனா என்ன க்ளாஸ் செம சிரி க்ளாஸா ஆகிடும்....ஹெட்மாஸ்டர் அப்புறம் நம்ம ரெண்டுபேரையும் துரத்திடுவாரே.....ஹோம்வொர்க் கொடுக்கில்லா...பக்ஷே பரீஷையிலு ஞானு மார்க் கொடுக்குன்னது ரேஷன் போலியாணு....
நீக்குஅப்ப நீங்கல்லாம் ப்ரைவட் ஸ்கூலு......அதான்...பின்னிருக்காங்க.....
படிச்சதும் கவர்ன்மென்ட் ஸ்கூலு......தேனி கிராமத்துல.....இப்ப வேலை செய்யறது.....எய்டட் ஸ்கூல்ல.....
நான் படித்தது கவர்மென்ட் ஸ்கூலில் அல்ல கார்போரேஷன் ஸ்கூலிலும் மதுரைக்கல்லூரி ஹையர் செகண்ட்றி ஸ்கூலிலும்தான் சாரே
நீக்குஅப்பாடா...?
பதிலளிநீக்குவீட்டுப்பாடம் ஓர் அரக்கனாய் துன்புறுத்துவதை அழகாக சொன்னீர்கள்! அருமை!
பதிலளிநீக்குகாட்சி கண் முன் விரிகிறதே..ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை தோழி!
பதிலளிநீக்குத.ம.6
சக்கர வியூகம்... தலைப்பே கவிதை மைதிலிம்மா சின்ன வயசுல கணக்கு வீட்டுப் பாடம் செய்யறப்பல்லாம் எனக்கு எரிச்சல் வரும். எவன் எவ்வளவு புளி வாங்கினா எனக்கென்ன...? தின்னுட்டுப் போய்த் தொலையட்டுமே... இதைல்லாம் நான் கணக்குப் போட்டுச் சொல்லணுமா இவங்களுக்குன்னு (மனசுக்குள்ள) திட்டிக்கிட்டே முடிப்பேன். குழந்தைமையும் தாய்மையும் திரும்பினன்னு சொன்னது அபாரம்.
பதிலளிநீக்குஅருமை.....
பதிலளிநீக்குதாய்க்கும் மகளுக்கும் ஒரு பெரிய போராட்டமே நடக்கும் வேளை அது...... எல்லா வீட்டிலும்! :)
வீட்டுப்பாடத்தை பற்றி, அப்பப்பா என்னமா ஒரு கவிதியாயில் சொல்லியிருக்கீங்க!!!
பதிலளிநீக்குநீங்க விஜய் டீவியின் மகாபாரதத்தை விடாம பார்க்கிறீங்கன்னு தெரியுது (தலைப்பை சொன்னேன்!!)
கவிதையை பாராட்ட மறந்துவிட்டேன்.. நேரமில்லாததால் இனியாவின் வார்த்தைகளை நான் இங்கு வழிமொழிகிறேன் ஹீ.ஹீ எ
பதிலளிநீக்குன்னே கற்பனை! என்னே வார்த்தை பிரயோகம்.
எங்கு கற்றுக்கொண்டாயம்மா இக் கலையை. தொடரட்டும் தொடரட்டும்! அசத்தல் கலை. வாழ்த்துக்கள் ...
நாங்கெல்லாம் ஸ்கூலில் பிட்டு அடிச்சு பாஸானவங்களாக்கும்
ஐய்யய்யோ...நாங்களும் உங்க கவிதையை பாராட்டாம வந்துட்டோம்....செம கவிதைங்க.....//இயல்பு நிலைக்கு மீள்கிறது
பதிலளிநீக்குஅவளது குழந்தைமையும்
எனது தாய்மையும்// ரசித்த வரிகள்.....
உங்ககிட்ட நாங்கல்லாம் பிச்சை வாங்கணும்க.....எழுதறுதுக்கு.....ம்ம்ம்
கடைசி வரிகள் அருமை.....
பதிலளிநீக்குவீட்டுபாடம் .... ஹா. ஹா .. கலக்கிட்டிங்க
பதிலளிநீக்குவீட்டுப்பாட கொடுமையுடன் தமிழ், ஆங்கில குழப்பத்தையும் மிக அருமையான கவிதையாக கொடுத்துள்ளீர்கள் !
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
வணக்கம்
பதிலளிநீக்குஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/09/ladies-special.html?showComment=1409788509683#c5894648943052542591
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சர அறிமுகம்,,வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு