களவு கொடுத்தலும், களவாடுதலும்
வாடிக்கை தான் நமக்கு !!
களவுப்பொருளை பதுக்கும் இயல்போடு
விழி விளிம்பில் ஒளித்துவைப்பாய்
அந்தமந்திரப்புன்னகையை
மனத்திரையில் தீட்டி
தேடுவதாய் நானும்
தொலைந்த பொருளுக்கு
வருந்துவதாய் நீயும்
அரங்கேற்றுவோம்
ஒரு அழகியநாடகத்தை !!
எத்தனையோ முறை
நீ பதைபதைத்தும்
காட்டிக்கொண்டதே இல்லை
நான் களவு கொடுத்ததையும்
சமயங்களில் களவாடியதையும் !!
வாடிக்கை தான் நமக்கு !!
களவுப்பொருளை பதுக்கும் இயல்போடு
விழி விளிம்பில் ஒளித்துவைப்பாய்
அந்தமந்திரப்புன்னகையை
மனத்திரையில் தீட்டி
தேடுவதாய் நானும்
தொலைந்த பொருளுக்கு
வருந்துவதாய் நீயும்
அரங்கேற்றுவோம்
ஒரு அழகியநாடகத்தை !!
எத்தனையோ முறை
நீ பதைபதைத்தும்
காட்டிக்கொண்டதே இல்லை
நான் களவு கொடுத்ததையும்
சமயங்களில் களவாடியதையும் !!
“தேடுவதாய் நானும்
பதிலளிநீக்குதொலைந்த பொருளுக்கு
வருந்துவதாய் நீயும்“
ம்...ம்... நடக்கட்டும்
உணர்வுகளை மென்மையாகச் சொல்ல ஒரு தனித்திறன் வேண்டும் பா.
உனக்கது இயல்பாய் இருக்கிறது. அதனால் உலகத்தையே புரட்டி நடத்தும் உணர்வுகளையும் மெல்லிசாய்ச் சொல்ல முடிகிறது. மலரினம் மெல்லிது!... “களவு“ன்னு வச்சாம்பாரு நம்ம தாத்தன்மார்! பெரிய களவாணிக தானே?
அண்ணா இத்தனை பணிகளுக்கு நடுவே எழுதியதே நீங்கள் தந்த உற்சாகத்தில் தான் அண்ணா! நேற்று உங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசநேர்ந்தபோது அவங்க சொன்னாங்க. உன்னை மட்டும் இல்ல , எப்படியே என்கரேஜ் பண்ணி அவரு ஒரு நூறு பேரையாவது வளர்த்திருப்பார்ப்பா என்று. ஸ்பெஷல் தாங்க்ஸ் அண்ணா!
நீக்குஅழகியநாடகத்தை ரசித்தேன்...
பதிலளிநீக்குநன்றி அண்ணா!
நீக்குஆக, காவல்துறைக்கு வேலை இல்லாமல் பண்ணீட்டீங்க போல! ரொம்ப பெரிய மனசுதான் "ரெண்டு பேருக்கும்"! நல்லாயிருங்கப்பா "திருட்டுப் பசங்களா"!
பதிலளிநீக்கு\\இதை பார்த்து சிரிப்பு அடக்கவே முடியவில்லை. சொன்ன விதம் நன்று nice ரசித்தேன் //
நீக்குஎப்டி வருண் சகா, ரெண்டு மொழியிலும் இவ்ளோ friendlyயா கருத்து சொல்லமுடியிது:)) நன்றி சகா!!
நீக்கு///காட்டிக்கொண்டதே இல்லை
பதிலளிநீக்குநான் களவு கொடுத்ததையும்
சமயங்களில் களவாடியதையும் !!////
எல்லோரும் இப்படிதான் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றனர்...
நல்ல கவிதை
ஜெமினி, கமல், சிம்புவுக்கு பின் நீங்கதான் வலை உலகில் ஒரு talk இருக்கே. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்:)
நீக்குநானும் கவிதை படிச்சுட்டேன் ,....நானும் கவிதை படிச்சுட்டேன்
பதிலளிநீக்குஇதை ஆத்தா நான் பாஸாகிட்டேன் என்ற சினிமா வசனம் போல படிக்கவும்
ஹப்பா! ஒரு வழியா கவிதை படிசிட்டார்பா. நன்றி சகா!
நீக்குஅடடா, என்னமா ஒரு மென்மையான கவிதை.
பதிலளிநீக்குஇந்த நாடகத்தை நானும் பார்த்துட்டேன்.
எத்தனையோ முறை
நீக்குநீ பதைபதைத்தும்
காட்டிக்கொண்டதே இல்லை
நான் களவு கொடுத்ததையும்
சமயங்களில் களவாடியதையும் !!
என் அம்மு ரொம்ப சுட்டி தான். களவாணிப் பொண்ணு காட்டி கொண்டதே இல்லை.
வர வர ரொம்பவே அசத்திறீங்கம்மா . எப்படி எல்லாம் சித்தனை துளிர் விடுகிறது அம்முவுக்கு. வாழ்த்துக்கள் ....! வாழ்த்துக்கள் ....!
அச்சச்சோ! பார்த்துடீங்களா! நன்றி சகோ அண்ட் செல்ல இனியா!
நீக்குஇனிய தோழி!...
பதிலளிநீக்குகொடுத்த களவு! எடுத்த கணக்கு!
தொடுத்த உணர்வின் தொகுப்பு!
இத்தனை இலகுவாக இயல்பாக எழுத
உங்களால்தான் இயலும்... மிக மிக அருமை!
ரசித்தேன்!... நிறைத்தேன் நெஞ்சத்தில்...
வாழ்த்துக்கள் தோழி!
கவிதைக்கு கவிதை அட்டகாசம் தோழி! பொழுது கிடைக்கவில்லை! உங்களிடம் பேச நிறைய இருக்கு தோழி! விரைவில் chatவோம்:))
நீக்குஅழகான உணர்வுகள். வெளிப்படுத்தப்பட்ட விதம் மிகவும் மென்மை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி அய்யா!
நீக்குஆளுக்காள்
பதிலளிநீக்குகளவெடுப்பதும் களவுகொடுப்பதும்
காட்டிக்கொடுக்காமல்
அவரவர் அன்பை ஆய்வு செய்யவா?
ஒ! கண்டுபிடுச்சுடீங்களா !!! நன்றி அய்யா!
நீக்குஅருமை.....
பதிலளிநீக்குஅழகான நாடகம்! அதில் தான் எத்தனை அன்பு....
நன்றி வெங்கட் அண்ணா!
நீக்குரசிக்க வைத்தது கவிதை. சூப்பர்மா.
பதிலளிநீக்குநன்றி பாலா அண்ணா!
நீக்குகளவுக்கோர் கவிதையா ? அருமை.
பதிலளிநீக்குசகோதரி எனது பதிவு தற்போது ''எனக்குள் ஒருவன்'' படிக்க என வேண்டுகிறேன்
நன்றி சகோ ! ஒரு நாள் டைம் குடுங்க ப்ளீஸ்!!
நீக்குகளவும் கற்று மற என்று இதற்குத்தான் சொன்னார்களா ?
பதிலளிநீக்குத ம 1 2 3 4 5 6 முக்கியமான என் ஏழாவது வாக்கு !
உங்களுக்கு என் நன்றி ,காண்க >>>http://www.jokkaali.in/2014/07/blog-post_8.html
நன்றி பாஸ்! ஒரு நாள் டைம் கொடுங்க ப்ளீஸ்!
நீக்குகளவாடிவீட்டாய் என்னை
பதிலளிநீக்குஹை! அம்மா வந்துட்டாங்க!! நன்றி அம்மா!
நீக்குநல்ல பொழுதுகள்!!
பதிலளிநீக்குவாழ்த்தக்கள் தோழி.
நன்றி தோழி!!
நீக்குஅற்புதம்
பதிலளிநீக்குமனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்குக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி அய்யா, தம விற்கும்.
நீக்குtha.ma 8
பதிலளிநீக்கு//தேடுவதாய் நானும்
பதிலளிநீக்குதொலைந்த பொருளுக்கு
வருந்துவதாய் நீயும்
அரங்கேற்றுவோம்
ஒரு அழகியநாடகத்தை !!// அழகு நாடகம்..அருமை தோழி..வாழ்த்துக்கள்!
த.ம.9
நன்றி கிரேஸ்! போன பதிவிற்கே உங்களுக்கு thanks சொல்ல நெனச்சேன். நிஜமாவே பிஸி:(( சாரி டா:( and thanks :)
நீக்குஅருமையான அழகிய கவிதை.நன்றி சகோதரியே
பதிலளிநீக்குதங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்!!
நீக்குthanks
பதிலளிநீக்குமௌனமான நேரம்
பதிலளிநீக்குமௌனமாக ஒரு காதல் நாடகம்
மௌனமாக அரங்கேறியது!
மிகவும் ரசித்தோம்!
//தேடுவதாய் நானும்
தொலைந்த பொருளுக்கு
வருந்துவதாய் நீயும்
அரங்கேற்றுவோம்
ஒரு அழகியநாடகத்தை !!
நீ பதைபதைத்தும்
காட்டிக்கொண்டதே இல்லை
நான் களவு கொடுத்ததையும்
சமயங்களில் களவாடியதையும் !
இந்தப்பதிவைக் க்ளிக்கிய போது கணினியின் நினைவாற்றல் மங்கிப்போனதால் கஸ்தூரி அவர்களின் செல்ஃபோன் கவிதைக்கு வழி காட்டிச்சு.....கவிதை...கிடைக்க....ஆஹா நினைவு தப்பினாலும் நம்ம கம்ப்யூட்டர் ஒரு நல்ல கவிதைய காமிச்சுருக்கேனு அதை ரொம்பவே ரசித்தோம்!!!! கணினியின் அல்ஜிமர் வாழ்க!
நன்றி சகா! நான் கூட நினைத்தேன் ஏன் இப்டி கமென்ட் போடீங்கனு:)) கஸ்தூரி என்கிற பேரில் கவிதை எழுதியது நான் தான்:)) அவர் என் pet name மது என்கிற பேரில் எழுதுறார். ரொம்ப குழப்புகிறோமோ?:))
பதிலளிநீக்குரசித்து 2முறை வாசித்தேன். அழகான கவிதனை நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
பதிலளிநீக்குகளவும் கற்று மற, என்பதின் அர்த்தமே இன்றுதான் புரிந்தது. அது சரி... இது களவாடியா இதயங்கள் தானே.. எப்படி பொழுது ஆகியது? ஒ.. ஒருவேளை இதயமே ஒரு பொழுதோ?
பதிலளிநீக்குகளவாடிய பொழுதுகள் ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குஅருமை.
ரசித்தேன்
பதிலளிநீக்குமகிழ்ந்தேன்
நன்றி சகோதரியாரே
தம 11
பதிலளிநீக்கு“ பூக்களும் வண்ணத்துப் பூச்சியும் “
பதிலளிநீக்கு.................................................................
..........................................................................
கவிதையை உணர்ந்தேன்!
அருமை சகோதரி!
வலைச்சரத்தில் தங்களைக் கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து படிப்பேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குwww.drbjamblingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
நாடகம் நன்றாக இருந்தது.... ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி
பதிலளிநீக்குகவிதை அருமை.
பதிலளிநீக்குவலைச்சரம் வழியே தங்கள் வலையை அறிந்ததில் மகிழ்ச்சி.
வாழ்க நலம்..
பதிலளிநீக்குஅன்புடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி..
தங்களின் எழுத்தில் - எண்ணங்களின் உயர்வு தெரிகின்றது..
அபிராமவல்லி என்றென்றும் துணையிருப்பாளாக!..
வாழ்க பல்லாண்டு!..
//காட்டிக்கொண்டதே இல்லை
பதிலளிநீக்குநான் களவு கொடுத்ததையும்
சமயங்களில் களவாடியதையும்!..//
அழகிய சொல்லாட்சியுடன் மனம் கவர்கின்றது - கவிதை..
உங்கள் கவிதைகளின் ரசிகராகி விட்டேன். தேர்ந்த கவிஞரால் மட்டுமே இப்படி எழுத முடியும். பாராட்டுக்கள்
பதிலளிநீக்குபொதுவாக பெண்கள் இதுபோன்ற கவிதைகளை எழுதும்போது ஆண்கள் மனநிலையில் உள்ளது போலவே எழுதுவார்கள். அல்லது பெண்ணிலையை உரைப்பதாக அமையும் ஆனால் இந்தக் கவிதை அப்படி இல்லமல் இருபாலரின் மனநிலைக்கும் பொருந்துகிறது.
சகோதரி,
பதிலளிநீக்குமுத்துநிலவன் அய்யா அவர்களின் பின்னூட்டத்தை படித்த பிறகு நான் சொல்ல ஒன்றும் இல்லை என தோன்றிவிட்டது !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr