புதன், 3 செப்டம்பர், 2014

தங்கமீன்களில் அப்படியென்ன சிறப்பு?

    நோட்டுல நான் நோட் பண்ணிய சில விசயங்கள் :)



    
            பாடக்குறிப்பேடு என சொல்லபடுகிற நோட்டுகள் என்றவுடன் ரெண்டுவரி, நாலு வரி தான் முன்பு நினைவுவரும். பரிணாம வளர்ச்சி அடைந்து ரூல்டு மேலும் வளர்ச்சி பெற்று அன்ரூல்டு என கடந்து கிராப், காமெண்டரி எப்போவரும் என ஆசையை இருக்கும். ஏன்னா அப்போல்லாம் அந்த ரெண்டு நோட்டுகள் மட்டும் தான் மெல்லிய அட்டையோடும், அழகிய படங்களோடும் வரும். 
                            இந்தியா உலககோப்பையை வென்ற அந்த ஆண்டு மட்டும் சச்சின் அட்டைபட நோட்டுக்கு அத்தனை கிரேஸ் (இது சச்சின் கவிதை -விருப்பம் இருந்த சொடுக்குங்க) நல்ல வாசகங்களோடும், படத்தோடும் இருக்கும் நோட்டுக்காக அவ்வளவு மெனக்கெடுவோம். அந்த நோட்டுக்களை பையில் இருந்து எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டே இருப்போம். அதற்கு ரேப்பர் என்கிற ப்ரௌன் ஷீட் போடச்சொல்லி டீச்சர்கள் வேறு பாடாய் படுத்துவார்கள். பின்  கடைசியாய் "நாளைக்கு கவர் போடாமல் வந்தா உன் ஷாலை (பசங்களுக்கு சட்டையை) கழட்டி அதற்கு மாட்டிருவேன் "என டீச்சர்கள் உறுமியதும்  வேண்டா வெறுப்பாய் அட்டை போடுவோம்.

     இப்பவும் கூட லெசன் ப்ளான் நோட்டு வாங்கும்போது ஆசை ஆசையாய் அட்டை பார்த்துவாங்கி, ஆனால் வாங்கின கையோடு ரேப்பர் போட்டு விடுகிறேன். அப்போ தானே என் மாணவர்கள் அதை செய்வார்கள். நேத்து நிறைக்கு நோட்டு  வாங்கப்போனேன்.  சேல்ஸ் கேர்ள் என் மற்றுமொரு இனிய தோழி (யாரு தான் உன் பிரெண்ட்  இல்ல!?) கொஞ்சம் நேரம் எடுத்து, எனக்காக ஒரு நோட்டை தேர்வு செய்தாள். இப்போ தான் சின்ன நோட்டு கூட காலேஜ் நோட்டு என்கிற மெல்லிய அட்டையோடு வருதே. ஆனால் அவள் தேர்வு செய்த அட்டையில் இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. அட்டை முழுக்க சிவப்பு ரோஜாக்களோடு அருமையான ஒரு வாசகம்.

   GOOD THINGS COME TO THOSE WHO WAIT

    BUT 
   
  THE BEST THINGS COMES TO THOSE WHO DO

ஓய்வு நேரத்தில் மாணவர்களிடம் திருத்தம் செய்ய வாங்கும் நோட்டின் அட்டைகளில் அச்சடிக்கப்  பெற்றிருக்கும் சுவாரஸ்யமான தகவல்களையும் குறித்து வைத்துகொள்வதுண்டு. அதில் சில தகவல்கள்

1. கொசுவுக்கு மொத்தம் நாற்பத்தி ஏழு பற்கள் உண்டாம்.

2.புலியின் மேல் உள்ள ரோமங்கள் மாத்திரம் அல்ல  தோலே வரிவரியாகதான் இருக்குமாம்.

3.நட்சத்திர மீன்களால் தன் வயிற்றுப்பகுதியை அப்படியே வெளியேயும் உள்ளேயுமாய் திருப்பிக்கொள்ள முடியுமாம்..

4.உயிர்களிலேயே தங்கமீன்களால் மட்டும் தான் புற ஊதா மற்றும் அக சிவப்பு என்று இரண்டு கதிர்களையும் பார்க்கமுடியுமாம்.

இனி நோட்டு வாங்கும் போது நோட் பண்ணி வாங்குவீங்கனு நினைக்கிறேன்:)


15 கருத்துகள்:

  1. நானல்லாம் நோட் வாங்கும் போது பக்கத்தில் நோட் வாங்கும் பெண்களை மட்டும் நோட் பண்ணுவேன்...

    பதிலளிநீக்கு
  2. டுமில் 2 அதுதாங்க தம 2 சுட்டுட்டேன்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    நல்ல விடயங்களை தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்.
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. நோட்டைப் பார்த்து நோட்டிலே நோட்ஸ் எடுக்கும் நோட்டபில் ஆசிரியை.... ஆஹா!! ப்ளோல வந்துடுச்சு :)
    உங்கள் இனிய குணத்தினால் அனைவரும் உங்கள் நட்புகளே!
    ஒரு சந்தேகம் டீச்சர், பிள்ளைகளின் ரேப்பரைப் பிரித்துப் படித்துவிட்டு மீண்டும் போட்டுவிடுவீர்களோ? ;) ஹாஹா
    ரொம்ப பொறுமை உங்களுக்கு
    த.ம.4

    பதிலளிநீக்கு
  5. இனிய நினைவுகள்.... நான் படிக்கும்போது இத்தனை அழகாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதில்லை. Plain ஆக இருக்கும், கீழே Chithra Paper Works, Panruti என்று போட்டிருக்கும்! :(

    சில வருடங்களுக்குப் பிறகு வந்த நோட்டுகளைப் பார்க்கும் போது வாங்க ஆசை வந்ததுண்டு!

    இப்போது எனக்காக நோட்டு வாங்கும் அவசியம் இல்லை! மகளுக்கு வாங்குவதோடு சரி. அதுவும் பள்ளியிலேயே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் சார். 50 வருடங்களுக்கு முன்பு நீங்கள் படித்தபோது, இந்த மாதிரி அழகான நோட்டுக்கள் இருக்காது தான்.

      நீக்கு
  6. ரசித்தோம்.....

    நோட்டு வாங்கும் போது நாங்களும் பார்த்து வாங்குவதுண்டு.....ரசித்து....classmate notebooks அப்படித்தான் வருகின்றன....நல்ல வாசகங்களுடனும், நல்ல படங்களுடனும், பொது அறிவுத் தகவல்களுடனும்....

    எங்களிடம் உள்ள ஒரு க்ளாஸ் மேட் நோட்னுக்கிலிருந்து....The smell of lemons may help you concentrate.....

    அப்போ நம்ம க்ளாஸ்ல பசங்க கான்சென்ட்ரேட் பண்ணலனா லெமன் கொடுத்துடலாமோ?!!!!

    The total combined weight of the world"s ant population is heavier than the weight of the human population...

    அப்போ எறும்புப் படை வந்துச்சுனா நாம்மள பொட்டுத் தள்ளிடும் போல....அதோ கதிதான்.....

    Salt was highly pried by the Romans...So much so that soldiers were sometimes paid in salt...And that's where the word "salary came from....

    ரோமன்ஸ் அப்போ உப்பு அதிகம் சேர்த்துக்குவாங்களோ?!!!!பி.பி.??!!!

    Long distance swimmers eat while they are in the water to keep up their energy levels.

    The only parts of your body that have no hair are our lips, palms and soles of our feet...

    India's contribution to the world inclues the decimal system and subjects like calculus, algebra and geometry.


    பதிலளிநீக்கு
  7. எல்லாவற்றையும் நோட் பண்ணி கொண்டே நடக்கு தில்ல இந்த பொண்ணு படு சுட்டி எத்தனை வகையான நுணுக்கமான விடயங்களையும் எடுத்து வந்திடும் இந்த அம்முக்குட்டி எமக்காக. வாழ்த்துக்கள் செல்லம் ...! keep it up !

    பதிலளிநீக்கு
  8. ****ஓய்வு நேரத்தில் மாணவர்களிடம் திருத்தம் செய்ய வாங்கும் நோட்டின் அட்டைகளில் அச்சடிக்கப் பெற்றிருக்கும் சுவாரஸ்யமான தகவல்களையும் குறித்து வைத்துகொள்வதுண்டு. அதில் சில தகவல்கள்****

    நல்ல டீச்சர்னா இப்படித்தான் இருக்கணும். தான் சொல்லிக்கொடுக்கும் பாடத்திற்கு இணையாக மாணவர்களிடம் இருந்து நெறையா தானும் கத்துக்கொண்டு அதை எங்களிடமும் பகிர்ந்து கொள்ளணும்.

    கொசுவின் பற்கள் பற்றி வேற யாராவது சொல்லியிருந்தால் நம்பி இருக்க மாட்டேன்.

    புலியின் தோலில் உள்ள வரிகள், மீன்களின் சிறப்புத்த்ன்மைகள் பற்றி எல்லாம் நீங்க படித்து சொல்வதிலிருந்துதான் தெரிந்து கொள்கிறேன்.

    இதிலிருந்து தெரிவதென்னவென்றால்..வருண் கற்றது கைமண் அளவில் ஒரு "டைனி அமவ்ண்ட்" தான் இருக்கும்போல இருக்கு! :)

    பதிலளிநீக்கு
  9. நானும் நேற்றுதான் இதைப் போன்ற வாசகத்தைப் படித்தேன் ...மூளையின் திறனில் பத்து சதம்தான் நாம் பயன்படுத்திக் கொள்கிறோமாம் !
    இப்படிப்பட்ட செய்திகளையும் பதிவாக போட முடியும் என்று நீங்கள் நிரூபித்து இருப்பதால் ,மூளையின் திறனை நீங்க கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்துறீங்கன்னு போலத் தெரிகிறது !
    த ம 8

    பதிலளிநீக்கு
  10. நோட் நிறைய எல்லாம் வாங்குவது - நிறைய வருடங்கள் ஆகிவிட்டன. தேவைக்கு எப்போதாவது வாங்குவது. இனி இது போல் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

    நன்றி. வாருங்கள் என் பக்கமும்.

    பதிலளிநீக்கு
  11. அதானே பார்த்தேன் எங்கே நம்ம டீச்சர் மட்டும் அட்டை போட வேண்டாம்னு சொல்லுவாங்களோன்னு ??? இப்பொழுது நோட்டுகளின் பின் புறம் ஒரு மினி தகவல் களஞ்சியமும், முன் புறம் அழகழகான படங்களும் போட்டு வருகின்றன. அந்த வோர்ல்ட் கப் நோட் (2007) இன்னும் வைத்திருக்கிறேன்.செம கலர் புல்லா இருக்கும்....பதிவு அருமை சகோ,

    பதிலளிநீக்கு
  12. "//(யாரு தான் உன் பிரெண்ட் இல்ல!?) //" - இப்படியெல்லாம் ஒரு பிட்டை போட்டா, நீங்க ரொம்ப நல்லவங்கன்னு நாங்க நம்பிடுவோமா என்ன?

    சுவராசியமான தகவல்கள் - உங்களின் சிந்தனை மிக அருமை.

    பதிலளிநீக்கு
  13. அருமையான பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு