திங்கள், 24 நவம்பர், 2014

தோழியின் விடைபெறல்!

கையசைத்து நீ விடைபெறுகையில்
கடந்து சென்ற பட்டாம்பூச்சியால்
கவிதையாகிறது அந்த நொடி!!



தேர்ந்த இயக்குனரின்
கச்சிதமான காட்சியமைப்பாய்
உறைந்துவிட்டஅந்த நொடியை
விட்டுவிலக்க மறுக்கிறது மனம்
விரல் பிடித்த குழந்தையாய்!

மகிழ்ச்சியான விடைபெறுதல்களில்  மட்டும்
மழைக்கும் வாய்த்து விடுகிறது 
மகிழம்பூ வாசனை!

நீ வீதி கடக்கும்வரை காத்திருந்து
வீடுநுழைந்த பின்னும்
நாம் கை கோர்த்து கதை பேசிய
மரத்தின் நிழலிலேயே 
கால்பரப்பி, மண்ணளந்து கொண்டிருகிறது
நாம் உலவவிட்ட புன்னகைகள்!!




25 கருத்துகள்:

  1. என்ன தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்காக எழுதியடு போல இருக்கிறது.. இதுக்காகவாவது நான் தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்யனும் போலிருக்கிறதே...

    பதிலளிநீக்கு
  2. சரி சரி படிச்சுட்டேன் ஆனால் பாராட்டாமல் இருந்தா எப்படி அதனால் பாராட்டுகிறேன். எதுக்கு பாராட்டு என்று நினைக்கிறீர்களா எனக்கு புரியும்படியா எழுதினற்காகத்தானுங்க

    பதிலளிநீக்கு
  3. நேசம் விடை பெறும் போது
    நேரும் தருணம் கவிதையாய்...
    அழகு

    பதிலளிநீக்கு
  4. நம்மோடும் பொருத்திப் பார்க்க முடிகிறதே..
    அருமை டியர்..

    பதிலளிநீக்கு
  5. அன்புச் சகோதரி,

    தோழியின் விடைபெறல்!

    ‘ மரத்தின் நிழலிலேயே
    கால்பரப்பி, மண்ணளந்து கொண்டிருகிறது
    நாம் உலவவிட்ட புன்னகைகள்! ’

    அருமையான கவிதை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. புலனல்லாதன புலனாக்கலும் அலங்காரமாகிக் கேட்போர்க்கு இன்பம் பயத்தலும்
    படிமத்திலும் உண்டு என்பதற்கு உங்கள் கவிதையே சாட்சி!
    ஒவ்வொரு பத்தியிலும் நிற்கும் அருவங்கள் வாசகனின் மன நேர்த்திக்குத் தக்கவாறு பொருள்விரிக்கும் என்று நினைக்கிறேன்.
    குறை..
    அது இப்பதிவிற்கு நீங்கள் எடுத்திட்டிருக்கும் படம்..!
    நன்றி
    த ம 2

    பதிலளிநீக்கு
  7. மகிழம்பூ வாசனை!..

    இனிய கவிதை.. அருமை!..

    பதிலளிநீக்கு
  8. மகிழ்ச்சியான விடைபெறுதல்களில் மட்டும்
    மழைக்கும் வாய்த்து விடுகிறது
    மகிழம்பூ வாசனை!// ரசித்தோம்...

    அருமையான கவிதை சகோதரி!

    பதிலளிநீக்கு
  9. உங்கள் நட்பின் ஆழம்..
    அதன் பிரிவுத்தருணம் உறைந்த எண்ணம்...
    அனைத்தும் சித்தரித்த சின்னக்கவிதை அற்புதம்!

    மனம் லயித்தது கவிதையில்!.. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. நீ வீதி கடக்கும்வரை காத்திருந்து
    வீடுநுழைந்த பின்னும்
    நாம் கை கோர்த்து கதை பேசிய
    மரத்தின் நிழலிலேயே
    கால்பரப்பி, மண்ணளந்து கொண்டிருகிறது
    நாம் உலவவிட்ட புன்னகைகள்!!
    ////எக்ஸலண்ட் தங்கச்சி... இந்த வரிகள் மட்டுமே போதுமானது. சூப்பர் கவிதை. கலக்கற...

    பதிலளிநீக்கு
  11. பிரிவையும் ரசிக்கும்படியாக சொல்லிவிட்டீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  12. மரத்தின் நிழலிலேயே
    கால்பரப்பி, மண்ணளந்து கொண்டிருகிறது
    நாம் உலவவிட்ட புன்னகைகள்!!// "அட" போட வைக்கிறது முடிவான வரிகள்.
    நட்பின் பிணைப்பை எப்படி எழுதினாலும் அழகுதாங்க ,,, நீங்க தேர்ந்த கவிதாயினி தான் ... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. அருமையான கவிதை தோழி மீது அதிக பாசம் போல!

    பதிலளிநீக்கு
  14. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு!

    கொஞ்சம் விளக்கமாச் சொல்லணும்னா..

    கவிதையான "அந்த நொடி"
    அதைப் பிடித்துக் கொண்ட "அந்தக் குழந்தை"
    மழையினால் வந்த "மகிழம்பூ வாசனை"
    அப்புறம் "அந்தப் புன்னகைகள்"

    இப்படி எல்லாமே "பாமரனை"யும் ரசிக்க வைக்கிறது. :)

    பதிலளிநீக்கு
  15. கடைசி வரிகளில் புன்னகைக்கிறது கவிதை.
    அருமை சகோதரி

    பதிலளிநீக்கு
  16. வார்த்தைகளுக்குள் பின்னிக் கிடக்கும் நட்பின் வாசம் ஊதுவத்திப் புகையாய.. மூச்சுத்திணற அடிக்கிறது. எத்தனை வருடமானாலும், புரிந்துகொண்ட நட்பின் ஆழம் புரிந்தவர்க்குத்தான் புரியும். (“அறிந்தவர் அறிவாராக“ என்று இதையே வேறு ஒரு பாதிப்பில் சொல்வார் கண்ணதாசன்) உணர்வுமிக்க கவிதை. வழக்கம் போலத் தலைப்புத்தான் கட்டுரைத் தலைப்புமாதிரி! படமும் செயற்கை. ஏன்...? தேடப் பொறுமையில்லையா? நேரமில்லையா?

    பதிலளிநீக்கு
  17. த.ம.6
    பார்க்க வேண்டாம்..நினைவொன்றே மகிழம்பூவின் வாசனையாய்..சூப்பர்மா.

    பதிலளிநீக்கு
  18. விடைகொடுக்கும்போது கையசைக்கும் கைகள் உறுதியிழப்பதில்லை. உன் அன்பு போலவே

    பதிலளிநீக்கு
  19. டீச்சர்,நட்பின்ஆழம்புரிகிறதுகிரேஸ்பிறிந்ததாக்கம்தானே........

    பதிலளிநீக்கு
  20. நீ வீதி கடக்கும்வரை காத்திருந்து
    வீடுநுழைந்த பின்னும்
    நாம் கை கோர்த்து கதை பேசிய
    மரத்தின் நிழலிலேயே
    கால்பரப்பி, மண்ணளந்து கொண்டிருகிறது
    நாம் உலவவிட்ட புன்னகைகள்!!

    அங்கு மட்டுமா உலவுகிறது இப்புன்னகை வான் பரப்பிலும் அல்லவா வலம் வருகிறது. நட்பின் ஆழம் நேசிக்கும் வாசனை பொருந்திய மனம் நெகிழ வைக்கிறது. அம்மு சூபார்டா.! என்ன ஒரு வார்த்தையாடல். எங்கேயோ போயிட்டீங்கம்மா. ஒவ்வொரு தடவையும் வியக்க வைக்கும் படியான ஆற்றல் மிகுந்த வரிகள். தொடரட்டும் மேலும் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு

  21. மகிழ்ச்சியான விடைபெறுதல்களில் மட்டும்
    மழைக்கும் வாய்த்து விடுகிறது
    மகிழம்பூ வாசனை!

    பள்ளிப்பருவத்தின் பன்னீர்ப்பூ, மல்லிகை செடி வாசனைகளையும் மீன்டும் என் நாசியில் வீசச்செய்த வரிகள் !

    கவிதைக்கு பொருத்தமான...

    தேர்ந்த " புகைப்படக்காரரின் "
    கச்சிதமான காட்சியமைப்பாய்
    உறைந்துவிட்ட...

    அருமையான படம் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு