கவனம் கவர்வதற்காக
கைதட்டுகின்றனவாம்
சில வகை குரங்குகள்
என்கிறது அறிவியல்
கைத்தட்டல்
இறைவனின் காதுகளுக்கு இன்ஓசை என்கிறது
ஆன்மீகம்
இதயநோய், ஆஸ்மா
மூட்டுவலி, முழங்கால்வலி
எல்லாம் பறந்தே போய்விடுமாம்
செரிமானத்தை கூட
அதிகப்படுத்துகிறதாம்
அதுவும் யோகா செய்தபடி
கைத்தட்டுதல் இன்னும் நலம்
சில தீர்ப்புகளையும்
அறிவிப்புக்களையும்
ஜீரணிக்க முடியாமல்
எத்தனை சிரமப்பட்டாய்
அதற்கேனும் கையைத் தட்டு
என்றவர் இப்படி முடித்தார்
எல்லாம் சரிதான்
கொஞ்சம் அளவோடு
கைத்தட்டு
கைத்தட்டல் அறிவை
கூர்மையாக்குகிறதாம்
அத்தனை அறிவுக்கூர்மை
அடிமைகளுக்குத் தேவையில்லை
பைசா செலவில்லா எனக்கு வைத்தியம் சொன்னவர் கூடையில்
பாவம் பல்லாயிரம்
விலையில் காளான்!!
கிளம்புவிட்டார் அவர்
பின்னணியில் கேட்கிறது
பார் நான் கையத்தட்ட
உண்டாச்சு உலகம்
உள்ளார எப்போதும்
உல்லால்லா உல்லாலா
கைதட்டுகின்றனவாம்
சில வகை குரங்குகள்
என்கிறது அறிவியல்
கைத்தட்டல்
இறைவனின் காதுகளுக்கு இன்ஓசை என்கிறது
ஆன்மீகம்
இதயநோய், ஆஸ்மா
மூட்டுவலி, முழங்கால்வலி
எல்லாம் பறந்தே போய்விடுமாம்
செரிமானத்தை கூட
அதிகப்படுத்துகிறதாம்
அதுவும் யோகா செய்தபடி
கைத்தட்டுதல் இன்னும் நலம்
சில தீர்ப்புகளையும்
அறிவிப்புக்களையும்
ஜீரணிக்க முடியாமல்
எத்தனை சிரமப்பட்டாய்
அதற்கேனும் கையைத் தட்டு
என்றவர் இப்படி முடித்தார்
எல்லாம் சரிதான்
கொஞ்சம் அளவோடு
கைத்தட்டு
கைத்தட்டல் அறிவை
கூர்மையாக்குகிறதாம்
அத்தனை அறிவுக்கூர்மை
அடிமைகளுக்குத் தேவையில்லை
பைசா செலவில்லா எனக்கு வைத்தியம் சொன்னவர் கூடையில்
பாவம் பல்லாயிரம்
விலையில் காளான்!!
கிளம்புவிட்டார் அவர்
பின்னணியில் கேட்கிறது
பார் நான் கையத்தட்ட
உண்டாச்சு உலகம்
உள்ளார எப்போதும்
உல்லால்லா உல்லாலா
உங்கள் கவிதைக்கும் கை தட்டிடலாம்.... :)
பதிலளிநீக்கு:) நன்றி அண்ணா!
நீக்குரசித்தேன் கவிதை நன்று.
பதிலளிநீக்குநன்றி அண்ணா!
நீக்குமுன்னணி
பதிலளிநீக்குஇப்போது
பின்னணி
அதே!! அதே!!
நீக்கு👌👌👌
பதிலளிநீக்கு🙏🙏🙏
நீக்குகைதட்டல் மற்றவரைப் பாராட்ட செய்யும் செயல். மனதில் பாராட்டினால், நீங்கள் பாராட்டுவது பாராட்டுப் பெறூபவர்க்குத் தெரியாது. கைதட்டல் மூலம் நீங்கள் பாராட்டுவதை அவர் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது.
பதிலளிநீக்குயாரையுமே மனதால் பாராட்டிவிட்டுப் போகலாம். மனைவி சமையல் நன்றாக இருந்தால்கூட. ஆனால் அதை வார்த்தையில் எதிர்பார்க்கிறாள் மாட(ர்)ன் மனைவி. அவள் கோபித்துக் கொள்வாளே என்றூதான் அப்பாராட்டு வெளீப் படையாக சொல்லப் படுகிறது-கணவனால். நமது கலாச்சாரத்தில் மனைவி சாப்பாடு சரியில்லை (உப்பு குறவு, காரம் இல்லைணு) என்றால் மட்டுமே சொல்வார்கள். நல்லா இருந்தால் எதுவும் சொல்லாமல் அதிகமாகவே சாப்பிடுவார்கள். இதை நம் தாய் தந்தையர், பாட்டிமார்கள் எல்லாம் புரிந்து கொள்வார்கள். கணவன் கம்ப்ளயின் பண்ணவில்லை என்றால் நம் சமையல் நல்லா வந்திருக்கு என்றூ. இன்றய நிலையில் காதலர் தினம் வாழ்த்து எதிர்பார்க்கும் மனைவ! இவள வாழ்த்தவில்லை என்றால் கோபித்துக் கொள்வாளே என்றூ மெனக்கட்டு வாயில் மட்டுமே வாழ்த்தும் கணவர்கள்ணு எல்லாமே போலியாகிவிட்டது. வெஸ்டன் இன்ஃப்ளூயன்ஸால் போலி வாழ்க்கை அதிகமாகிவிட்டது. கைதட்டலும் மேலை நாட்டு இன்ஃப்ளுயன்சா என்றூ தெரியவில்லை.
உங்க கவிதையைப் பாராட்டாமல் எதையோ சொல்லிக்கொண்டு இருக்கேன். என் எண்ணங்கள பதிவு செய்யத் தூண்டியது உங்க கவிதைதான், அதற்கு பாராட்டுகள், மைதிலி.
மைதிலி சில வரிகள் புரியலை. ஆனா என் சிற்றறிவிற்குப் புரிந்த வரை நல்லாருக்கு. ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
நல்லதொரு கவிதையைத் தந்திருக்கிறது கைதட்டல்!
பதிலளிநீக்கு