சனி, 20 ஏப்ரல், 2013
மாயத்தீவு
செல்லாத தீவு நீ
கடலை மூழ்க்கடிகிறாய் !
தொலைத்ததாய் நினைத்துக்கொண்டிருந்தேன்
தொலைந்தது தெரியாமல் !
மழை தூறதொடங்கிவிட்டது
நிலமெல்லாம் மண்வாசம்
நினைவெல்லாம் உன் நேசம் !
புதன், 17 ஏப்ரல், 2013
முற்றத்தில் ரோஜா
உன் செவ்விதழ் மடிப்பில்
சற்றே இருந்து பெரு வாழ்வு பெற்றது
ஒற்றை பனித்துளி !
புதன், 27 மார்ச், 2013
நனைத்தல்
குடையாய் விரிந்த மரம்
நனைத்துக்கொண்டே இருக்கிறது
தன் நிழல் !
சனி, 23 மார்ச், 2013
நினைவுகள்
உன் நினைவுகளாலே
மூழ்குகிறேன்
ஒரு பார்வை
நங்கூரமிடு !
- கஸ்தூரி
கோடை காலம்
அலாரங்கள் எல்லாம் ஓய்வெடுக்கும்
பொம்மைகள் கடினமாய் உழைக்கும்
கோடை விடுமுறையில் !
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)