இதோ 2015 வந்துடுச்சு. டெக்னிகலா உலகம் ரொம்ப முன்னேறி இருக்கு! குழந்தைகள் கூட இப்போ பாரதி சொன்ன மாதிரி விளையாடாமல், டெம்பிள் ரன், candy crush தான் பண்ணுறாங்க. இன்னும் அந்த பழைய ஆய கலைகள் அறுபத்தி மூன்று தான் என சொல்லமுடியாது இல்லையா... நிறைய கலைகளில் மாற்றங்கள் வந்திருக்கு. புதிதா பல கலைகள் தோன்றிருக்கு. போன பதிவில் food carving பத்தி பார்த்தோம்ல. அது போல இப்போ கலக்குற சில கலைகளை பார்ப்போம்.
புதன், 31 டிசம்பர், 2014
திங்கள், 29 டிசம்பர், 2014
வியாழன், 25 டிசம்பர், 2014
மைக்கூ-5
காலாவதியான,பயன்பாட்டில் இருக்கிற
இனி வாங்கபோகிற என் பூட்டுகளுக்கெல்லாம்
உன்னிடம் கள்ளசாவி உண்டு என்றறியாமல்
மீண்டும் மீண்டும் பூட்டிக்கொள்கிறேன் நான்
உன் மௌனக் குமிழ் மோதி
சிதைந்துபோகிறது என்
சொற்கோபுரங்கள்
உன் சின்ன புன்னகையை
சிறை செய்யத் தடுமாறும் மனம்
சர்க்கரை சுமந்த சிற்றெறும்பாய்
வயதை விலையாய் கொடுத்தபின்
ஈட்டிய தாள்களிலும் மதிப்பற்று
தொடர்கிறது பூஜியங்கள்.
பயணங்களில், சந்திப்புக்கு சந்திப்பு
சோதனைக்குள்ளாகிறது என் ஈகை
ரயில் யாசகர்கள்
பட்டாம்பூச்சிகளின் சிறகுபிய்த்து, காலொடித்து
பால்யம் கடந்தவர்களுக்குத்தான் வாய்க்குமோ
பள்ளிகூடங்களில் குண்டுவைக்கும் மனம்
குறும்பா -4
செவ்வாய், 23 டிசம்பர், 2014
என் வாசலில்.....
என்ன இப்படி திடீர்னு கோலம் எல்லாம் அப்புடீன்னு தோணுதா சகோஸ் அண்ட் சகாஸ்??? ஒரு வாரமாஇந்த படந்தான் ஓடிக்கிட்டிருக்கு என அதிகம் பேர் பார்த்த பதிவுகள் பட்டியல் வலப்பக்கம் இருக்கு பார்த்தீர்களா......
ஞாயிறு, 21 டிசம்பர், 2014
வின்சியோடு ஒரு நாள்.
அதிகாலை குளிர்போல் நடுக்கி எடுத்தது தனிமை உள்ளும்,புறமுமாய். கைகள் நீட்டி சோம்பல் முறிந்தபோது தட்டுபட்ட கைபேசி, f.b செக் செய்யலாம் என்றொரு சின்ன சுவாரஸ்யம் சேர்க்க, எடுத்தபோது ஒன்பது தவறிய அழைப்புகள். தீபாவா??? பேசியேகொல்லப்போகிறாள். ரெண்டுவார்த்தை பேசினாலே நேத்து குடிச்சியா என கண்டுபிடித்துவிடும் ராட்சஸி! சலிப்பின் ஊடே கால் ஹிஸ்டரி நாலுமுறை அம்மா, ஐந்துமுறை ஆகாஸ் என்றது. அவன் ஏமாற்றம் அவனுக்கே அவமானமாய் இருந்தது.சற்றுமுன் வரை தீபாவைப்பற்றி சலிப்பாய்த் தானே நினைத்தான். ஆனால் தீபா அவனை கை கழுவி விட்டாள் என்பதை ஏற்கவே முடியவில்லை. முகப்புத்தகத்திலும் அவனை அன்பிரண்டு செய்து இருந்தாள். வேண்டா வெறுப்பாய் அம்மாவை அழைத்தான். “ஐயா! ராத்திரி தூங்க ரொம்ப நேரமாச்சோ! உடம்பு சுகந்தானே எதற்கும் பதில் சொல்லும் முன் எஜமானுக்கு கணக்குச் சொல்லும் கணக்குப் பிள்ளையாய் வீட்டு நிலவரம், வரவு செலவு, தங்கைகள் படிப்பு என சகலத்தையும் ஒப்புவித்து விட்டு, நேரா நேரத்திற்கு சாப்பிட, தூங்க எண்ணெய் தேய்த்து குளிக்க, அறிவுறுத்தி போனை விட்டு வைத்து விட்டாள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




