எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கிச் செல்கின்றன என்பது போல எங்க பார்த்தாலும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பான அழைப்புகளும், செய்திகளும் தான். புதுக்கோட்டைக்கார நானும் என் பங்குக்கு அழைக்கணும் இல்ல, so இப்போ கொஞ்சம் English பகுதியில் என் invitation:)
திரும்பிய பக்கம் எல்லாம் கலாம்!!! இத்தனை அபிமானிகள் எத்தனை நாளாய் எங்கிருந்தார்களோ!!!!! டாக்டர் அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பிரபலங்கள் அனைவரும் ட்விட் முதல் கவிதை வரை பலவிதமாக தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
உங்களுக்கும் என்னைப் போல மழை தொடங்கும் மண்வாசம் பிடிக்குமா? பொழிந்து கொண்டிருக்கையில் தேநீர் பிடிக்குமா? மழை ஓய்ந்தபின் கிளை உலுக்கி நனையப்பிடிக்குமா? புதுப் புத்தகத்தை பிரித்தவுடன் நுகரப்பிடிக்குமா? உச்சி வெயில் ட்ராபிக்கில் அடுத்த வண்டியில் பிஞ்சு கையசைக்கும் பிள்ளை நிலாக்கள் உங்களை ஆற்றுப்படுத்துமா? அப்போ கண்டிப்பா இதுவும் பிடிக்கும்.