வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

நிலவோடு ஒரு ரயில் பயணம்

அவள் கன்னம் மோதிய வண்டு 
என் காதருகே இரைந்தது 
தான்நிலவையே தொட்டுவிட்டதாய்

இவள்இறங்கிஏறும்
ஒவ்வொருநிலையத்திலும் 
இருண்டு போனது
ரயில்ப்பெட்டி என்று 
வண்டையே
வழிமொழிந்தான்
நண்பனும்

அவன்கண்களையாவது விட்டுவைத்த 
அந்த நிலவால்
கிரகணம் பிடித்தது 
என்  ரயில்ப்பெட்டி முழுமைக்கும் 

வெளியே சூரியனும்,
உள்ளே நிலவும் 
குழம்பிப்போயிருந்தது தொடர்வண்டி 
என்னைப்போலதான்

உற்சாகம் தாங்காது
நிற்பதும், பின் இயங்குவதுமாய் 
அவள் அழகை
சுவாசித்த போதையில் 
என்இதயமும்
எங்கள் தொடர்வண்டியும்
சோ. மைதிலி

10 கருத்துகள்:

  1. அடடா ...! செம்ம செம்ம செம்ம அழகுங்க .....!

    ஆண்களும் பெண்ணை வர்ணித்துத்தான் கவி புனைகிறார்கள் ...பெண்களும் பெண்களைப் பற்றியே கவிதை புனைகிறார்கள் ...என்ன கொடும சார் இது ?

    பெண்ணியம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் முதல் பதிவிற்கு யாரும் பதிவிடவில்லையே என்ற குறை இன்றோடு போச்சு .தேங்க்ஸ் சார் .அப்புறம் ப்ளாக் முழுக்க உறுப்படியா எதாவது இருக்கான்னு தேடி நொந்து இந்த பதிவிற்கு வந்திருக்க மாட்டீங்கன்னு நன்புறேன் !?
      ஆண்களை போல் ஒரு கவிதை எழுதலாமே அப்டின்னு ட்ரை பண்ணினேன் .

      நீக்கு
  2. //தேங்க்ஸ் சார் .அப்புறம் ப்ளாக் முழுக்க உறுப்படியா எதாவது இருக்கான்னு தேடி நொந்து இந்த பதிவிற்கு வந்திருக்க மாட்டீங்கன்னு நன்புறேன் !?//

    :) :) ஒரு சிலருக்கு பழைய பாடல்கள் , பழைய பொருட்களை தேடிப்பிடித்து கேட்பார்கள் ,வாங்குவார்கள் . அதுபோல பழைய பதிவுகளை தேடிப்பிடித்து படிப்பது எனக்கு பிடித்திருக்கிறது ... Thats all ..


    தக்க சமயத்தில் செய்யாத உதவியும், பாராட்டுக்கும் மதிப்பில்லைன்னு சொல்வாங்க ... But , எழுத்துக்களை வாசித்து பாராட்டுவதற்கு அது பொருந்தாதுதானே ....!

    பாராட்டுக்காக வார்த்தைகளை தேடக்கூடாது அது அன்னிச்சையாக வரவேண்டும் அப்டின்னு நினைப்பவன் ... இந்தப்பதிவிற்கான பாராட்டு அன்னிச்சை செயலே ....!

    கலக்குங்க Sister ....!



    பதிலளிநீக்கு
  3. அன்பின் மைதிலி - நிலவோடு ஒரு இரயில் பயணம் - கவிதை அருமை - இரசித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் சோ.மைதிலி - 2012 முதல் பதிவு சூப்பர் - நல் வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. //அவன் கண்களையாவது விட்டுவைத்த
    அந்த நிலவால் கிரகணம் பிடித்தது
    என் ரயில்ப்பெட்டி முழுமைக்கும் //

    அழகான கவிதை
    அசரவைத்தது என்னை...!!!

    நன்றி வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  6. மிக அழகான கற்பனை! முதல் பதிவு! முத்தான பதிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அப்பவே முதல் பதிவே இப்படி சூப்பரா எழுதி இருகிறீங்கம்மா .
    அவள் கன்னம் மோதிய வண்டு
    என் காதருகே இரைந்தது
    தான் நிலவையே தொட்டுவிட்டதாய் wow
    மிக மிக அழகும்மா ..1 வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  8. ஆஹா இத்தன நாளா இத பாக்கலயே அருமையான கவிதை...மா

    பதிலளிநீக்கு