ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கண்ணீர்

       
         கண்டுகொண்ட நொடியில்

        பாயசத்தோடு தொடங்கும் 
        தாயின் கவனிப்பு 
        
        பதினாறு நாட்களும் 
        பதார்த்தமும் ,மலர்ச்சரமுமாய் 
        உறவினர் வருகை 
       
        நல்லெண்ணெய் ,நாட்டுக்கோழி முட்டை 
        நாற்றம் பொறுத்து விழுங்காவிட்டால் 
        நடுக்கம் தரும் அப்பத்தாவின் மிரட்டல் 
     
        நிறைவாய் பந்தியும் ,பந்தலுமாய் 
        நிகழ்ந்தேறிய கணங்களை 
        நினைக்கையில் 

        நனைகிறது கண்ணீரால் 
        பதுங்குகுழியில் பூப்பெய்திய 
        என் ஈழச்சகோதரிகளின் 
         சோகம் தாங்கிய கட்டுரை -கஸ்தூரி  
        


பந்தயக்குதிரைகள் (MALL)


சட்டையின் முகப்பு சித்திரமாய் மட்டும்
சேகுவேரா
மற்றுமொரு நிறமாக மட்டும்
சிவப்பு
தமிழில் ஒரு சொல்லாய்
சிக்கனம்
இது போன்ற புரிதல்களால்
பந்தயத்தில் முந்துகின்றன
பெருவணிக வளாகங்கள்
-கஸ்தூரி 

வியாழன், 25 ஏப்ரல், 2013

சவ்வுமிட்டாய்

உள்ளங்கையில் ஒட்டிய
சவ்வு மிட்டாய் போல்
உரிக்கவே முடியவில்லை
உன்  நினைவுகளை !
நாவடியில் சக்கரையாய்
கரைந்தபடி உன் பெயர் !
தொண்டையை அடைக்கும்
உன்  நினைவுகளை
விழுங்குகிறேன்
காதல் குடித்து !
                               கஸ்தூரி
Add caption

புதன், 24 ஏப்ரல், 2013

தகவமைப்பு (Camouflage)


தவளைக்கு விரலிடைச்சவ்வு 
தாமரை இலையில் காற்றறைகள் 
மெத்தை போன்ற பாதத்தோடு ஒட்டகம் 
மெல்லிய ரோஜாவிற்கு முட்கள் 
நிறம்மாறும் பச்சோந்தி 
புறமுதுக்கில் ஓட்டுடன் ஆமை 
பட்டியல் போட்ட அறிவியல் வாத்தியாரை 
பத்தாம் வகுப்பில் கேட்டேன் 
மனிதனுக்கு தகவமைப்பு 
சுருள் முடியில் விரல்கொதியபடி 
பத்து நொடிக்குபின் சொன்னார் -நாக்கு.

சோ. மைதிலி 

சனி, 20 ஏப்ரல், 2013

மாயத்தீவு


செல்லாத  தீவு நீ 
கடலை மூழ்க்கடிகிறாய் !
தொலைத்ததாய் நினைத்துக்கொண்டிருந்தேன் 
தொலைந்தது தெரியாமல் !
மழை தூறதொடங்கிவிட்டது 
நிலமெல்லாம் மண்வாசம் 
நினைவெல்லாம் உன் நேசம் !

புதன், 17 ஏப்ரல், 2013

முற்றத்தில் ரோஜா

உன் செவ்விதழ் மடிப்பில்
சற்றே இருந்து பெரு வாழ்வு பெற்றது
ஒற்றை பனித்துளி !