ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

வசனங்களால் வாழும் வடிவேலு

          
                ஒரு தீக்குச்சி உரசி, தன்னையும் தமிழகத்தையும் ஒருசேர பற்ற வைத்த முத்துகுமாரின் கடிதத்தை படித்தீர்களா? அரசியல் நயவஞ்சத்தில் அது நம்மத்து போனது தனிக்கதை. தன் அழ்ந்த, பரந்த வாசிப்பையும், தமிழ் பற்றையும், வலியையும் ஒரு சேர கொட்டி அவர் எழுதிய அந்த கடிதத்தில் ஒரு விஷயம் அதை  படித்து பல வருடங்கள் ஆனா பின்னும் என்னை இதை எழுதிவிடுமாறு தூண்டியபடியே இருந்தது. ஆமாம் அந்த கடிதத்தில் அவர் வடிவேலுவின் "அது போன மாசம்" எனும் வசனத்தை பயன்படுத்தி இருந்தார்.

               முன்பெல்லாம் மெத்தப் படித்தவர்கள் சினிமாவில் மேற்கோள் காட்ட கண்ணதாசன், வைரமுத்து போன்ற பெரும் கவிகளின் வரிகளையும், இளைஞர்கள் மற்றும் சராசரி மக்கள் ரஜினியின் வசனங்களையும் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு காமெடியனின் வசனம் ஒரு இனத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகி போன வரலாற்றின் முதல் பக்கமாய் வடிவேலு இருக்கக் காண்கிறேன். சமூக ஊடகங்கள் பல்கிப் போன இந்நாளில் எல்லா காமெடி வசனங்களும் எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது தான். ஆனால் வயது வித்தியாசம் இல்லாமல் இப்படி நம் மக்கள் முன்முதலில் பரவலாக வடிவேலுவின் வசனங்களை பயன்படுத்தத் தொடங்கியத்தை கண்ணெதிரே பார்த்தபடி நகர்கிற சாட்சியாய் நானே  இருக்கிறேன்.
            வடிவேலுவின் தனிப்பட்ட கருத்தும் வாழ்வும் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். எனினும்  அவரது எளிய நகைச்சுவை வசனங்களை நான் பயன்படுத்தியதே இல்லை என சொல்பவர்கள்  மிக குறைவே. புனிதம் என்று நாம் கூறிக்கொண்டு கேள்விகள் கேட்ட முடியாதா ஜீரோ ஹவர் அபத்தங்களை மிக எளிதாய், போகிற போக்கில் போட்டு உடைத்துவிடும் வடிவேலுவின் பாங்கே தனிதான். அதற்கென்று ஒரு உடல்மொழி வேறு வைத்திருப்பார். நான் உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தவடா என்று செண்டிமெண்டா யாரேனும்  வசனம் பேசினா வடிவேலு தான் ஞாபகம் வருகிறார்.
         அவனா நீ, அலெர்ட இருக்கணும், be careful நான் என்னைய சொன்னேன், அவ்ளோ நல்லவனாடா நீ, அவன் ரொம்ப நல்லவன்டா, கிளம்பிட்டாங்கய்யா, அவ்வ்வ்வவ், கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல, நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு, இப்படி இன்னும் சொல்லிகிட்டே போகலாம். என்னை பொறுத்தவரை நகைச்சுவையா பேசுறது எல்லாருக்கும் கைவராத கலை. அப்படி பேசுறவங்களை உடனே பாஸ் என்று அழைக்கத் தொடங்கி விடுவேன். so வடிவேலு பாஸ், ஹீரோக்கள் வசனங்களை மட்டுமே பேசிக்கொண்டிருந்த மக்களை தன் வசனத்தை தவிர்க்க முடியாமல் பேசவைத்த மாஸ். வடிவேலு வசனங்களால் வாழும் கலைஞன் என்று சொல்லி இப்போ கிளம்புறேன், நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்.

பி.கு
என்னை போலவே வடிவேல் வசனங்களை பயன்படுத்துவோர் உங்க பின்னூட்டத்தில் உங்களுக்கு பிடிச்ச வசனத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே:))

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

பிள்ளைக்கதைகளும், பெருவணிகமும்!!

                                                                                                                                                                                                  

சின்ட்ரெல்லாவை நினைவுபடுத்தும்
இளம்சிவப்பு சோயாக்கள்
நார்ச்சத்து மிகுந்ததென நம்பவைப்பேன் என்னையே !!

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

பேரம் பேசினால் தவறா? (நிபந்தனை உட்பட்டது*)

கென்னடியும் இதை தானே சொல்றார்!
     பேரம் என்றாலே நமக்கு அரசியல் குதிரை பேரங்கள் தானே(!?) நினைவுக்கு வருகின்றன? ஆனா பெரிய மனுசங்க விஷயம் எல்லாம் நமக்கு எதுக்கு? பெட்ரோலோ, பெரிய வெங்காயமோ விலையேறினால் புலம்பத்தொடங்கும் என் சக நடுத்தர வர்க்கத்தினருக்கும், ச்சே ச்சே இதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்று பகட்டுக்காக பேசும் சுவிஸ் பாங்கில் அக்கவுன்ட் இல்லாத க்ரீமி லேயர் நடுத்தர வர்க்கத்துக்கும் நான் கேட்க நினைக்கும் கேள்வி இது.
           

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

உனக்கும் மழை என்று பேர்!உன் மச்சமாக முடியாததால்
தன் எச்ச நொடிகளை புனிதமாக்க
உன் இதழோரம் சிந்திமடிகிறது - மழைத்துளி!!

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

கொஞ்சம் ENGLISH-PART Vlll


 இந்த முறை கொஞ்சம் Englishல  numbers பயன்படுத்தி சொல்லப்பட்டு வரும் phrasesஅதாவது மரபு தொடர்களை பார்க்கலாமா? ( வாங்க நம்பர் சொல்லி அடிப்போம்)

 a bunch of fives  

முதல் முறை படித்தபோது ஏதோ கொத்துக்கொத்த பூக்களோ என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது இது தான் அதுன்னு!

He gave that thief a bunch of fives

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கைப்பை-ii
 ஒரு நிகழ்வு
         சுதந்திர தினத்திற்காக மாணவர்களுக்கு பாரத சமுதாயம் என்கிற பாரதியார் பாடலை பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தேன்.
   இனி ஒரு விதி செய்வோம்
   அதை எந்தநாளும் காப்போம்
   தனியொருவனுக்கு உணவில்லை எனில்
   சகத்தினை அழித்திடுவோம்
என அவர்களது குரல் உச்சம் தொட்டபோது சிலிர்த்துப்போனது!! இவங்க செஞ்சாலும் செஞ்சுவாங்க:)

சனி, 9 ஆகஸ்ட், 2014

விட்டுவிடு வீழ்ந்துவிட்டேன்- பாகம் 2


குருதி தொட்டும், எழுத்தில் அடங்காது
என்னை சூழழ்ந்து கிடக்கும் உனக்கான சொற்களை
மொழிபெயர்க்கும் வழியறியாது திகைத்து நிற்கும் - என் இரவுகள்.

புதன், 6 ஆகஸ்ட், 2014

ஒரு கோப்பைத்தேநீருக்கு நேரம் ஒதுக்குங்கள் !

  

          ஒரு காபி குடிக்கலாமா? பெரும்பாலான சினிமாக்களில் ஒரு யுவதியை கவர நாயகன் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் நான் வளர்ந்த சூழலில், வாழ்கிற சூழலில் பெரும்பாலான பெண்கள் தேநீர் குடிப்பதையே பார்த்துவருகிறேன். என் ஆரம்பப்பள்ளி நாட்களில் எனது பாட்டியும் அவரது தோழிகளும் ஒரே நாளில் அடிக்கடி தேநீர்க் குடிப்பதை பார்த்திருக்கிறேன். பல நேரம் உணவு கூட தேவைப்படாது அவர்களுக்கு. அப்படி கூடி, கதை பேசும் அவர்களை எரிச்சலை அடக்கிக்கொண்டு கடக்கும் மருமகள்களையும் கவனித்ததுண்டு.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014