செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

மந்திரக்கேள்வி

கூடு விட்டு கூடு பாய
எல்லோரிடமும் உண்டு
ஒரு மந்திரக்கேள்வி
உன் தங்கச்சி பாப்பாவை
எனக்கு தருவாயா?
என குட்டி நிறையை
கேட்கும் எவரும்
அவள் வயதை அடைய
விழி உருட்டி, பல்  கடித்து
'கூடாது'எனும் குட்டி நிறை
எட்டுவாள் கேட்டவர் வயதை!!!
1 கருத்து: