புதன், 24 ஜூன், 2020

கண்ணதாசன்- காலக்கணிதம்!

    ஒரு வார்த்தை அது யாரால் சொல்லப்பட்டது என்பதைப் பொருத்து  அர்த்தம் கொள்கிறது இல்லையா
    காலக்கணிதம் கவிதையை பதினோராம் வகுப்பில் நடத்தும் போது அது வரை நான் கடந்து வந்த அசை, சீர் பிரித்து நடத்தும் வழக்கமான 
    தமிழாசிரியர் போலன்றி, படைப்பாளியின் சூழல், கொள்கை என விளாவாரியாய் புதிய பக்கங்களைக் காட்டிய அண்ணா ரவி சார் வந்ததே ஒரு கவிதை தான்.
    அது மனப்பாடப்பகுதி என அறியுமுன்னே எனக்கு மனனமாகத்தொடங்கிய முதல் பாடம் காலக்கணிதம். அர்த்தமுள்ள இந்து மதத்தைப் படித்துவிட்டு இறைமறுப்பாளரானRavi Annaravi ரவி சாரிடம் கருத்து மோதுவேன். சற்றும் அலட்டாமல் வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் வாசித்து விட்டாயா? என கேட்டுத் திகைக்க வைப்பார் அவர். என்ன மனுசன்டா இந்த கண்ணதாசன்? இவரை நம்பி இப்படி போருக்குக் கிளம்பினோமே என வெட்கிப்போன நாளில் அதற்கு "மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
    மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!" என நான்கே வரியில்  கண்ணதாசன் இதே பாடலில் விளக்கம் தருவார்.

    இதெல்லாம் ஒரு பிழைப்பா எனக் கேட்பீர்களா
    "கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
    உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;" என உங்களை மேலும் பதற வைப்பார்.

    "நானே தொடக்கம்; நானே முடிவு;
    நானுரப் பதுதான் நாட்டின் சட்டம்!" என அவர் அந்த கவிதையை முடிக்கையில் அந்த ஞானச் செருக்கு என்னை வியப்பின் உச்சியில் நிறுத்தியது. சரியாகச்சொல்வதென்றால் இந்த கவிதை ஒரு கதைவடிவெனில் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடல் திரைக்கதை எனலாம். அந்த முழுப்பாடலையும் பின்னூட்டத்தில் தருகிறேன். விருப்பம் உள்ளோர் படித்துக்கொள்க! 
    உள்ளம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்  என்ற வரிகள் இன்று வாசித்தாலும் கமழ்கிறதில்லை!

    நிறை கேட்பாள் "ஐந்து, எட்டு என்றெல்லாம் எப்படித்தான் அம்மா அந்த காலத்தில் இது போலச் சிறிய வீடுகளில் குழந்தைகள் இருந்தார்கள்? கண்ணதாசனிடம் கடன் வாங்கித் தான்  பதில் தருவேன் "மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம், வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்". எம்.எஸ்.வி மெட்டமைக்க கண்ணதாசன் காற்றின் தீராத பக்கங்களில் பிரமிளின் பறவையைப்போல் சிறகசைத்து இறகுதிர்த்துக்கொண்டேயிருக்கிறார். அந்த பாடல்கள் ஒரு வேளை P.B.ஸ்ரீநிவாஸால் பாடப்பட்டிருந்தால் இது கண்ணதாசன் பாஷையில் சொன்னால் சர்க்கரைப்பந்தலில் பொழிந்திட்ட தேன் மாரி.
    காலையில் நண்பர்Prakash Shankar இற்றை ஒன்றில்  அத்தியாவசிப்பணிஅநாவசியப்பணி என ஒரு ஆங்கிலப்பத்திரிக்கை ஐந்து பணிகளை முறையே பட்டியலிட்டதைப் பகிர்ந்து நாயமரே என்றிருந்தார். அதில் அநாவசியப்பணியில் முதலிடம் Artist. அதாவது கலைஞன்! கண்ணதாசனின் பிறந்த நாளில் இப்படியொரு செய்தியா என நொந்து வந்தது. வாழ்வின் விளிம்பு நிலை எப்படிக் கடந்தீர்கள் என்ற வினாவுக்கு, கைப்பற்றிக் கரையேற்றியதாக சொர்ணலதாவையோ, இளையராஜாவையோ, வடிவேலுவையோ காட்டுபவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். என்வரையில் என் அம்மா தன் கடைசிக் காலங்களில் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு இரவெல்லாம் இருமிய படியிருப்பார். ரெயின் போ பண்பலையில் தேன்கிண்ணம் தொடங்கும். பதினோரு மணிக்கு உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது என சீர்காழி பாடத்தொடங்குகையில் நகைமுரணாய் பைய என் அம்மா தூங்கத்தொடங்குவார். இதோ மகிக்குக்கூட பிடித்துத்தான் இருக்கிறது கண்ணதாசனின் கடைசிப் பாடலான கண்ணே கலைமானே!

     உனக்கே உயிரானேன்... எந்நாளும் எனை நீ மறவாதே என்ற வரிகளை நான் பாடும் போதெல்லாம், 
    நெற்றியில் முத்தமிட்டு  அந்த பாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறாள் மகி!  
    ஆம் கவியரசே நீங்கள் புவியில் புகழுடைத் தெய்வம் தான்!

    6 கருத்துகள்:

    1. கண்ணதாசன் - மறக்க முடியாத காவியக் கலைஞன். எத்தனை எத்தனை மனதைத் தொட்ட பாடல்கள். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள் மைதிலி.

      இந்தப் பதிவிலும் சில எழுத்துப் பிழைகள்... கவனியுங்கள்.

      பதிலளிநீக்கு
    2. கண்ணதாசன் அவர்களின் வரிகளைப் புறம் தள்ள முடியுமா?! பல வரிகள் அவரது அனுபவம் வழியும் வந்தவை எனலாம். அனுபவத்தத்துவம்?!!

      துளசிதரன்

      கீதா

      பதிலளிநீக்கு
    3. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
    4. அருமை சகோதரி... கவியரசர் வாழ்வில் பல அதிசயங்கள் நடந்ததுண்டு... எழுத பல பதிவுகளும் போதாது...

      பதிலளிநீக்கு
    5. கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்து மதம் படிச்சது இல்லை. ஆனால் அதைப் பத்தி, அதில் அவர் நியாயப் படுத்தும் இந்து பழக்க வழக்கங்களை கேள்விப் பட்டு இருக்கிறேன். ஏன் தாலி கட்டும்போதும் மேளம் அடிக்கிறாங்கனு அப்படி இப்படினு நியாயப் படுத்தல் போய்ட்டே இருக்கும்.இந்து மதத்தில் பல கடவுள்கள் "எவால்வ்" ஆகி இருக்காங்க.தெருக்கு தெரு சோனையா, முனியையானு எவனாவது செத்துட்டான்னா, அவன் பேர்ல கடவுள் உருவாக்கப் பட்டு விடுவார். இப்போ 2 நூற்றாண்டு முன்னால போனீங்கனா, ஐயப்பன் எல்லாம் கெடையாது. அய்யப்பன் இப்போத்தான் எவால்வ ஆனாரு, அது போல் சீரடி சாய்பாபா, புட்டப்பருத்தி சாய்பாபா எல்லாம் நம் கண் முன்னாலேயே எவால்வ் ஆகி இருக்காங்க. இதுபோல்தான் இப்போ எல்லோரும் வணங்கும் சாமிகளும் எவால்வ் ஆகி இருக்காங்க. இந்துக்கள் என்ன பண்றாங்கன்னா, இதுபோல் உருவாக்கப் பட்ட ராமர், கிருஷ்ணர், மாரியாத்தா, காளியாத்தா, முனியசாமி னு பல சாமிகள் பற்றிய கதைகளை நியாயப் படுத்துறாங்க. இதுல அடி முட்டாள்கள் என்றால் பார்ப்பனர்கள்தான். மத வெறி இவர்களுக்குத்தான் அதிகம். எவனாவது ராமனை அல்லது கிருஷ்ணனை இழிவா பேசிட்டான்ன்னா (உதாரணம்: பெரியார்), இவனுக அம்மா அப்பாவை பேசியதுபோல் ஒரு வெறி வரும். ஒரு சிலர் அந்த வெறியை அடக்கிக் கொண்டு "ஸ்மைல்" பண்ணி நடிப்பானுக. இவனுகளுக்கு ஏன் இப்படி ஒரு கற்பனை கேரக்டரை விமர்சித்தால் கோபம் வருதுனு பார்த்தீங்கனா, கற்பனையை நிஜமாக்கி கொள்ளும் மன வியாதி உள்ளவர்கள் இவர்கள். ராஷனலைஸ் பண்ணத் தெரியாது. திரும்பவும் சொல்றேன், பார்ப்பனர்கள்தான் இதில் படு மோசம். எல்லாரூம் பார்ப்பனர்கள திட்டுறாங்க, பாவம் அப்பாவிகள், ஒரு பாவமும அறியாதவர்கள், னு நமக்குத் தோனும். ஆனால் நீங்க கவனித்துப் பார்த்தால், அவங்க வீக்னெஸ், மத வெறிதான் அவர்களை வெறுக்க வைப்பது. பெரியார் அதை ரியலைஸ் பண்ணி விட்டார்.இப்போ பெரியாரையும் வில்லனாக்கி, இவனுக முட்டாளாகவே தொடர் பயணம் செய்றாங்க. இவனுக திருந்த வழியே இல்லை. இப்போ நானும் நீங்களும் இந்துதான், நம்ம கொஞ்சம் யோசிப்போம், ஐயப்பன் போலதான் ராமனும் கிருஷ்ணனும், முருகனும், கணேசனும் உருவாகி இருக்கனும்னு நம்மால் யோசிக்க முடியும். ஆனால் "அப்பாவி" பார்ப்பனர்களால் இது முடியாது. கமலஹாசன் போல் ஒரு சிலரால் முடிந்தாலும், பெரியார் போல் அவர்கள் நிலை தடுமாறாமல் இருக்க முடியாது. அரசியல் ஆதாயத்துக்காக, சுயநலத்துக்காக, கடவுள் இல்லை கொள்கையை, தளர்த்திக் கொள்வார்கள். கடவுள் இல்லைனு சொல்வதை குறைந்துக் கொள்வார்கள். இன்னொரு பிரச்சினை என்னனா நம்மில் பக்தர்கள்தான் அதிகம். என் நண்பர்கள் பெரியார் கொள்கை பேசிக்கொண்டு கடவுளை விமர்சனம் செய்தவன் எல்லாம் இன்னைக்கு கோயில் குளம்னு அலைகிறார்கள்னா பார்த்துக் கோங்க. பிரச்சினைகள் அதிகமாகும்போது மன வியாதியை சரி பண்ண இப்படி ஆயிடுறாங்க. என்னைப்போல் ஒரு சிலருக்குத்தான் நாட்கள் ஆக ஆக அந்த கடவுள் இருக்க முடியாது நம்பிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. In scientific community, many christians are rationalists. Again, even in scientific community, when it comes to religion and Rama and Krishna, brahmins continue to be stupid. They are amazing "beings"!

      Disclaimer: You may have good brahmin friends. So, let me make it clear, IT IS just MY OPINION, and you have nothing to do with my response. Take it easy, mythili.

      பதிலளிநீக்கு
    6. பெரும்பான்மையான கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் அவரின் அப்பட்டமான அனுபவங்களே.

      பதிலளிநீக்கு