அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 மார்ச், 2019

குலக்கல்வி சிறகா? சிலுவையா?

அன்பு நிஷாந்தி அக்கா,
           நலம். நாடுவதும் அதுவே. நீண்ட நெடிய என் சோம்பலை முறித்து ப்போட்டிருக்கிறது உங்களது இன்றைய குலக்கல்வி பற்றி ஒரு முகநூல் பகிர்வு. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.              
       

திங்கள், 27 ஜூலை, 2015

வாங்கண்ணா!! வணக்கமண்ணா!

                                   உங்களுக்கும் என்னைப் போல  மழை தொடங்கும் மண்வாசம் பிடிக்குமா? பொழிந்து கொண்டிருக்கையில் தேநீர் பிடிக்குமா? மழை ஓய்ந்தபின் கிளை உலுக்கி நனையப்பிடிக்குமா? புதுப் புத்தகத்தை பிரித்தவுடன் நுகரப்பிடிக்குமா? உச்சி வெயில் ட்ராபிக்கில் அடுத்த வண்டியில் பிஞ்சு கையசைக்கும் பிள்ளை நிலாக்கள் உங்களை ஆற்றுப்படுத்துமா? அப்போ கண்டிப்பா இதுவும் பிடிக்கும்.

சனி, 9 மே, 2015

பார்ப்பனர்கள் ஏன் பகுத்தறிவுவாதிகளின் எதிரியாகிறார்கள்???

          ஊரெல்லாம் சாதி சங்கங்கள் இருக்க, குடிசைகள் பற்றி எரிய, தீண்டாமைச்சுவர்கள் வளர்ந்தோங்க, இளவரசன்கள் சாக, அத்தனையையும் விட்டுவிட்டு ஏன் பார்ப்பனர்களை மட்டும் பகுத்தறிவுவாதிகள் குறி வைக்கிறார்கள்.



ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

மனிதம் பேசும் விளம்பரங்கள்

       
  சமீப காலமாக இயல்பாய் படமெடுக்கிறேன் பேர்வழின்னு மூணு மணி நேரமும், டிக்கெட் காசும் தண்டமோ என நொந்து போக செய்யும் படங்கள் பல. கொஞ்சம் ஊன்றி கவனித்தால், கதையை தப்பான ட்ரீட்மென்டில் படமாக்கி இருப்பார்கள். அல்லது சுமார் கதையை திரைக்கதையால் தூக்கி நிறுத்துகிற படங்களும் உண்டு.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

கடலை மன்னன் கார்வரும், என் ஏழாம் வகுப்பு மாணவர்களும்

இது தான் அந்த புத்தகம் 



            

                இருபதாம் தேதி ஆனாலே என் பிரியத்திற்குரிய மாணவச்செல்வங்கள் கொஞ்சம் டரியல் ஆகிவிடுவார்கள். ஆங்கில வாசித்தல், எழுதுதல் திறன் சோதனை மாதத்திற்கொருமுறை நடத்தப்படும் அந்நாட்களில் சின்ன பதட்டமும், பரபரப்புமாகவே இருப்பார்கள்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

Break the rule- லேடீஸ் ஹாஸ்டல் (ஆட்டோகிராப் பக்கங்கள்-iv)

               நேற்று என் அன்பு இளவல் நிஸாரின் உறவினர் வீட்டில் திருமணம். பொங்கல் அன்று என் தம்பி சரத்தும், நிஸாரும் அழைப்பு தந்து அவசியம் வரணும் என்று கூறி கிளம்பியபின், மதி அழைத்தாள் "அக்கா! நீ  நிக்காஹ் க்கு போகப்போற தானே?." நல்லா ரைமிங்கா தான் கேட்கிற. பின்ன போகாம இருக்கமுடியுமா? நம்ம நிஸார் வீட்டு கல்யாணம் ஆச்சே" என சொல்லும்போதே சந்தானத்தின் பஸீர்  பாய் கல்யாணம் ஜோக் நினைவு வந்துவிட, நான் சொல்லாமலே அவளுக்கு அந்த ஜோக் நினைவு வந்துடுச்சுபோல.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

ஆதரவுக்கு நன்றி சகாஸ்!

       



    
          
வணக்கம் நட்புகளே! சென்ற பதிவு ஓர் உளவியல் பரிசோதனை என்றால் நம்புவீர்களா:)  ஆம். ஒரு முறை ரீடர் டைஜஸ்ட் புத்தகத்தில் self-estimation பகுதியில் பத்து கேள்விகளும், இது அல்லது அது பாணியில் இரண்டு விடைகளும் கொடுத்திருப்பதை முயன்று பார்த்தேன். இது நடந்து பல வருடங்கள் ஆன பின்னாலும் அதில் இரண்டே இரண்டு கேள்விகள் மட்டும் நினைவிலேயே தங்கிவிட்டன.

புதன், 7 ஜனவரி, 2015

என்னவொரு காம்போ!!

          
               
        சென்ற வாரம் என் தங்கை மதியின் கணவர் பழநி, பழநி சென்றுவந்து (ஆமா first பழநி கோ-ப்ரதர் பழநிச்செல்வம்) பிரசாதம் கொடுத்திருந்தார். என் அத்தை பயபக்தியாய் திருநீர் எடுத்துகொள்ள, நானோ பஞ்சாமிர்தத்தை தேடினேன்.



ஞாயிறு, 23 நவம்பர், 2014

கத்தரி கைகள்

   கத்தரிக் கைகளை அவசரமாய் கத்தரிக்காய்கள் என படித்து சமையல் குறிப்புக்காக ஓடிவந்தவங்க அப்படியே எஸ்கேப் ஆகிடுங்க, அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை.
   
          

வெள்ளி, 14 நவம்பர், 2014

நாங்க எல்லாம் அப்பவே அப்புடி!




                       அப்போ ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன். (போய்க்கிட்டிருத்தேன் னு சொல்லு ஆனா படிச்சுக்கிட்டுன்னு மட்டும். இப்போவே ஆரம்பிச்சுட்டீங்களா?? ஒ! அது என் மைன்ட் வாய்ஸா). எங்க இங்கிலிஷ் சார்

வெள்ளி, 7 நவம்பர், 2014

எனது வானுக்குக் கீழே!

 ஒரு ஒப்பந்தம்





              நண்பர்களே! நம்மில் பலருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு பருவத்தில் ஒருமுறையேனும் மேகங்களை நேரம் போவதறியாது பார்த்த அனுபவம் இருக்கும். ஒரே மேகம் ஒவ்வோரு  கண்களுக்கும் வெவ்வேறு வடிவம் காட்டும். பார்த்துக் கொண்டிருப்பவர்கே கூட முந்தைய நொடிக்கும் அடுத்த நொடிக்கும் வடிவம் மாறி வித்தை காட்டி விடும். அது போலவே ஒரு கதை அல்லது பாடல் என்பது அமைந்துவிடுகிறது. அது கொள்கலனின் வடிவம் கொள்ளும் திரவம் போல் அவரவர் மனம் கொடுக்கும் வடிவம் கொள்கிறது. பார்க்கும் எண் ஆறு என்பதும் ஒன்பது என்பதும் அவரவர் நிற்கும் இடத்தை பொறுத்தது தானே. 

வெள்ளி, 3 அக்டோபர், 2014

கைப்பை -3





 டைரி 

                  வரவர நிறைக்குட்டி பேச்சில்  நகைச்சுவை ஊற்றெடுக்கிறது. ஒரு செருப்புக்கடையை  கடந்த போது சொன்னாள் "அம்மா, இந்த செப்பல் கடைகாரர் நல்ல புத்திசாலிதான். நான் "ஏன்டா அப்டி சொல்லுற?" பாருங்கம்மா கோவிலுக்கு பக்கத்துல வைச்சுருக்காரே! அங்க செப்பலை தொலைச்சவங்க, இங்க வாங்கிக்குவாங்க இல்ல".

புதன், 24 செப்டம்பர், 2014

காமெடி கணக்கு !! ட்ராஜிடி எனக்கு!!




     போன வாரத்தில் ஒரு மூணு நாள் நான் கணிதத் திறன் மேம்பட்டுப்பயிற்சியில் கலந்துகொண்டேன். (ஆமா நான் இங்கிலீஷ் டீச்சர் தான்). கணக்குல அவ்ளோ ஆர்வமா அப்டீன்னு அவசப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துராதீங்க. பாரதியார் போல "கணக்கு எனக்கும் பிணக்கு " தான். ஆனா விதி யாரை விட்டுச்சு. தமிழக அளவில் கற்றல் திறன் ஆய்வு நடத்திய போது புதுகை அரசுப்பள்ளிகளில் உயர்தொடக்கப்பள்ளி  மாணவர்கள் (ஆறாம்  வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை) கணக்கில் ரொம்ப வீக்கா இருக்கிறதா தெரிய வந்ததாம். (அப்ப இங்கிலீஷ் சூப்பரா படிக்கிறாங்கலாமா? இது கணக்கு மிஸ் தோழி வனிதாவின் புலம்பல்) எனவே புதுகையில் மட்டும் 288 ஆசிரியர்களுக்கு கணிதத் திறன் பயிற்சி அளித்து மாணவர்களை முன்னேற்றுவது  என கல்வித்துறை முடிவெடுத்து இப்படி பயற்சி கொடுத்தார்கள். தமிழாசிரியர்கள் மட்டும் விருப்பம் இருந்தால் கலந்துகொள்ளலாம் மற்றவர்கள் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும். (நீ தாய்மொழியை கைவிட்டதற்கு இது தான் தண்டனை என்று புலம்பியது என் மனசாட்சி)

     இப்படி நொந்து நூடில்ஸ் ஆகி வகுப்புக்கு போனா,  ட்ரைனர்கள் புத்திசாலிதனமாக எங்களை போல பிற பாட ஆசிரியர்களும் கலந்துகொள்ளப் போகிறோம் என்று தெரிந்து வைத்துக்கொண்டு எங்களை வகுப்புக்குள் கொண்டுவர நிறைய புதிர்கள் தயாரித்துக்கொண்டு வந்திருந்தார்கள். சரிவிடு T.N.முரளிதரன் அண்ணா மாதிரி நாமளும் இந்த புதிர்களை பயன்படுத்தி இனி ஒரு ரெண்டு மூணு பதிவு தேத்தலாம் னு என்னை மனசை தேத்திக்கிட்டேன். ஆனா பாருங்க அந்த பயிற்சியில் கொடுக்கப்பட்ட சில புதிர்கள்  அண்ணனின் புதிர்களை போல் இல்லாமல் வழக்கமான வகுப்பறை புதிர்களை போல நிறைய லாஜிக் பொத்தல்களோடு இருந்தது. அதை இன்னொரு பதிவில் சொல்கிறேன். இப்படியே மூனுநாளையும் அந்த ரெண்டு பயிற்சியாளர்களையும் (பெண்கள்) வச்சு வனிதாவும் நானும் கலாய்ச்சே காலிபண்ணினோம். ஆனாலும் பயிற்சியின் இறுதியில் நாங்களும், ட்ரைனர்களும்  நல்ல நண்பர்கள் ஆகியிருந்தோம். (எங்களுக்குள ரொம்ப சைலெண்டா தான். பின்ன அமைதியான பெண்ணாய்  மெய்ண்டைன் பண்ணுற  நம்ம இமேஜ் டேமேஜ் ஆககூடத்தில்ல)

சனி, 20 செப்டம்பர், 2014

உங்க நம்பர் ப்ளேட் என்ன சொல்லுது!!

                        




aha!!


       காலை நேர பரபரப்புகளுக்கு இடையே கவனம் கோரவே செய்கின்றன சில நம்பர் ப்ளேட்கள். பொதுவாக போலீசும், பிரஸ் பெருமக்களும் தங்கள் துறையை நம்பர் ப்ளேட்டில் குறித்து வைத்துக்கொள்வது வழக்கம் இல்லையா? என் தோழி ஒருவரது மகன் இப்போ மெடிசின் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அந்த தோழியின் வண்டியில் டாக்டர்களின் அடையாளமான சிலுவை மீது சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பு போல ஒரு லோகோ இருக்கிறது. வருங்கால டாக்டரின் அம்மாவாம்!! என் தம்பியின் பல்சருக்கு 5014 எனும் எண்கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. பின்ன SOLA என அதை எழுதமுடியும் சாத்தியத்தில் என் அப்பாவின் பேரான சோலைராஜ் என்பதில் பாதி வந்து விடுகிறதே. 6055என்பதை  bossஎன்றும், 8055என்பதை  BOSS என்றும், 8045 என்பதை BOYS எழுதியிருக்கும் நம்பர் ப்லேட்களை பார்த்திருக்கிறேன். PRAISE THE LORD களும் அதிகம். 

தமிழ்ப்பற்று!!

                     பத்துவருடத்தில் மிக பெரிய சமூக மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதை இந்த வண்டி ஓவியங்களில் கண்கூட காணமுடிகிறது. முன்பெல்லாம் வண்டிகளில் தங்கள் ஆண் வாரிசுகள் பெயரை மட்டுமே எழுதிவைத்திருப்பார்கள். ஆனால் இப்போ ரெண்டு பெண்ணாய் இருந்தாலும் சரி, ஆணும் பெண்ணுமாய் இருந்தாலும் சரி அந்த பெயர்களை எழுதிவைத்திருக்கிறார்கள். குழலி, யாழி என எழுதி இரண்டு பெயருக்கும் பொதுவாய் னி போட்டு எழுதியிருக்கும் மருது சங்கர் அண்ணாவின் வண்டி இன்னும் மனக்கண்ணில் ஸ்டாண்ட் போட்டு நிற்கிறது.





                  நாங்க bad பாய்ஸ், அடங்க மாட்டோம்டா மாதிரியான அட்ராசிட்டி பசங்க எல்லாம் அதிக பட்சம் இருபத்திநான்கு வயதுக்குள் தான் இருக்கிறார்கள். (அப்பறம் என்ன? வீட்ல இருக்கிறவங்க ஒரு  கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னா அந்த இடத்தில் லவ் birds படம் தான்). இந்த நம்பர் ப்ளேட் கலாட்டாவில் தமிழக அளவில் திருவள்ளுவர், ஜீசுஸ், பிள்ளையார், மெக்கா, பெரியாரை விட பாதிக்கப்பட்ட ஒரு தலைவர் இருக்கிறார்.  அவர் தன் சொத்தையெல்லாம் தேச  விடுதலைக்காக செலவு செய்தவர், மக்கள் பணிக்காக போற்றுதலுக்கு உரிய பல தியாகத்தை செய்திருக்கிறார் என்றும் படித்திருக்கிறேன்.  அவர் எதற்காக போராடினார் என நன்கு உணர்ந்த, புரிந்துகொண்ட இளைஞர்கள் அவரை நெஞ்சில் நிறுத்தி பணி செய்வதை பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அந்த பேருக்காக மட்டும் அவரை தன் ப்ளேட்டில் வைத்திருப்பவர்கள், அவரும் தானும் ஒன்று என கருதுகிறார்கள் என்பதே எனக்கு கவலை அளிக்கிறது. ஒரு நாள் முதல்வர் போல் ஒரு நாள் ட்ராபிக் போலிஸ் வேலை கிடைத்தால் அதில் ஒரு சிலரையாவது நிறுத்தி அந்த படத்தில் இருப்பவரை பற்றி ஒரு நாலு விஷயம் சொல்லுப்பா என கேட்க ஆசை. f.b, டீ-ஷர்ட் என அவர் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். "பலபேர் கமெண்ட் போட்டாலும் அதில் உள்ள ஒரு பொண்ணு கமெண்டுக்கு மட்டும் ரிப்ளை பண்ணி லைக் தட்டினால் நீயும் என் தோழனே" என்பது மாதிரியான பல படுகொலைகளை சந்தித்திருக்கும் இவர் மேற்கோள்கள் திருக்குறளுக்கு ஈடாக ரீமேக் ஆகி தவிக்கின்றன. சே என்றால் நண்பன்(தோழர்) என்று பொருளாம். இந்த பாழாய்ப்போன முகபுத்தகத்தால் வீணாய் போன மற்றொரு சொல் "தோழர் " எனும் தோழர் வெங்கியின் ட்விட் / ஸ்டேட்டஸ் சரிதானே:))

புதன், 3 செப்டம்பர், 2014

தங்கமீன்களில் அப்படியென்ன சிறப்பு?

    நோட்டுல நான் நோட் பண்ணிய சில விசயங்கள் :)



    
            பாடக்குறிப்பேடு என சொல்லபடுகிற நோட்டுகள் என்றவுடன் ரெண்டுவரி, நாலு வரி தான் முன்பு நினைவுவரும். பரிணாம வளர்ச்சி அடைந்து ரூல்டு மேலும் வளர்ச்சி பெற்று அன்ரூல்டு என கடந்து கிராப், காமெண்டரி எப்போவரும் என ஆசையை இருக்கும். ஏன்னா அப்போல்லாம் அந்த ரெண்டு நோட்டுகள் மட்டும் தான் மெல்லிய அட்டையோடும், அழகிய படங்களோடும் வரும். 

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

பேரம் பேசினால் தவறா? (நிபந்தனை உட்பட்டது*)

கென்னடியும் இதை தானே சொல்றார்!
     பேரம் என்றாலே நமக்கு அரசியல் குதிரை பேரங்கள் தானே(!?) நினைவுக்கு வருகின்றன? ஆனா பெரிய மனுசங்க விஷயம் எல்லாம் நமக்கு எதுக்கு? பெட்ரோலோ, பெரிய வெங்காயமோ விலையேறினால் புலம்பத்தொடங்கும் என் சக நடுத்தர வர்க்கத்தினருக்கும், ச்சே ச்சே இதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்று பகட்டுக்காக பேசும் சுவிஸ் பாங்கில் அக்கவுன்ட் இல்லாத க்ரீமி லேயர் நடுத்தர வர்க்கத்துக்கும் நான் கேட்க நினைக்கும் கேள்வி இது.
           

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கைப்பை-ii




 ஒரு நிகழ்வு
         சுதந்திர தினத்திற்காக மாணவர்களுக்கு பாரத சமுதாயம் என்கிற பாரதியார் பாடலை பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தேன்.
   இனி ஒரு விதி செய்வோம்
   அதை எந்தநாளும் காப்போம்
   தனியொருவனுக்கு உணவில்லை எனில்
   சகத்தினை அழித்திடுவோம்
என அவர்களது குரல் உச்சம் தொட்டபோது சிலிர்த்துப்போனது!! இவங்க செஞ்சாலும் செஞ்சுவாங்க:)

புதன், 6 ஆகஸ்ட், 2014

ஒரு கோப்பைத்தேநீருக்கு நேரம் ஒதுக்குங்கள் !

  





          ஒரு காபி குடிக்கலாமா? பெரும்பாலான சினிமாக்களில் ஒரு யுவதியை கவர நாயகன் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் நான் வளர்ந்த சூழலில், வாழ்கிற சூழலில் பெரும்பாலான பெண்கள் தேநீர் குடிப்பதையே பார்த்துவருகிறேன். என் ஆரம்பப்பள்ளி நாட்களில் எனது பாட்டியும் அவரது தோழிகளும் ஒரே நாளில் அடிக்கடி தேநீர்க் குடிப்பதை பார்த்திருக்கிறேன். பல நேரம் உணவு கூட தேவைப்படாது அவர்களுக்கு. அப்படி கூடி, கதை பேசும் அவர்களை எரிச்சலை அடக்கிக்கொண்டு கடக்கும் மருமகள்களையும் கவனித்ததுண்டு.

செவ்வாய், 22 ஜூலை, 2014

கைப்பை- 1



அமென்!!

உலகின் வெகு சுவாரஸ்யமான விசயங்களில் ஒன்னு பெண்களுடைய கைப்பை என சொல்லகூடிய ஹான்ட் பேக்! ஒரு பெண்ணின் கைப்பை முழுமையாக பார்க்கமுடிந்தால் கூட அவளைப்பற்றி எடைபோட்டுவிட முடியாது. ஆனால் அத்தனை சுலபமாக அவளது கைப்பையையும்  (நம்பிக்கையை) பெற்று விட முடியாது!! இப்போதெல்லாம் கைப்பையின் அளவு குறையக்குறைய அதன் விலை அதிகமாக இருக்கிறது! பயன்படுத்தும் கைப்பையை கொண்டே அந்த பெண்ணின் ரசனையை, வயதைக்கூட  ஊகிக்கமுடியும்.

வியாழன், 19 ஜூன், 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?-ii

அன்பு நட்புகளுக்கு,

          சென்ற பதிவில் மனமும், உடலும் சோர்ந்திருந்ததால் பத்து பேரை இணைக்க முடியவில்லை. இங்கு அந்த பத்து பேரை குறிப்பிட்டுருக்கிறேன். நண்பர்களின்  விடையை அவர்களது வலைப்பூவில் காண ஆவலோடு இருக்கிறேன்.