எரிமலை எப்படி பொறுக்கும்........... அந்த நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ......என அந்த பாடல்வரிகளை கேட்ட நொடி ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கும். இது என்ன பாட்டு அப்பத்தா? என்பேன். மில்லுல ஏதோ கம்யுனிஸ்ட் கட்சி கூட்டம் போல என்பார் அப்பத்தா. எங்கள் தெரு ஆண்கள் கொஞ்சம் கேலியாய் கடந்துவிடும் அந்த பாடல் என்னுள் சில தேடல்களை விதைத்தது.
கவனிக்க வேண்டியவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவனிக்க வேண்டியவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 18 ஜனவரி, 2016
வியாழன், 9 அக்டோபர், 2014
பெற்றோர் தவற விடக்கூடாத ஒரு நூல்!
ஒரு படத்தை ரிலீஸ்க்கு முன்னமே ப்ரிவியு ஷோ ல பார்க்கும் பரபரப்புக்கும், சுவரஸ்யத்துக்கும் சற்றும் குறைவில்லாது இருந்தது நிலவன் அண்ணாவின் நூல்கள் வெளியிடப்படும் முன்னரே வாசிக்கக் கிடைத்த வாய்ப்பு. அதை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். நூல்களை விமர்சிக்கும், அதுவும் நிலவன் அண்ணாவின் நூல்களை விமர்சிக்கும் அளவு நம்ம பெரிய ஆள் எல்லாம் இல்லைங்க. எனவே இது நூல் அறிமுகம் தான்.
புதன், 17 செப்டம்பர், 2014
தந்தை போற்றுதும்!!
அம்மா அன்பாக இருப்பார்கள். சரி அப்போ அப்பா அன்பாகவே இருக்கமாட்டாரா? அப்பா என்றால் கண்டிப்பாக இருப்பார். அதனால் பெரும்பாலான பாடல்கள், வாசகங்கள் தாய்ப்பாசம் பற்றியே இருக்கும். அதற்காக தந்தை பாசம் என்பது தாய் பாசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல. தாய் கருணையின் வடிவம் என்றால் தந்தை ஆசிரியரின் வடிவம் இல்லையா? சான்றோனாக்குதல் தந்தை கடனே எனும் பழந்தமிழ் பாடல் பொய்யா? ஆம் தந்தை என்று நான் இத்தனை நேரம் குறிப்பிட்டது எந்தை பெரியாரை(வழக்கமான எழுத்துப்பிழை என கருதிவிடாதீர்கள்) தான். அவர் நம் சமுதாயத்திற்கு கண்டிப்பான தந்தையாய் தான் இருந்தார். பின் ஏன் அன்னை தெரசாவை போல் தந்தை பெரியாரின் படங்கள் மற்றும் மேற்கோள்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை. குஷ்பு என்றால் கற்பு பற்றிய கருத்து என எளிதாக நினைவு வைத்துக்கொள்ளும் தமிழ் மனங்கள் பெரியார் என்றால் கடவுள் இல்லை என்ற நாத்திகராக பார்க்கும் பிற்போக்கான மனங்கள் இன்னும் இருப்பதேன்?
புதன், 6 ஆகஸ்ட், 2014
ஒரு கோப்பைத்தேநீருக்கு நேரம் ஒதுக்குங்கள் !
ஒரு காபி குடிக்கலாமா? பெரும்பாலான சினிமாக்களில் ஒரு யுவதியை கவர நாயகன் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் நான் வளர்ந்த சூழலில், வாழ்கிற சூழலில் பெரும்பாலான பெண்கள் தேநீர் குடிப்பதையே பார்த்துவருகிறேன். என் ஆரம்பப்பள்ளி நாட்களில் எனது பாட்டியும் அவரது தோழிகளும் ஒரே நாளில் அடிக்கடி தேநீர்க் குடிப்பதை பார்த்திருக்கிறேன். பல நேரம் உணவு கூட தேவைப்படாது அவர்களுக்கு. அப்படி கூடி, கதை பேசும் அவர்களை எரிச்சலை அடக்கிக்கொண்டு கடக்கும் மருமகள்களையும் கவனித்ததுண்டு.
செவ்வாய், 10 ஜூன், 2014
கவனிக்க வேண்டியதும், கவனிக்காததும்
பொதுவாய் நாம் எந்த பொருள் வாங்கினாலும் ப்ரிகாஷன் அச்சிடப்பட்டிருக்கும், அல்லது கையேடு ஒன்று அத்தோடு இருக்கும்.
குடி குடியை கெடுக்கும்
புகைப்பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
போன்ற வாசகங்களை படிச்சிட்டும் எப்டி தான் குடிகிறாங்களோ என நீட்டிமுழக்கும் பலர் இதெல்லாம் கவனிச்சாங்களானு தெரியலை.
நான் எந்த பொருள் வாங்கினாலும் சுத்தி இருக்கிற காகிதத்தை வரிவிடாம படிச்சுடுவேன். அப்டி கிடைத்த இந்த விஷயங்கள் என் போல் வெட்டியாய் படிக்க பொழுது இல்லாத, பிஸியான பலருக்கு பயன்படலாம் எனும் நோக்கத்தில் இந்த பதிவு....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)