வெள்ளி, 26 செப்டம்பர், 2014

சிதைக்கப்ப(ட்)ட முடியாதவளின் சின்ன அறிவுரை!!





 *எனது வலி உனது வலி அல்ல என்பதை
உனது செய்கையால் காட்டியபின்
உன்னை நிராகரித்த என் முடிவு சரிதான் என
அழுத்தமாய் நிறுவியதற்கு நன்றி!

புதன், 24 செப்டம்பர், 2014

காமெடி கணக்கு !! ட்ராஜிடி எனக்கு!!




     போன வாரத்தில் ஒரு மூணு நாள் நான் கணிதத் திறன் மேம்பட்டுப்பயிற்சியில் கலந்துகொண்டேன். (ஆமா நான் இங்கிலீஷ் டீச்சர் தான்). கணக்குல அவ்ளோ ஆர்வமா அப்டீன்னு அவசப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துராதீங்க. பாரதியார் போல "கணக்கு எனக்கும் பிணக்கு " தான். ஆனா விதி யாரை விட்டுச்சு. தமிழக அளவில் கற்றல் திறன் ஆய்வு நடத்திய போது புதுகை அரசுப்பள்ளிகளில் உயர்தொடக்கப்பள்ளி  மாணவர்கள் (ஆறாம்  வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை) கணக்கில் ரொம்ப வீக்கா இருக்கிறதா தெரிய வந்ததாம். (அப்ப இங்கிலீஷ் சூப்பரா படிக்கிறாங்கலாமா? இது கணக்கு மிஸ் தோழி வனிதாவின் புலம்பல்) எனவே புதுகையில் மட்டும் 288 ஆசிரியர்களுக்கு கணிதத் திறன் பயிற்சி அளித்து மாணவர்களை முன்னேற்றுவது  என கல்வித்துறை முடிவெடுத்து இப்படி பயற்சி கொடுத்தார்கள். தமிழாசிரியர்கள் மட்டும் விருப்பம் இருந்தால் கலந்துகொள்ளலாம் மற்றவர்கள் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும். (நீ தாய்மொழியை கைவிட்டதற்கு இது தான் தண்டனை என்று புலம்பியது என் மனசாட்சி)

     இப்படி நொந்து நூடில்ஸ் ஆகி வகுப்புக்கு போனா,  ட்ரைனர்கள் புத்திசாலிதனமாக எங்களை போல பிற பாட ஆசிரியர்களும் கலந்துகொள்ளப் போகிறோம் என்று தெரிந்து வைத்துக்கொண்டு எங்களை வகுப்புக்குள் கொண்டுவர நிறைய புதிர்கள் தயாரித்துக்கொண்டு வந்திருந்தார்கள். சரிவிடு T.N.முரளிதரன் அண்ணா மாதிரி நாமளும் இந்த புதிர்களை பயன்படுத்தி இனி ஒரு ரெண்டு மூணு பதிவு தேத்தலாம் னு என்னை மனசை தேத்திக்கிட்டேன். ஆனா பாருங்க அந்த பயிற்சியில் கொடுக்கப்பட்ட சில புதிர்கள்  அண்ணனின் புதிர்களை போல் இல்லாமல் வழக்கமான வகுப்பறை புதிர்களை போல நிறைய லாஜிக் பொத்தல்களோடு இருந்தது. அதை இன்னொரு பதிவில் சொல்கிறேன். இப்படியே மூனுநாளையும் அந்த ரெண்டு பயிற்சியாளர்களையும் (பெண்கள்) வச்சு வனிதாவும் நானும் கலாய்ச்சே காலிபண்ணினோம். ஆனாலும் பயிற்சியின் இறுதியில் நாங்களும், ட்ரைனர்களும்  நல்ல நண்பர்கள் ஆகியிருந்தோம். (எங்களுக்குள ரொம்ப சைலெண்டா தான். பின்ன அமைதியான பெண்ணாய்  மெய்ண்டைன் பண்ணுற  நம்ம இமேஜ் டேமேஜ் ஆககூடத்தில்ல)

சனி, 20 செப்டம்பர், 2014

உங்க நம்பர் ப்ளேட் என்ன சொல்லுது!!

                        




aha!!


       காலை நேர பரபரப்புகளுக்கு இடையே கவனம் கோரவே செய்கின்றன சில நம்பர் ப்ளேட்கள். பொதுவாக போலீசும், பிரஸ் பெருமக்களும் தங்கள் துறையை நம்பர் ப்ளேட்டில் குறித்து வைத்துக்கொள்வது வழக்கம் இல்லையா? என் தோழி ஒருவரது மகன் இப்போ மெடிசின் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அந்த தோழியின் வண்டியில் டாக்டர்களின் அடையாளமான சிலுவை மீது சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பு போல ஒரு லோகோ இருக்கிறது. வருங்கால டாக்டரின் அம்மாவாம்!! என் தம்பியின் பல்சருக்கு 5014 எனும் எண்கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. பின்ன SOLA என அதை எழுதமுடியும் சாத்தியத்தில் என் அப்பாவின் பேரான சோலைராஜ் என்பதில் பாதி வந்து விடுகிறதே. 6055என்பதை  bossஎன்றும், 8055என்பதை  BOSS என்றும், 8045 என்பதை BOYS எழுதியிருக்கும் நம்பர் ப்லேட்களை பார்த்திருக்கிறேன். PRAISE THE LORD களும் அதிகம். 

தமிழ்ப்பற்று!!

                     பத்துவருடத்தில் மிக பெரிய சமூக மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதை இந்த வண்டி ஓவியங்களில் கண்கூட காணமுடிகிறது. முன்பெல்லாம் வண்டிகளில் தங்கள் ஆண் வாரிசுகள் பெயரை மட்டுமே எழுதிவைத்திருப்பார்கள். ஆனால் இப்போ ரெண்டு பெண்ணாய் இருந்தாலும் சரி, ஆணும் பெண்ணுமாய் இருந்தாலும் சரி அந்த பெயர்களை எழுதிவைத்திருக்கிறார்கள். குழலி, யாழி என எழுதி இரண்டு பெயருக்கும் பொதுவாய் னி போட்டு எழுதியிருக்கும் மருது சங்கர் அண்ணாவின் வண்டி இன்னும் மனக்கண்ணில் ஸ்டாண்ட் போட்டு நிற்கிறது.





                  நாங்க bad பாய்ஸ், அடங்க மாட்டோம்டா மாதிரியான அட்ராசிட்டி பசங்க எல்லாம் அதிக பட்சம் இருபத்திநான்கு வயதுக்குள் தான் இருக்கிறார்கள். (அப்பறம் என்ன? வீட்ல இருக்கிறவங்க ஒரு  கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னா அந்த இடத்தில் லவ் birds படம் தான்). இந்த நம்பர் ப்ளேட் கலாட்டாவில் தமிழக அளவில் திருவள்ளுவர், ஜீசுஸ், பிள்ளையார், மெக்கா, பெரியாரை விட பாதிக்கப்பட்ட ஒரு தலைவர் இருக்கிறார்.  அவர் தன் சொத்தையெல்லாம் தேச  விடுதலைக்காக செலவு செய்தவர், மக்கள் பணிக்காக போற்றுதலுக்கு உரிய பல தியாகத்தை செய்திருக்கிறார் என்றும் படித்திருக்கிறேன்.  அவர் எதற்காக போராடினார் என நன்கு உணர்ந்த, புரிந்துகொண்ட இளைஞர்கள் அவரை நெஞ்சில் நிறுத்தி பணி செய்வதை பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அந்த பேருக்காக மட்டும் அவரை தன் ப்ளேட்டில் வைத்திருப்பவர்கள், அவரும் தானும் ஒன்று என கருதுகிறார்கள் என்பதே எனக்கு கவலை அளிக்கிறது. ஒரு நாள் முதல்வர் போல் ஒரு நாள் ட்ராபிக் போலிஸ் வேலை கிடைத்தால் அதில் ஒரு சிலரையாவது நிறுத்தி அந்த படத்தில் இருப்பவரை பற்றி ஒரு நாலு விஷயம் சொல்லுப்பா என கேட்க ஆசை. f.b, டீ-ஷர்ட் என அவர் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார். "பலபேர் கமெண்ட் போட்டாலும் அதில் உள்ள ஒரு பொண்ணு கமெண்டுக்கு மட்டும் ரிப்ளை பண்ணி லைக் தட்டினால் நீயும் என் தோழனே" என்பது மாதிரியான பல படுகொலைகளை சந்தித்திருக்கும் இவர் மேற்கோள்கள் திருக்குறளுக்கு ஈடாக ரீமேக் ஆகி தவிக்கின்றன. சே என்றால் நண்பன்(தோழர்) என்று பொருளாம். இந்த பாழாய்ப்போன முகபுத்தகத்தால் வீணாய் போன மற்றொரு சொல் "தோழர் " எனும் தோழர் வெங்கியின் ட்விட் / ஸ்டேட்டஸ் சரிதானே:))

புதன், 17 செப்டம்பர், 2014

தந்தை போற்றுதும்!!

             அம்மா அன்பாக இருப்பார்கள். சரி அப்போ அப்பா அன்பாகவே இருக்கமாட்டாரா? அப்பா என்றால் கண்டிப்பாக இருப்பார். அதனால் பெரும்பாலான பாடல்கள், வாசகங்கள் தாய்ப்பாசம் பற்றியே இருக்கும். அதற்காக தந்தை பாசம் என்பது தாய் பாசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல. தாய் கருணையின் வடிவம் என்றால் தந்தை ஆசிரியரின் வடிவம் இல்லையா? சான்றோனாக்குதல் தந்தை கடனே எனும் பழந்தமிழ் பாடல் பொய்யா? ஆம் தந்தை என்று நான் இத்தனை நேரம் குறிப்பிட்டது எந்தை பெரியாரை(வழக்கமான எழுத்துப்பிழை என கருதிவிடாதீர்கள்) தான். அவர் நம் சமுதாயத்திற்கு கண்டிப்பான தந்தையாய் தான் இருந்தார். பின் ஏன் அன்னை தெரசாவை போல் தந்தை பெரியாரின் படங்கள் மற்றும் மேற்கோள்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை.  குஷ்பு என்றால் கற்பு பற்றிய கருத்து என எளிதாக நினைவு வைத்துக்கொள்ளும் தமிழ் மனங்கள் பெரியார் என்றால் கடவுள் இல்லை என்ற நாத்திகராக பார்க்கும் பிற்போக்கான மனங்கள் இன்னும் இருப்பதேன்?


ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

உங்களால் இது சாத்தியமானது, நன்றி.

        சென்ற வருடம் மே மாதம் புதுகையில் தமிழாசிரியர் வலைபதிவர் பயிற்சி பட்டறை ஒன்று எங்கள் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் தலைமையில், நிலவன் அண்ணாவின் ஆலோசனையின் பேரில் நடந்தென்று ஏற்கனவே நான் ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறேன் அல்லவா? அதில் நிறைய தமிழாசியர்கள் எனக்கும் கஸ்தூரிக்கும் நல்ல நண்பர்கள் என்பதால் நாங்கள் ஆங்கில ஆசிரியர்களாக இருந்த போதும் எங்களுக்கு அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பலரும் பதிவுலகில் அப்போதே கலக்கிக் கொண்டிருக்க, சும்மா டைரி எழுதுவது போல் எழுதிவந்த எனக்கு அது சிறந்த அனுபவமாக இருந்தது. அப்போ வலையில் என்ன எழுத வேண்டும் எப்படி எழுதவேண்டும் என எங்களுக்கு வகுப்பெடுத்த கரந்தை ஜெயக்குமார் அண்ணா இன்று அவர்  versatile blogger award எனும் விருதை என்னோடு பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் முறையா கற்றுக்கொடுத்த ஆசிரியரிடம் நல்ல ரேங்க் வாங்கியதை போல ஒரு பீல். நன்றி அண்ணா!(படித்த காலத்தில் அப்படியெல்லாம் ரேங்க் வாங்கியதிலேயே) அவரை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை என்றாலும்  ஒரு சொல். அவரது எல்லா பதிவுகளும் தகவல் களஞ்சியங்களாக இருக்கும். அவரை போல பயனுள்ள ஒரு பதிவு நான் எழுதிவிட்டாலும் போதும்:) என்னைஉற்சாகப்படுத்தி வழிநடத்தும்  கஸ்தூரி, நிறை முதலான எல்லா நட்புநெஞ்சங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!!!

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

சைன்ஸ் வாத்தியார் மோடியின் சாதனை!!

                         






            ஒரு  ஜூவி கொடுங்க என நான் கடையில் கேட்கும்போது அருகில் நிற்கும் பெண்களின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சியை காணமுடிகிறது. நல்ல வாசிப்பு பழக்கம் உள்ள ஒரு தோழி என் கைப்பையை ஆராய்ந்து நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் பற்றி அறியமுயல்கையில் ஒரு ரிப்போட்டரை பார்த்து "ஏ! என்ன இதெல்லாம் படிக்கிற? என ஏதோ படிக்ககூடாததை படித்ததைபோல் ரியாக்சன் காட்டிய அனுபவசூழலில் விசு அண்ணா என்னை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார் அதுவும் அரசியல் பதிவுக்கு !!! நன்றி அண்ணா!

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

குறும்பா _3








யாரோ போல தான் நீயும் -என
நான் கருதும் நாளில்- புத்தனுக்கு
புதிய போட்டியாக  இருப்பேன் நான்

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

அந்த நாலு பேருக்கு நன்றி!!

என்னை நானாக்கி இருக்கும்
அந்த நாலு பேருக்கு நன்றி!!!



1. அண்ணா ரவி சார் (என் தமிழாசிரியர்)
2. சிவா(குமார்) சார் (என் இங்கிலீஷ் டீச்சர்)
3. முனியப்பன் சார் (என் சைன்ஸ் சார்)
4. சாந்தி மிஸ் (என் u.k.g மிஸ்)

புதன், 3 செப்டம்பர், 2014

தங்கமீன்களில் அப்படியென்ன சிறப்பு?

    நோட்டுல நான் நோட் பண்ணிய சில விசயங்கள் :)



    
            பாடக்குறிப்பேடு என சொல்லபடுகிற நோட்டுகள் என்றவுடன் ரெண்டுவரி, நாலு வரி தான் முன்பு நினைவுவரும். பரிணாம வளர்ச்சி அடைந்து ரூல்டு மேலும் வளர்ச்சி பெற்று அன்ரூல்டு என கடந்து கிராப், காமெண்டரி எப்போவரும் என ஆசையை இருக்கும். ஏன்னா அப்போல்லாம் அந்த ரெண்டு நோட்டுகள் மட்டும் தான் மெல்லிய அட்டையோடும், அழகிய படங்களோடும் வரும்.