புதன், 31 டிசம்பர், 2014

ஆயகலைகளை அப்டேட் பண்ணுவோமா!! இது கலைச்சரம்

           இதோ  2015 வந்துடுச்சு. டெக்னிகலா உலகம் ரொம்ப முன்னேறி  இருக்கு! குழந்தைகள் கூட  இப்போ பாரதி சொன்ன மாதிரி விளையாடாமல், டெம்பிள் ரன், candy crush தான் பண்ணுறாங்க. இன்னும் அந்த பழைய ஆய கலைகள் அறுபத்தி மூன்று தான் என சொல்லமுடியாது இல்லையா... நிறைய கலைகளில் மாற்றங்கள் வந்திருக்கு. புதிதா பல கலைகள் தோன்றிருக்கு. போன பதிவில் food carving பத்தி பார்த்தோம்ல. அது போல இப்போ கலக்குற சில கலைகளை பார்ப்போம்.

திங்கள், 29 டிசம்பர், 2014

கைப்பை-5
     
 நோட் பேட்:

              வீட்டில் வளர்க்கும் செல்லக்கிளிகளுக்கு சாக்லேட் கொடுக்கக்கூடாதாம்.

              நத்தைகளால் மூனுவருடம் தொடர்ந்து தூங்க முடியுமாம்!

              தும்பலின் போது நம்மஇதயம் நின்றுவிட்டு பின் துடிக்குமாம்!

வியாழன், 25 டிசம்பர், 2014

மைக்கூ-5


காலாவதியான,பயன்பாட்டில் இருக்கிற
இனி வாங்கபோகிற என் பூட்டுகளுக்கெல்லாம்
உன்னிடம்  கள்ளசாவி உண்டு என்றறியாமல்
மீண்டும் மீண்டும் பூட்டிக்கொள்கிறேன் நான்


உன் மௌனக் குமிழ் மோதி
சிதைந்துபோகிறது என்
சொற்கோபுரங்கள்

உன் சின்ன புன்னகையை
சிறை செய்யத் தடுமாறும் மனம்
சர்க்கரை சுமந்த சிற்றெறும்பாய்

வயதை விலையாய் கொடுத்தபின்
ஈட்டிய தாள்களிலும் மதிப்பற்று
தொடர்கிறது பூஜியங்கள்.


பயணங்களில், சந்திப்புக்கு சந்திப்பு
சோதனைக்குள்ளாகிறது என் ஈகை
ரயில் யாசகர்கள்


பட்டாம்பூச்சிகளின் சிறகுபிய்த்து, காலொடித்து
பால்யம் கடந்தவர்களுக்குத்தான் வாய்க்குமோ
பள்ளிகூடங்களில் குண்டுவைக்கும் மனம்குறும்பா -4
செவ்வாய், 23 டிசம்பர், 2014

என் வாசலில்.....


                என்ன இப்படி திடீர்னு கோலம் எல்லாம் அப்புடீன்னு தோணுதா சகோஸ் அண்ட் சகாஸ்???  ஒரு வாரமாஇந்த படந்தான் ஓடிக்கிட்டிருக்கு என அதிகம் பேர் பார்த்த பதிவுகள் பட்டியல் வலப்பக்கம் இருக்கு பார்த்தீர்களா......

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

வின்சியோடு ஒரு நாள்.

        
     
              அதிகாலை குளிர்போல் நடுக்கி எடுத்தது தனிமை உள்ளும்,புறமுமாய். கைகள் நீட்டி சோம்பல் முறிந்தபோது தட்டுபட்ட கைபேசி, f.b செக் செய்யலாம் என்றொரு சின்ன சுவாரஸ்யம் சேர்க்க, எடுத்தபோது ஒன்பது தவறிய அழைப்புகள். தீபாவா??? பேசியேகொல்லப்போகிறாள். ரெண்டுவார்த்தை பேசினாலே நேத்து குடிச்சியா என கண்டுபிடித்துவிடும் ராட்சஸி! சலிப்பின் ஊடே கால் ஹிஸ்டரி நாலுமுறை அம்மா, ஐந்துமுறை ஆகாஸ் என்றது. அவன் ஏமாற்றம் அவனுக்கே அவமானமாய் இருந்தது.சற்றுமுன் வரை தீபாவைப்பற்றி சலிப்பாய்த் தானே நினைத்தான். ஆனால் தீபா அவனை கை கழுவி விட்டாள் என்பதை ஏற்கவே முடியவில்லை. முகப்புத்தகத்திலும் அவனை அன்பிரண்டு செய்து இருந்தாள். வேண்டா வெறுப்பாய் அம்மாவை அழைத்தான். “ஐயா! ராத்திரி தூங்க ரொம்ப நேரமாச்சோ! உடம்பு சுகந்தானே எதற்கும் பதில் சொல்லும் முன் எஜமானுக்கு கணக்குச் சொல்லும் கணக்குப் பிள்ளையாய் வீட்டு நிலவரம், வரவு செலவு, தங்கைகள் படிப்பு என சகலத்தையும் ஒப்புவித்து விட்டு, நேரா நேரத்திற்கு சாப்பிட,  தூங்க எண்ணெய் தேய்த்து குளிக்க, அறிவுறுத்தி போனை விட்டு வைத்து விட்டாள்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

அப்பிக்கிடக்கும் வர்க்க வாசனை


டகரப்பாதையில் சிப்பாய் தாண்டி
ராணியின் தலைவாங்கி
கனைப்பொலிஅடங்குகையில்
காணநேர்கிறது வெள்ளை ராஜா
சிறைபட்டு விட்டதை

திங்கள், 15 டிசம்பர், 2014

அப்பாட்டக்கருக்கு ஆங்கிலத்தில் என்ன ? கொஞ்சம் English - PART 10

       வழக்கம் போல பாட ஓய்வு வேளையில் சோறுபோடும் மொழி அறிவை வளர்த்துக்கொள்ளவும், அறிவுக்கு கொஞ்சம் சோறுபோடவும் dictionary யை புரட்டிக்கொண்டிருந்தேன். crow's feet என்றொரு சொல் இருந்தது. காக்கா காலுக்கெல்லாம் வெளக்கமா ?? என சிரித்தபடி இந்த phrase என்ன விளையாட்டு காட்டபோகிறது என்ற ஆவலுடன் படித்தால், இதே போல சில எல்லோருக்கும் தெரிந்த, எனக்கு தெரியாத  bird name phrase களை தொகுக்கலாமே என தோன்றியது!! நீங்களும் பாருங்க

புதன், 10 டிசம்பர், 2014

அந்த இன்னொரு இட்லி யாரோடது!!

          நூடில்ஸ்,பிட்சா என  கலக்கிக்கொண்டிருந்த டீன் மொழியில் இப்போ இட்லி talk பரவி இருக்கு. நம்ம விஜய் இட்லியை வைத்து கம்யூனிசத்தை விளக்கினாரும் விளக்கினார். f.b எல்லாம் இப்போ இட்லி தான். குஷ்பு காங்கிரசில் இணைந்தபோது வந்த மற்றொரு இற்றை "பாழாய் போன சமூகம் ஒண்ணா இருந்த குஷ்புவையும் இட்லியையும் பிரித்து, குஷ்புவை காங்கிரசிலும், இட்லியை கம்யுனிஸ்ட் கட்சியிலும் சேர்த்துவிட்டது! 
       

திங்கள், 8 டிசம்பர், 2014

முருங்கை பூத்திருக்கு:)


கரும்பச்சைக் கூடாக  கண்பறித்த தும்பி  
கவனிக்கச் செய்தபின் தான்பார்த்தேன்-கொத்தாய் 
மலர்ந்திருக்கும் இம்முருங்கை காய்காய்க்க   சுற்றம் 
மகரந்தச் சூழ்த்தரிக்கும் நட்பு!!

திங்கள், 1 டிசம்பர், 2014

லிங்கா ப்ரோமோ-கே.எஸ்.குமார்-டி.அர்.பி கண்ணீர்!

                                      ரஜினியின் லிங்கா படத்திற்காக ப்ரோமோ சன் டி.வி யில் ஒளிபரப்ப இருகிறார்கள். அதற்கான விளம்பரத்தில் கண்ணை கசக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.