செவ்வாய், 29 ஏப்ரல், 2014

நிலைத்தகவல்ii



உப்பு இருக்கான்னு பார்க்கிறேன், வெந்துடுச்சான்னு பார்க்கிறேன் என அடுப்படியையே சுற்றிவர ஆளில்லா வீடுகளில் அசைவம் சமைக்க விரும்புவதில்லை பெண்கள்.

குழந்தைக்கு பிசையப்படும் சோற்றில் நாசி நிறைப்பதை தாய் மணம்(மனம்) என்று சொல்லலாம் #நெய்மணம் என்றும் சொல்லலாம்.

அம்மா, காதலி, மனைவி, மகள், பேத்தி என பெறப்படும் முத்தங்களை கொண்டும் கணக்கிடலாம் ஆணின் பருவங்களை.

குழந்தைத்தனம் என்பதை இப்பல்லாம் குழந்தைங்ககிட்ட கூட பார்க்க முடியிறதில்லை # டெர்ரர் குட்டீஸ் சுட்டீஸ்

ஏழாம்அறிவுல டாங்லி போட்டு தள்ளுன கெட்ட ப்ரபசர் தான் ஏற்வமாட்டின் விக்கிறாரு. யாரும்  கவனிச்சிங்களா?

என் சொந்த ஊரில் மாடர்ன்னாகவும், பணியிடத்தில் மண் மணம் மாறாத நேட்டிவிட்டியோடும் இயல்பாய் நடிக்கக்கற்றுதந்திருக்கிறது வாழ்க்கை.

முன்னெல்லாம் வேட்பாளர் சரியில்லேன்னா நம்ம ஊருப்பக்கம் துடைப்பத்தை காட்டுவாங்க, இந்த முறை வேட்பாளரே துடைப்பத்தோடு வந்ததை சொல்லிச்சொல்லி அப்பத்தா ஆத்துபோராக.


கல்யாண வீடுகளில் பம்பரமாய் சுற்றி வேலை பார்ப்பவர் மணப்பெண்ணினால் அண்ணன் ஆக்கபட்டவராகவும் இருக்கலாம்.

சேகுவேரா டீ.ஷர்ட் எடுத்துத்தரட்டுமா என்றேன். பெரியார் படம் போட்டு வரட்டும் என்கிறான் என் சகோதரன்.

பரபரப்பான காட்சிக்கிடையே வரும் விளம்பரம் போல் சட்டென தூங்கிவிடுகிறார்கள் குழந்தைகள் # பயணப்பொழுதுகள்



பி.கு;
மே மாதம் முழுக்க net fasting. so blogக்கு லீவ். நாளை மட்டும் தான் வருவேன். நாம் சொந்தபந்தங்களோடு மனதை ரீசார்ஜ் செய்துவிட்டு ஊர்த்திருவிழா கதையோடு திரும்ப வருகிறேன். அதுவரை have a nice time மக்களே(நோ, நீ கிளம்பிட்டா nice டைம் தானேன்னுலாம் சொல்லக்கூடாது :)))

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

விகடன் வியந்த விஜயலட்சுமி !!

 விகடனில் விமர்சனம் படித்துக்கொண்டிருந்தேன்(படம்_குக்கூ). பாடல்களை பற்றி குறிப்பிடும் கடைசி பத்தியில் 'கோடை மழை போல' பாடலை பாடியதற்காக வைக்கம் விஜலக்ஷ்மியை கொஞ்சம் தூக்கலாய் புகழ்ந்திருந்தார்கள். ஏதோ மேட்டர் இருக்கு என்று தோன்றினாலும் வேறு சில கட்டுரைகள்(ப்ராயிலர்பள்ளிகள், மீத்தேன்) என்னை திசை திருப்பியதால், அந்த பேரை நினைவில் குறித்துக்கொண்டு நகர்ந்துவிட்டேன்.

     விடுமுறை தினத்தின் வழக்கமாய், நேற்று மியூசிக் சேனலை ஒலிக்கவிட்டு சமயலறையில் இருந்தேன். 'புதிய உலகை புதிய உலகை' எனும் கோடை குயில் ஒன்றின் குரல் என்னை ஹாலுக்கு இழுத்து வந்தது(ஸ்டவ்வை சிம்மில் வைச்சுட்டு தான்). பார்த்தநொடி மனம் வலிக்கத்தொடங்கியது. 'என்னமோ ஏதோ' படத்திற்காக இமாம் ஆல்பம் ஸ்டைலில் அமைத்திருந்த பாடலை பாடிக்கொண்டிருந்த அந்த குயில் பார்வைத்திறன் அற்று இருந்தது. பாடலுக்கு இடையே வீணை போன்ற ஒரு இசை கருவியை வைத்து மீட்டவும் சேர்த்தார் அவர். அடுத்த நிமிடம் அந்த பாடலை என் கைபேசியில் தரவிறக்கி என்னை தாலாட்ட வைத்தேன். அப்போது தான் தெரிந்தது அவர் பெயர் தான் வைக்கம் விஜயலட்சுமி.




ஆர்வம் உந்தித்தள்ள நம் wiki அண்ணாவை மேல் விபரம் கேட்டேன். வைக்கம் மில் பிறந்த விஜயலட்சுமி மீட்டுவது ஒற்றை கம்பி காயத்ரி வீணை. செல்லுலாய்ட்எனும் மலையாள பாடத்தில் 'காற்றே காற்றே' பாடலுக்கு ரெண்டு விருதுகள் பெற்றிருக்கிறார் என்றது விகடன் சினிமா. கடப்பவர்களை எல்லாம் திரும்பிப்பார்க்கவைக்கும் திறமை கொண்ட விஜயலட்சுமி பெண்ணாய் பிறந்தால் சாதிக்க முடியாது, மாற்று திறனாளிகள் சாதிக்க முடியாது என ஒடுங்கிப் போவோர்க்கு ஒரு உற்சாக டானிக் !! என் இரவுகளின் தந்திகளை குரலால் மீட்டும் வைக்கம் விஜயலட்சுமி உங்கள் பாடலை கேட்கையில் இறந்து பின் பிறந்து வந்ததாய் உணர்கிறேன் !!

புதன், 23 ஏப்ரல், 2014

விளம்பரத்துக்கு விளம்பரம்-கொஞ்சம் ENGLISH VI

இது CLICKBAITங்கோ .புரியலைன முந்தின பதிவை பாருங்க.
     ஒரு சிறுநகரத்தில், கிராமத்தில் அரசுப்பள்ளியில் பணி செய்யும் ஒரு ஆங்கில ஆசிரியராக எனக்கு சில பொறுப்புகள் இருப்பதாகவே உணர்கிறேன். முதல் விஷயம் என் மாணவர்கள் ஆங்கிலத்தை பார்த்து பதட்டம் அடையக்கூடாது. ஆங்கிலத்தில் பத்து வாக்கியம் சேர்ந்தார்போல் பேசுபவர்களை எதிர்க்கொள்ளும் துணிவு அவர்களுக்கு வேண்டும். மொழி ஒரு கருவிதான் திறமைஅல்ல, ஆனாலும் ஆங்கிலக்கத்தியை கண்டு அஞ்சாமல் அதை பயன்படுத்தும் லாவகம் அவர்களுக்கு கைவர வேண்டும்.
 என்றால் நான் அவர்களுக்கு அதை எளிமையாய் அறிமுகம் செய்யவேண்டும்  இல்லையா? எங்குமே ஆங்கிலம் கேட்காமல் வளரும் மாணவன் முதல் முறையாய் கல்லூரியில் அதை எதிர்க்கொள்ளும் போது எத்தனை தடுமாற்றமாய் இருக்கும் என்பதை உணரமுடிந்தவர்கள் தொடர்ந்து படியுங்கள். (உணரமுடியாதவர்கள் மன்னியுங்கள் நாம் அடுத்த பதிவில் சந்திக்கலாம்)

so அங்கிலத்திற்கான தேடலை அவர்களிடம் விதைக்க நான் அவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான ஆக்டிவிடி ஒன்றை கொடுத்திருந்தேன். அது விளம்பரங்களில் வரும் ஆங்கில ஸ்லோகன்களை  பட்டியல் இட்டு வருவது. பின் அவற்றை வைத்து ஒரு புதிர் விளையாட்டாய் உருவாக்கினோம். நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்கள். ஸ்லோகன் கொடுத்துவிடுவேன். புது tab திறந்து google ளில் தேடாமல் அது என்ன பொருளுக்கானது என கண்டிபிடியுங்கள் .

enjoy the royal treatment.

joins anything except broken heart.

because you worth it.

utterly butterly delious.

I feel up.

neibour's envy, owner's pride.

behave yourself India, the youth are watching.

connecting people.

you just can't stop eating it.

why should boys have all the fun.

என்ன படிச்சுடீன்களா? விடை கிழே

Magnum icecream

Quickfix

L'oreal

Amul

7up

Onida

The Hindu

Nokia

Lactoking

Herohonda pleasure

இப்படி அவங்க படிக்கிறது இங்கிலீஷ்னே தெரியாமல் கற்று கொடுக்கவேண்டியது இருக்கு.
ஓகே ஸ்டார்ட் the மியூசிக் !!

konjam english partv

திங்கள், 21 ஏப்ரல், 2014

மகி, நிறை தருணங்கள்

குழந்தைகளுக்கு விடுமுறை தொடங்கிவிட்டது. இன்னும் எனக்கு தான் ஸ்கூல் முடியல. ஆனா அதுக்காக அவங்க (குட்டீஸ்) பஞ்சாயத்துக்கு லீவா விடுவாங்க? இதோ சில ஜாலியான நிறை, மகி மொமென்ட்ஸ் ....


      நிறை கார்டூன் பார்த்துப்பார்த்து போர் அடிச்சு எதுலயாவது நான் பார்க்க அனுமதிக்கிற மாதிரி பாட்டு வருதான்னு தேடிக்கிட்டு இருந்தாள். வசந்த் டி.வி.ல தாய்மை போற்றுதும் என்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி ஆளுங்களா புடிச்சு அவங்க அம்மா பற்றி பேட்டி எடுத்து கூடவே நல்ல நல்ல பாட்டா போட்டுக்கிட்டு இருந்தாங்க. எல்லாமே அம்மா பாட்டு. நிறை கேட்குறா"அம்மா இவங்க போடுற பாட்டுல வரது இவங்க அம்மாவா, இல்ல ஜெயலலிதா அம்மாவா? தேர்தல் ஜுரம் எப்படி என் மகளை தாக்கியிருக்கு பாருங்க!


    நிறைக்கும் மகிக்கும் வழக்கம் போல பைட்டு.
நிறை மகியை பார்த்து" நீ மகி இல்ல மங்கி ".
 மகி "சொல்லிக்கோ நான் மங்கி நீ பூனை.
 நிறை " பூனை ரொம்ப அழகா இருக்குமே"
மகி "ஆனா என்ன அப்பத்தா கதை சொன்னாங்கள்ல பூனையோட அப்பம் எல்லாம் குரங்கு தான் சாப்டிடுச்சு! நிறை  அதிகபட்ச வால்யுமில் "ஆம்மாஆஆஆஆஆஆஆஆஆஅ"
 நான்@#@#@@#



பூரி செய்து கொண்டிருந்தேன். மகி எல்லா பூரியையும் எடுத்து அவள் தட்டில் வைத்துக்கொண்டாள். பத்து நிமிடம் கழித்து எல்லாவற்றும் அவளால் சாப்பிட முடியாது என ஞானம் வந்திருக்கும் போல "அப்பா இந்த பூரிகிட்ட பிரவுன் னா இருக்கு. இது ரெண்டை மட்டும் நீங்க வச்சுகோங்களே". அக்கா நீ இன்னும் சாப்பிடலையா(அவ்வளவும் உன்தட்டுலஇருக்கே) இந்தா நீ வைச்சுக்கோ
இப்போ என்னை பார்த்தாள். நான் முறைத்துக்கொண்டிருந்தேன்,அவளோ கன்னம் குழிவில புன்னகைத்தபடி " அம்மா இந்த பூரி பெருசா இருக்கு, இதுஅம்மா, இதுசின்னதாஇருக்கு. இது பாப்பா . அவள் அறிவை நான் மெச்சிக்கொண்டிருந்தேன். அம்மாவை நீங்க சாப்பிடுங்க , பாப்பா எனக்காம். (மகி பெரிய அக்கா ஆகிவிட்டாள் ஏன்னா அவள் u.k.g போறாளாம்)

(இதை படிச்சுட்டு மகிக்கும், நிறைக்கும், அவங்க சமாளிக்கிற எனக்கு இனியா கொடுக்கப்போற பூச்செண்டுக்கு நன்றி ...நன்றி..ஹா...ஹா..)   




வெள்ளி, 18 ஏப்ரல், 2014

குறும்பா-ii



சித்திரக்கூடத்தை ரசிக்க வருபவனும்
அதை பராமரித்து சலித்தவனுமாய்-பலவேளைகளில்
திருமணத்திற்கு முன்னும் பின்னுமான காதல் !  
-----------------------------------------------------------------------------

புதைத்து விட்டு, வழிபடும் மரபினர் நாம்
அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு
வகுத்தவர்களை வழிபடுகிறோம் !!
 ------------------------------------------------------------------------------

முட்டாள் என்று பெயரெடுத்ததைவிட வலிமிகுந்தது
முட்டாளாய் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம்
என்று உணரும் தருணம் .
 ----------------------------------------------------------------------------------------

தெருநாய்கள் மீது கல் எறிவோர் கவனத்திற்கு
அவை மட்டும் இல்லை என்றால்
குனிந்து கல் எடுக்க தகுதியற்றிருக்கும் உங்கள் தெருக்கள்!
 ---------------------------------------------------------------------------------------------------

முன்பு புத்தம் சரணம்
பின்பு யுத்தம் மரணம்
என்று ரத்தம் ரணம்
புத்தர் என்றோ ஜென் நிலையடைந்துவிட்டார்
 ----------------------------------------------------------------------------------------------------

உன் கல்கண்டுப்புன்னகையை
கொட்டிவைக்கும் இடமா?
உன் கன்னக்குழி

சனி, 12 ஏப்ரல், 2014

சைக்கிள் (cycle)



         
  வீட்டில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என் பள்ளி. பள்ளி மாணவர்களோ பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் இருந்து வருபவர்கள். பெரும்பாலான நாட்களில் காலையில் பள்ளியின் சுற்றுவட்டாரத்தில் மாணவிகளை பார்த்தால் என் ஸ்கூட்டியில் அவர்களையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். திவ்யா தான் அடிக்கடி அப்படி என்னோடு வருவாள். சில நாட்களாக திவ்யாவை காலைவேளைகளில் நான் சந்திக்கவில்லை. அவள் புது சைக்கிள் வாங்கியிருந்தாள்.
              சிலநாட்களுக்குப்பின் நேற்று காலை திவ்யாவை வழக்கமான இடத்தில் பார்த்தேன். சைக்கிளை நிறத்தி ஸ்டாண்ட் போட்டுக்கொண்டிருந்தாள். நான் ஸ்கூட்டியை மெதுவாக்கி என்ன திவ்யா என் நிற்கிறாய் என்றேன். நீங்க போங்க மிஸ் நான் இதோ வந்துடுவேன் என்றாள். செயின் ஏதும் கழண்டு விட்டதா? பஞ்சரா என்றவாறே வண்டியை நிறத்தி விசாரிக்கத்தொடங்கும்போது தான் கவனித்தேன், அவள் அருகே ஒன்றாம் வகுப்பு படிக்கும் ரிபானா. வெட்கச்சிரிப்போடு திவ்யா சொன்னாள் இதுக்கு சைக்கிள ஏறத்தெரியாதில்ல, அதான் மிஸ் சைக்கிள நிறுத்திட்டு ஏத்திகிட்டு வரேன், நீங்க போங்க என்றாள். நான் கிளம்பிவிட்டேன், என் ரெவ்யூ கண்ணாடியில் தெரிந்த திவ்யாவிற்கு என் சாயல் தெரிந்ததை போல் உணர்ந்தேன்.