திங்கள், 12 அக்டோபர், 2015

நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

பதிவர் திருவிழா 2015 மிக சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. முன்னெடுத்து நடத்திய நிலவன் அண்ணா தலைமையிலான புதுகை கணினி தமிழ் ஆசிரியர் சங்கம் பம்பரமாய் சுழன்று விழா வெற்றி பெற உழைத்தது நம் அறிந்ததே! டி.டி அண்ணாவின் உழைப்பு அசாத்தியமானது. வாழ்த்திய சிறப்பு விருந்தினர்களுக்கும், ஆதரவு கரம் நல்கிய புரவலர்களுக்கும், உழைத்த கரங்களுக்கும் சீருடை குழுவினருக்கும்,  துணை நின்ற நட்பு மிகு வலையுலக நெஞ்சங்களுக்கும், முக்கியமாக விழாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற தமிழ்நாடு இணைய கணினி பல்கலைக்கழகதிற்கும் புதுகை பதிவர் திருவிழா குழுவின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றிகள்! 

விழாவிற்கு வந்திருந்த ஜோதிஜி அண்ணா போன்ற வெகு சிறந்த நண்பர்களோடு பேசி கழிக்க முடியாவில்லை. எனக்கு வேலையெல்லாம் பெருசா ஒண்ணும் இல்ல, நாய்க்கு வேலை இல்லை உக்கார நேரமில்லை என அப்பத்தா சொல்வது போல:) மேடையில் சிறப்பு விருந்தினர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நான் நடுவே நின்று கொண்டு பேசிக்கொண்டிருக்க முடியாதில்ல.....so, வந்திருந்த நண்பர்கள் எல்லோரிடமும் நல்லா பேசமுடியலை எனும் வருத்தம் இருக்கவே செய்கிறது. நண்பர்கள் மன்னியுங்கள்.


வீட்டு விசேசம் போல கலகலப்பாய் இருந்தது விழா, அதில் பொறுப்பு சுமையற்று ஓடித்திரிந்து களிக்கும் குழந்தையை போல முழு மனதோடு மகிழ்ந்து களித்தாயிற்று. விழாவில் நந்தலாலா தமிழ் இணைய இதழ் வெளியிடப்பட்டது. அதில் இடம் பெற்ற எனது கவிதை இது. ஆசிரியர் குழுவுக்கு என் நன்றிகள். அதையும் படித்துப் பார்த்து வழக்கம் போல ஆதரவு தாருங்கள் நண்பர்களே!!

43 கருத்துகள்:

 1. என்ன ஜோதிஜியை பார்த்தும் பேசவில்லையா அப்ப என் கண்டணங்கள் உங்களுக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேசவே இல்லைன்னு சொல்லல சகா, நிறைய பேசமுடியவில்லை:) ஜோதிஜி அண்ணாவை பார்த்துட்டு பேசமா இருக்க முடியுமா என்ன!!!

   நீக்கு
  2. சந்தோஷமாய்க் கழிந்த ஒரு தினம்... மீண்டும் ஒரு வருஷம் காத்திருக்கணுமே என்று ஏங்க வைக்கும் தினம். (ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொரு பாப்பா என்கிற வாத்யா பாட்டு நினைவு வருது. இதுவும் நமக்கு பாப்பாதான் போல) அழகாய் வந்து சென்றது நேற்று. பம்பரமாய்ச் சுழன்ற புதுக்கோட்டைக் குழுவினர் அனைவருக்கும் கைகுலுக்கலும் பொக்கேயும்.

   நீக்கு
  3. செருப்புக் கவிதை பிரமாதம். காலையிலேயே அசத்தி விட்டாய் மைதிலி. (என்னையும் கொஞ்சம் அங்க சிபாரிசு பண்ணி வைம்மா. ஏதாச்சும் கிறுக்கி அனுப்பறேன்.)

   நீக்கு
  4. மைதிலி நீங்க ரொம்ப பெரிய மனுஷியாக இருப்பீங்கன்னு நினைத்துருந்தேன். ஆனால் +2 படிக்கிறவங்க மாதிரி இருந்தவுடன் கொஞ்சம் ஆச்சரியம். உங்கள் தலைவருக்கும் உங்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும். (மதுரைத் தமிழரே மைதிலி தேடி வந்து பேசினாங்க)

   நீக்கு
 2. அனைவரகயுத் சந்தித்ததில் மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 3. என்னது பேசினிங்களா? ஆனா நிறைய பேசலையா? அப்படியானல் அதற்கும் எனது கண்டணங்கள்?

  நான் அனுப்பி வைச்ச டூப்பு அவர்தான் ஹீஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாப்பு நீங்க எப்பவும் டாப்பு. உள்ளே இருந்த வடிவமைப்பு படங்களில் முதல் சுவரொட்டியில் உங்கள் பெயரைப் பார்த்ததும் மகிழ்ந்தேன். கோடி கொடுத்த கொடை வள்ளல் நீங்க. வாழ்க வளர்க.

   நீக்கு
  2. ஹஹஹஹ் ஜோதிஜி உங்க டூப்பு ம்ம்ம்??!! அப்போ ஜோதிஜி??!! மைத்தூ அப்ப நாம மாறு வேஷத்துல மதுரைத் தமிழன் அப்படினு தாத்தாகிட்ட பேசிக்கிட்டிருந்தமே .....

   .கீதா

   நீக்கு
  3. @ அவர்கள் உண்மைகள்
   பார்த்துவிட்டு குறைவா பேசுனவருக்கே கண்டனங்களை தெரிவிச்சிருக்கீங்கனா, ஜோதிஜி என்பவர் பிரபல மின்னூல் எழுத்தாளரென்பதே நேற்றைக்குதான் எனக்குத் தெரியும்னு உண்மைய சொன்னா என்னை அடிச்சே கொன்னுடுவீங்க போல. முழு வீடியோவையும் பதிவிறக்கி ஓடவிட்டு பார்க்கனும்.
   அவரைப் பற்றி அறியத்தந்தது நீச்சல்காரனின் தளம். மொத்த வலையுலகமும் ரொம்ப புதுசா இருக்கு. freetamilebooks தளத்திற்கும் நன்றி.

   நீக்கு
 4. மேடையில் நிறைய வயசானவங்க இருந்ததால்தான் நீங்களும் மதுவும் மேடையில் அதிகம் தென்படவில்லை என்று எனக்கு தகவல் வந்து இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓகோ..! அதனால்தான் நானும் மேடையை விட்டு என்னை அறியாமலே அவ்வப்போது இறங்கிக் கொண்டே இருந்தேன் போல..

   நீக்கு
  2. என்போன்ற இளைஞர்களை உற்சாகமாய் கவனித்து உரையாடிக் கொண்டிருந்தார்கள் தம்ப்ரீ...

   நீக்கு
 5. கடைசி நேரத்தில் உடல் நலக்குறைவால் பயணத்தை ஒத்திப் போட வேண்டிய நிர்ப்பந்தம்.

  வந்திருந்தால் உங்களை சந்தித்து இருக்கலாம்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthathacomments.blogspot.com

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  ஆமாம் நான் நேரலையில் பாரத்தேன் நிகழ்வை.. சிறப்பாக முடிந்துள்ளது... தங்களின் பங்களிப்பும் பெரிய உதவி... வாழ்த்துக்கள் த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. விழா பற்றி விரிவாக எதுவுமே எழுதவில்லையே! உங்களையும் சேர்த்து எல்லோருமே மிகவும் களைப்பில் இருக்கிறீர்கள் போலிருக்கிறது!

  கவிதை படித்து ரசித்தேன்! காலணி பற்றி யாரும் கவிதை எழுதி இதுவரை படித்ததில்லை. வித்தியாசமாய் முயற்சி செய்தததற்கு உங்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. "சும்மா ஜமாய்ச்சுட்டீங்க" என்று ஒற்றை வரியில் புகழலாம் புதுகை வலைப்பதிவர் திரு நாளை கொண்டாடிய வரவேற்புக்கமிட்டிக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட இன்னொருவரையும் அடையாளம் கண்டு கொண்டேன். மைட்டான்பட்டி பக்கம் போனால் என் தாத்தா பாட்டியை விசாரித்து வரவும்.

   நீக்கு
 9. சரித்திரம் படைத்த விழாவுக்காக வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கள்! வர இயலாமல் போய்விட்டது! வருத்தங்கள்!

  பதிலளிநீக்கு
 11. நீங்கள் எதற்கு நன்றி சொல்ல வேண்டும். நாங்கள் அல்லவா உங்களுக்கும், உங்கள் புதுக்கோட்டை வலைப்பதிவர்களுக்கும் (விழாவை சிறப்பாக நடத்திக் காட்டியமைக்கு) நன்றி சொல்ல வேண்டும். நன்றி! நன்றி!

  பதிலளிநீக்கு
 12. எங்களுக்காக ஓடி ஓடி உழைத்த உங்களுக்கு நாங்கள் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்! உங்களையும் உங்கள் மகளையும் சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியாயிருந்தது. குடும்பவிழா போல் முகமலர்ச்சியும் எங்களை வரவேற்று உபசரித்த உங்கள் எல்லோருக்கும் மீண்டும் என் நன்றி மைதிலி!

  பதிலளிநீக்கு
 13. உங்களைப் பார்க்காமல் தூங்கச் சென்றுவிட்டேன்..காணொளி இருக்கிறதே :)
  கவிதை வாசித்தேன் டியர், என்னென்னமோ எழுதுரீங்க :) வாழ்த்துகள் டியர்

  பதிலளிநீக்கு
 14. வெற்றிகரமாக நடந்ததில் மகிழ்ச்சி ....
  கலந்துகொள்ள முடியாத வருத்தம்தான் ....

  பதிலளிநீக்கு
 15. அம்முக்குட்டி நான் உங்களைப் பார்த்து விட்டுத் தான் சென்று தூங்கினேன்மா 3. 15 மட்டும் இருந்து பார்த்தேன். கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் மிகவே. மிகுதி இன்னும் பார்க்கவில்லை. நேரமின்மை காரணமாக இனித் தான் பார்க்க ப் போகிறேன். பார்த்து விட்டு மிகுதியை எழுதுவேன். தங்களை எல்லாம் நேரலையில் சந்தித்தது பேரானந்தமே. உங்கள் viju அண்ணா வந்திருந்தால் அவரையும் பார்த்து இருக்கலாம். ம்..ம் என்ன செய்வது இன்னுமொரு சந்தர்பத்தில் பார்ப்போம் இல்லையா? மிகுதி காணொளி கண்டு தொடரும் ...நன்றி வாழத்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 16. ஓவியக் கண்காட்சிக்குப் பின்னால் உன் உழைப்பும் கவிதைத் தேர்வும் இருந்ததை விழாக்குழு மட்டுமே அறியும் பா. வந்த நம் பதிவுறவுகளை அன்போடு கவனித்து, பண்போடு பழகி விழாவெற்றியில் பங்கேற்ற உன் அருமை எனக்குத் தெரியும் பா. இந்தப் பதிவில் எத்தனை அன்பு கொப்பளிக்கிறது பார்! இதுதான் நம் குழுவின் பகிர்வு! மகி வந்து தங்கை கிரேசின் பரிசைப் பெற்ற போது வியந்தும் மகிழ்ந்தும் போனோன். அதை நேரலையில் பார்த்த கிரேசுக்கு எப்படி இருந்திருக்கும் இதுபோதும்பா.. இன்னும் பலசாதனைக்கு பேட்டர் சாாாார்ஜ்!

  பதிலளிநீக்கு
 17. உழைப்பின் உயர்வை புதுக் கோட்டேயில் கண்டேன்! அனவரையும் சிரம் தாழ கரம் கூப்பி வணங்குகிறேன்!

  பதிலளிநீக்கு
 18. அன்புச் சகோதரி,

  புதுகை இதுவரை காணாத வரலாற்றுச் சாதனையை வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவில் படைத்திருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் புதுகை நேரலையில் நெஞ்சம் நிமிர்த்தி பெருமிதமாக இருந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த பெருமிதம் கொள்ளலாம். விழா சிறக்க உழைத்திட்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.

  பாராட்டுகள் - வாழ்த்துகள்.
  த.ம.10

  பதிலளிநீக்கு
 19. அட! சகோ! னீங்க எதுக்குப்பா நன்றி உரைத்தல்! நாங்கல்லா உரைக்கணும்....இப்படி ஒரு அருமையான சந்திப்பை நிகழ்த்தி உபசரித்து நட்புடனும் அன்புடனும் ....என்று சொல்லிக் கொண்டே போகலாமே! நன்றி நன்றி!! கள் பல!! முடிவில்லா...இந்த நட்பும் ஒற்றுமையும் ஓங்கி வளர்ந்தால் அதுவே இனிமைதான்!அதுவே போதும்!!!

  பதிலளிநீக்கு
 20. எனினும் அவசர அழைப்பு வந்து
  அதிகாரியின் செருப்பு விரைந்து விடாதிருக்க
  வேண்டுதல்கள் வைத்தபடி
  காத்துக்கிடக்கிறது கிராமத்துச்செருப்பு!!// செருப்பால அடி பின்னிட்டீங்க போங்க ...வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு
 21. உங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் திறம்பட செயல்பட்டததுக்கு.

  பதிலளிநீக்கு
 22. விழா வெற்றிகரமாக நடத்தியமைக்கு குழுவுக்கு எமது வாழ்த்துகள் சகோ
  தமிழ் மணம் 111

  பதிலளிநீக்கு
 23. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...

  இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

  நன்றி...

  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு
 24. செருப்புக்கவிதை...
  டயரின் தோலுரித்து செய்யும் சில செருப்புகளில் அடித்த ஆணிகள் நெருப்பு வந்த காட்சிகள் உண்டு என் நினைவுகளில்....
  ஆணிகளின்றி வந்த நெருப்பு இது...வாழ்த்துக்கள் கவியே....பொறி பறக்கட்டும்...

  பதிலளிநீக்கு
 25. நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு