சனி, 13 பிப்ரவரி, 2021

டகோடா38,வெண்மணி44- நூல் அறிமுகம்

 புதுக்கோட்டைக்கு இதுவரை எண்ணிலடங்கா உலகசினிமாக்களை அறிமுகம் செய்த எஸ்.இளங்கோ ஐயா இந்த முறை தந்திருப்பது பன்னாட்டு குறுப்படங்களைப்பற்றிய அறிமுகம். இருப்பத்தியோரு குறும்படங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். மையோடு கொஞ்சம் பாஸ்பரசை கலந்துவிட்டாரோ என்னவோ, திருப்புகிற பக்கம் எல்லாம் தீப்பிடிக்கிறது. ஒவ்வொரு தலைப்பும் “நீ தான் தைரியசாலி ஆச்சே, பேசு” என்பதைப்போல் அனல் வீசுகிறது. புத்தகத்தலைப்பு “டகோடா 38 வெண்மணி44”

 John Pilger இயக்கிய The war on democracy என்ற குறும்படம். வியட்நாம், கம்போடியா, பொலிவியா போல பல்வேறு நாடு குடியரசு வேண்டி சந்தித்த நெருக்கடிகளை படம் எடுத்த அனுபவசாலி பில்கர். பொதுவாக உலகில் எது நடந்தாலும் நாஸ்ட்ரோடோமஸையும், மயன் கேலண்டரையும் சுட்டிக்காட்டி இது முன்பே எழுதப்பட்ட விதி என பலர் பேசுவதை பார்த்திருக்குறோம், அப்படியான மயன் பழங்குடியினரின் வாழ்வு எப்படி இருந்தது என்கிறது பில்கரின் குறும்படம். ஒட்டுமொத்த மயன்களை இரண்டே சதவீதம் ஸ்பானிய முதலாளிகள் எப்படிச் சுரண்டினார்கள் என வாசிக்கும் போதே டெல்லி விவசாயிகள் போராட்டம் கண்முன் நிழலாடுகிறது.

               ஃபாரன்ஹீட்9/11 எடுத்து உலகையே ஒரு கலக்கு கலக்கிய மேக்கேல் மூரின் Capitalism-a love story அடுத்த படம். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும்பான்மையான பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாகி உள்ள சூழலில்  வெள்ளைமாளிகையில்  ஆட்சிக்குழுவில் கார்ப்பரேட்டுகள் சில பதவி வகிக்கத்தொடங்கியதன் விளைவாக தனியார்மயமாக்கப்பட்ட துறைகளிலல்  உழைப்பாளர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் ஆவணப்படுத்தும் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. லாபம் 145% சதவீதமாகவும் ஓதியுயர்வு 1% சதவீதமாகவும் உள்ளது. ஒரு தனியார் விமான ஓட்டுநர் $20000 வருமானம் பெறாத நிலையும், பரிட்சார்த்தமான இயங்கிய கூட்டுறவு ஆலையை சேர்ந்த ஒரு ரொட்டி தயாரிப்பு ஊழியர் $65000 வருமானம் பெறுகிறார் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.

                   Fidelcastro's tape படத்தில் கூபா வரலாற்றோடு அமெரிக்க ஏகாதிபத்தியன் அடாவடி வரலாறும் சேர்ந்தே சொல்லப்படுகிறது. “Rich,poor and trash” நைரோபியின் குப்பையை நம்பி வாழ்கிற மனிதர்களையும், நியூயார்க்கில் குப்பையில் வாழும் மனிதர்களின் வாழ்வையும் ஒப்புநோக்குகிறது. நைரோபியில் குப்பையால் வாழும் மனிதருக்கு நான்கு டாலர் வரை கிடைக்கிறது. எனவே அவர் உலக வங்கியின் கணக்குப்படி அவர் வறுமைக்கோட்டுக்கு மேல் வருகிறார்(!?). அமெரிக்காவிலோ குப்பைக்காரர் 75 டாலர் வரை சம்பாதிக்கிறார். இன்னும் அவர்களது அரசு, பொருளாதார, பொதுச் சிந்தனை என அழகாக அலசுகிறது படம்.

         “India’s hindu fundamentalism “ 25 year of Babri masjid படங்களை பார்த்துவிட்டும் BJP, VHP க்கு ஆதாரவு தெரிவிக்கும் தேசபக்தர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். வச்செல்லாம் பார்க்கல “மோடியையே ரெண்டு ஃபிரேம்ல காட்டுகிறார் மந்தாகினி. 

         டகோடா  பழங்குடியினரை வழக்கம் போல ஏமாற்றி இடத்தை பிடிங்கிக் கொண்டு கதறவிட்ட அமெரிக்கா எப்படி அவர்களை தீவிரவாதியாக்கி பின் மன்னிப்பும் கோரவைத்தது, ஆப்பிரஹாம் லிங்கனே 38 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்குதண்டனை ஏன் வழங்கினார்(இது வரை உலகில் அறிஙிக்கப்பட்ட Mass hanging) அது வெண்மணியில் எறித்துக்கொல்லபட்ட 44 நாற்பத்திநான்கு பேரோடு எப்படி ஒத்துப்போகிறது  என விலக்குகிற இடம் துல்லியம்.

          ஜான் கீட்ஸின் “ Forever wilt thou live and she be fair என்கிற ode on a Greecian urn கவிதையின் வரிகளின் சாட்சியாய் Under the fallen chinar குறும்படம் விளங்குகிறது. காஸ்மீர் பல்கலைகழகத்தில் போர் சூழலில் பல்கலைகழக வளாகத்தில் வீழ்ந்துகிடக்கிற சினார் மரத்தில் படைக்கப்பட்ட கவிதைகளும், ஓவியங்களும் காலத்தால் நிலைப்பெற்றுவிட்டது. உலக அரசியல், பொருளாதார இடர்களை தற்கால இந்திய சூழலோடு பொருத்திப் பார்க்கத் தூண்டும் கூர்மையான நூல். மழை பதிப்பகம். விலை 120 ரூபாய். படித்தேன் புத்தகத்தில் எழுதப்பட படங்களை பார்த்தேன் ஆவணப்படங்களின் மீதான புரிதல்களை மாற்றுய எஸ். இளங்கோ ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.