ஒரு தீபாவளிக்கு திரையில் மின்னி, அடுத்த தீபாவளிக்கு காணாமல் போகும் திரைத்தாரகைக்களுக்கே அத்தனை வரலாறு என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன் மூன்றாம் நூற்றாண்டு முதலே எழுத்துருவை பெற்ற* நம் கன்னித்தமிழுக்குத் தான் வரலாற்றுக்கா பஞ்சம்! சங்கம் வைத்து சான்றோர் வளர்க்க, தங்கமெனத் தழைத்துத்தோங்கித் தரணியெல்லாம் மின்னிய தமிழ் மகள், வெள்ளையரால் மதம் பரப்பப் பணிக்கப்பட்ட பாதிரிமாரும், தம்மேல் மதம் கொள்ளச்செய்த தீங்கனியாள்!! தான் படித்தத் தமிழ்த்தேனை ஆங்கிலத்தில் வடித்து அவர்களும் பெற்றனர் அடையாப் பெரும்பேறு!!
