புதன், 30 செப்டம்பர், 2015

துறைதோறும் இணையத்தமிழ் !!





   பிழையின்றி பிழைக்கின்ற உயிர் அனைத்தும் புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலை,பிழையின்றித் தொடர்கின்றன! கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாய் புதுப்பித்துக்கொள்கிறது! புதுப்பித்துக்கொண்ட குரங்கினம் தான் இன்று உலகையே நொடிக்குநொடி புதுப்பிக்கும் இனமாய் வளர்ந்திருக்கிறது. என்றும் எழில் குன்றா, இளைய தமிழுக்காக இந்த வித்தை தெரியாது?! நான்காம் தமிழாய் இணையத்தமிழும், ஆறாம் திணையாய் இணையமும் ஒருங்கே வளர்வது உலகறிந்ததே! சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என முரசுகொட்டிய முண்டாசுக்கவிஞனின் பாதையில் வீறுநடைபோட்டு சீறுகின்ற நம் தமிழ்ப் பட்டாளம் திசைதோறும் விரைந்து தொகுத்த, படைத்த செல்வக்களஞ்சியங்கள் உங்கள் பார்வைக்கு!

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

என் 64 மெய்நிகர் விழுப்புண்கள்!!




விருப்பக்குறிகள் என் வெற்றிப்புள்ளிகள்
வெறுப்புக்குறிகள் என் விழுப்புண்கள்
பகிர்தல்  நிலைதகவல்களோடு
முடிந்து போகின்றன- என்னளவில்

சனி, 26 செப்டம்பர், 2015

த்ரீ ரோஸஸ்!!

      இது டீத்தூள் பதிவு அல்ல:) மூன்று அறிமுகங்கள் பற்றிய பதிவு!! roses தான் இவர்கள் மூவரும் ஆனா அதில ரெண்டுபேர் படபட பட்டாசு. ஒருத்தர் அமைதிப்புறா!! 

திங்கள், 21 செப்டம்பர், 2015

இணையத் தமிழே சகம் வெல்க!

         ஒரு தீபாவளிக்கு திரையில் மின்னி, அடுத்த தீபாவளிக்கு காணாமல் போகும் திரைத்தாரகைக்களுக்கே அத்தனை வரலாறு என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன் மூன்றாம் நூற்றாண்டு முதலே எழுத்துருவை பெற்ற* நம் கன்னித்தமிழுக்குத் தான் வரலாற்றுக்கா பஞ்சம்! சங்கம் வைத்து சான்றோர்  வளர்க்க, தங்கமெனத்  தழைத்துத்தோங்கித் தரணியெல்லாம் மின்னிய தமிழ் மகள், வெள்ளையரால் மதம் பரப்பப் பணிக்கப்பட்ட பாதிரிமாரும், தம்மேல் மதம் கொள்ளச்செய்த தீங்கனியாள்!! தான் படித்தத் தமிழ்த்தேனை ஆங்கிலத்தில் வடித்து அவர்களும் பெற்றனர் அடையாப் பெரும்பேறு!!


வியாழன், 17 செப்டம்பர், 2015

சிற்பமே உன்னை செதுக்கிக்கொள்!

 

                 அது காலைநேர சாலை. உங்கள் அகநுட்ப விழியால் பார்க்கமுடிந்தால் புலப்படக்கூடும் ராக்கெட்டுகளை போல சைலன்சர்களில் புகையோடு நெருப்பும் கக்கும் வாகனங்களை. அந்த சாலையில் ஒரு ஆண் தன்னை முந்திச்செல்கையில், அவர் பணி, அவர் அவசரம் என பெரும்போக்காய் விட்டுவிடும் ஆண்கள், முந்தியது பெண் என்றால் அவளுக்கு ஒரு அடியேனும் முன்னே செல்லும்வரை அமைதியிழந்து போகிறார்கள். ஒரு சாலையில் ஒரு நொடிகூட தனக்கு முன்னே ஒரு பெண் செல்ல அனுமதிக்காத எத்தனையோ ஆண் ஈகோக்களை கடந்தே விரைந்துகொண்டிருக்கிறது  எங்கள் வண்டிகள்!
             

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

சொக்கா!!! சொக்கா!! 50000ரூபாய் .............50000ரூபாய் ............!!!!!!

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

இது நம்ம ஏரியா!!


                     சில பேருக்கு புது இடத்துக்கு போக கொஞ்சம் தயக்கமா இருக்கும். சிலருக்கு பயமா கூட இருக்கும். இப்படி புதிய எதற்கும் பயப்படுவதற்கு  Neophobia என்பார்கள். ரைட்டு இந்த விஷயத்தை லெப்ட்ல left (விட்டு) பண்ணிட்டு, நம்ம புதுக்கோட்டைக்கு நீங்க வரதுக்காக தான் இந்த பதிவே.

வியாழன், 3 செப்டம்பர், 2015

மைக்கூ!! -6


நடுங்குகிற தேநீர்க் கோப்பையை
இறுகப் பற்றுகிறது
முதிர்ந்த விரல்கள்!
----------------------