வியாழன், 12 நவம்பர், 2015

நானும் ரௌடி (நடிகை) தான்- நயன் தாரா

                       கடும் மழை தயவால் நான்கு நாள் தீபாவளி விடுமுறை கிடைத்தது. நானும் ரௌடி தான் படம் பார்த்தேன். குறைந்த பட்ஜெட் வித்தியாசமான கதை என எடுக்க நினைத்திருக்கிறார்கள்.

                   

 

            இடைவேளைக்குப்பின் அமெச்சூர் டிராமா. அது தொலையுது. வசனங்கள் சில இடங்களில் கொடுமை. எதார்த்தமான வசனங்கள் என்ற பேரில் நீங்கள் கொட்டும் குப்பையை தான் அதற்குபின் எதார்த்தமாகிறது என்பதை எப்போ உணர்வீர்கள் இயக்குனர்களே? ஆணும் பெண்ணுமாய் குழுவாய் இருக்கும் போது ஆண்கள் இதுபோல பேசுவார்களா என்ன!! அதை மட்டும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். இதனால் மட்டும்  நயன்தாராவின் அத்தனை நடிப்பும், திறமையும் இந்த படத்துக்கு கொஞ்சம் ஓவர் என தோன்றச் செய்கிறது. பதிவு நயனை பற்றி நமக்கு எதுக்கு மத்த கதை. படம் முழுக்க பல இடங்களில் காதம்பரி என்பது நயன் ஏற்றிருக்கும் கதாப்பாத்திரம், மற்றபடி நயன்தாராவுக்கு செவித்திறன் குறைபாடு இல்லை என எனக்கு நானே நினைவூட்டிகொள்ள வேண்டியிருந்தது. ஆறாவது அறிவை மலுங்கடிகிறது அவரது நடிப்பு. பத்து வருடமா திரைத்துறையில் இருக்கிறார் என்கிறார்கள். உண்மைத்தான். இத்தனை வருடமாக இருந்திருக்கிறார், ஆனால் இப்போதான் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் நயன். இந்த படத்தில் நயன் சொந்த குரலில் பேசி இருக்கிறார். அதனாலோ என்னவோ அத்தனை உயிரோட்டமாக இருக்கிறது அவரது நடிப்பு. நயன் இம்முறை விஜய் சேதுபதியை ஓவர் டேக் செய்துவிட்டார் என்றே சொல்லலாம். 


            ஒரு முறை விழுந்துவிட்டால் அப்புறம் எப்படி எழுந்துகொள்ளவேண்டும் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு நயன். அவர் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை. அவர் நடிகையாக இருந்தாலும் மனுசி. அடுத்தவர் தனிப்பட்ட வாழ்கையை எப்போதுமே நான் விமர்சிப்பதில்லை. ஆனால் ஒரு பெரிய வலியை பெற்று மீண்ட ஒரு நபர் தன்னை நிலைநிறுத்த என்ன செய்யவேண்டும் என்பதற்கு, அல்லது குறைந்த பட்ச நம்பிக்கை பெறுவதற்கு நயன்தாராவின் திரை வாழ்க்கை ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. ஆம் அவர் முன்னிலும் தீவிரமாய் தன் பணியில் கவனம் செலுத்துகிறார். தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். முக்கியமாய் சில்க் சுமிதா போன்றோர் போல கோழைத்தனமாய் முடிவெடுக்காமல், போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் தன்னை திசைதிருப்பிக்கொண்டு, மனதை மடைமாற்றிகொண்டிருக்கிறார். ஆனால் ஒரு குறை. 

       முன்பெல்லாம் லைலா கேரக்டர், பின் ஜெனிலியா கதாபாத்திரம் என லூஸு ஹீரோயின் காலகட்டமாக இருந்தது. இன்று துணிச்சலான பெண்கள் என காட்டுவதற்காக தொடர்ந்து ஒரு காட்சி படமாக்கப் படுகிறது. கவனித்தீர்களா? அது பொண்ணுங்க டாஸ்மாக்குக்கே போய் மதுபானம் வாங்குவது போன்ற காட்சிகள். பசங்க குடிச்சா தப்பில்லை என ஒரு பொன்னான கருத்தை பரப்பிய அதே சினிமா இப்போ அப்பாவுக்காக அல்லது காதலனுக்காக பீர் வாங்கும் பெண்கள் அன்பானவர்கள் என காட்ட முயல்கிறார்கள்(!?) அதற்கு நயன்தாரா கதாபாத்திரம் என முத்திரை குத்தப்பட்டுவிடும் போல. இதுவரை எனக்குத்தெரிந்து மூணு படத்தில் நயன் அப்பாவுக்காக பீர் வாங்கிவிட்டார். அதை அவர் தவிர்க்கலாம். மற்றபடி ராஜா ராணிக்கு பின் மெல்ல நடிக்கத்தொடங்கிய நயன் நானும் ரௌடி தான் படத்தின் மூலம் நானும் நெஜமாவே நடிகை தான் என நிரூபித்திருக்கிறார். அவர்க்கு ஒரு பொக்கே பார்சல்:)

34 கருத்துகள்:

 1. உங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன். :) சொல்ல வந்தால், நானும் ரெளடி என்று பயமுறுத்துகிறீர்களே!

  http://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுளை நான் பார்க்கணுமா?????!!!!!

   அடக்கடவுளே!!! கிரேஸ் டியர் வேற ஏதாவது மாற்றித்தரகூடாதா:((

   நீக்கு
 2. படம் இன்னும் பார்க்கவில்லை டியர். ஆனால் நயன் ஒரு வைராக்கியத்துடன் பணியாற்றுகிறார் என்பது உண்மைதான், நானும் இதை நினைத்திருக்கிறேன்.
  படங்களில் குடியை ஏன் தான் காமிக்க வேண்டுமோ!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் புரியவே இல்லை கிரேஸ். எதுக்குதான் குடியை தமிழ் சினிமா இப்படி கொண்டாடுதோ:(

   நீக்கு
 3. மைதிலி: நான் ஏதோ சினிமா விமர்சனம்னு வந்தேன். வந்து பார்த்தால் ஒரே "நயன்" விமர்சனமாத்தான் இருக்கு..:)))

  "ஒருத்தர் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக்கூடாது"

  "ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகளை மதிக்கணும்"

  "ஒருவரை ஒரு சில நிக்கழ்வுகள் மூலம் "ஜட்ஜ்" பண்ணக் கூடாது"

  இதெல்லாம் நல்ல கோட்பாடுகள்தான். ஆனால் மனிதர்கள் இதுபோல் கோட்பாடுகளை எல்லாம் எல்லா நேரங்களிலும் ஃபாலோ பண்ணுவது இல்லை என்பதுதான் நிதர்சனம். மனிதர்கள்னாலே அதானே அர்த்தம் :) ஆனால் இந்தக் கோட்பாடுகளை உங்களைப்போலமடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்பவர்கள் பெரும்பாலும் நியாயமாகத்தான் நடக்க முயல்கிறார்கள்.

  எனிவே..நான் உங்களைப்போல் அல்லாத கொஞ்சம் குறைந்த தரம் நான் எப்படினா.. ..

  பிரபுதேவா looks like a loser today. Nayan looks like a winner today. பொறுங்க! I dont know after 10 years when people dont care about nayan anymore as would not be young anymore. In our society, an actress can hardly succeed in a long professional life or in her personal life. Here the "success" what I am thinking may not be the same others think. I wonder why would anyone wants to become an actress if she wish to be "happy" and successful. I feel sorry for them always! :(

  பதிலளிநீக்கு
 4. welcome வருண்:) எவ்ளோ நாள் கழிச்சு பாக்றோம். happy.
  இது நயனை விமர்சிக்கும் பதிவு அல்ல. நயன் என்று இல்லை யார் வாழ்வென்றாலும் நாம் கற்றுக்கொள்ள சிலவிசயங்கள் இருக்கவே செய்கின்றன இல்லையா வருண்?:)
  *பிரபுதேவா looks like a loser today. Nayan looks like a winner today* thats what I really meant. தடுக்கி விழுந்தா அந்த இடத்திலேயே கிடைக்கக்கூடாது. எழுந்து மண்ணையும், வலியையும் சேர்ந்து தட்டிவிட்டு மேற்கொண்டு நடக்கணும்.அது தானே sportive ன்னு சொல்றோம். then personal life ல success என்பது அவரவர் நிம்மதி, அவரவர் அளவீடு. but am sure about one thing கஷ்டமோ, நஷ்டமோ அவரவர்க்கு எதில passion இருக்கோ அதை அவர்கள் செய்கிறார்கள். racers போல gamblers போல ஒவ்வொருதர்க்கு ஒவ்வொரு passion! anyway இந்த காலை நேரத்தில் இந்த நீண்ட நட்பின் பின்னூட்டம் இந்த நாளை அழகாக்கி இருக்கிறது. நன்றி வருண். take care:)

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  தங்களின் பார்வையில் நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. தவிர்க்க வேண்டியதையும் சரியாக சொல்லியுள்ளீர்கள்...

  பதிலளிநீக்கு
 7. நானும் பார்த்தேன்மா...தன்னம்பிக்கைக்கு நயன் எடுத்துக்காட்டானவர் தான்....வலி அவரை மெருகேற்றியுள்ளது...உண்மைதான்..ஆமா கடவுள பாக்க போறில்ல என்ன கேட்க போறப்பா..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. *வலி அவரை மெருகேற்றியுள்ளது...*உண்மை தான் அக்கா.
   *ஆமா கடவுள பாக்க போறில்ல என்ன கேட்க போறப்பா..?* ஆசையை மட்டும் சொன்ன போதும் என கடவுள் விசயத்தில் எனக்கு விதிவிலக்கு அளித்துவிட்டார் தோழி கிரேஸ்:) விரைவில் சொல்கிறேன் அக்கா:)

   நீக்கு
 8. அக்காவ்... நானும் இந்த லீவில் தான் பார்த்தேன்... ஆனா ஏன் நயனை இவ்வளோ பாராட்டி இருக்கீங்க..?? படம் நல்லா இருக்கு.. நீங்க சொன்ன பீர் சீன் வரிசையா அவங்க 3 படத்திலயும் இருக்கு.. சென்டிமெண்ட்டோ என்னவோ???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு நயன் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது அபிக்குட்டி.
   **சென்டிமெண்ட்டோ என்னவோ???** இருக்கும்...இருக்கும்:))

   நீக்கு
 9. யாரடி நீ மோகினியில் நயனின் நடிப்பு பிடித்து இருந்தது. அதற்குப்பின் அவரது நடிப்பு மெருகேறி இந்த அளவுக்கு முன்னேறி வந்துள்ளது அவரது தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டாக அமைகிறது! சிறப்பான பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 10. பொதுவாகவே எனக்கு சினிமா பார்ப்பதில், அதிலும் திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அத்தனை ஆர்வமும் இல்லை.

  இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் - நல்லது. பீர் வாங்கும்படி இதுவரை மூன்று படங்களில் நடித்திருக்கிறார். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. *ர் வாங்கும்படி இதுவரை மூன்று படங்களில் நடித்திருக்கிறார். :(**

   அதுவும் அப்பாவுக்காக வாங்கும் பாசமகள்:(( ஞானப்பிரகாசன் சகா கருத்தையும் நேரம் இருந்தா படிச்சு பாருங்க அண்ணா.

   நீக்கு
 11. நானும் பார்த்தேன். நயன்தாராவின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது. ஆனால், செவித்திறன் பாதிப்பை நடிப்பில் அவர் சரியாக வெளிப்படுத்தவில்லை என்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நான் சரியாகக் கவனிக்கவில்லையோ என்னவோ!

  மற்றபடி, விஜய் சேதுபதியை அவர் முந்தி விட்டார் என்பது முதல் அவர் நடிப்புப் பற்றியும், நடிப்புத் திறன் பற்றியும் நீங்கள் கூறியிருக்கும் எல்லாக் கருத்துக்களும் எனக்கும் தோன்றின. பீர் வாங்கும் காட்சி எனக்கும் வெறுப்பை அளித்தது. ஆனால், முழுப் புட்டியையும் ஒரேயடியாகத் தூக்கிக் குடிக்கும் திரிஷாவுக்கு நயன்தாரா எவ்வளவோ மேல்! ;-)

  ஆனால், இப்படிப்பட்ட காட்சிகளில்தாம் நடிப்பேன் எனவெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு நடிகைகளுக்குத் திரைத்துறையில் உரிமை இருக்கும் என நினைக்கிறீர்களா?

  இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்தப் படத்துக்கு நீங்கள் கண்ணோட்டம் எழுதியிருக்கிறீர்கள் என்றவுடன் நான் வேறொன்றை எதிர்பார்த்து வந்தேன்.

  படத்தின் தயாரிப்பு யார் என்று பார்த்தீர்களா?... 'லைகா'!

  ஆம்! எந்தப் படத்தில் விஜய் நடிக்கக்கூடாது, முருகதாஸ் இயக்கக்கூடாது என்றெல்லாம் தமிழ் உணர்வாளர்கள் கொடி பிடித்தோமோ அதே லைகா நிறுவனம்தாம் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறது. இது மட்டுமில்லை, இடையில் இரண்டு மூன்று படங்களைத் தயாரித்து விட்டது அந்நிறுவனம். ஆனால், நாம் 'கத்தி' பட விவகாரத்துக்குப் பின் அவர்களைக் கண்டு கொள்ளவேயில்லை.

  பெரிய நடிகர்கள் நடித்தால் மட்டும்தானே பிரச்சினை செய்கிறீர்கள்; நாங்கள் சிறு சிறு படங்களாகத் தயாரித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் காலூன்றிவிட்டுப் போகிறோம் என லைகா முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. ஆனால், நம்மவர்களுக்குப் பெரிய படங்களைத் தவிர மற்றவை கண்ணுக்குத் தெரியாது.

  தமிழனை அழித்துவிட்டு, தமிழன் காசிலேயே மஞ்சள் குளிக்க வெட்கமில்லாமல் பல்லிளித்து வருகிறது சிங்களச் சமூகம், தமிழ்ப் போர்வை போர்த்தியபடி. நாம் எச்சரிக்கையடைய வேண்டிய நேரம்!

  பதிலளிநீக்கு
 12. * செவித்திறன் பாதிப்பை நடிப்பில் அவர் சரியாக வெளிப்படுத்தவில்லை என்பதாக எனக்குத் தெரியவில்லை.* அச்சச்சோ அவ்ளோ லட்சணமாவா எழுதி இருக்கேன். அவங்க அத்தனை தத்ரூபமாய் நடித்ததாக அல்லவா சொல்ல நினைத்தேன்.

  *ஆனால், முழுப் புட்டியையும் ஒரேயடியாகத் தூக்கிக் குடிக்கும் திரிஷாவுக்கு நயன்தாரா எவ்வளவோ மேல்! ;-)** சரிதான் சகா.

  *படத்தின் தயாரிப்பு யார் என்று பார்த்தீர்களா?... 'லைகா'!* இந்த மாதிரி நிறுவனங்களை காலி செய்ய நாங்கள் ஒரு வழி வைத்திருக்கிறோம். அதை தான் கையாண்டோம்;)

  அது என்னக்கா பேரு, லைகா என்றான் என் தம்பி.

  ரஷ்யா விண்வெளிக்கு முதன்முதலில் அனுப்பிய உயிரினத்தின் பெயர் லைகா. அது ஒரு நாய் என்றேன்.

  பொருத்தமான பேர் தான். சிங்களன் டெஸ்ட் பண்ண லைகா வை இங்க அனுப்பியிருக்கான் என்றான் என் தம்பி:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவங்க அத்தனை தத்ரூபமாய் நடித்ததாக அல்லவா சொல்ல நினைத்தேன்// - ஆகா!.....

   //இந்த மாதிரி நிறுவனங்களைக் காலி செய்ய நாங்கள் ஒரு வழி வைத்திருக்கிறோம். அதைத்தான் கையாண்டோம்// - ஓகோ! புரிந்துவிட்டது! :-)

   //சிங்களன் டெஸ்ட் பண்ண லைகாவை இங்க அனுப்பியிருக்கான் என்றான் என் தம்பி// - நீங்கள் மட்டும்தான் என்னை மாதிரி என்று நினைத்தேன். உங்கள் தம்பியும் என் தம்பி மாதிரிதான் போல.

   ஆனால், ஒன்று! இரசியனை விட சிங்களன் அறிவாளி. இரசியனைப் போல் அவன் தன் நாயை அனுப்பவில்லை, தமிழ் நாய் ஒன்றையே அனுப்பி ஆழம் பார்க்கிறான். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், இங்குள்ள தமிழ் உணர்வு தகிக்கும் தகைசால் பெருமக்கள் சிலர் இராசபக்சவுக்குக் கூசாமல் கூசா தூக்குபவனாக இருந்தாலும் தமிழர்களுக்குப் பிறந்தவன் தமிழன்தான்; தமிழருக்காக உயிரையே விட்டாலும் பெரியார் கன்னடன்தான் என பிதற்றித் திரிகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இன்று மவுசும் கூட! என்னத்தைச் சொல்ல?...

   நீக்கு
  2. ஆம் சகா! என் தம்பி கல்லூரியில் படிக்கும்போதே சேகுவேரா டீ.ஷர்ட் வேணாம் பெரியார் சட்டை வரும்போது பாத்துகுவோம்னு சொன்னவன்:)) ஆயிரம் கரம் கொண்டும் கதிரவனை மூட முடியாது. பெரியாரை பார்த்துக் குரைப்பவர்களை puranthallungal

   நீக்கு
  3. எப்படித் தள்ள? அவர்களும் நம் தம்பிகள்தானே? புதிய தலைவர்களின் முதிர்ச்சியில்லாப் பேச்சைக் கேட்டுத் தவறான கருத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டியதும் நம் கடமையே இல்லையா?

   நீக்கு
 13. ஓ! இந்தப் படம் இன்னும் பார்க்கலை. உங்கள் விமர்சனம் நயன் நன்றாக நடித்துள்ளதாகச் சொல்லுகின்றது. அவர் ஒரு நல்ல திறமையான நடிகை.
  முதல்ல எங்க ஊருல வந்திருக்கானு பார்க்கணும். நயன் என்பதால் வந்திருக்கும். சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மனதைத் தொட்ட படம் எந்னு நிண்டெ மொய்தீன். (இப்படிக்கு உன் மொய்தீன்) முடிந்தால் பாருங்கள் சகோ. நல்ல படம் உண்மையாக வாழ்ந்த, மொய்தீன் காஞ்சனமாலா அதில் காஞ்சன மாலா இன்னும் இருக்கின்றார் அவர்களின் கதைதான்...கற்பனை கலக்கப்படாத படம்...ஆனால் படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன் சகாஸ்! பலரும் பரிந்துரைக்கும் படமாக இருக்கிறது. torrents போட்டுட வேண்டியது தான்:)

   நீக்கு
 14. நல்ல விமர்சனம்..
  மிகச் சிறப்பாக சொல்லியிருக்கீங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க விமர்சனப்புலி.:) நீங்க சொல்லும்போது மகிழ்ச்சியா இருக்கு அண்ணா!

   நீக்கு
 15. நானும் இந்தப் படத்தில் நயனின் நடிப்பில் அசந்து போனேன். குறிப்பாக அப்பா இறந்து விட்டது தெரிந்த பிறகு அவர் அழுதுகொண்டே சாலையில் நடந்து வரும் காட்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகா. அதுபோல தனக்கு காது மந்தம் என அவர் வெளிபடுத்தும் காட்சி எல்லாம் கிளாஸ்! நன்றி சகா!

   நீக்கு
 16. அன்புச் சகோதரி,

  நானும் ரௌடி தான் என்று நயன்தாரா நிருபித்து விட்டார்!

  நன்றி.

  த.ம.5  பதிலளிநீக்கு