வியாழன், 1 அக்டோபர், 2015

வல்லமை செய்வாய் தோழா!!!







சுற்றிடும் உலகம் நின்று
       சுழன்றிடும் உன்சொல் கேட்டு!!
பற்றிடும் துயரம் நீங்கும்
        பனியென கரைந்தே ஓடும் !!
விற்காத பழம்பொய் மூட்டை
       வீணிலே பரப்பும் மூடர்,
சற்றேனும் அருகில் வந்தால்  
       சற்றென இடத்தை மாற்று!!
கொற்றமும் குடையும் வந்து
              கோடிகள் தந்த போதும்,
நெற்றியை உயர்த்தி நீசொல்
       நெறியினை மதிப்பேன் என்று !!
நிற்கிற  நிலமும் நீங்க
           நீட்டிய கையும் மாற
குற்றமாய் உன்னைப் பற்றி
     குறைபட நினைத்தல் வேண்டாம்
சிற்றறி மனிதர் சொல்லை  
       சிந்தனை செய்ய வேண்டாம்
கற்றவுன் கல்வி என்றும்
      காத்திடும் வாழ்வை நாளும்!!
வெற்றிடம் போக்க வந்தாய்
             வீரனே உன்கை  கீழா
வற்றாத வீரம் கொண்டு
         வல்லமை செய்வாய் தோழா!!

மைதிலி கஸ்தூரி ரெங்கன்
 
வகை 5-
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
உறுதி மொழி.
 1.வல்லமை செய்வாய் தோழா!! ” என்னுந் தலைப்பில்மரபுக்கவிதை வகைமையின் கீழ் எழுதப்பெற்றஇப்படைப்புஎனது சொந்தப்படைப்பே என உறுதி அளிக்கிறேன்.
2. இப்படைப்பு,“வலைப்பதிவர் திருவிழா2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம்நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்2015“ க்காகவே எழுதப்பட்டது  என உறுதிஅளிக்கிறேன்.
(3) இதற்கு முன் வெளியான படைப்பன்று எனவும் முடிவு வெளிவரும் வரை  வேறு இதழ்எதிலும் வெளிவராது  எனவும் உறுதி அளிக்கிறேன்.
 
 
 
 
டிஸ்கி:

கஸ்தூரியின் பெரு விருப்பத்திற்காகவும், என் மேல் கொண்ட நம்பிக்கைகாகவும் நான் முயன்ற மரபுக்கவிதை. பெரியோர் பொறுத்தருள்க!!


மரபு எழுத கற்றுத்தந்த விஜூ அண்ணாவிற்கு நன்றிகள் பல:)

20 கருத்துகள்:

  1. ஆஹா வாழ்த்துகள்மா...அருமை அருமை

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி தோழி. இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. ஆகா.. அற்புதம் மைதிலி!
    அசத்திவிட்டீர்கள்!

    வெற்றிபெற என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. கடைசி நிமிடம் கடைசி நொடிவரை போட்டிக்கான பதிவுக்ள் தொடர்கின்றன
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. //நெற்றியை உயர்த்தி நீசொல்
    நெறியினை மதிப்பேன் என்று !// அப்டி சொல்லு என் ராசாத்தி :)
    கலக்கிட்டிங்க மைதிலி டியர்
    வெற்றிபெற வாழ்த்துகள்
    எனக்கில்லை எனக்கில்லை ஆயிரம் பொற்காசுகள் எனக்கில்லை ... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **எனக்கில்லை எனக்கில்லை ஆயிரம் பொற்காசுகள் எனக்கில்லை ... :)***
      என்னம்மா இப்படி பண்றீங்களே அம்மா:)))
      மிக்க நன்றி டியர்!

      நீக்கு
  6. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,,,,

    பதிலளிநீக்கு
  7. மரபிலும் அசத்துறிங்கப்பா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை!
    வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. அன்புச் சகோதரி,

    வல்லமை செய்வாய் தோழா! -மரபுக்கவிதை அருமை. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.
    த.ம. 5

    பதிலளிநீக்கு
  10. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு