வெள்ளி, 11 மார்ச், 2016

இதுவும் கடந்து போகட்டும்.

                 கடந்த வெகு சில நாட்களில் மூன்று துயரநிகழ்வுகள். மரணம் நிகழாத வீட்டில் தானியம் வாங்க அனுப்பப்பட்ட அந்த தாய் புத்தனுக்கு முன்னால் நின்ற கணங்களை கண்ணெதிரே நிகழ்த்திக்காட்டுகிறது காலம்.

கவிதை போன்ற படத்தொகுப்புக்களோடு தான் முன்முதலில் எனக்கு அறிமுகமானார் மணிராஜ் தளத்தின் ராஜராஜேஸ்வரி அம்மா. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு பாடல்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த தருணம் "கண்ணுக்குள் பொத்திவைப்பேன் என் செல்லக்கண்ணனை" என்கிற திருமணம் எனும் நிகாஹ் படப்பாடலை g+ சில் பகிர்ந்திருந்தார் ராஜராஜேஸ்வரி மேடம். அந்த ஆண்டுவிழாவில் கோபியர் சூழ ஆடிய சின்ன கண்ணன் சார்பாக அவர்க்கு நன்றி தெரிவித்து செய்தி அனுப்பினேன். இதனை விரைவில் அவர் மறைவார் என நம்பவே முடியவில்லை.

அந்த ஈரம் கூட காயவில்லை அதற்குள் மற்றொரு செய்தி. தோழி இளமதி அவர்களது கணவர் இயற்கை எய்தி விட்டாரென. நாளாயினி, சாவித்திரி என்றெல்லாம் என் அப்பத்தா ஏதேதோ கதை சொல்வார். அதெல்லாம் மொத்தமாய் பெண்ணடிமைத்தனம் என புறந்தள்ளியிருக்கிறேன். ஆனால் தமிழுக்காய் தொண்டு செய்த, ஆத்மார்த்த தம்பதிகளின் வாழ்கையை சமகாலத்தில் அறிந்துகொள்ள முடிந்த போது, இத்தனை ஆண்டுகாலம் கண்துஞ்சாமல், கனமும் சோராமல், காதலும் மாறாமல் தோழி இளமதி அவர்கள் கோமா நிலையில் இருந்த தன் கணவருக்கு செய்த பணிவிடைகள் இன்னும் சில தலைமுறை தம்பதிகள் தெரிந்து கொள்ளவேண்டிய, கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்றே சொல்வேன். அய்யா வரை இது ஒரு இளைப்பாறல் என்றாலும் கூட, அவரை இழந்த தோழியின் துயர், துணையை நேசிக்கும் நெஞ்சங்களுக்கு மட்டுமே புரியும். வார்த்தைகளே வரவில்லை தோழி. முன்பு உங்களுக்கு சொன்னதையே மீண்டும் சொல்கிறேன் தோழி இளமதி "மீண்டு(ம்)  வருக" எமக்காக இல்லாவிட்டாலும்  உம் தமிழுக்காக.

   
பத்து நாட்களுக்கு முன்பு ஒரு குடும்ப நிகழ்வு. கடந்து சென்ற என் கைகளை பற்றி "மைதிலி எப்படி இருக்க? மதி வந்திருக்கிறாளா என தொடங்கி ஒட்டு மொத்தமாய் என் பிறந்த வீடு நலம் விசாரிக்கத் தொடங்கினார் பெரியம்மா. அவர் கஸ்தூரியின் அத்தை. என் அம்மாவை தவிர அந்த காலத்தில் கைக்கடிகாரம் அணிந்து நான் பார்த்த உறவினர் அவர் மட்டும் தான். என் அம்மாவை போலவே படித்தவர். அரசுப் பணியாற்றியவர். ஆசிரியர். என் புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் இடையான தொலைவுகள் குறைத்த  பாலங்களில் ஒருவர். திடீரென சென்ற வியாழக்கிழமை இயற்கை எய்திவிட்டார். நம்பவே முடியவில்லை.


எத்தனை தற்காலிகமான வாழ்கையை எத்தனை ஆர்ப்பரிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. இதுவும் கடந்து போய்விடும். இதுவும் கடந்து போகட்டும்.


20 கருத்துகள்:

  1. நிலையில்லாத வாழ்வு. வருத்தமான நிகழ்வுகள்.

    பதிலளிநீக்கு
  2. ப்ளாகருக்கு நான் புதிது
    என்பதால் இவர்களை
    எனக்கு தெரியாது....
    ஆனால் இவர்களது மரணத்தால்
    மனதில் பாரங்கள் அழுந்துகிறது.....
    இவர்கள் ஆன்மா சாந்தியடைய
    இறைவனை பிரார்த்தனை
    செய்கிறேன்....

    பதிலளிநீக்கு
  3. எத்தனை தற்காலிகமான வாழ்க்கை..... நிதர்சனம்.....

    தலைப்பில் சொன்னது போல இதுவும் கடந்து போகும்.

    பதிலளிநீக்கு
  4. மரணங்கள் பற்றிய செய்திகள் அதிகம் வரும்போது மரணமே ஒரு விடுதலை என்னும் நினைப்பு வரவேண்டும் என் உற்ற தோழன் ஒருவன் மூன்று நான்கு ஆண்டுகளாக படுத்த படுக்கையாய் தானே ஏதும் செய்ய இயலாதநிலையில் இருந்தார் அவரது மனைவி ஒரு நரக வேதனையைத்தான் அனுபவித்திருக்க வேண்டும்நல்ல வேளை அண்மையில் இறந்தான் எனக்கு நண்பனை இழந்த துயர் வரவில்லை. மாறாக அவன் மனைவிக்குகிடைத்த விடுதலையாகவே நினைக்கிறேன் இப்படிக் கூறுவது ஹார்ஷாக இருக்கலாம் ஆனால் அதுதானே உண்மை. ஒரு விதத்தில் இளமதிக்கும் அதுதான் என்று நினைக்கிறேன் அண்மையில் நான் எழுதி இருந்த உரத்த சிந்தனைகள் என்னும் பதிவையும் வாசிக்க அழைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. :( உங்கள் பெரியம்மாவின் மறைவிற்கு இரங்கல் மைதிலி..பத்துநாள் முன்பு பார்த்துப் பேசியவர் இன்றில்லை என்றால்...ஹ்ம்ம்
    hugs to you dear

    பதிலளிநீக்கு
  6. ஆம்! ஒவ்வொரு நிமிடமும் கடந்து கொண்டுதான் இருக்கிறது துக்கமும் சரி மகிழ்வும் சரி! வருவதை நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றால் நல்லதுதான். இந்த நிகழ்வுகள் துக்கத்தைத் தந்தாலும் இதுவும் கடந்து போகும்...ம்ம் அதுதானே வாழ்க்கை!

    எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  7. மறைந்த அனைவருக்கும் ஆழந்த இரங்கல்கள்

    பதிலளிநீக்கு
  8. அனைவரது ஆன்மா சாந்தியடையட்டும்....

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    என்ன செய்வது சகோதரி மனிதனாக பிறந்தால் இறப்பு என்பது நிச்சயம் வாழ்வோம் என்பது பொய்...இறைவன்செயல்

    மூவரது ஆன்மாவும் சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. எனக்கு அகரம் கற்றுத்தந்த,ஆசிரியர் மாரிக்கண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க மைதிலி! இத்தனை நாட்கழித்து வந்து இத்தனைத் துயரச் செய்திகளா!!!

    இறப்பு வாழ்க்கையின் ஒரு பகுதினு எளிதாக சொல்லிடுறாங்க. தவிர்க்க முடியாததுதான். ஆனால் இழந்தவர்களுக்குத்தான் அந்த வலியை சரியாக உணரமுடியும்.

    பொதுவாக இதுபோல் துயரச்செய்திகள் வரும்போது, என் உறவில் உள்ளவர்களை சில நிமிடங்கள் "கற்பனையில் இழந்து" பார்த்துத்தான் அவ்வலியை உணருவேன். இல்லைனா எனக்கு அவ்வலியை என்னால் சரிவர உணரமுடியாது!

    முதலில் சொன்ன இருவர் தவறிவிட்டதை குமார், மற்றும் மது தளத்தில் வாசிச்சேன்.

    இராஜராஜேஸ்வரி எல்லோருடைய தளத்தையும் தொடருவார்.

    இளமதி அவர்கள் தளத்தில் ஓரிரு முறை பின்னூட்டமிட்டு இருக்கேன். அவர் கணவர் பற்றி ஏதும் தெரியாமலிருந்ந்தேன்.

    மதுவின் அத்தை பற்றி இப்போத்தான் தெரிந்ந்து கொள்கிறேன். வருத்தமாக இருக்கிறது.. :(

    பதிலளிநீக்கு
  12. நான் தொடர்ந்து எழுதத் துவங்கிய புதிதில் எந்த வலைப்பூவுக்குச் சென்றாலும் அதில் இராஜராஜெஸ்வரி மேடத்தின் பின்னூட்டத்தையும் அந்தத் தாமரை சின்னத்தையும் பார்த்து ஆச்சரியத்தில் வாய்பிளப்பேன், இவரால் மட்டும் எப்படி இத்தனைத் தளங்களுக்குச் சென்று கருத்திடமுடிகிறது என்று. அவர் மறைந்து விட்டார் என்ற செய்தியறிந்த போது நன்கு பழகிய ஒருவரை இழந்தது போல மனம் துணுக்குற்றது. உங்கள் இந்தப் பதிவைப் படித்த பிறகு தான் இளமதியின் துணைவர் மறைந்த விஷயம் தெரிய வந்தது. அன்னாரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு