சனி, 29 ஆகஸ்ட், 2015

கைப்பை - 6

டைரி;
        இந்த முறை டைரியில் ஒரு டைரி மேட்டரே தான் சொல்லப்போறேன்.


   மகி ஒருநாள் கூட அவள் டைரியில் வீட்டுப்பாடங்களை குறித்துவருவதே இல்லை.நானும் சாம, தான, பேத, தண்டம் என எல்லா வழிகளிலும் எடுத்துரைத்த பின்னும் இது தொடரவே செய்தது. அன்று மாலை கிச்சனில் இருந்த என்னிடம், நிறை தன் ஹோம் ஒர்க் காண்பித்து என் கையொப்பம் பெற்றபின், நான் மகியின் டைரியை எடுத்துவருமாறு சொன்னேன். அவள் மகிடம் கேட்கிறாள் "மகி எங்க உன் டைரி?"

மகி பம்மிய குரலில் "நான் எழுதிட்டுவரலை க்கா"

நிறை "அம்மா எத்தனை தடவை உன்கிட்ட சொல்லிருக்காங்க, ஏன் இப்படி பண்ணுற?"

மகி " இல்லடி, உனக்கு தெரியாதா, நம்ம ஹோம் ஒர்க் எல்லாத்தையும் ஸ்கூல்ல இருந்து நம்ம அம்மாவுக்கு மெஸ்சேஜ் அமிசிருவாங்கடி!!" (அனுப்பிடுவாங்கன்னு சொல்லதெரியல, அதுக்குள்ள எம்புட்டு வெவரம் பாருங்க!!) 

pen drive      நம்ம ஆளுங்க கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. பக்தியா இருந்தாலும், பாசமா இருந்தாலும் அதுக்குனே ஒரு சீசன் வச்சுக்குவாங்க. மார்கழி வந்த பழனி முருகன் மீதும், கார்த்திகையில் ஐயப்பன் மீதும், தை பிறந்தால் அக்கா தங்கைகளுக்கு பொங்கல் சீர் எடுக்கும் போது உடன்பிறப்புக்கள் மீதும், ஆடி அம்மாவசை என்றால் செத்துப்போன தாத்தாபாட்டி மீதும் பாசம் பொங்கி வழியும். சீசன் முடிந்தவுடன் பாரப்பட்சமே இல்லாம அம்புட்டு பேரையும் பரணுக்கு அனுப்பிவிடுவார்கள். இந்த வைரல் எப்பெக்ட் எல்லாம் நம்ம ஆளுங்க அப்பவே அப்புடி. இப்போ கலாம், மதுவிலக்கும் அப்படி ஆகாமல் இருந்தால் சரி. இந்த படத்தை பாருங்க.play list:

இப்போ என் playlist ல இந்த பாட்டு தான் ரிபீட் மோடு ல இருக்கு. ஜீவன் சகா பரபரப்பா வலைப்பூவில் இயங்கிக்கிட்டு இருந்தா இந்த பாட்டை இந்நேரம் ஷேர் பண்ணிருப்பார். ட்யூன் ஏற்கனவே கேட்டதுபோல இருந்தாலும், விஜய் குரலும், ஸ்ருதி கமலின் குரலும் பாட்டுக்கு இன்னும் எனெர்ஜி கொடுத்திருக்கு. குரலிலேயே அவ்ளோ துள்ளல்!! கேட்டுப்பாருங்க:)34 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. மகியின் மழலை அருமை, எப்டி யோசிக்கிறா பாருங்க. நீங்க மெசேஜ் செக் பண்ணாம சாம, பேத, தண்டம்னுகிட்டு.. :-)

   குறும்படம் மனம் கனக்கச் செய்கிரது.. இப்படித் தான் பல சிறுவர்களின் வாழ்க்கை, இல்லையா டியர்?
   :-(

   நீக்கு
  2. ஹஹஹா!!!
   நான் மெஸ்சேஜ் பார்த்துதான் இத்தனை நாளா அவளுக்கு ஹோம் வொர்க் சொல்லித்தரேன் டியர்! ஆனால் அவள் கிளாஸ் டீச்சர் தான் போர்டில் எழுதுவதை இவள் copy செய்வதில்லை என மிகவும் வருந்துகிரார்களே!!!

   நீக்கு
 2. சகோதரி!...குட்டியின் மழலை! அமிச்சுருவாங்கடி!!! ரசித்தோம்...

  அது சரி படமும் காணலை, பாட்டும் காணலை..

  கீதா: இந்தப் பாட்ட அனுப்பத்தான் நீங்க அன்னிக்கு உங்க மருமகன்ட ஸ்மார்ட் ஃபோன் இல்லையானு கேட்டீங்களா....

  சரி இங்க காணல...யுட்யூப்ல பாக்கறோம்....கேக்கறோம்...என்னாச்சு உங்க தளத்துல படமும் இல்ல பாட்டும் இல்ல...இருங்க ரிஃப்ரெஷ் பண்ணி செக் பண்ணிப் பாக்கறோம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லிங்க் ஏதோ கோளாறு காரணமாக தடை பட்டிருக்கு சகாஸ்! இப்போ சரியாகிடுச்சு:) நன்றி சகாஸ்!

   நீக்கு
 3. ஆமாம்...இந்த சீசன் இருக்கு பாருங்க ரொம்ப ஓவர்....சினிமால கூட சீசன் உண்டு...ஒரு படம் மதுரை சுத்தி வந்துச்சுனா அடுதடுத்து அதே மாதிரிதான் வரும்....காமெடினா காமெடி தான் வரும்...கிராமத்துக் கதைனா அதுதான் இப்படித்தான் சினிமா சீசனும்...இப்ப ஆடி மாசத்துல அம்மன் ஆடி முடிச்சுட்டாங்க...அடுத்து புரட்டாசி சனி ஆரம்பிச்சுடும்....ஸ்பீக்கர் அலறும்...அப்புறம் அடுத்த வருஷம் வரைக்கும் எல்லா சாமியும் ரெஸ்ட்க்குப் போய்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரெக்ட் !! நான் விட்டதை நீங்க சொல்லீடீங்க சகாஸ்:)

   நீக்கு
 4. குடிக்கிறதுக்கு கரம் தேடுவார்கள் இல்ல அம்மு அதுபோல. நமக்கும்
  இந்த வண்டியை ஓட்டுறதுக்கு அப்பபோ ஏதும் ஒரு காரணம் தேவைப் படுகிறது இல்ல அப்ப தானே தடல் புடலா வரும் நாட்கள் பிசிறு இல்லமல் ஓடும் அதான். அது தான் இந்த ஏற்பாடு....
  மழலை தான் இன்னும் மகி. அவங்க உரையாடல் மனதை கிறங்க வைகிறதும்மா ...
  நல்லா ரசியுங்க அது தானே நம்ம வேலை இல்ல அம்மு நன்றி !வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விழாக்கள் கொஞ்சம் காரண, காரியத்தோடு அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும் இல்லையா இனியாச்செல்லம்! மிக்க நன்றி!!

   நீக்கு
 5. இப்போ கலாம், மதுவிலக்கும் அப்படி ஆகாமல் இருந்தால் சரி.
  அப்படித்தான் ஆகும் போல் தெரிகிறது சகோதரியாரே
  தம +1

  பதிலளிநீக்கு
 6. டைரி மேட்டர் அதிகம் ரசித்தேன். கிட்டத்தட்ட இவைபோன்ற நிகழ்வுகளை என் பள்ளி நாள்களில் செய்துள்ளேன், சந்தித்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
 7. புலி பான்டு இனிமை. குழந்தையின் மழலை சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 8. அன்புச் சகோதரி,

  மகளின் டைரிக் குறிப்பை -
  " இல்லடி, உனக்கு தெரியாதா, நம்ம ஹோம் ஒர்க் எல்லாத்தையும் ஸ்கூல்ல இருந்து நம்ம அம்மாவுக்கு மெஸ்சேஜ் அமிசிருவாங்கடி!!"
  ஒங்களுக்குத் தெரியலைன்னா...பாவம் பிள்ளை என்ன பண்ணும்... எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கிறதில்லையா?

  குறும் படம் பார்த்தேன். சீசன் முடிந்தவுடன் எல்லாம் முடிந்துவிடும். சிறுவனின் நடிப்பு அசத்தல்.

  ’புலி’ -யின் மென்மையான குரலில் அருமையான பாடலைக் கேட்டு மகிழ்ந்தோம்.

  நன்றி.
  த.ம. 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா !! ஆமாம் அண்ணா பிள்ளைகள் ரொம்ப வெவரம் தான்:) ரசித்தமைக்கு நன்றி அண்ணா!

   நீக்கு
 9. தேசத்தை கூறு போட்டு விற்பவர்களிடையே தேசியக் கொடியை விற்கும் சிறுவனுக்கும் நேரும் கதியை வீடியோ க்ளிப் அருமையாக சொல்லி செல்கிறது

  பதிலளிநீக்கு
 10. அதானே!மெசேஜ் அனுப்புபோது தேவையில்லாம ஏன் அத வேற எழுதணும்? இப்படி இல்ல யோசிக்கணும்
  இந்த விவரம் மைதிலி இடம் இருந்து வந்ததா கஸ்தூரியிடம் இருந்து வந்ததா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா!! கஸ்தூரி இப்படி ஒ.பி அடிக்கிற ரகம் இல்லை அண்ணா! நான் தான் சோம்பேறி:)) மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 11. கைப்பைக்குள் ரசிக்கும் பொருட்கள்

  பதிலளிநீக்கு
 12. ஆஹா மகி என் பேர் தானா?
  தங்கள் தொகுப்பு அருமை, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க பேரே தான் தோழி! உங்களைபோல வந்தால் மகிழ்ச்சிதான்! மிக்க நன்றி!

   நீக்கு
 13. சில சாமிகள் வருடத்தில் ஒரு நாள் தலையில் வைத்துக் கொண்டாடப் படும் ,மற்ற நாட்களில் தீபம் ஏற்றக் கூட ஆளிருக்காது ,அது மாதிரிதான் நம்ம தேசபக்தியும் :)

  பதிலளிநீக்கு
 14. குட்டி பொண்ணு விவரமாத்தான் இருக்காங்க! வீடியோ பார்க்க முடியவில்லை! இணையம் ஸ்லோ!

  பதிலளிநீக்கு
 15. ***மகி ஒருநாள் கூட அவள் டைரியில் வீட்டுப்பாடங்களை குறித்துவருவதே இல்லை.***"

  ***இல்லடி, உனக்கு தெரியாதா, நம்ம ஹோம் ஒர்க் எல்லாத்தையும் ஸ்கூல்ல இருந்து நம்ம அம்மாவுக்கு மெஸ்சேஜ் அமிசிருவாங்கடி!!" ***

  :-)

  இன்னும் கொஞ்ச நாள் ல ஆண்லைன்ல அப்லோட் பண்ணிடுவாங்க. :)
  ----------------

  ***இப்போ என் playlist ல இந்த பாட்டு தான் ரிபீட் மோடு ல இருக்கு. ஜீவன் சகா பரபரப்பா வலைப்பூவில் இயங்கிக்கிட்டு இருந்தா இந்த பாட்டை இந்நேரம் ஷேர் பண்ணிருப்பார். ட்யூன் ஏற்கனவே கேட்டதுபோல இருந்தாலும், விஜய் குரலும், ஸ்ருதி கமலின் குரலும் பாட்டுக்கு இன்னும் எனெர்ஜி கொடுத்திருக்கு. குரலிலேயே அவ்ளோ துள்ளல்!! கேட்டுப்பாருங்க:)***

  விஜயும் ஸ்ருதியுமா? அம்மாடி!! நான் செத்தேன்! :) தப்பிக்க ஒரே வழிதான். இதை கோடிக்கணக்கான அவர்கள் ரசிகர்களுக்கு அர்ப்பனித்துவிட்டு நான் மரியாதையா ஒதுங்கிக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
 16. ஹாஹாஹா!
  ஓகே வருண் போன போஸ்டுக்கு நான் பண்ணின நீங்க படிக்கலையோ!!! :))))) தேங்க்ஸ்!

  பதிலளிநீக்கு