சென்ற வருடம் மே மாதம் புதுகையில் தமிழாசிரியர் வலைபதிவர் பயிற்சி பட்டறை ஒன்று எங்கள் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் தலைமையில், நிலவன் அண்ணாவின் ஆலோசனையின் பேரில் நடந்தென்று ஏற்கனவே நான் ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறேன் அல்லவா? அதில் நிறைய தமிழாசியர்கள் எனக்கும் கஸ்தூரிக்கும் நல்ல நண்பர்கள் என்பதால் நாங்கள் ஆங்கில ஆசிரியர்களாக இருந்த போதும் எங்களுக்கு அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பலரும் பதிவுலகில் அப்போதே கலக்கிக் கொண்டிருக்க, சும்மா டைரி எழுதுவது போல் எழுதிவந்த எனக்கு அது சிறந்த அனுபவமாக இருந்தது. அப்போ வலையில் என்ன எழுத வேண்டும் எப்படி எழுதவேண்டும் என எங்களுக்கு வகுப்பெடுத்த கரந்தை ஜெயக்குமார் அண்ணா இன்று அவர் versatile blogger award எனும் விருதை என்னோடு பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் முறையா கற்றுக்கொடுத்த ஆசிரியரிடம் நல்ல ரேங்க் வாங்கியதை போல ஒரு பீல். நன்றி அண்ணா!(படித்த காலத்தில் அப்படியெல்லாம் ரேங்க் வாங்கியதிலேயே) அவரை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை என்றாலும் ஒரு சொல். அவரது எல்லா பதிவுகளும் தகவல் களஞ்சியங்களாக இருக்கும். அவரை போல பயனுள்ள ஒரு பதிவு நான் எழுதிவிட்டாலும் போதும்:) என்னைஉற்சாகப்படுத்தி வழிநடத்தும் கஸ்தூரி, நிறை முதலான எல்லா நட்புநெஞ்சங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!!!
இதில் சிக்கல் என்னவென்றால், கிடைத்த அவார்டை என் பத்து நண்பர்களுடன் நான் பகிர்ந்துகொள்ளவேண்டும். எவ்ளோ பேர் இருக்காங்க.
நான் சிலரை விடுவதென முடிவு செய்தேன். ஏனென்றால்
1.நான் குறிப்பிடப்போகும் நண்பர்கள் கண்டிப்பாக நான் விட்ட சிலபேருக்கு எப்படியும் கொடுத்துவிடுவார்கள்(10*10=100) அந்த நூறில் ஒருவராக நான் விடபோகும் என் நண்பர்கள் கண்டிப்பாக இருப்பார்கள்.
2.மேலும் சில நண்பர்களுக்கு தஞ்சையம்பதி அய்யாவும், கரந்தை அண்ணாவுமே கொடுத்துவிட்டார்கள்.(உங்களுக்கு நன்றி)
இப்போ நான் தேர்வுசெய்திருப்பவர்களுக்கு ஒரு சின்ன செய்தி. உங்களுக்கு விருதுகொடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் எல்லாம் இல்லை. என்றாலும் முதல் சம்பளம் கிடைத்த உடன் நண்பர்களுக்கு ட்ரீட் தருவதை போல் நினைத்துக் கொள்ள
வேண்டுகிறேன்:)
1.அன்பு அண்ணா முத்துநிலவன். என் ஆதர்ச ஆசிரியர். தமிழும், சமூகமேம்பாடும் கண்ணென கொள்ளும் இவர் பதிவுகளுக்காக.
2.பன்முக சிந்தனை பதிவுகள், புதிர்கள் என கலக்கும் T.N.முரளிதரன் அண்ணாவிற்கு.
3.ஒவ்வொரு பதிவிலும் என்னை வியக்கவைக்கும் கீதமஞ்சரி அக்காவிற்கு
4.விஜூ அண்ணாவின் தங்கத்தமிழுக்கு, ஆழ்ந்த ஆய்வுக்கு,செறிந்தகவிதைக்கு.
5.எதையும் மற்றொரு கோணத்தில் சிந்திக்கும், எடுத்த கருத்தில் வலுவாய் நிற்கும் நண்பர் வருணுக்கு
6.துள்ளல் நடையில்,(பூரிக்கட்டை) அரசியல் அங்கதத்தில் அதிரடிக்கும் நண்பர் மதுரைதமிழனுக்கு
7.சொல்லும் செயலும் ஒன்றே எனும் கூர்சொல் ஜோதிஜி அண்ணாவிற்கு
8.துறைதோறும் தேர்ந்து கலக்கும் அன்பு தில்லையகம் சகாஸ் தில்லைஅண்ணா, தோழி கீதாவிற்கு
9.புத்தகம், சினிமா, சிந்தனை, நகைசுவை என எல்லா பீல்டிலும் நின்று சிக்சர் அடிக்கும் பாலா அண்ணா விற்கு
10.நகைச்சுவை பாஸ், தமிழ் மனம் மாஸ் ஜோக்காளி பகவான்ஜி அவர்களுக்கு
ஆத்தாடி நான் பத்து பேரை சீக்கிரமே தேர்வு செய்யனுமே ...விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் சகோ..
பதிலளிநீக்குஹா....ஹா..ஹா..
நீக்குமுந்தலைனா நம்ம நண்பர்களை காக்கா கொத்தான கொத்தி தூக்கிடுவாங்களே! அதான் அக்கா!
அடப்பாவமே..இவ்விருதை துரை செல்வராஜூ ஐயா எனக்குக் கொடுத்தார்கள்..நேற்று இரவு பார்த்துவிட்டு, நாளை வந்து இவர்களுக்கெல்லாம் நாம் கொடுத்துவிடுவோம் என்று நினைத்ததில் ஒருவர் நீங்கள்..நான் நினைத்த வேறு சிலரையும் நீங்கள் தேர்ந்தெடுத்து விட்டீர்கள்..நான் இப்போ என்ன செய்ய??
நீக்குவாழ்த்துக்கள் டியர்
விருது பெற்றதற்கு வாழ்த்துகள் மைதிலி.....
பதிலளிநீக்குஉங்கள் மூலம் விருது பெற்றவர்களுக்கும்!
நன்றி அண்ணா! உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
நீக்குcongrats.
பதிலளிநீக்குsubbu thatha
நன்றி சார்! உங்களுக்கும் என் வாழ்த்துகள்!
நீக்குநான் யார் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேனோ
பதிலளிநீக்குஅவர்களுக்கு உரிய விருதினை நீங்களே வழங்கி விட்டீர்கள் தோழி !:)
ஆதலால் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்களுக்கும் மென்மேலும்
இது போன்ற விருதுகள் வந்து குவியட்டும் .
நன்றி தோழி! உங்களுக்கும் என் வாழ்த்துகள்!
நீக்குவாழ்த்துக்கள்! எனக்கும் இந்த விருது கிடைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்! சரி இப்போது வேறு ஒருவருக்கு மாற்றி விடுகிறேன்! நன்றி!
பதிலளிநீக்குஅப்படியா சார்! மிக்க மகிழ்ச்சி! நன்றி சார்! உங்களுக்கும் என் வாழ்த்துகள்!
நீக்குவிவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..
பதிலளிநீக்குhttp://vivadhakalai.blogspot.com/
தகவலுக்கு நன்றி!
நீக்குமுதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி! பாராட்டுக்கள்!.
பதிலளிநீக்குஎன்ன சகோதரி இது!? எங்களுக்கு விருதா? எங்களை விட வலைத்தளத்தில் மிக அழகாக எழுதிக்க்கலக்கும் பதிவர்கள், பெரியவர்கள், தமிழில் விற்பன்னர்கள் இருக்கும் போதுஎங்களுக்கா? கூச்சமாக இருக்கின்றது...ஓகே நாங்கள் 10பேரை தேந்தெடுக்க வேண்டும் இல்லையா.....பெரிய வேளை.....,ம்ம்ம்ம்ம் செய்கின்றோம்.....வேறு என்ன செய்ய?.....ரொம்ப கஷ்டமான வேலைங்க.....ஏனா நிறைய பேர் இருக்காங்களே........மிக்க நன்றி சகோதரி!
வாழ்த்துக்கள் சகோதரி!
பதிலளிநீக்குஆனால் பலர் நல்ல தமிழிலும், அறிவுடனும் எழுதி வரும் போது எங்களைத் தேர்ந்தெடுத்து விருது பகிர்ந்தது சற்றுக் கூச்சமாக இருக்கின்றது...பதிவுலக ஜாம்பவாங்கள் பலர் இருக்க நாங்கல் எதற்கு? சகொதரி! எங்களையும் இப்படி இக்கட்டானச் சூழலில் மாட்டி விட்டீர்களே சகோதரி. யாரைத் தேர்ந்தெடுப்பது? யாரை விடுவது? எல்லோரும் மக அழகாக எழுதுகின்றார்கள்.....
நாங்கள் தேர்ந்தெடுக்க நினைத்தவர்கள் பலர் உங்கள் லிஸ்டிலிம் கரந்தையார் லிஸ்டிலும் உள்ளனர். இருந்தாலும் முயற்சி செய்கின்றோம்.....கண்டிப்பாகச்செய்ய வேண்டுமா?
ஒன்னு தில்லை அண்ணா கமெண்ட், மற்றது தோழியின் கமெண்ட் என எடுத்துக்கொள்கிறேன் (நெட்வொர்க் ப்ராப்லம் மாக இருந்தாலும்:)))
நீக்குவலைத்தளத்தில் மிக அழகாக எழுதிக்க்கலக்கும் பதிவர்கள், பெரியவர்கள், தமிழில் விற்பன்னர்கள்களில் நீங்களும் ஒருவர்தான். மேலும் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள சொன்னார்கள்:) நீங்க என் நண்பர்கள் தானே? கரந்தை அண்ணாவும், மதுவும் ஏற்கனவே என் பல நண்பர்களுக்கு கொடுத்திருகிறார்கள். நமக்கு சந்தோசம் தானே:))
இப்படியே எல்லோரும் புக் ஆகிவிட்டால் நான் யாரைப்புடிப்பேன் அய்யோ சொக்கா, சோமநாதா,
பதிலளிநீக்குநன்றி அண்ணா! உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
நீக்குஉங்கள் அன்புக்கும் விருதுக்கும் அகமார்ந்த நன்றி மைதிலி. எழுத்தின் பொறுப்பை கூடுதலாக்குறது இந்த விருது. உங்கள் மனத்தில் எனக்குமொரு இடம் அளித்து சிறப்பித்தமைக்கு அன்பான நன்றி மைதிலி. விரைவில் விருதினை ஏற்று அதற்குரிய சிறப்பினை செய்வேன். என்னோடு விருது பெறும் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅக்கா என் ஆதர்ச பதிவர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் கவிதைகளின் விசிறி நான். வருகைக்கு நன்றி அக்கா!
நீக்குஎழுதிய விதம் மகிழ்ச்சியைத் தந்தது. நன்றி மைதிலி
பதிலளிநீக்குஒரு சொல்கூட அலங்காரத்துக்கு எழுதவில்லை அண்ணா! உண்மையை தான் எழுதினேன். வருகைக்கு நன்றி அண்ணா!
நீக்குஇப்படி விருது தரும் படலம் ஆரம்பித்த போதே எனக்கு விருதுகள் ஏதும் தரவேண்டாம் என்று அறிவித்து பதிவு போட நினைத்தேன் ஆனால் அதற்கு முன்னால் முந்திவிட்டீர்கள். என்னை பொருத்த வரையில் இப்படிபட்ட விருதுகளை விட ஒருவரின் பதிவை படித்துவிட்டு நேரம் கிடைத்தால் அதற்கு நம்மால் ஒரு கருத்து இட முடியும் என்றால் அதுதான் சிறந்த விருது என்பேன் .அப்படி நாம் சொல்லும் கருத்து மாறுபட்டகோணத்தில் சிந்தித்து கருத்து சொல்லும் வருண் கருத்து போல இருக்கலாம். அல்லது நான் கலாய்த்து நகைச்சுவையாக சொல்லும் கருத்து போல இருக்கலாம் அல்லது யாரின் மனதை புண்படுத்தாமல் இடும் உங்களின் கருத்து போல இருக்கலாம் அல்லது உங்கள் கணவர், பதிவு தரமாக இருந்து அதற்கு அவர் சீரியஸாக இடும் கருத்துகளாக இருக்கலாம் அதுதான் உண்மையில் பதிவர்களின் எழுத்துகளுக்கு கிடைக்கும் பரிசு.. அப்படிபட்ட விருது உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்து வருகிறது அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
பதிலளிநீக்குநண்பர்களோடு பகிர்ந்து கொள்ள சந்தோசப்படனும். சும்மா தத்துவம் பேசக்கூடாது, ஆமா சொல்லிடேன்:)
நீக்குவீக்கெண்ட்ல தத்துவம் பேசமா வீக் டேய்ஸலவா தத்துவம் பேசமுடியும்...
நீக்குஒ! ஒரு லேமனை தலைல தேச்சுக்காங்க, மோர் கலக்கி குடிங்க:)) (hang over கு டிப்ஸ்:) எங்கயோ படிச்சது. பொதுஅறிவை வளர்த்துக்கிறேன்)
நீக்குhttp://avargal-unmaigal.blogspot.com/2014/09/award.html
நீக்குYou certainly deserve this "versatile blogger award", mythily! Congrats!
பதிலளிநீக்குஎங்களுடன் உங்க பரிசைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
பதிவுலகில் ஏகப்பட்ட நல்ல பதிவர்களைத் தெரியும். அதில் 10 பேரை செலக்ட் பண்ணுறது ரொம்ப கஷ்டமான வேலை. Let me see. :)
ஒ! மிக்க நன்றி வருண்:))
நீக்கு
பதிலளிநீக்குவிருது பெற்ற உங்களுக்கும் அதை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள் சகோ...
நன்றி சகோ ! உங்களுடன் என் கணவர் மது தன் விருதினை பகிர்ந்துகொண்டுள்ளார். உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
நீக்குதங்களின் அன்புக்கும் நீங்கள் என்மேல் கொண்ட மதிப்பிற்கும் நன்றிகள் !
பதிலளிநீக்குவாங்கண்ணா! உங்களால் இந்த விருதுக்கு பெருமை!
நீக்குவாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குதாங்கள் விருது வழங்கிச் சிறப்பித்த அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்
மிக உயர்ந்ததுங்கள் மாண்பு! நன்றி அண்ணா!
நீக்குஉங்கள் பட்டியலில் எனக்கும் இடம் அளித்ததற்கு நன்றி. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த விருதை கோபாலகிருஷ்ணன் அவர்கள் எனக்கு அளித்து விட்டார். இதற்கான பேனரை சமீபத்தில்தான் எனது வலைப் பக்கத்தில் இருந்து எடுத்தேன்.
பதிலளிநீக்குநீங்கள் தேர்ந்தெடுத்த அத்தனை பேரும் மிக சிறப்பானவர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வருண் சொன்னது போல நிறையப் பேர் அற்புதமாக எழுதி வருகிறார்கள்.
உங்களுக்கு இன்னும் பல விருதுகள் தரலாம் அண்ணா! காமராஜர் பதிவை பல தடவை படித்துவிட்டேன்:)
நீக்குUNMAIYIL NAANE VIRUTHU PETRATHU POLA MAKIZKIREN PA...KARANTHAI AYYA THAKAVAL KALANJIYAM ENRAAL, UN VALAIPPAKKAM KALAIKKALANJIYAM THAAN, ATHILENNA SANTHEKAM? IRANDU KALANJIYANGALAIYUM THEDI PIDITHU VIRUTHU VAZANGUM ANTHA NANBARKALAITH THAAN PAARAATTA VENDUM. IRUVARUKKUM EN INIYA VAAZTHUKAL PA. KASTHOORI KAI KODU...UNNAAL THAAN ITHU SAATHIYAMAANATHU ENPATHAAL..( SORRY PA.. VELIYOORIL IRUNTHU EN LAP TOPIL INNUM NHM WRITER ETRAATHA NILAIYI...) ANBUDAN, ANNAN.
பதிலளிநீக்குஅண்ணா!
நீக்குஉங்களுடன் இதை பகிர்ந்து கொள்வதே மிக பெரிய மகிழ்ச்சி அண்ணா! இத்தனை சிரமம் எடுத்து பின்னூட்டம் இட்டுடிருக்கிரீர்கள். நானாய் இருந்தால் இதை சறுக்கிட்டு நாளை பார்க்கலாம் என்று இருந்திருப்பேன்:)) இப்படி ஊக்கம் கொடுப்பதில் தான் அண்ணனுக்கு நிகர் யார்:)) மிக மிக நன்றி அண்ணா!
முத்துநிலவன் உங்க மேலே கோபமா இருக்கிறார். அதுனாலதான் அவர் எல்லா லெட்டரையும் கேப்பிடல் லெட்டரில் எழுதி இருக்கிறார்..( நெட்டிலோ அல்லது இமெயிலிலோ இப்படி எல்லாவற்றையும் கேப்பிடல் லெட்டரில் எழுதினால் அதிக கோபம் என்று அர்த்தம்)
நீக்குசரி அந்த கமெண்டை தமிழில் போடவும் அது உங்கள வேலை ...
விருது கொடுத்து என் பெயரை உங்கள் தளத்தில் இட்டதால் எனது அடுத்த பதிவில் உங்கள் பெயரை நான் இழுத்துள்ளேன்
நீக்குஹல்லோ!! ஏன் இப்படி அரசியல் பண்றீங்க:)) அண்ணாவிற்கு தமிழ் இலக்கியத்தில் கரைகண்ட அளவிற்கு கணினி இலக்கணம் கொஞ்சம் அறிமுகம் ஆகவில்லை அவ்ளோ தான்:) சரி இப்போ மொழிபெயர்கிறேன்(?!)
நீக்குஉண்மையில் தானே விருதுபெற்றதை போல் மகிழ்கிறேன் பா.....கரந்தை அய்யா தகவல் களஞ்சியம் என்றால், உன் வலைப்பக்கம் கலைக்களஞ்சியம் தான், அதிலென்ன சந்தேகம்? இரண்டு களஞ்சியத்தையும் தேடிபிடித்து விருது வழக்கும் அந்த நண்பர்களை தான் பாராட்ட வேண்டும். இருவர்க்கும் என் வாழ்த்துகள் பா. கஸ்தூரி கை கொடு.....உன்னால் தான் இது சாத்தியமானது என்பதால்...( சாரி ப்பா... வெளியூரில் இருந்து என் லாப்டாப்பில் இன்னும் NHM ரைட்டர் ஏற்றாத நிலையில்..)
அன்புடன், அண்ணன்.
என்ன தமிழன் சகா ஓகே வா?:))
அன்புத் தங்கையே! நண்பர் மதுரைத் தமிழன் அவருக்கே உரிய பாணியில் உன்னை மொழிபெயர்க்க வைத்துவிட்டார். அவருக்கு என் நன்றி. (அருமையான மொழிபெயர்ப்புக்கு உனக்கு நன்றி) நீ சொன்னதுதான் சரி.. தமிழில் நான் கரைகாணாவிட்டாலும், கணினியில் கரையை மட்டுமே (கரையில் இருந்துகொண்டு) கண்டு வருவதால்.. மடிக்கணினியை முழுமையாகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டு வருகிறேன். இந்த மதுவைப் பிடித்துக் கற்றுக்கொள்ளலாம் என்றால் மனிதர் சிக்கினால்தானே? எனினும் “தன் முயற்சியில் சற்றும் தளராத“ விக்கிரமாதித்தன் மாதிரி வேற ஏதாவது வேதாளம் கிடைக்குதான்னு பாக்க வேண்டியதுதான்..(என்ன அடிக்க வர்ரியா உடு ஜூட்...?)
நீக்குஅன்பின் சகோதரிக்கு..
பதிலளிநீக்குமேலும் பல சிறப்புகளைத் தாங்கள் எய்த வேண்டும் என வாழ்த்துகின்றேன்..
மிக்க நன்றி அண்ணா:)
நீக்குTHE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற தங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள். பகிர்ந்தளித்தலின் போது தங்களிடமிருந்து அந்த விருதினைப் பெற்ற மற்றைய வலைப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குத.ம.7
நன்றி அய்யா! தங்களுடன் என் கணவர் மது(கஸ்தூரி ரெங்கன்) தன் விருதை பகிர்ந்து கொண்டுள்ளார் இல்லையா? வாழ்த்துகள் அய்யா!
நீக்குவாழ்துக்கள் மைதிலி டீச்சர் :-)
பதிலளிநீக்குநன்றி ஐ.டி சார்:))
நீக்குதங்களுக்கும் விருது பெற்ற நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி....
பதிலளிநீக்குமிக்க நன்றி குமார் அண்ணா:)
நீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குநன்றி அண்ணா! வெகுநாள் கழித்து வருகிறீர்கள்:)) நலம் தானே அண்ணா?
நீக்குநலம் நலமே சகோதரி....உங்களிடம் நாடுவதும் அதுவே...
நீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குஇனிதே தொடருங்கள்
நன்றி அய்யா!
நீக்குவிருதுபெற்றமைக்கும்
பதிலளிநீக்குஅருமையான பதிவர்களைத் தேர்ந்தெடுத்து
பகிர்ந்தமைக்கும் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அய்யா!
நீக்குஎன் மேல் கொண்ட அன்பினால் எனக்கும் விருது தந்து மகிழ்ந்திருக்கிறாய் தங்காய்... அதே அன்பினால் இதை நான் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன் கண்ணா... ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றி. முரளிதரன் சொன்ன மாதிரி என் தளத்துல முன்ன வாங்கின நிறைய விருதுகள் இடத்தை அடைச்சுக்குதேன்னு எல்லாத்தையும் எடுத்துட்டேன். பட்... இதை அவசியம் என் தளத்துல வெச்சுட்டு நான் இதை அஞ்சு பேருக்கு நிச்சயம் பகிர்வேன்.
பதிலளிநீக்கு**்... இதை அவசியம் என் தளத்துல வெச்சுட்டு நான் இதை அஞ்சு பேருக்கு நிச்சயம் பகிர்வேன்.** உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் அண்ணா:)) மிக்க நன்றி!!
நீக்குஅருமை அருமை! மிக்க மகிழ்ச்சி தோழி!
பதிலளிநீக்குவிருது பெற்றமைக்கு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
உங்களால் விருது பெறுபவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
நன்றி தோழி!! உங்களுக்கும் என் வாழ்த்துகள் !!
நீக்குமுதல் ஒன்பது பேரும் விருதுக்கு தகுதி உடையவர்கள்தான் ,பத்தாவதா ஒரு ஆளுக்கு கொடுத்து இருப்பதுதான் உதைக்குது )))))))))
பதிலளிநீக்குமிக்க நன்றி !
த ம 9
சும்மா கலாய்க்காதீங்க பாஸ்:)))
நீக்குவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுதல் பின்னூட்டதிற்கு நன்றி சகோ!!
நீக்குவிருது பெற்ற உங்களுக்கும்,உங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி தோழி!!
நீக்குகொஞ்சம் வேலை(!) அதான் உடனடியாக பாராட்ட முடியவில்லை.
பதிலளிநீக்குவிருது பெற்றமைக்காக தங்களுக்கு பாராட்டுக்கள் சகோ.
தங்களின் பொன்னான கரத்தால் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
என் இனிய வாழ்த்துக்கள் அம்மு மேலும் பல விருதுகள் பெறவேண்டும் நிறைய அசத்தல் பதிவுகள் இட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்ளிடம் இருந்து விருது பெற்ற அதிர்ஷ்ட சாலிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..!
பதிலளிநீக்கு