ஒரு ஜூவி கொடுங்க என நான் கடையில் கேட்கும்போது அருகில் நிற்கும் பெண்களின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சியை காணமுடிகிறது. நல்ல வாசிப்பு பழக்கம் உள்ள ஒரு தோழி என் கைப்பையை ஆராய்ந்து நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் பற்றி அறியமுயல்கையில் ஒரு ரிப்போட்டரை பார்த்து "ஏ! என்ன இதெல்லாம் படிக்கிற? என ஏதோ படிக்ககூடாததை படித்ததைபோல் ரியாக்சன் காட்டிய அனுபவசூழலில் விசு அண்ணா என்னை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார் அதுவும் அரசியல் பதிவுக்கு !!! நன்றி அண்ணா!
மோடியின் நூறு நாள் சாதனையை கண்ணுக்கெட்டிய தூரம் வரை தேடியபடியே இருந்த நேரத்தில் எங்கள் தலைமை ஆசிரியர் எங்களை அழைத்து ஒரு டேட்டா கேட்டார். (மறுபடியும் ஒரு டேட்டாவா?) காமராசரின் மதிய உணவு, எம்.ஜி.ஆரின் சத்துணவு, கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் இலவச, விலையில்லா பொருட்கள் என கல்வித்துறை மாணவர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறதுஇல்லையா? அதில் மற்றுமொரு பயனுள்ள, இதுவரை என்.ஜி.ஓ க்கள் மட்டுமே கவனம் செலுத்திய ஒரு துறையை மோடி தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆம், அது சுகாதாரம். ஒவ்வொரு வகுப்பிலும் கழிவறை இல்லாத வீடுகள் கொண்ட மாணவர்களின் பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது. அரசு அவர்களுக்கு மானியத்தில் கழிவறை கட்டிதரப்போவதாக தலைமையாசிரியர் மூலமாக தெரிந்துகொண்டேன். எதற்கும் கட்டிமுடித்தவுடன் இதை எழுதேன் என்று ஒரு ஞாயமான யோசனையை கஸ்தூரி முன்வைத்தபோதும், காதுக்கு கிடைத்த நற்செய்தியை பகிர்ந்துக்கொண்டு அண்ணன் இட்ட கடமையை நிறைவேற்றிவிட்டேன். அதென்ன சைன்ஸ் வாத்தியார் மோடி என்றா கேட்கிறீர்கள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் நியூட்டனின் மூன்றாம் விதியை அவர் சுட்டிக்காட்டி பேட்டி அளித்ததாக நினைவு! எதிர்விளைவாய் பெஸ்ட் பேக்கரி வழக்கு நடந்தது இல்லையா? இந்தியரின் பரம்பரை நோயான மறதி நோய்க்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
பி.கு
அது ஆங்கில ஆசிரியர்கள் பதிவெழுதும் வலைப்பூ. என்னையும் எழுதச்சொன்னால் என்ன எழுதுவேன்? ஆம் ஒரு ஆங்கிலக்கவிதை தான். அதை படிக்க இங்க சொடுக்குங்க:)
தாமதமாக வந்தாலும் தரமாக வந்தீர்கள். இந்த கழிவறை வாக்குறுதி நிறைவேற பட்டால் மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். கண்டிப்பாக செய்வார் என்று நம்புவோம்.
பதிலளிநீக்குநம்புவோம் அண்ணா! நம்பிக்கைதானே வாழ்க்கை:))
நீக்குநன்றி அண்ணா!
திட்டம் (மோடியின்) எல்லாம் நல்லாத்தான் இருக்கு... அதை எப்படி செயல் படுத்துறோம் என்பதுதான் முக்கியம்! I don't think it will be well executed. I wish I am wrong! :)
பதிலளிநீக்குஇந்த "விக்கி காலத்தில்" யாரு வேணா சயண்ஸ் பேசலாம். Why not Modi? :) Let us not misinterpret him as a "good scientist" by extrapolating..:)
**அதை எப்படி செயல் படுத்துறோம் என்பதுதான் முக்கியம்!**
நீக்குabsolutely right yaar:)
**இந்த "விக்கி காலத்தில்" யாரு வேணா சயண்ஸ் பேசலாம்**
இல்ல வருண். அவர் சைன்ஸ் பேசினதை பாராட்டி அப்படி சொல்லல. அவர் அப்படி சொன்னதன் மூலமாக குஜராத் பற்றி எரிந்தது. அந்த மக்கள் அந்த ந்யூட்டன் தத்துவத்தை புரிந்து கொண்டு சமமாக எதிர் விளைவை தர மிருகமாயினர். நான் அவரை பகடி (satire) செய்திருக்கிறேன்:))
உடனடியா பின்னூட்டம் இட்டதற்கு நன்றி வருண்:) (seems so formal!?)
நற்செய்தி என்று சொல்லப் படுபவை எல்லாம் நற்செய்தியாக இருப்பதில்லை ,ஆனால் நீங்கள் சொன்னது நற்செய்திதான் !செய்தி உண்மையானால் மட்டுமே மோடியின் சாதனையாக ஏற்றுக் கொள்ள முடியும் !
பதிலளிநீக்குத ம 3
** நீங்கள் சொன்னது நற்செய்திதான் !செய்தி உண்மையானால் மட்டுமே மோடியின் சாதனையாக ஏற்றுக் கொள்ள முடியும் !**
நீக்குரைட் பாஸ்! நன்றி!
திட்டம், நிறைவேறினால் நலமே,,, எனது புதிய பதிவு ''ஸ்விட்சர்லாண்ட்''
பதிலளிநீக்குபார்த்துட்டேன் அண்ணா! நன்றி!
நீக்குமோடி சயின்ஸ் வாத்தியாரோ இல்லையோ ஆனால் மிகச்சிறந்த ட்ரம்ஸ் வாத்தியார் ( ஜப்பான் டூர் ). இதைப்போல இன்னுமொரு திட்டத்தை சேர்த்துக் கொள்ளலாம், அது வங்கிக் கணக்கு துவங்கும் திட்டம். போன பிரதமர் பேசாமல் இருந்தார். இந்த பிரதமர் பேசியே கொல்கிறார். பார்ப்போம் வாயிலேயே வடை சுடுறவறா இல்லை உண்மையாகவே சுடத்தெரியுமா என்று. இன்னொன்று தேர்தல் முடிந்தும் இன்னும் பிரச்சாரத்தில் பேசுவதைப் போலவே பேசுவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும். ( நேற்று ஹரியானா ) ஏங்க மோடி யங் டீம் ( SCRIPT WRITERS FOR MODI ) கொஞ்சம் மாத்தி எழுதி குடுங்க...நல்ல பதிவு சகோ..
பதிலளிநீக்கு**மோடி சயின்ஸ் வாத்தியாரோ இல்லையோ ஆனால் மிகச்சிறந்த ட்ரம்ஸ் வாத்தியார்** ஹா....ஹா...ஹா...
நீக்குநன்றி சகோ!
நல்லதே நடக்குமென நம்புவோம்மா
பதிலளிநீக்குஆமாம் அக்கா! நன்றி!
நீக்குஅரசியலிலும் குதித்து விட்டீர்களா? :)
பதிலளிநீக்கு//கழிவறை இல்லாத மாணவர்களின் பெயர் பட்டியல்// அது என்ன, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் பட்டியல்? இத்தனை பேருக்கு ஒரு கழிவறை இருக்கவேண்டும் என்று ஏதேனும் இருக்கிறதா? நிஜமா, எனக்குத் தெரியாமதான் கேட்கிறேன் டியர்..தவறா நினைக்க வேண்டாம்.
நிறைவேற்றினா சரிதான்..
இத்தனை நாளா சொற்பிழை தான் விட்டேன்:(( இப்போ கருத்துப்பிழை :((
நீக்குதிருத்திட்டேன் டியர்:) நன்றி!
பள்ளிப்பருவத்தில் படித்த துணுக்கொன்று,
பதிலளிநீக்கு“வீட்டிற்கொரு மரம்வளர்ப்பபோம்
என்று கூறும் அரசாங்கமே...!
நாங்களும் மரம் வளர்க்கிறோம்,
எங்களுக்கும் வீடுகொடு“
மோடியின் வாக்குறுதியைக் கேட்டதும் ஏனோ நினைவுக்கு வந்தது.
நல்ல பதிவு!
வாழ்த்துகள்!
நல்ல கவிதை அண்ணா!
நீக்குநன்றி!
ஜெயலலிதா, கனிமொழி,குஷ்பு,தமிழிசை வரிசையில் வலைபதிவர் "மைதிலியும்" குதித்துவிட்டார்.அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்...
பதிலளிநீக்குஅய்யோயோ !! அந்த வம்பே வேண்டாம்ப்பா:))
நீக்குமோடி செய்யும் & செய்யப்போகும் சாதனைகள் எல்லாம் டீச்சர்களுக்கு மட்டும் தெரிகிறது....
பதிலளிநீக்குஹா...ஹா....ஹா...
நீக்குநன்றி!
நல்ல திட்டம்... நிறைவேற்றப்பட வேண்டும் சகோதரி....
பதிலளிநீக்குஆம் அண்ணா! நன்றி!
நீக்குதிட்டம் தீட்டுவது மட்டுமே வெற்றி தந்துவிடுவதில்லை. வெற்றியை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருக்கிறார். செயல்படுத்தினால் மிகவும் நல்லது. பார்க்கலாம்!
பதிலளிநீக்குபார்க்கலாம் அண்ணா! நானும் காத்திருக்கிறேன்:) நன்றி!
நீக்குஇலவசத்தை விட இத்திட்டம் பயன் தருவது!
பதிலளிநீக்குஅய்யாவின் முதல் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல!
நீக்குநெத்தியடி மைதிலி. பெண்கள் அரசியல்பற்றிப் புரிந்துகொண்டு கிளம்பிவிட்டால் அப்போதுதான் உண்மையான வெற்றி கிடைக்கும். “இந்தப் பொம்பளைங்க எல்லாம் வேலைக்கு வந்ததுலதாம்பா ஆம்பளைங்களுக்கு வேலையே கிடைக்க மாட்டுது“ என்னும் புலம்பல் எப்போதும் உண்டு. அதைக் குறைப்பார்வை என்றுதான் சொல்லவேண்டும். “அவன் பந்தியிலயே எடமில்லங்கிறானாம் இவன் இலை பீத்தல் னானாம்“கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அப்பறம் திருவாளர் மோடியின் “சம்ஸ்கிருத வாரம்” “குரு உத்சவ்“ சாதனைகளையும் சேர்த்திருக்கலாம்ல? மனுஷ்ய புத்திரன் கவிதைதான் நினைவிலாடுகிறது. “இராமருக்குக் கோவில் கட்டுவது இருக்கட்டும் வீட்டுக்கு ஒரு கக்கூஸ் கட்டுங்கப்பா“ உன் அரசியல் பெண்களின் அரிசியியல் அறிவை வளர்க்க உதவ வாழ்த்துகள்மா.
பதிலளிநீக்கு**இந்தப் பொம்பளைங்க எல்லாம் வேலைக்கு வந்ததுலதாம்பா ஆம்பளைங்களுக்கு வேலையே கிடைக்க மாட்டுது“ என்னும் புலம்பல் எப்போதும் உண்டு. அதைக் குறைப்பார்வை என்றுதான் சொல்லவேண்டும். **
நீக்குஅண்ணா சொன்ன சரிதான்:)
**நெத்தியடி மைதிலி.**மிக்க நன்றி அண்ணா!
**உன் அரசியல் பெண்களின் அரிசியியல் அறிவை வளர்க்க உதவ வாழ்த்துகள்மா.*முயற்சிக்கிறேன் அண்ணா:)
பேசியே நாட்டைக் கெடுத்தவர்கள் வரிசையில் மோடியும் சேர்ந்துவிடுவார் போல! திட்டங்கள் செயலில் வரும் வரை எதுவும் சொல்வதற்கில்லை! நன்றி!
பதிலளிநீக்குசரியா சொன்னீங்க சார்:)) நன்றி!
நீக்குஅன்புச் சகோதரிக்கு வணக்கம்
பதிலளிநீக்குவிருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கெர்ண்டுள்ளேன்
வாருங்கள் வருகை தாருங்கள்
http://karanthaijayakumar.blogspot.com/2014/09/blog-post_14.html
உங்களுக்கு கிடைத்த விருதை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அண்ணா!
நீக்கு