ஒரு முன் குறிப்பு: அரசு வேலையில் அமர்ந்துவிட்ட பலரும், ஏன் ஆசிரியர்களும் கூட அத்துடன் தன் படிப்பு முடிஞ்சுபோச்சுனே நினைக்குறாங்க! அதைவிடுங்க செல்லுல பேசிக்கிட்டு இருக்கும்போதே ஒரு நம்பரை பார்த்துசொல்லவோ, ப்ளூடூத் ஆப்ஷன் பற்றிய அடிப்படை அறிவோ, நோக்கியா பேசிக் போனை கூட "எனக்கு இதெல்லாம் தெரியாது டீச்சர், என் பையன்/பொண்ணு தான் இதை பிரிச்சு சேர்த்துருவாங்க " என்றும், டச் அண்ட் டைப் போன் வைத்திருந்த ஒரு தோழி அதில் டைப் மட்டுமே பண்ணிகொண்டும் இருக்கிறவர்களே அதிகம்.
என் வீட்டுவேலைகளை பகிர்ந்துகொள்ள ஒரு ஆள் தேவைப்பட்டது! செல்லம்மா அக்காவை(Maid) கேட்டேன். அவர் எதிர்வீட்டில் வீட்டுவேலை செய்துவந்தார். இன்டர்வியூ ஆரம்பம் ஆனது. அட எனக்குங்க, நீ என்ன பாடம் எடுக்குற? எத்தனாப்பு வரை எடுக்குற? போன்ற கேள்விகளுக்கு பின் டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன் எல்லாம் சொன்னபின், ரெண்டு சின்னச்சின்ன பிள்ளைகளை வைச்சுக்கிட்டு நீ திண்டாடுறியே னு தான் ஹெல்ப் பண்றேன் என்று ஒருவழியாய் என்னை செலக்ட் செய்தார்.
ஒரு நாள் மைதிலி நீதான் கம்ப்யூட்டர் ல கலர்கலரா படம் எடுகுறியே, என் பொண்ணு ப்ராஜெக்ட் செய்யணுமாம். பெரியகோவில் போட்டோ வேணும்னு எடுத்துத்தாரியா அப்டினாங்க செல்லமாக்கா. நீங்க சொல்றமாதிரி நிறைய போட்டோஸ் டவுன்லோட் பண்ணி எல்லாத்தையும் ஒரே போல்டர்ல போட்டு, காப்பி பண்ண pen driveவேணும். அதுவும் வைரஸ் இல்லாம இருக்கணுமே என்றேன். இப்டி சேர்த்தாபுல நாலஞ்சு வார்த்தைய போட்டா, அக்கா" நான் வித்யாவையே நாளைக்கு வந்து கேட்டுக்க சொல்றேன்' என்று என் சில சீனியர் சை போல் எஸ்கேப் ஆகிடும், நாமும் சாயங்காலம் ஷாப்பிங் போலாம் என்ற என் கற்பனை பலூனில், அதுக்கு போனவாரம் தான் புது pen driveவாங்கிக்கொடுத்தேன். நீ ப்ரீ ன சொல்லு இப்பயே போன் போடுறேன் என ஊசிகுத்த, நாளைக்கு வேணா வரசொல்லுங்களேன் என்று நான் தான் ரிவர்ஸ் அடித்தேன். வித்யாவோ என்னமோ நான் தான் அதுபோட்டு வைத்த தஞ்சாவூர் டூர் ஐடியாவை கெடுத்ததா நினைத்து எரிச்சலை மறைச்சுகிட்டு வேலையை முடிச்சுகிட்டு போச்சு.
woman achievers, list of abbreviation இப்டி எந்த தலைப்பு கொடுத்தாலும் சித்திக் அசராமல் பட்டியலிட்டு வருவான். எப்படி தெரியமா? பக்கத்துவீட்டு கல்லூரி மாணவனிடம் எட்டு ருபாய் இன்டர்நெட் கார்டு வாங்கிக்கொடுத்து "அண்ணா இதமட்டும் பார்த்து சொல்லுங்களேன் என்று வேலையை முடித்துக்கொள்கிறான். இப்போ ப்ராஜெக்ட் தலைப்பு எழுதுறேனோ இல்லையோ அட்ரெஸ் பாரில் என்ன எழுதணும் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறார்கள். ஒரு கிராமப்புற ஆசிரியர்க்கு அல்லது அத்தகைய சூழலில் வளர்ந்தோருக்கு தான் இந்த சித்திக் போன்றோரின் தேடலின் ப்ரமிப்பு பிடிபடும். உலகமும் வேகமா போகுது, மாணவர்களும் ரொம்ப முன்னேறிட்டு இருக்காங்க. கற்றுக்கொடுக்கும் நான் தான் அவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுக்கவேண்டும். முடியாவிட்டால் அவர்களை பின்னிழுத்து போடாமலாவது இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. இப்போ மாறவேண்டியது யாரு?

நீங்க இப்படியா ? |
இல்லை இப்படியா? |
கலக்குறீங்கப்பா உண்மைதான்டீச்சர் ஒவொருபசங்ககிட்டையும் ஒரு திறமை இருக்கிறதை பார்க்ககொடுத்துவைத்தவர்கள்நாம்சிலசமயம்நம்மை ஆச்சர்யப்படுத்துவார்கள். நான்ஒருசிலவிஷயங்கள்பார்த்துவியந்ததுண்டு அவற்றைசேகரித்தும்வைத்துள்ளேன் நம்பள்ளிவலைத்தளத்தில் பதிவுசெய்யவேண்டும்.மேலும் கலக்குங்க...
பதிலளிநீக்குஉங்களை போல வழிகாட்டிகளும், ஊக்கம் கொடுப்போரும் இருக்கும் போது கலக்க வேண்டியதுதானே! அவசியம் செய்வோம் டீச்சர் ! நன்றி!
நீக்குஇரண்டாவது வாழ்க்கைக்கு உதவாது...
பதிலளிநீக்குஇரண்டாவது எதற்குமே உதவாது தான் அண்ணா.நன்றி!
நீக்குஎல்லாமே மாறும்தான்/
பதிலளிநீக்குமாறத்தான் வேண்டும் .நன்றி சகோ!
நீக்குஎன் தோழியை பற்றி எனக்கு தெரியாதா என்ன அசதிட்டீங்கம்மா. (கற்றுக்கொடுக்கும் நான் தான் அவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுக்கவேண்டும். முடியாவிட்டால் அவர்களை பின்னிழுத்து போடாமலாவது இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. இப்போ மாறவேண்டியது யாரு)// நல்ல மனசு என் தோழிக்கு. சரியாக சொன்னீர்கள். நீங்கள் மாறினால் தானே அவர்களை மாற்ற முடியும் இல்லையா? ஆமா பசங்க வீடியோ கேம் விளையாடுறாங்கம்மா கவனித்துக் கொள்ளுங்கள் தோழி ! தொடர வாழ்த்துக்கள்....!
பதிலளிநீக்குநன்றி தோழி ! நான் இரண்டாம் வகை டீச்சர் இல்லை. முதலிடம் வர முயற்சிப்பவள்!
நீக்குதானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா ..இது பாட்டு ,நாமாய் மாறனும் இது புதிய உண்மை !
பதிலளிநீக்குநன்றி சார் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்!
நீக்குஉண்மைதான் சகோதரியாரே, அவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாவிட்டாலும், அவர்ளின் வேகத்தைக் குறைக்காமலாவது இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா ! தங்களை போன்றோர் முதல் வகையை சேர்ந்தவர்கள் தான்!!
நீக்கு///ரெண்டு சின்னச்சின்ன பிள்ளைகளை வைச்சுக்கிட்டு நீ திண்டாடுறியே///
பதிலளிநீக்குஎன்ன நீங்க 2 குழந்தைக்கு அம்மாவா? அவ்வளவு வயசு ஆயிடுச்சா? நான் என்னமோ உங்களுக்கு 20 வயசுதான் ஆகி இருக்கும் என்று நினைத்து உங்களை தொடர்ந்தேன்... ஓ மை காட்.....
ஆஹா! என் எழுத்து அவ்ளோ இளமையா இருக்குனு சொன்னதுக்கு நன்றி சகோ! உங்க பொண்ணு கூட என்னும் ரெண்டுவருசத்துல ஹை ஸ்கூல் போகபோகுதுன்னு உளவுத்துறை ரிப்போர்ட் சொல்கிறது!// நான் என்னமோ உங்களுக்கு 20 வயசுதான் ஆகி இருக்கும் என்று நினைத்து// இப்படி எல்லாம் யாரும் நினைக்ககூடாதுன்னு தான் அடிக்கடி நிறை, மகி என என் மகள்கள் பெயரை குறிப்பிடுறேன் சகோ!
நீக்கு
பதிலளிநீக்கு/ஒரு நாள் மைதிலி நீதான் கம்ப்யூட்டர் ல கலர்கலரா படம் எடுகுறியே,///
நீங்க கலர் கலரா படம் எடுக்கலாம் ஆனா நான் கலர் கலரா என் பதிவில் படம் போட்டா தப்பா ?
அது வேறு ,இது வேறு ! சரியான போங்கா இருக்கே!?
நீக்குசாக்ரடீஸ் காலத்தில் இருந்து இந்த காலம் வரை பெரியவர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொண்டே இருப்பது இப்பொது உள்ள குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட் & அவர்கள் ரொம்பவே மாறி இருக்கிறார்கள் என்றுதான்
பதிலளிநீக்குஆன கத்துகொடுக்குறவங்க அப்டேட் ஆகணுமே !
நீக்கு
நீக்குஇந்த காலத்து புள்ளைங்களுக்கு நீங்க புள்ளி வைக்க கற்று கொடுத்தால் போதும் அதன் பின் கோலம் எப்படி போடுவது என்று அவங்களே கற்றுக் கொள்வார்கள்
பதிவிற்கேற்ற 2 படங்கள் அருமை.. எனக்கு பதிவிற்கு ஏற்ற படங்களை அதுவும் இந்த அளவில் இடும் பதிவுகள் எனக்கு பிடிக்கும்.
பதிலளிநீக்குso பதிவுல ஒன்னும் இல்லை , படங்கள்தான் நல்லாருக்குன்னு சொல்லுறீங்க ! ப்ரீ யா விடுங்க சகோ! . வரிக்கு வரி படித்து கருத்திட்ட தமிழன் சகோவிற்கு நன்றி நன்றி நன்றி!!
நீக்குசோக்கா சொல்லிக்கினுகீறீங்க அக்கா... ச்சே... ச்சே... சகோ...! (ஒங்களுக்குத்தான் அக்கான்னு சொன்னா புடிக்க மாட்டேன்கிது...)
பதிலளிநீக்குநன்றி சகோ!// (ஒங்களுக்குத்தான் அக்கான்னு சொன்னா புடிக்க மாட்டேன்கிது...)//அட பாண்டியன் , ஜெயசீலன் , நம்ம சுபத்ராவெல்லாம் என்னை அக்காக்குனு கூப்பிட்ட மிக்க மகிழ்ச்சி! சுப்புதாத்தா, புழவர் அய்யா செட்டு தானே நீங்க! (இப்டி ஆளாளுக்கு கலாய்க்கிராங்கன்களே மைதிலி)
நீக்கு//(இப்டி ஆளாளுக்கு கலாய்க்கிராங்கன்களே மைதிலி//
நீக்குஅது கலாய்கிறாங்களே னு சொல்லவந்தேன் ..transliteration காலை வாரிடுத்து! SORRY ! சாரி!
ஹஹஹா... கடிசீல நம்பளக் கலாய்ச்சி வுட்டுட்டீங்களே டீச்சர்...! நீங்க சொன்ன பாண்டியன், ஜெயசீலன் அப்பால நம்ப சுபத்ரா அக்கா லாம் பள்ளிக்கூடத்துல எனக்கு சீனியருங்கோவ்...!
நீக்கு//அது கலாய்கிறாங்களே னு சொல்லவந்தேன் ..transliteration காலை வாரிடுத்து! SORRY ! சாரி!// இதுக்கெல்லாமாவா மெர்சலாவாங்க... யு டோன்ட் வொர்ரி டீச்சர்...!
மிக அருமையான நல்லதொரு பகிர்வு தோழி!
பதிலளிநீக்குதோழி! என் தோழர் துளசி சரியான ஆளுங்க! முதல் டைப்பு! எப்ப பாத்தாலும் "இல்லடா பசங்க பாவம்டா..." என்று சொல்லி அவர்களுக்காக ரொம்பச்சி ந்திப்பவர்! அத ஏன் கேக்குறீங்க அவரு students எல்லாரும் அவர புகழரத பாக்கணும்...அதாங்க FB ல....."GOD" அப்படிம்பாங்க..."ஸார் உங்கள மறக்கவே முடியாது! சார் நீங்க எங்கள வழி நடத்தினதுனாலதான் இன்னைக்கு நாங்க நல்லவங்களா இருக்கோம் " அப்படிம்பாங்க....class எடுக்கறதே புக்குல இருந்து இருக்காது போல....நிறைய விஷயங்கள் பேசி, grammar ..எடுக்கறதும் அப்பட்த்தான்...
ச! நான் ஒரு student ஆ இருந்துருக்கக் கூடாதனு இருக்கு! உங்க க்ளாஸ், துளசி க்ளாஸ்ல வந்து உட்காரத்தான்!!!
ரொம்ப சந்தோசம் தோழி! கஸ்தூரி கூட இப்படிதான் ! ஆனா இதை எழுதும்போதே இதைவைச்சு இந்த துளசி அண்ணாவும் ,கீதா மேடம் மும் என்ன ஓட்டு ஓட்ட போறாங்களோனு மெரிசல (ச்சே நைனா பதிவு படிச்சா எபெக்டு ) பயமா இருந்தது! ஹா..ஹா..ஹா...
நீக்குநம் நாட்டில் கல்வியறிவு என்பது ஒரு உத்யோகத்துக்கான வாசலே தவிர அது வாழ்க்கை முழுவதும் தொடர்வதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். வேலை கிடைத்துவிட்டால் அதன்பின் தங்களை அவ்வேலையில் தக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்களே தவிர, பொது அறிவைப் பெருக்கவோ, தொழில்வளர்ச்சி பற்றிய முன்னேற்றத்தை அறிந்துகொள்ளவோ பெரும்பாலானோர் முயல்வதேயில்லை. அதிலும் இளைய தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியப்பணியில் இருப்பவர்கள் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். மிக அருமையாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள் மைதிலி.
பதிலளிநீக்குஉங்க பதிவுகளை படிப்பதே நல்ல அப்டேட் தான் அக்கா.
நீக்குரொம்ப நன்றி!!
செல்லம்மா அக்காவின் நேர்காணலில் செலக்ட் ஆனதற்கு வாழ்த்துகள். நேரகாணல் விவரம் அருமை (அப்படின்னா, உன் பிள்ளைகளோடும், வலையிலும் செலவிடக் கூடுதல் நேரம் கிடைக்கும் நன்றி செல்லம்மா!) தமிழ் இந்துவில் ஆல்பர்ட் ஐன்ஸ்டினிடம் குழந்தைகள் கேட்டகேள்விகளைப் படிக்கலயா? அமெரிக்கச் சிறுவன் ஒருவன் கடிதத்தில் ”நீங்க அமெரிக்காவா? உங்க சமாதி இங்கிலாந்துல இருக்கறதால்ல நினைச்சிருந்தேன் உயிரோடவா இருக்கீங்க?” என்று தொடங்குகிறான். அவரும் பதிலுக்கு “நான் உயிரோடு இருப்பதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தொடங்குகிறார் குழந்தைகள் எல்லாத் தலைமுறையிலும் பெரியவர்களுக்கு நிறையக் கற்றுக் கொடுக்கிறார்கள். நாம்தான் “நாம்அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்“ அதைக் கற்றுக்கொள்ளத் தவறிவிடுகிறோம்! பின்னூட்டதிலும் பிச்சி எடுக்கறியே? நாம்மாறாவிட்டால், சமூகமே மாறாமல்தேங்கிவிடும் என்பதை நாசூக்கா சொல்லிட்டப்பா.. நல்ல பதிவு. கலக்கு.
பதிலளிநீக்குரெண்டு படங்களும் அருமை...முதல்படத்தில் உறீரோங்கற இடத்தில உறீரோயின் அப்படின்னும் வரலாம் உன் வகுப்புல்ல? முதல் படத்தில்(பெஸ்ட் டீச்சர்) சார் என்பதும், ரெண்டாவது படத்தில் (பாவம்) டீச்சர் என்பதும் (டீச்சர் முழி ரொம்பப் பிரமாதம்) இடிக்குது மற்றபடி படங்கள் ரெண்டும் அருமை! (ரூம் போட்டுத் தேடுவியோ?) உனக்குன்னே யாரோ வரைஞ்சு வச்சது?
பதிலளிநீக்குநல்ல கட்டுரை .ஆசிரியர்கள் தங்களை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்வது அவசியம். கணினி உள்ள பள்ளிகளில்கூட ஆசிரியர்கள் கணினியை பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டவில்லை. ரிப்பேர் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று பல பள்ளிக் கூடங்களில் கணினிகள் துணி போர்த்திக்கொண்டு தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு"//இப்போ மாறவேண்டியது யாரு? //"
பதிலளிநீக்குஇப்படி கேள்வி எல்லாம் கேட்டீங்கன்னா, அப்புறம் உங்க வலைப்பூ பக்கமே வரமாட்டேன். ஆமா சொல்லிப்புட்டேன்.
நான் படிக்கின்ற காலத்தில் எனக்கு தெரிந்து, சில அராசங்கப் பள்ளி ஆசிரியர்கள், தங்களை மேம்படுத்திக்கொண்டதே கிடையாது, அவர்களைப் பொருத்தவரை, அரசாங்கப் பள்ளியில் வேலைக்கு சேர்ந்து விட்டோம், அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று நினைப்பு.
பதிலளிநீக்குஆனால், இன்றைக்கு, மாணவர்களின் அறிவுத்திறன் அபாரமாக இருக்கிறது, அதற்கேற்ப, ஆசிரியர்களும் தங்களை மேம்படுத்திக்கொண்டால் தான், நாளைய சமுதாயத்துக்கு நல்ல தலைமுறையை கொடுக்கமுடியும்.
நல்லதொரு கட்டுரை. வாழ்த்துக்கள் சகோ.