புதன், 24 செப்டம்பர், 2014

காமெடி கணக்கு !! ட்ராஜிடி எனக்கு!!




     போன வாரத்தில் ஒரு மூணு நாள் நான் கணிதத் திறன் மேம்பட்டுப்பயிற்சியில் கலந்துகொண்டேன். (ஆமா நான் இங்கிலீஷ் டீச்சர் தான்). கணக்குல அவ்ளோ ஆர்வமா அப்டீன்னு அவசப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துராதீங்க. பாரதியார் போல "கணக்கு எனக்கும் பிணக்கு " தான். ஆனா விதி யாரை விட்டுச்சு. தமிழக அளவில் கற்றல் திறன் ஆய்வு நடத்திய போது புதுகை அரசுப்பள்ளிகளில் உயர்தொடக்கப்பள்ளி  மாணவர்கள் (ஆறாம்  வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை) கணக்கில் ரொம்ப வீக்கா இருக்கிறதா தெரிய வந்ததாம். (அப்ப இங்கிலீஷ் சூப்பரா படிக்கிறாங்கலாமா? இது கணக்கு மிஸ் தோழி வனிதாவின் புலம்பல்) எனவே புதுகையில் மட்டும் 288 ஆசிரியர்களுக்கு கணிதத் திறன் பயிற்சி அளித்து மாணவர்களை முன்னேற்றுவது  என கல்வித்துறை முடிவெடுத்து இப்படி பயற்சி கொடுத்தார்கள். தமிழாசிரியர்கள் மட்டும் விருப்பம் இருந்தால் கலந்துகொள்ளலாம் மற்றவர்கள் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும். (நீ தாய்மொழியை கைவிட்டதற்கு இது தான் தண்டனை என்று புலம்பியது என் மனசாட்சி)

     இப்படி நொந்து நூடில்ஸ் ஆகி வகுப்புக்கு போனா,  ட்ரைனர்கள் புத்திசாலிதனமாக எங்களை போல பிற பாட ஆசிரியர்களும் கலந்துகொள்ளப் போகிறோம் என்று தெரிந்து வைத்துக்கொண்டு எங்களை வகுப்புக்குள் கொண்டுவர நிறைய புதிர்கள் தயாரித்துக்கொண்டு வந்திருந்தார்கள். சரிவிடு T.N.முரளிதரன் அண்ணா மாதிரி நாமளும் இந்த புதிர்களை பயன்படுத்தி இனி ஒரு ரெண்டு மூணு பதிவு தேத்தலாம் னு என்னை மனசை தேத்திக்கிட்டேன். ஆனா பாருங்க அந்த பயிற்சியில் கொடுக்கப்பட்ட சில புதிர்கள்  அண்ணனின் புதிர்களை போல் இல்லாமல் வழக்கமான வகுப்பறை புதிர்களை போல நிறைய லாஜிக் பொத்தல்களோடு இருந்தது. அதை இன்னொரு பதிவில் சொல்கிறேன். இப்படியே மூனுநாளையும் அந்த ரெண்டு பயிற்சியாளர்களையும் (பெண்கள்) வச்சு வனிதாவும் நானும் கலாய்ச்சே காலிபண்ணினோம். ஆனாலும் பயிற்சியின் இறுதியில் நாங்களும், ட்ரைனர்களும்  நல்ல நண்பர்கள் ஆகியிருந்தோம். (எங்களுக்குள ரொம்ப சைலெண்டா தான். பின்ன அமைதியான பெண்ணாய்  மெய்ண்டைன் பண்ணுற  நம்ம இமேஜ் டேமேஜ் ஆககூடத்தில்ல)


    மூன்றாம் நாள் மதியம் குழு செயல்பாடாய் ஒரு கணக்கை கொடுத்துப்போட சொல்லிவிட்டு அடுத்த குழுவுக்கு ஏதோ ப்ரொஜெக்டரில் படம் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். நான் வனிதா கணக்கு போடுவதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன்.(பின்ன நாம அப்டியே கணக்குபோட்டு கிழிச்சுட்டாலும்). ஓட்டிக்கொண்டிருந்தவர்கள் திடீர்னு இங்க யாராச்சும் இங்கிலீஷ் டீச்சர் இருக்கீங்களா என கேட்க,  நான் அனிச்சை செயால எழுந்து நின்னேன். அப்போ தான் பார்த்தா நான் ஒருத்திதான் இங்க்லீஷ் (நம்ம மக்கள் எல்லாம் அடுத்த பாட்ச் ல கலந்துகிட்டாங்க). இந்த புதிருக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன் என்றபின் ஸ்க்ரீன்ல பார்த்தால், ஒரு கணக்குப்புதிர் ஆங்கிலத்தில் இருந்தது. இதுக்கு விளக்கம் சொல்றதுக்கு முன்னால நான் கொஞ்ச பேசவேண்டி இருக்கே என அனுமதி கேட்டுவிட்டு சொல்லத்தொடங்கினேன் .

       R.K.நாராயண் என்று ஒரு பிரபல இந்திய எழுத்தாளர் அட்டாகாசமாய், எளிமையாய், நகைச்சுவையை எழுதக்கூடியவர். அவரது  Swamy and his friends எனும் நாவலில் ஒரு காட்சி. சுவாமியை அவனோட அப்பா ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுக்க ஒரு கணிதப்புதிர் கொடுத்து, விடை கண்டுபிடிக்கச்சொல்லி கொலையா கொல்லுவார். ஆறு  மாங்காய் ரெண்டே முக்கால் அனா என்றால் ரெண்டு  மாங்காயை ஒன் கால் அணாவிற்கு விச்சு மணியிடம்  விற்றால் எவ்ளோ  லாபம் என்பது மாதிரி ஒரு எடக்குமட்டகான கணக்கு. சுவாமி வாயில் நுரை தள்ளாத குறை. அந்த மாங்காய் இனிக்குமா? புளிக்குமா ? இந்த விலை அநியாயம் இல்லையா? பாவம் மணி. விச்சு கடன்காரன் எவ்ளோ அநியாயமா இப்படி விக்கிறான் எல்லாம் புலம்பியபின், அவன் அப்பா நாலு சாத்து சாத்திய பின் ஒருவழியா விடை கண்டுபிடிப்பான். பாருங்க நேத்து கூட ஒரு புதிர் போட்டீங்க. ஒரு கல்யாண வீட்டில் நூறு அப்பளம் பொறித்தார்கள். ஆண்களுக்கு மூன்று அப்பளம், பெண்களுக்கு ரெண்டு அப்பளம், குழந்தைகள் சாப்பிட்டால் அரை அப்பளம். சரியாய் நூறு பேர்க்கு நூறு அப்பளம் காலியானது. அப்போ கல்யாணத்திற்கு எத்தனை ஆண், எத்தனை பெண், எத்தனை குழந்தைகள் வந்தார்கள்னு கேட்டீங்க. ஐந்து ஆண்கள், இருபது பெண்கள், எழுபது குழந்தைகள் என்பது விடை. அட கொடுமையே அப்போ அந்த இருபத்தி அஞ்சு பெரியவங்களும் ஆளுக்கு மூணு பிள்ளையை கல்யாணத்திற்கு கூட்டிட்டி வந்திருக்கணும்.!!! (வகுப்பில் பயிற்சியாளர் முதல் அனைவரும் சிரித்துவிட்டனர்). இப்படி தான் காலம்காலமா புதிர் என்கிற பெயரில் லாஜிக்கே இல்லாம கணக்கு கொடுத்து கொல்றீங்க கணக்கு பெருமக்கள். புதிர் என நீங்கள் நினைத்து  நீங்க இங்க காட்சிப்படுத்தி இருக்கும் படம் இது ஒரு கணக்கை கலாய்க்கும் ஜோக். பத்து ஐஸ் துண்டும், பண்ணெண்டு முயல்குட்டியும்  கொடுத்தால் எத்தனை பன்கேக் கிடைக்கும். என்னைபோல கணிதத்தில் அதிக ஈடுபாடுகொண்ட ஒருத்தர் சொன்ன பதிலும் அதில் இருக்கு. பதில்:: வேற்றுகிரகவாசி நீலத்தொப்பி அணிவதில்லை:) விளக்கத்தை சொல்லிவிட்டு அமர்ந்தேன். வகுப்பில் வெகுவாக கைத்தட்டல் கேட்டது (எம்புட்டு சனம் நம்மள மாதிரியே பாதிக்கப்பட்டு இருக்கு:((((

52 கருத்துகள்:

  1. கணக்கு பிள்ளையான நான் ரசித்து படித்தேன்... இம்மாதிரி தான்.. சிறுவயதில்.. உன் பேண்டில் வலது புற பாக்கெட்டில் 1 ருபாய், உன் இடது புற பாக்கெட்டில் 2 ருபாய் என்றால் உன்னிடம் என்ன இருக்கும் என்ற கேள்விக்கு... "வேற யாருடைய பேன்ட்டா தான் இருக்கும் என்ற விடை நினைவிற்கு வந்தது.
    நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **"வேற யாருடைய பேன்ட்டா தான் இருக்கும் என்ற விடை நினைவிற்கு வந்தது.** கலக்கி டீங்க அண்ணா! நன்றி!

      நீக்கு
  2. கணக்குன்னாலே எனக்கும் ரொம்பவே பிணக்குதான்மா. மூணு நாள் கருத்தரங்குல சாதுப்பூனையா கலந்துக்கிட்டு (கலாய்ச்சு) அழகா இப்படி ஒரு விளக்கம் வேற தந்து கைதட்டல் வாங்கியாச்சா...? சூப்பர். பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். (சுவாமியும் சிநேகிதர்களும் எனக்கு மிகப் பிடித்த கதைகளில் ஒன்று.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **மூணு நாள் கருத்தரங்குல சாதுப்பூனையா கலந்துக்கிட்டு (** நல்லாவேளை நம்பீடிங்க:)))
      (சுவாமியும் சிநேகிதர்களும் எனக்கு மிகப் பிடித்த கதைகளில் ஒன்று.)** சேம் பின்ச் அண்ணா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  3. ஆரம்பத்துல கணக்கு எனக்கு பிணக்குன்னு சொல்லிட்டு ..
    இறுதியில் என்னைபோல கணிதத்தில் அதிக ஈடுபாடுகொண்ட ஒருத்தர் சொன்ன பதிலும் அதில் இருக்கு என்று கூறியதில் எது உண்மையோ?

    கட்டுரை சிறப்பு, பதிலுக்கான விளக்கம் என்னவோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசியா சொன்ன ஈடுபட்டு சும்மா லுலுலாயி னு அர்த்தம்>ஹா....ஹா...ஹா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  4. சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள் சகோ, அப்பளக் கணக்குக்கு நீங்கள் அளித்த விளக்கம் செம...

    பதிலளிநீக்கு
  5. ஆஹா கணக்கா ? நிறைய இருக்கிறது அலுவலகம் கிளம்பி விட்டேன் வந்து படிக்கிறேன்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவா வந்து பார்த்துட்டு சொல்லுங்கண்ணா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  6. அட... கணக்கா??? நமக்கு ஆகவே ஆகாது பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா,,,ஹா,..ஹா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

      நீக்கு
  7. //கணிதத் திறன் மேம்பட்டுப்பயிற்சியில் கலந்துகொண்டேன்.///

    சமையல் திறன் மேம்பட்டுப்பயிற்சியில் எப்ப கலந்துக்க போறீங்க என்று உங்க வீட்டுல உள்ளவங்க என்னை உங்ககிட்ட கேட்க சொன்னாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க ட்ரைனிங் போகும்போது சொல்லுங்க மதுவையும் அனுப்பிவைக்கிறேன்:)) நான் சொன்னது என் கணவர் மதுவை:) நீங்க வேற அவசரப்பட்டு வேற எதையாவது நினைச்சுக்காம:))

      நீக்கு
  8. ///கணக்கில் ரொம்ப வீக்கா இருக்கிறதா தெரிய வந்ததாம்.///

    அப்படி வீக்கா இருக்குறவங்கள பெண்கள் கல்லூரியின் வாயில் நிற்க வைத்து மொத்தம் எத்தனை பெண்கள் படிக்கிறாங்க அதில சிவப்பு கலர் கறுப்பு கலர் பெண் எத்தனை ? ஜீன்ஸ் போட்ட சுரிதார் போட்ட சேலை கட்டுன பொண்ணுங்க எத்தனை என்று கணக்கு பண்ண சொன்னா கணக்கு தன்னால வந்துடப் போகுது அதைவிட்டு விட்டு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியே கணக்கு கற்று மேதாவியான ஒருத்தர் இப்போ அமெரிக்கால சேல்ஸ் man னா கொடிகட்டிபறக்கிறாரமே!!!

      நீக்கு
  9. ///ரெண்டு பயிற்சியாளர்களையும் (பெண்கள்) வச்சு வனிதாவும் நானும் கலாய்ச்சே காலிபண்ணினோம்.///

    ரெள்டி டீச்சரை யாருப்ப பயிற்சி வகுப்புக்கு அழைத்தது

    பதிலளிநீக்கு
  10. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம மோடி மாதிரி பேச ஆரம்பிச்சுட்டீங்களா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தான் தமிழ் சகா ! நீங்க ஒரு பிறவி அரசியல் பதிவர்னு ப்ரூ பண்ணிடீங்க சகா:)வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  11. நீங்க பாதிக்கப்பட்டது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. இந்த பதிவை படிச்சு நான் மண்டை காய்ஞ்சு போனது தான் மிச்சம். (சும்மா ...)

    நல்ல வேளை, நான் கணக்கு ஆசிரியராகவோ, ஆங்கில ஆசிரியராகவோ இல்லை. தப்பித்தேன்.

    நீங்கள் வகுப்பு எடுக்கும்போது, மாணவிகள் தங்களுக்குள் சத்தமே இல்லாமல் உங்களை கலாய்த்தால் எப்படி இருக்கும் சகோ? அது மாதிரி தானே அந்த டிரைனர்களும். பாவம் அவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்க பேசுற மாதிரி மைன்ட் வாய்ஸ் கம்மெண்டை நானே சொல்லிடுவேன். அதனால் மாணவர்கள் வகுப்பில் மகிழ்ச்சியாவும், உற்சாகமாகவும் இருப்பாங்க. அது மாதிரி கமெண்ட் அடிக்கிற பையனை டே! கொஞ்சம் சத்தமா சொன்ன நானும் சிரிப்பேன்ல என ஊக்கபடுத்துவேன். நான் ஒரு உண்மையான சோசியலிஸ்ட் சகோ:)))))

      நீக்கு
  12. ஆஹா செம அனுபவம் போங்க! சரியான உதாரணம் காட்டி பேசிருக்கீங்க!
    செம..பய்றிசி! சரி கடைசில பயிற்சி என்னாச்சு? சுழியா சுழிச்சீங்களா?!!!

    வாங்க இன்னிக்கு வலைச்சரத்துக்கு! என்னங்க நீங்க எங்கள ரொம்பவே மண்டைய குழம்பாக்கிட்டிங்க! உங்கள் நாங்க எந்த தலைப்புல சேர்க்கரதுனு குழப்பம்...ஆமாம் பின்ன இப்படி எல்லாத்துலயும் புகுந்து புறப்பட்டா.....அப்புறம் குழப்பத்த குழப்பத்தோட முடிவுக்கு கொண்டு வந்துட்டோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள விடவா?? நீங்க வரவர காமெடில பின்னுறீங்க சகாஸ்!

      நீக்கு
  13. அப்படீனாக்கா ? பாதிக்கப்பட்டவங்கதான் கை தட்டினாங்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரக்டா சொன்னீங்க அண்ணா!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  14. SWAMY AND HIS FRIENDS ரசித்துப்படித்திருக்கிறேன். உண்மையில் கணக்கைப் பயிற்சி செய்யும் பலருடைய அனுபவத்தை நகைச்சுவையூடே ஏதோ ஒரு புள்ளியில் தொட்டுச் செல்லும் கதைதான் அது.
    ஆனால் கணக்கு ஏதோ கொஞ்சம் வரும் எனக்கு!
    பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் போதே ஆசிரியர் வராத வகுப்பறைகளில் கணக்கு ஆசிரியராகி புரியவில்லை என்று சொல்லும் நண்பர்களுக்கு வகுப்பெடுக்கப் பலமுறை களம் இறங்கி இருக்கிறேன். ( ஒரு பந்தா தான் )
    இப்பொழுதும் தேர்வு கண்காணிப்புப் பணியிடையே தவறான படிநிலை ஒன்றினால் தீர்வு காணாமல் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களைக் காணும் போது, காட்டித் திருத்தக் கை பரபரக்கும்.
    மௌனமாய்க் கடத்தலன்றி வேறென்ன செய்ய...!
    நீங்கள் கூறும் பணியிடைப் பயிற்சி....
    பெரும்பாலும் காலப்பாழ் தான்!
    மீண்டும் தமிழில்......
    கணக்கிற்கென நூல்கள் உண்டு.
    முழு நூலாகக் காரிநாயனார் என்பாரின் கணக்கதிகாரம் என்றொரு நூல் கிடைத்திருக்கிறது.
    பண்டைய கணித முறைகளையும் , புதிர்களையும் கொண்டு,
    தமிழிலோ கணிதத்திலோ ஆர்வமுடையவர்கள் வாசிக்கச் சுவையானது.
    பிதகோரஸ் தேற்றத்தை விட பல வடிவ இடங்களின் பரப்பளவுகளைக் காண நம்மிடத்தும் வழி உண்டு என நான் அறிந்து வியந்த நூல் அது. வாழ்க்கைப் பயனுடைமை நோக்கமும் புதிர்க்கணக்குகளும் நிறைந்தது.
    பலாவை வெட்டாமல் சுளை எத்தனை என்று கூற முடியுமா?
    முடியும் என்கிறது கணக்கதிகாரம்.

    “பலவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
    சிறுமுள்ளுக் காம்பருக்கெண்ணி - யறுகாக
    ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
    வேறென்ன வேண்டாம் சுளை!“
    இது போல பல செய்திகள்.
    சில தகவல்களை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் பண்டைய தமிழகத்தில் வழக்கிலிருந்த கணக்கீடுகளை அறிய இந்நூல் துணை செய்யும்.
    கணித ஆசிரியர்கள் அறிந்தால் நிச்சயம் இன்றைய புத்தகக் கணக்குகள் சிலவற்றிற்கு சுவாரசியமான எளிதான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்க முடியும்.
    நான் ஓரிரு கணித ஆசிரியர்களிடம் சொல்லிக் காட்டியிருக்கிறேன்.
    தாங்கள் கூறியுள்ளது போல் பல சுவாரசியமான புதிர்கணக்குகளும் இதில் உண்டு!
    தங்களின் பதிவினைக் காண இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன.
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Math is not my favorite subject. :-) So I don't spend too much time solving math puzzles.:) I generously let the "math geniuses" to take care of it!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரர்
      எப்படி இப்படியெல்லாம் அசத்துறீங்க! எந்த பந்து கொடுத்தாலும் கோல் போட்டீறீங்களே!! அரிய தகவலைத் தந்துள்ளீர்கள் தமிழிலும் கணிதம் குறித்த நூல் இருப்பது தங்களின் மூலமே அறிந்தேன். நன்றி சகோதரரே..

      நீக்கு
    3. வணக்கம் அக்கா
      மூணு நாளும் சும்மா கலகலப்பா இருந்திருக்கும் போல. விளையாட்டுக்கு.. கூட ஒரு தோழி இருந்ததால தப்பிச்சூட்டீங்க நினைக்கிறேன். நிகழ்வைச் சொல்லிய அடுத்து என்ற ஆவலை மிகுவிக்குறது. தொடர்வோம் அக்கா.. அடுத்த பதிவு உங்க புண்ணியத்துல கணித்த்தில் சில சுவாரசியங்கள் என்று போடலாம்னு தோணியாச்சு.. பகிர்வுக்கு நன்றீங்க அக்கா..

      நீக்கு
    4. @ விஜூ அண்ணா
      எப்டி அண்ணா இப்படி எல்லாம்!!! தமிழை தலைகீழா படிச்சுவச்கிருக்கீங்க!!!!!!!!!!!! அந்த பாடல் ஒரு trainer சொன்னாங்க அண்ணா! பலா சுளையை எப்படி உரிக்காமலே கணக்கிடுவதுன்னு!!!! தமிழர்கள் அப்பவே கலக்கிருகாங்கள விஜூ அண்ணா மாதிரி:)))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
    5. @ வருண்
      well said yaar!!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  15. கணக்கு டிரெயினிங்க் எடுக்க போனதையும் சுவாரஸ்யமா சொல்லி பதிவை தேத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. ஆஹா நானும் மாட்டுனேன்மா..மொக்க பயிற்சிக்கு....கொடுமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பிடியா அக்கா! ரொம்ப கொடுமைதான்:))வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  17. //பதில்:: வேற்றுகிரகவாசி நீலத்தொப்பி அணிவதில்லை// இந்த வரியை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் கூட லாஜிக் இல்லாம கேள்வி கேட்ட இப்படிதான் தொடர்பற்ற விடைகிடைக்கும் அப்டின்னு அர்த்தம் சகோ!!

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  18. என் நண்பர்கள் என்னை துணுக்கு மூட்டை என கிண்டல் (!) செய்யும் அளவுக்கு எந்த துறையானாலும் அதில் ஏதாவது ஒன்றை தெரிந்துவைத்திருக்கும் அரைவைத்தியன் நான் !!!

    எனக்கு மிகவும் பிணக்கானது கணக்கு ஒன்றுதான் ! அல்ஜிப்ராவை கூட அறிய முடியாமல் தவித்த எனக்கு இன்றும் கூட கணக்கில் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பது மாதிரி கனவுகள் வந்துகொண்டிருக்கின்றன !

    பயிற்சி பற்றிய உங்கள் எண்ணங்களை சுவாரஸ்யமாக, யதார்த்தமாய் பதிவு செய்திருக்கிறீர்கள்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தாய் மண்ணே வணக்கம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/09/blog-post.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. உண்மையாவே நீங்க துணுக்கு மூட்டை தான்:))
      நீங்களும் நாமளா மாதிரி தானா?

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  19. கணிதம் புதிருக்கும் லாஜிக் அவசியம் என்னும் அடிப்படையை மீறிவிட்டார்களே..!

    பதிலளிநீக்கு
  20. நேற்று நான் போட்ட கமெண்ட் காக்கா தூக்கிகிட்டுபோனதால் ,மீண்டும் ......#இருபத்தி அஞ்சு பெரியவங்களும் ஆளுக்கு மூணு பிள்ளையை கல்யாணத்திற்கு கூட்டிட்டி வந்திருக்கணும்.!!!#
    இவர்கள் செய்த மொய் கணக்கை கூட்டி கழித்து லாபமா ,நட்டமா என்றுகூட கணக்கை சொல்லிக் கொடுத்து இருக்கலாம் ))))
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இப்படி பல தடவை நடந்திருக்கு:)) அவரசப்பட்டு புப்ளிஷ் பட்டனை சரியா தட்டாம வந்திடுவேன் போல:)) ஆனா மறுபடி பதில் தட்ட பொறுமை இல்லாம போன சம்பவங்கள் கூட உண்டு:)) நீங்க பொறுமையாய் மறுபடி டைபித்தமைக்கு நன்றியோ நன்றி பாஸ்:)

      நீக்கு
  21. ரசித்து வாசித்தேன். நமக்கு எல்லாம் இப்படி வாய்ப்பு..மாட்டாது ஏன்னா..? நாங்க தான் வீட்டுல வெட்டி ஆபீஸரா இருக்கோம்மில்ல...ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  22. கணக்கு அப்படி ஒண்ணும் கஷ்டமான விஷயமில்லை.... :))))

    உங்கள் பதிவினை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு