வியாழன், 23 ஜூலை, 2015

ஷர்மிலி மிஸ் !!! நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா?

          "குழந்தையை நீங்க எப்படி அடிக்கலாம் . ஆயிரக்கணக்குல பீஸ் கட்டி படிக்கவைக்கிறது உங்க கிட்ட அடி வாங்கவா?. இன்னும் எந்த காலத்தில இருக்கீங்க  ..." 
சுதனின் கோபத்தை எதிர்பார்க்காத ஷர்மிலி மிஸ்ஸின் முகம் பயத்தில் மாறியது 


  சுதன்  தொடர்ந்தார்
"அவ ஏதாவது தப்பு செஞ்சிருந்தா  எங்ககிட்ட தான் சொல்லணுமே தவிர நீங்க அடிக்கக் கூடாது. குழந்தைகளை அடிக்கறதுக்கு பெத்தவங்களுக்கே உரிமை இல்லை. நீங்க எப்படி அடிக்கலாம்? குழந்தைங்க என்ன கல்லா ? அசையாம அப்படியே இருக்கிறதுக்கு. பி.எட். ல சைல்ட் சைக்காலஜி படிச்சிட்டுதானே வந்தீங்க. குழந்தைகளை எப்படி ட்ரீட் பண்ணனும்னு தெரியாதா?.  சைல்ட் ப்ரொடெக்ஷன் சட்டம் இருக்கு தெரியுமா? இன்னொரு தடவை  இப்படி நடந்தா சும்மா இருக்க மாட்டேன். பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன். அவர் கேக்கலைன்னா சி இ ஓ கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன், அதுக்கு மேலயும் போவேன்" என்று பேசிக்கொண்டே போனவரை தடுக்காமல் அடிப்பட்ட பார்வையும், சிறு புன்னகையுமாய் கேட்டுக்கொண்டே இருந்தாள் ஷர்மிலி.

           சார்! சைல்ட்சைகாலஜியை ஒரு வருடப்படிப்பில் முழுமையா தெரிஞ்சுக்க முடியாதுன்னு தான் எனக்கு தோணுது. இதுபோல அனுபவங்கள் தான் இன்னும் இன்னும் எனக்கு பாடமா இருக்கு. நீங்க சொன்னத நான் கவனத்தில் வச்சுக்கிறேன் சார்! பெற்றோரும் ஆசிரியர்களை போல கொஞ்சம் சைல்ட் சைகாலஜி தெரிஞ்சுகிறது நல்லது இல்லையா சார்? இப்போ என் கையில் இந்த புத்தகம் தான் இருக்கு. படிச்சுப்பாருங்க. பத்திரமா திரும்பத் தந்தீங்கன்ன மாடசாமியின் "எனக்குரிய இடம் எங்கே?, ஆளுக்கொரு கிணறு, மாதிரி இன்னும் நிறைய வெச்சுருக்கேன். அதையும் தருவேன். சுதனே மாணவன் போல கேட்டுக்கொண்டிருப்பதாக தோன்றியது. கையில் ஷர்மிலி தந்த "டோட்டோசான், சன்னலில் ஒரு சிறுமி" புத்தகம் இருந்தது. 

   அப்புறம் சார்! பாப்பாவுக்கு கொஞ்சம் அவ ஈசியா பயன்படுத்துற மாதிரி வேற டிபன் பாக்ஸ் கொடுத்துவிட்டா நல்லது. ஓகே மேம். கிளம்பும்போது நினைத்துக்கொண்டான் சுதன்  நாம குறை சொல்லவந்தா, நம்மளையே குறைசொல்லி அனுப்பிடுவாங்களே.

  இனிப்புகளோடு வீட்டிற்குள் செல்லும்போதே, கிச்சனில் கதைத்துகொண்டிருக்கும் நிலாவின் குரல் கேட்டது. அம்மா! உங்களுக்கு பட்டாணி சாதம் செய்யத்தெரியுமா? தெரியாதே டா. போங்கம்மா, எங்க மிஸ் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கங்க. எவ்ளோ சூப்பரா இருந்துச்சு தெரியுமா? அதுல நிறைய ப்ரோடீன்ஸ் இருக்காம். சரி! நீ நான் கொடுத்த லஞ்ச்சை சாப்பிடலையா? என்ற அவன் மனைவிக்கு நிலா சொல்லிகொண்டிருந்தாள்" இல்லம்மா! என் பாக்ஸ் ரொம்ப குட்டியா இருக்கா! அதில எனக்கு சாப்பிடவே முடியல. நிறைய சிந்தி சிந்தி சாப்பிடுவேன். இன்னிக்கு நான் ஒரு வாய் எடுத்து வைச்சது, ரைஸ் எல்லாம் கொட்டிடுச்சு. மேம்! அவங்க டிபன் பாக்சை எனக்கு கொடுத்துட்டு, காண்டீன்ல போய் சாப்டாங்க ம்மா! 

      நிலா  இதற்கு முன்பே வேற பாக்ஸ் வேண்டும் என கேட்டதும், வாங்கித் தந்து ஒருவாரம் கூட ஆகல என தான் மறுத்ததும் நினைவுக்குவர, ஷர்மிலி மிஸ்ஸின் அட்வைஸும் நினைவுக்கு வந்தது. இன்று இரவு இந்தபுத்தகத்தை படிக்கவேண்டும் என நினைத்தவனாய் அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பினான் சுதன்.


ஸ்கூல் பையன் வலைப்பூ கார்த்திக் சரவணன் சகோ அவர்கள் எழுதிய உண்மை நிகழ்வின் தொடர்ச்சியாக ஒரு கற்பனைக்கதை. (தமிழன் சகா கேட்டுக்கொண்டதன் பேரில்) 

இதே கதைக்கு முரளி அண்ணா அளித்திருக்கும் வேற்றொரு முடிவு இங்கே.

இது பாலா அண்ணாவின் காமெடி வெர்ஷன்.

66 கருத்துகள்:

 1. கார்த்திக் நாண நல்லாவே நன்னயம் செய்து விட்டார்கள் ஷர்மிலி மிஸ்...!

  இந்த சைல்ட் சைக்காலஜி / சைல்ட் ப்ரொடெக்ஷன் சட்டம் பற்றி யாராவது விரிவா ஒரு பதிவை போடுங்கப்பா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! இதுக்கும் குரல்! நீங்க எங்கேயோ போய்டீங்க அண்ணா!

   நீக்கு
  2. இந்த சைல்ட் சைக்காலஜி / சைல்ட் ப்ரொடெக்ஷன் சட்டம் பற்றி யாராவது விரிவா ஒரு பதிவை போடுங்கப்பா..//

   டிடி அப்பப்போ போட்டுருக்கோமே....ஹஹ்ஹ்

   நீக்கு
 2. அட அம்முகுட்டி இதுவும் நல்லாவே இருக்குடா அம்மு யாரு .......இதெல்லாம் ஜுஜூப்பி இல்லையா அம்மு. ஆனா சட்டுபுட்டுனு முடிச்சமாதிரி இருந்தது. கொஞ்சம் நீண்டு இருக்கலாமோ என்று தோணிச்சுடா நன்றி வாழ்த்துக்கள் ...! ஆமா போனபதிவில நீண்ட பின்னூட்டம் இட்டேனே என்னாச்சு ...ம்..ம்..ம் யாராவது திருடிட்டாங்களா என்ன ஹா ஹா ....நன்றி வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாரி செல்லம்! போன கம்மென்ட்டை கொஞ்சம் லேட்டா வெளியிட்டேன்:) எனக்கு நீளமா எழுத பயமா இருக்கும் இனியாச்செல்லம். போரடிக்குமே ன்னு தோணும்.இனி ட்ரை பண்றேன்.

   நீக்கு
 3. எனது வேண்டுகோளுக்கிணங்க எழுதியதற்கு மிகவும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. ஒரு சிறுகதைக்கு பல முடிவுகள்.......அது இந்த கதைக்கு மட்டும்தான் இருக்க முடியும்..

  பதிலளிநீக்கு
 5. தினமும் பட்டாணி சாதம் சாப்பிட்டு வெறுத்து போன டீச்சர் இதுதான் சாக்கு என்று அதை குழந்தையிடம் கொடுத்துவிட்டு கேண்டினில் சூடாக போட்டு இருந்த பூரிசெட்டை(கட்டை அல்ல) வாங்கிசாப்பிட்டதாக தகவல் கசிகிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் மதுரைத் தமிழரே தாங்களும் கலக்கலாமே. முடிவை உங்கள் பாணியில் அறிய ஆவலாக உள்ளேன். கோபம் ஒன்றும் இல்லையே. வடியிற வெள்ளத்தை திருப்பி விட்டிருக்கேன். ஹா ஹா ....
   நம்ம மதுரைத் தமிழர் ரொம்ப நல்லவர் அம்மு ஏற்றுக் கொள்வார் ஏன்று நம்புகிறேன்.

   நீக்கு
  2. கலாய்ச்சுப்புட்டாரே! என்ன பண்ணலாம்னு நினைத்தேன். சூப்பர் டா இனியாச்செல்லம்! ஆனா இவரை கேட்டா பாலா அண்ணாவைவிட டீச்சரை கலாய்ச்சே பதிவுபோட்டாலும் போடுவாரோ:((

   நீக்கு
  3. பதிவோடதான் வருவார் பாருங்களேன் ஆனால் கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம் ok வா? \\\பாலா அண்ணாவைவிட டீச்சரை கலாய்ச்சே பதிவுபோட்டாலும் போடுவாரோ:((////

   ஆமால்ல.... பார்க்கலாம். சா சா அப்படி எல்லாம் செய்ய மாட்டாரும்மா. பாவம் நல்ல மனிதர்.

   நீக்கு
  4. யெஸ் வழிமொழிகின்றோம் சகோதரி இனியா சொல்வதை...

   நீக்கு
  5. ஆஹா நம்மையும் ஒருத்தர் நல்லவர் என்று சொல்கிறாரே இதை கேட்ட மாத்திரத்தில் வந்த மன மகிழ்ச்சியில் ஹார்ட்ட டாக்கே வந்துவிடும் போல இருக்க்கே...

   இனியா நீங்கள் என்ன கவிதையா போட்டு இருக்கீங்க உங்கள் மேல கோவப்படுவதற்கு கருத்துதானே போட்டு இருக்கீங்க இதற்கெல்லாம் நான் கோபப்படமாட்டேன் என்னை நல்லா கேலி கிண்டல் பண்ணலாம்..

   எனக்கு கதை எல்லாம் எழுதவராது ஆனால் நீங்க கேட்டு நான் இல்லேன்னு சொன்னா நல்லா இருக்காது அதனால நானும் எழுதுறேன் ஒகே வா அதுல வேற நீங்க கலாய்துன்னு சொல்லிவிட்டதாலா என் பாணியில் எழுதுகிறேன் படித்த பின் கார்த்திக் உலக்கையை தூக்கிட்டு வந்தா நீங்கதான் என்னை காப்பாற்றனும்

   நீக்கு
 6. வணக்கம் சகோ,
  தாங்கள் சொன்னது கற்பனை என்றாலும், இது தான் உண்மை சகோ, அவர்கள் பதிவையும் படிக்கிறேன்,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. இப்பதானே வாங்கித் தந்தேன். அதுக்குள்ள தீத்துட்டியா..? அப்படிங்கற டயலாக் எத்தனை சகஜமாக எல்லா வீடுகளிலும் கேட்கிற ஒன்றாக இருக்கிறது. அதுவே இங்கே அழகான சிறுகதையாக ஆகியிருக்கிறதே...அழகான மனோதத்துவக் கதையா மாத்திட்டியேம்மா. பிரமாதம். என் ஓட்டு உனக்குத்ததான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! அண்ணா உங்க ஓட்டு கிடைத்தது ஜாக்பாட்ல!! மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 8. ஆளாளுக்கு அரைத்த மாவையே அரைக்கிறீர்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா!! தொடர் பதிவோல்லையோ வேறன்ன செய்யட்டும்:))) சாரி சார்!

   நீக்கு
 9. மற்றுமொரு கோணத்தில் சிறப்பான முடிவு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. தொடர் பதிவு போல், தொடர் (சிறு )கதைப் பதிவா ?அடுத்து எந்த வாத்தியாரோ :)

  பதிலளிநீக்கு
 11. டீச்சருக்கான இலக்கணம் ஷர்மிலிக்கு நன்றாகப் பொருந்துகிறது. நல்ல அமைப்பு.

  பதிலளிநீக்கு
 12. அடடே, இது இன்னும் டச்சிங்... மனதை வருடும் முடிவு... அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ் என்பதை ஷர்மிலி மிஸ் மூலம் வேறு ஒரு கோணத்தில் பொட்டில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டீர்கள்.... எதிர்பாராத ஆனால் மனத்தைக் கொள்ளை கொள்ளும் முடிவு... வாழ்த்துக்கள்... நன்றி சகோ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கார்த்திக் சகோ ! முறைப்படி உங்களிடம் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என கேட்டுக்கொண்டு வெளியிட வேண்டும் என நினைத்து, நீங்க அவ்ளோ narrow minded இல்லை என நினைத்து விட்டுவிட்டேன். இப்போ இந்த பின்னூட்டத்தின் மூலமா உங்க broad mindedness தெரியுது. மிக்க நன்றி சகா!

   நீக்கு
 13. இதுவும் ஒரு கோணம்!
  இன்னும் எத்தனையோ?
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அய்யா! இன்னும் பல கோணங்கள் உண்டு தான்:) மிக்க நன்றி!

   நீக்கு
 14. ஸ்கூல் பையனின் பதிவு என்னை வேறொரு கோணத்தில் இருந்து எழுதத் தூண்டியது . அதை மேலும் தொடர வைத்த பெருமை மதுரை தமிழனையே சாரும் . இன்னொரு கோணத்தில் அணுகியது அருமை.
  இன்னும் பல கோணங்களில் இக் கதையை தொடர முடியும் என்றே நினைக்கிறேன்.
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா! உங்கள் பதிவில் உங்கள் பணியனுபவமும், எழுதனுபவமும் தெரிந்தது. ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதினேன். மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 15. அருமையான கதை...
  தொடர் பதிவு போல் தொடரும் கதை பலவித முடிவுகளுடன் நல்லாத்தான் இருக்கு... இன்னும் பலர் தொடர்வார்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அண்ணா !! பலரும் தொடர்கிறார்கள்:) நன்றி அண்ணா!

   நீக்கு
 16. நாங்களும் யோசிச்சு வைச்சுருக்கோம் இன்னும் எழுதலை ஆனா போற போக்கைப் பார்த்தா அதுவும் வந்துடும் போல தோணுது...சைக்காலஜி என்று நீங்கள் சொல்லிட்டுப் போனதைப் பார்த்ததும் அடடா நாம சொல்ல வந்ததுனு நினைச்சுட்டே வாசிச்ச போது நல்ல காலம் முடிவு வேற விதத்தில் சூப்பர்!...நாங்க எழுதி முடிக்கறதுக்குள்ள எல்லா வெர்ஷனும் வந்துரும் போல ஹஹஹ்..

  கீதா: இந்தக் கீதா ரொம்ப சோம்பேறி எழுதறதுக்கு ....மூட் வந்தாத்தான் எழுதுவா...ரூம் போட்டு வேற ..யோசிக்கணுமாம்..ஹும் இதுக்கொண்ணும் கொறைச்சலில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா!! உங்க கதையை படித்தேன் சகாஸ்! இன்றைய பெற்றோர்களுக்கு தேவையான அட்வைஸ்:) மிக நன்றாக இருந்தது! மிக்க நன்றி சகாஸ்!

   நீக்கு
 17. சூப்பர் தொடரா ஓடுது...உங்கள் வெர்ஷனும் அருமை சகோதரி! டீச்சர்னு நிரூபிச்சிட்டீங்க...

  பதிலளிநீக்கு
 18. ஆஹா மனோதத்துவம் படித்த உங்கள் ட்விஸ்ட் நல்லா இருக்கே..
  வாழ்த்துகள் டியர்

  பதிலளிநீக்கு
 19. ஒரு கதை பல கோணம் ரசித்தேன் பகிர்வை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நேசன் சகோ!! வெகுநாள் ஆகிறது பார்த்து! நலம் தானே:)

   நீக்கு
 20. உங்களோட கதைத் திருப்பம் மனதை கூடுதலாய் தொடுகிறது ...

  பதிலளிநீக்கு
 21. ஒருவர் ஆரம்பித்து வைக்க பல கோணங்களில் நிகழ்வுகள் நடப்பது கற்பனையின் ஆழத்தைக் காட்டுகிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அய்யா! கற்பனைக்கு ஒரு சவாலாகத்தான் இருக்கிறது! மிக்க நன்றி!

   நீக்கு
 22. ஷர்மிலி மிஸ் பதிவுலகில் ரொம்பப் பாப்புளர் ஆகிவிட்டார்கள். :)))

  டீச்சர் நல்லதுக்குத்தான் அடிப்பாங்கனு நம்பும் பெற்றோர்கள் உண்டு. "நானே அடிப்பதில்லை, இவங்க என்ன?" என்கிற பெற்றோர்களும் உண்டு. இதில் பின்னால் சொல்லப்பட்ட வகையை "அதிகப் பிரசிங்கிப் பெற்றோர்கள்" என்று சொல்வது நம் கலாச்சாரம்.

  டீச்சர் பிள்ளைகளை அடிப்பதுக்குக் காரணம்.. அவங்க படிக்கும்போது இதேபோல் அவங்களும் அடி வாங்கி இருப்பார்கள். அதை யாரும் தவறென்று சொல்லியிருக்க மாட்டாங்க. அதனால் அதை அவர்கள் தவறாக எண்னுவதில்லை. ஆனால் ஒண்ணு அடி வாங்குவதால் திருந்துவது என்பது மிக மிக சொற்ப விழுக்காடுகள்தான். நான் சிறு வயதில் ஹைப்பர் ஆக்டிவ் பையன். டீச்சர்களிடம் ஏதாவது சுட்டித்தனம் (பொய் பேசி இல்லை) செய்து அடி நெறைய வாங்கி இருக்கேன். அம்மாவிடம் நெறையா அடி வாங்கி இருக்கேன் (அப்பா தொடவே மாட்டார். :) ). ஆனால் அதன் பிறகு நான் அடிக்குப் பயந்து அதே தப்பை செய்யாமல் இருந்தேனா?னு கேட்டால்.."இல்லை" என்பதே என் அனுபவம். அடிச்சுப் பிள்ளைகளை திருத்த முடியும் என்கிற நம்பிக்கையில் இப்போ எல்லாம் யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆராய்ச்சி, டேட்டா கலக்‌ஷன் எல்லாமே அடிப்பதால் பயன் இல்லை என்பதே சரி என்கிறது..காலத்திற்கேற்ப நம்மை மாற்றிக்க வேண்டிய கட்டாயம்.

  "அடியாத மாடு படியாது" என்கிற பழமொழி எல்லாம் ஆறறிவு உள்ள மனிதனுக்கு பயன்படாது. மாட்டுக்கும் நிச்சயம் பயன்படாது. பழமொழிகள் பல நமக்குத் தவறான கருத்துக்களை அளிக்கின்றன. பழமை என்பதெல்லாம் "சரியானது" என்னும் கண்ணோட்டமும் முற்றிலும் தவறானது ..

  உங்க கதை ..நீங்க ஒரு ஆசிரியையாக இருப்பதால் உங்க அனுபவம் கலந்த சொந்தக் கருத்தை முன் வைப்பதாக இருக்கிறது என்பது என் அனுமானம். :)

  ***இன்று இரவு இந்தபுத்தகத்தை படிக்கவேண்டும் என நினைத்தவனாய் அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பினான் சுதன்.**

  சுதன்?? To me it sounds like "mythili herself" as I know you plan and read books! lol

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அடிப்பதில் உடன்பாடு இல்லை வருண். சிறார்களின் தவறுகள் பெரிதாக பெரிதாக, தண்டனைகள் மென்மையாக இருக்கவேண்டும். அதுவே சரியான தீர்வாக இருக்கும் என்பது சைல்ட் சைகாலஜியின் பால பாடம்:)
   **சுதன்?? To me it sounds like "mythili herself" as I know you plan and read books! lol** வாவ்! tats really a nice guess. and its also true:)

   நீக்கு
  2. இப்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் "ஓய்ந்திருக்கலாகாது-கல்வியியல் சிறுகதைகள்:)

   நீக்கு
 23. அருமை டோட்டோ சானின் ஜன்னலில் ஒரு சிறுமியை அனைவரையும் படிக்கச் சொல்லவும் அருமையான வாய்ப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாயிண்டை கரெக்டா கேட்ச் பண்ணிடீங்க சகோ:) மிக்க நன்றி!

   நீக்கு
 24. பதில்கள்
  1. முதல் கருத்தோ !!!!!!! மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி!

   நீக்கு
 25. வணக்கம் தோழி!
  இப்பொழுதுதான் இங்கு இக்கதையைப் படிக்கின்றேன்.
  வித்தியாசமான எண்ண ஓட்டம். கதையமைப்பும் வசனங்களும் அருமை!
  தாங்களும் ஒரு ஆசிரியை என்பதால் கூடுதல் கவனத்துடன் கதையை நகர்த்தியுள்ளீர்கள். மிகச் சிறப்பு!

  வாழ்த்துக்கள் தோழி!

  மழைவிட்டும் தூவானம் விடாதகதை என்னிடத்தில்..
  அதனால் ரொம்பத்தாமதமாக வந்துள்ளேன் இங்கு!
  மனம் வருந்துகிறேன்..

  பதிலளிநீக்கு
 26. எல்லார் கதையும் வாசிச்சேன்பா ..உங்களுடையது வித்தியாசமா ஆசிரியையின் பார்வையில் அட்டகாசமா இருக்கு ..

  பதிலளிநீக்கு
 27. இதைப் படிக்காம போயிட்டனே.. அருமை அருமை.. இதோ என்னோட வெர்ஷன் இங்கே. http://www.kovaiaavee.com/2015/07/blog-post.html

  பதிலளிநீக்கு
 28. மைதிலி ஆசிரியரின் மனம் அழகாய் தெரிகிறது கதையில்.

  தங்களின் நிறைய பதிவுகள் என்ன அசத்தி இருக்கின்றன....அதில் இதுவும் ஒன்று என்று சொல்லவும் வேண்டுமா...?

  சகோ நன்றி தம +1

  பதிலளிநீக்கு
 29. எங்க பொண்ணு ஸ்கூல் போகும்போது ரயிலில் கூட்டத்தில் அவள் டிஃபன் பாக்ஸ் கொட்டி சாப்பாடெல்லாம் போயிடுச்சு. அப்போக் கூடவே வந்த பள்ளி ஆசிரியர்கள் தான் தங்கள் உணவிலிருந்து பகிர்ந்து கொடுத்தார்கள் என்று சொன்னாள். அது நினைவில் வந்தது. :)

  பதிலளிநீக்கு
 30. நான்கு கதைகளையுமே படித்தேன். உங்களுடையதும் பாலகணேஷ் அவர்களுடையதும் நன்றாக இருந்தன! பாலகணேஷின் 'ர்... ரா... ராதிகா மிஸ்' வெகுமக்கள் இதழில் வரும் சிறுகதை போலவும், உங்களுடையது இலக்கிய இதழில் வெளிவருவது போலவும் இருந்தன. தொடர்ந்து சிறுகதைகளும் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு