வியாழன், 5 மார்ச், 2015

பெண்மையை நான் மதிக்கிறேன்.

       

           இந்தியாவின் மகள் என்கிற டாக்குமெண்டரி, பெண்கள் தெய்வம், நதிகள்,பூமி எல்லாமே பெண் தெய்வம் தான் என இதுவரை நம் நாட்டில் பலர் அணிந்தது வரும் மூகமூடியை கிழித்தெறிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தியால எல்லா ஆண்களும்  அப்படித்தானா என்கிற எண்ணம் உலக அளவில் தோன்றத்தானே செய்யும். இப்படியான ஒரு சூழலில் எனது அன்பு அண்ணன் நிலவன் அவர்கள் தொடங்கி வைத்திருக்கும் இந்த தொடர்பதிவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இந்த மகளிர் தின ஜோதியை ஏந்தி இந்த பதிவை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.

              என்னிடம் ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் இருக்கிறான் பெயர் ஹரி. அவன் ரஜினி மாதிரி. எப்போவருவான் எப்படி வருவான்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தில் வருவான். (தேர்வு நேரங்களில் மட்டும்). இன்று ஏதேட்சையாக அவன் பள்ளிக்கு வந்துவிட, நான் அவனை பெற்றோரைகளை  அழைத்துவரும் படி கூறினேன். அவனோ அப்பா பத்து மணிக்கு வருவாரு மிஸ் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். பத்து மணிபோல் நான் எட்டாம் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். ஏழாம்வகுப்பு அப்சர் ஓடி வந்து "மிஸ் , ஹரி அப்பா வந்தாரு. நானும் , விவேக்கும் பேசி அனுப்பிட்டோம் என்றான். அவர்கள் சுற்றுசூழல் மன்ற மாணவர்கள். பள்ளி வளாகத் தூய்மையை பார்வையிட்டு என்னிடம் சொல்லவேண்டியவர்கள். எனவே gate லேயே அவரை சந்தித்து, வழியனுப்பிவிட்டும் வந்திருக்கிறார்கள். எனக்கு வந்ததே கோபம்" ஓஹோ! நீங்க தான் இனிக்கு ஸ்கூல் இன்சார்ஜா என்றேன் முறைத்தபடி. "இல்ல மிஸ், அவர் லைட்டா போட்டிருந்தார்"என்றான் சற்று பம்மிய குரலில். காலையில் மகனின் பள்ளிக்கு வரும் போது குடித்துவிட்டு வரும் அவரும் ஆண் தான். அவரை  அப்படியே வாசலோடு அனுப்பிய அப்சரும், விவேக்கும் ஆண்கள் தான்.


           பெண்கள் எழுதிய பெண்ணியக்கவிதைகள் அலறலாகவோ, உளறலாகவோ தான் இருக்கும் என்கிற பொதுபுத்திக்கு சவுக்கடியாய் இருக்கும் வெண்ணிலாவின் இந்த கவிதையை மகளிர் தின சிறப்புக்கவிதையாக வழங்க ஆசைப்படுகிறேன். இந்த ஒரு கவிதையின் தாக்கமாக மாவட்ட ஆட்சியர் திரு.ராஜேந்திரன் அவர்கள், அவரது மாவட்டத்தில் கழிப்பறை வசதி போதாத பள்ளிகளை கணக்கிட்டு போதுமான வசதிகள் நிறைந்த கழிப்பறைகள் கட்ட ஒன்பது லட்சம் ரூபாயை வழங்கினார். பெண் எழுதிய கவிதை, பெண்ணியக்கவிதை என்பதான சமூகத்தின் பார்வைகளை மறுவாசிப்பு செய்யவைத்த இந்த தங்கக் கவிதைக்காக தோழி வெண்ணிலாவின் கைகளுக்கு  என் அன்பு முத்தங்கள்.


கவிஞர் வெண்ணிலா

இதோ கவிதை
ஒரு வகுப்பறையும்... சில இளவரசிகளும்!

பதினோரு மணிக்கு மட்டுமே
வெளியே வர வேண்டும்
காலையில் ஒரு முறை
மத்தியானம் ஒருமுறை
குழாயில் தண்ணீர் வரும்
வேளை தப்பி
வெளியே வருபவர்கள்
மைதானம் பெருக்க வேண்டும்
கடும் விதிகளை அறியாமல்
வயிறு பிசையும்
உள்ளாடை நனைந்து
ஈரம் பரவும்

உள்ள யாரு, வெளிய வா
உரத்து ஒலிக்கும்
அதிகாரக் குரலுக்குப் பயந்து
பல்லியாய் சுவரொட்டும் பிம்பம்
தண்ணீர் போகாமல்
வாரந்தோறும் அடைத்துக்கொள்கின்றன
நாப்கின்களால் நிறையும்
கழிப்பறை பீங்கான்கள்.

தினம் பத்து பேர்
அந்த நேரத்துக்குப்
போக மாட்டேன்றீங்க
என்ன சொன்னாலும்
உங்க இஷ்டத்துக்குத்தான்
போவீங்க
பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது
அதிகாரத்தின் குரல்

கூச்சம் தொலைக்கலாம்
நின்று மாற்றவாவது
இடம் வேண்டுமல்லவா
கழிப்பறையில்.

மாசத்துக்கு
மூணு, நாலு நாள்
லீவு எடுத்தா என்ன பண்றது?
பதில் எதிர்பார்க்காமல்
ஒலிக்கும் கேள்வி
அறை முழுதும் பரவும்
வெட்கம் பூசிய சிரிப்புகளும்
நமுட்டுப் புன்னகைகளும்
வலி தோய்ந்த மௌனங்களும்
ஆங்காங்கு எழும்
கொடுக்குள்ள விலங்கொன்று
விஷம் இறக்கிய மகிழ்வில்
இடம் நகரும்.

 நண்பர்களே ! இதே தலைப்பில் இந்த பதிவை  தொடர்பதிவாய் எழுத நானும் உங்களை அழைக்கிறேன். என் அன்பு தோள் கொடுக்கும் தோழன் கஸ்தூரியின் (மது) பதிவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

39 கருத்துகள்:

 1. நல்லதொரு விடயங்களோடு கட்டுரையும் அருமை கவிதையும் அருமை வாழ்த்துகள் சகோ
  தமிழ் மணம்1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ !! எப்படித்தான் புயல் வேகத்தில் பின்னூட்டம் இடுகிறீர்களோ!! முதல் வாக்குக்கு நன்றி அண்ணா!

   நீக்கு
  2. நாங்களெல்லாம் சொன்ன வாக்கை காப்பாத்துறவங்கே... இல்லைனா சாமி கண்ணைக்குத்திடும்னு நம்புறவங்கே...

   நீக்கு
 2. இதெல்லாம் மாபெரும் கொடுமை . என் பள்ளிக்காலங்களில் பள்ளிக்கழிப்பறைகள் என்ன நிலையில் இருந்ததோ அப்படியேதான் இன்னமும் இருக்கின்றது . :-(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை போன்ற இளைஞர்கள் இப்படி சிந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கு சகோ! நீங்களும் இந்த தலைப்பில் பதிவை எழுதினால் இளைஞர்களின் பங்களிப்பு இந்த மகளிர் தினத்தின் மகத்தான விசயமாய் இருக்கும் சகோ:)

   நீக்கு
 3. நாட்டுக்கு இப்போது மிகவும் தேவையானது. தொடர் பதிவு நீள் பதிவாகவும் பங்களிப்புக்கள் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. உன் அன்புக்கு நன்றிம்மா ஆனா.. என்னைவிடவும் பலமடங்கு சத்தம்போடாமல் பணியாற்றிவரும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள். நாங்கள் நினைப்பதெல்லாம், “பெண்ணுரிமை என்பது, ஆணுக்கு எதிரானதல்ல, சமமானது“ என்பதே. இதையே 1989இல் வெளிவந்த “புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கம் -பிரச்சாரப் பாடல் ஒலிநாடா“வில் எனது அறிமுகவுரையின்போது சொன்னேன். என்றும் என் கருத்தும் இதுதான்.. அ.வெண்ணிலாவின் இதே கருத்தமைந்த சிறுகதை ஒன்றும் விகடனில் வெளிவந்தது. இரண்டுக்குமான விளைவுதான் அந்த மாவடட ஆட்சியரின் உடனடிச் செயல்பாடு. உன் பதிவின் தொடர்ச்சியை மீண்டும் வந்து நானும் தொடர்வேன் நன்றிடா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பதிவை இப்படி இரண்டு நாள் முன்னதாக படித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா! உங்களை போன்ற புரிதல் எல்லோருக்கும் வந்துவிட்டால் எத்தனை நலமாய் இருக்கும். உங்கள் அந்த பட்டியலை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் அண்ணா!

   நீக்கு
  2. அதேதான் மைதிலி..இப்பொழுதெல்லாம் பல ஆண்களைப் பற்றி, "இவர்களை நிலவன் அண்ணாவிடம் அழைத்துச் சென்றால் என்ன?" என்று தோன்றுகிறது.
   உங்களுக்கு அன்பான வணக்கங்கள் அண்ணா.

   நீக்கு
  3. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல கிரேஸ. நான் மிகப்பல காயங்களைக் கண்டவன், என் அனுபவம் இல்லாமலே பல நல்லஆண்கள் என்னைவிடவும் சமத்துவ உணர்வுடனே வாழத்தான் செய்கிறார்கள்... என்ன அவர்கள் எழுதுவதோ, வெளியில் சொல்லிக்கொள்வதோ கூட இல்லை. அந்த உயர் நிலை எனக்கு எப்போது வாய்க்குமோ தெரியல போ.

   நீக்கு
 5. மனம் தொட்ட பகிர்வு. கவிதை..... இந்தச் சமுதாயத்திற்கு ஒரு சவுக்கடி. கவிதை எழுதிய சகோதரிக்கு எனது பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. அற்புதமான பகிர்வு. இப்படியான அனுபங்களை தாண்டி வந்தோம் என்பதை நினைக்கவே வருத்தமாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. ஒரு வகுப்பறையும்... சில இளவரசிகளும்!
  பெரும்பாலான பள்ளிகளில் இதுதான் நிலை
  சமச்சீர் கல்வி என்பது பாட புத்தகங்களில் மட்டும்
  இருந்தால் போதுமா
  பள்ளிகளின் அடிப்படை வசதிகளிலும்
  சமச்சீர் நிலவ வேண்டுமே
  கவிதை கண்டு மனம் கனக்கிறது சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 8. ஆஹா நல்ல பதிவும்மா..வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. கவிஞர் வெண்ணிலாவிற்கு வாழ்த்துக்கள்,நல்லபதிவுடீச்சர்
  நான்பிறகு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 10. ஒரு சடங்கு பதிவாக இல்லாமல் உணர்ச்சிப் பிழம்பாய் எழுதியதற்கு முதலில் நன்றி. சமுதாய அவலத்தை அப்படியே அப்பட்டமாக சொன்ன கவிதை. கவிஞர் வெண்ணிலவுக்கும் கவிதையைப் பதிவினில் பகிர்ந்த சகோதரி மைதிலி ரெங்கராஜன் இருவருக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள்.

  இன்றும் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கென்று தனி கழிப்பறை கிடையாது. “தம்” அடிக்கும் ஆண்கள் உள்ளே சென்றால். அவர்கள் “தம்” அடித்து முடித்து வெளியே வரும்வரை காத்திருக்க வேண்டும்.

  த.ம.9

  பதிலளிநீக்கு
 11. அன்புச் சகோதரி,

  பெண்மையை நான் மதிக்கிறேன். பள்ளியின் சூழலை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தீர்கள். கவிஞர் வெண்ணிலாவின் கவிதை பெண் பிள்ளைகளின் வலியை வலிமையுடன் சொல்லியது.

  பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது
  அதிகாரத்தின் குரல்

  கூச்சம் தொலைக்கலாம்
  நின்று மாற்றவாவது
  இடம் வேண்டுமல்லவா
  கழிப்பறையில்.
  நியாயமான கேள்விக்கு பதிலேது!

  நன்றி.
  த.ம.10

  பதிலளிநீக்கு
 12. மிக மிக அருமை டியர்..வெண்ணிலாவின் கவிதை பல பள்ளிகளின் நிலையை சாட்டையடியாகச் சொல்லியிருக்கிறது..அவருக்கு என் மரியாதையான வணக்கங்கள்!
  உங்களுக்கும் வாழ்த்துகள் டியர்.

  பதிலளிநீக்கு
 13. கலக்கி விட்டது கவிதை! மனதை! கலக்கி விட்டீர்கள் நீங்கள் உங்கள் பதிவை! சகோதரி! நாங்கள் சற்று தாமதம் தான்....மன்னித்து விடுங்கள்!

  எங்கள் தாழ்மையான கருத்து.....பெண்கள் மீதான இந்தப் பார்வை வீட்டிலிருந்துதான் தொடங்குகின்றது. வீடும் சமுதாயத்தின் ஒரு பகுதிதானே! ஒரு மகளும், மகனும் வளர்க்கப்படுவதில் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்?! ஒரு ஆண் மணம் புரியாமல் இருந்தால் கவலைப் படாத இந்த சமுதாயம் ஒரு பெண் மணம் புரியாமல் தனித்து வாழ முற்பட்டால் எத்தனை எத்தனைப் பேச்சுக்களைப் பேசுகின்றது?!!! பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நியதிகள் காலம் காலமாய் தொடர்ந்து வகுப்பவர்களும் பெண்களாகிப் போனதும் வேதனைதான்....ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி இளைப்பில்லை காணென்று கும்மியடி பாடிய பாரதியும் ஆண்தான்!!! ம்ம்ம்
  வாழ்க பாரத சமுதாயம்!!!!

  எல்லா தினங்களுமே பெண்கள் தினம்தான் என்று நினைப்பதால் லேட்டானாலும் தங்களுக்கு பெண்கள் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!.

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 15. ஊருக்குக் கவிதை எழுதுவதைவிட, இப்பிரச்சினையைப் பற்றி அப்பள்ளியில் உள்ள நிர்வாகத்திடம் பேசலாம். பெண்களுக்கென்று தனியாக ஒரு சங்கம் அமைக்கணும். மேக் அப் போடுவதிலும், ப்யீட்டி பார்லர்ல போயி ப்ளீச் பண்ணுவதைப் பற்றி பேசுவதையும் பெண் முன்னேற்றமாக கருதுவதைத் தவிர்த்து, கழிப்பறை வசதி அதிகமாக்க என்ன செய்ய வேண்டுமென்று அதிகமாகப் பேசணும். அவ்வசதி கொடுக்கவில்லை என்றால் பள்ளிக்கு வராமல் பள்ளியையே பல வாரங்கள் புறக்கணிக்கலாம்.

  I am a kind of guy who prefers a three-bathroom three-bed room house rather than 10-bedroom two-bathroom house. :)) Bath-room facility is the one which decides a nation's quality! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் வருண் அவர்களே? கவிதைகளால் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என நினைக்கிறீர்களா? உண்மையில், இந்தக் கவிதை சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலே மைதிலி அவர்களே கூறியிருப்பது போல இந்தக் கவிதை பல மட்டங்களில் எதிரொலித்து இது பற்றிய விழிப்புணர்வைப் பலருக்கும் உண்டாக்கியிருக்கிறது. நீங்கள் கூறுவது போல் பள்ளி மேலாண்குழுவிடம் பேசியிருந்தால் அந்தப் பள்ளியில் மட்டும்தான் அந்தப் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், ஆனந்த விகடனில் இது கவிதையாக வெளிவந்ததால் பல மட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்திப் பல பள்ளிகள் நன்மை அடைந்தன.

   நீக்கு
 16. அன்பின் அருந்தகையீர்!
  வணக்கம்!
  இன்றைய...
  வலைச் சரத்திற்கு,
  தங்களது தகுதி வாய்ந்த பதிவு
  சிறப்பு செய்துள்ளது!
  வருக!
  வலைச்சரத்தில் கருத்தினை தருக!
  http://blogintamil.blogspot.fr/
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 17. தாமதம் தான்....மன்னித்து விடுங்கள்.கவிதை பல பள்ளிகளின் நிலையை சாட்டையடியாகச் சொல்லியிருக்கிறது.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. நான் வந்து கருத்திட்டு சென்றேன். ஆனால் காணவில்லையே,,,,,,,,,,,,

  பதிலளிநீக்கு
 19. சகோதரி...

  ஆணுரிமை, பெண்ணுரிமை என்றெல்லாம் தனித்தனியாக ஒன்றும் கிடையாது என்பதே என் எண்ணம் ! இயற்கையில் இரண்டுக்கும் சமமான பங்குண்டு என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை ! ஆணுக்கு பெண்ணின் ஆதரவும் பெண்ணுக்கு ஆணின் தோளும் அத்யாவசியமானது. ஒன்று இல்லையென்றால் மற்றது அழிந்துவிடும் !

  வாழ வேண்டிய வயதில் தன் துணையை பறிகொடுத்தவனுக்கு புரியும் பெண்மையின் அருமை... அவளை அவன் உண்மையாக நேசித்திருக்கும் பட்சத்தில் !!!

  முறையான கல்வியின் மூலம் நம் சமூகத்து பாலியல் வக்கிரங்கள் குணப்படுத்தப்பட்டாலே பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும் !

  எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
  http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி


  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 20. சகோதரி...

  பெண்ணுரிமை அதிகம் பேசப்படும் காலம் என்றாலும் இன்றும் பெண்களுக்கான உரிமைகளும், சுதந்திரமும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதே உண்மை ! பெண்ணுரிமைக்கு உதாரணமாக நாம் அடக்கடி குறிப்பிடும் மேலை நாடுகளில் கூட நிலைமை இதுதான் ! அங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏதோ ஒரு வகையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன்...

  நல்ல பதிவு !

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
  http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 21. பிள்ளைகளுக்குப் பரிட்சை
  அம்மாக்களுக்குக் கூடுதல் பரிட்சை
  எங்களுக்கு விடுமுறையா?

  பதிலளிநீக்கு
 22. மிகத் தாமத வருகைக்காக வருந்துகிறேன்! நல்ல பதிவு. ஆனால், சிறந்த எழுத்தாளரான நீங்கள் பெண்ணியம் பற்றி இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். நேரமின்மையோ? :-)

  பதிலளிநீக்கு
 23. அன்பு நண்பரே!
  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 24. இது போன்ற கவிதைகள் தான் எனக்குப் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 25. அட இந்த அருமையான பதிவை நான் எப்படி மிஸ் பண்ணினேன். sorry அம்முக்குட்டி சமூக அவலங்களை அகற்ற சரியான சட்டையடி அம்முதொடர இது போன்று வாழ்த்துக்கள் ...! வெண்ணிலாவிற்கும் எனது வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு