ஞாயிறு, 9 மார்ச், 2014

பண்ணையாரும்,பாலுமகேந்திராவும்!!படைப்பை படைப்பாளியோடு சேர்த்து பார்க்கக்கூடாது என நினைப்பவள் நான். அந்த கருத்தின் மூலம் நிலவன் அண்ணனோடு ஒருமுறை முரண்பட்டு விளக்கமெல்லாம் கொடுத்திருக்கிறேன். இப்போ என்ன வந்துச்சு அப்டின்னு கேட்குறீங்களா ? எனக்கு ஆங்கிலக்கவிஞர் ROBERT FROSTஇன் கவிதைகள் ரொம்ப பிடிக்கும். அதுவும் மென்டிங் வால்ஸ் (Mending walls) சான்ஸே இல்லை. கிட்டத்தட்ட நம் பாரதிதாசனின்           " உன் வீடு என் வீடு எனும்
             சுவர்களை உடைத்து
             நம் மக்கள் பாரடா " பாடலை ஒத்திருக்கும் இக்கவிதை. அதற்கு முன் ஒரு தகவல் ப்ரோஸ்ட்Derry, New Hampshire என்னும் இடத்தில் ஒரு பண்ணை வாங்கி இருந்தார். அங்கு கோடை முடிந்தபின்னும் தங்கள் பண்ணைகளை  சுற்றி வேலிகளை சரிசெய்வது அந்த மக்களின் வழக்கம். அதில் கவிஞருக்கு விருப்பம் இல்லை. அப்போது   "Good fences make good neighbors." என்பார் பிராஸ்டின் பக்கத்து வீட்டுகாரர். அதாவது நல்ல வேலிகளே நல்ல அண்டைவீட்டாரை உருவாகும் என்று அவரது அப்பா அவருக்கு போதித்ததாக கூறுவார். அதற்கு ப்ராஸ்ட்
Before I built a wall I’d ask to know
What I was walling in or walling out, என்பார்.
 அதாவது நான் சுவர் எழுப்புவதற்கு முன்னால் ஒரு கேள்விக்கு விடை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அந்த சுவர்களின் மூலம் நான் எதனை உள்ள வைத்துக்கொள்ள போகிறேன் அல்லது எவற்றில் இருந்து விலகப்போகிறேன்.படிக்கப்படிக்க பல நூறு பொருள் தரும் அந்த வரிகள் !
சரி விஷயத்துக்கு வரேன்(ஒ! அப்போ இவ்ளோ நேரம் சொன்னது!)அந்த கவிதையை படிக்கும் போது எனக்கு ஒரு டவுட். கவிதைக்கு சரி ஆனா வேலியே போடாமல் இருந்தால் பண்ணை பாதுகாக்க முடியுமா?
சமீபத்தில் wiki யில் ஒரு ஆர்வக்கோளாறில் ப்ரோஸ்ட் பற்றி படித்தபோது கவிஞராக வெற்றி பெற்ற அவர் பண்ணையாரை தன் பண்ணை இழந்தது தெரியவந்தது!
இப்போ பாலுமகேந்திரா 
              மறுபடியும் என்றொரு படம். பாடல்கள் அட்டகாசமாய் இருக்கும்.
அந்த படத்தில் இயக்குனர் ஒருவர் தான் மனைவியை விடுத்து , வேற்றொரு நடிகையிடம் அன்புகொண்டு மனைவியிடம் மணவிலக்கு பெற்றுவிடுவார். மனைவியோ புதுமை பெண்ணாய், தனித்து போராடத்தொடங்குவார். தன்னிடம் ப்ரபோஸ் செய்யும்  அரவிந்சாமியையும் நண்பனாக மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்பார். அது அந்த பெண்ணின் தனிப்பட்ட கருத்து. அதைபற்றி  நான் கேட்கவில்லை. ஆனால் இயக்குனரை பாலுமகேந்திரா என்றும், நடிகையை மௌனிகா என்றும் ஒப்பிட்டால் நான் அதாவது ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் பெண் தனித்து வாழ்ந்து தான் கற்பை கடைசிவரை நிலை நாட்டவேண்டும் என்கிறாரா இயக்குனர்?
இந்த பாழாய்  போன ட்யுப் லைட் டுக்கு இந்த பாட்டை இன்று கேட்கும் போது மட்டும் எப்படி இப்படி எல்லாம் தோணிச்சுன்னு தெரியல? தெரிங்கவங்க விம்மோ, சபினாவோ போட்டு விளக்குங்க ப்ளீஸ் !!
என்னை சிந்திக்க வைத்த பாடல். கேட்டு ரிலாக்ஸ் பண்ணுங்க !!

Nalam vaazha... [marupadium] - YouTube

34 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரி
  அழகான கருத்துகளோடு சந்தேகத்தையும் முன் வைத்து விட்டீர்கள். ஒரு படைப்பாளி எந்த சமுதாயத்தில் இருந்து உருவாகிறானோ அந்த சமூகத்தில் எண்ணங்கள் அவனிடமும் பிரதிபலிக்கும் அந்த வகையில் இயக்குநர் பாலுமகேந்திரா மட்டும் விதிவிலக்கா! ஆம் சகோதரி இது ஆணாதிக்க சமூகம் என்பது அப்பட்டமான உண்மை. இதிலிருந்து மாறுபட்டு தன் படைப்புகளைத் தருபவர்கள் வெகு சிலரே.. பகிர்வுக்கு நன்றி சகோதரி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ தங்கள் வார்த்தைகளுக்கு அர்த்தம் சேர்க்க முயற்சிக்கிறேன்!

   நீக்கு
 2. அம்மா தாயே என்கிட்ட விம் எல்லாம் இல்ல dish washer ல......நான் போய் வாங்கிட்டு வந்து முதல்ல நான் போட்டு விளக்கிட்டு விளங்கினால் உங்களுக்கு விளக்குகிறேன். சரி தானா. அடடா இதுக்கெல்லாமா கோவிக்கிறது. ம்..ம்..ம் .

  சரி அது வரைக்கும் நேரம் இருந்தால் இதை பாருங்கள் சரியா.
  நன்றி ! வாழ்த்துக்கள் தோழி!

  கற்பூரமா தமிழ் காணாமல் போவதற்கு என் தப்பு தான் ஒரே நாளில் இரு பதிவு இட்டமையால் தான். மன்னிக்கவும் தோழி இனி இத் தவறை செய்ய மாட்டேன்.
  http://kaviyakavi.blogspot.ca/2014/03/blog-post_7.html#comment-form

  பதிலளிநீக்கு
 3. படைப்பைப் படைப்பாளியோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்றே நானும் நினைக்கின்றேன். ஆனாலும் படைப்பும் படைப்பாளியும் வேறுபட்டு நிற்பது சரியா என்று தெரியவில்லை.
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 4. எந்த மொழியிலும் பிடிக்காத ஒரு வார்த்தை - ஒப்பிடுதல்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் ஒப்பிட்டு உயர்வு தாழ்வெல்லாம் சொல்லவில்லையே!
   முதுகலையில் படித்த ஒப்பிலக்கியத்தை பயன்படுத்திப்பார்த்தேன் !
   நன்றி அண்ணா !

   நீக்கு
 5. ராபர்ட் ப்ராஸ்ட் கவிதையில் இந்த வரிகளைப் பாருங்கள்.

  He moves in darkness as it seems to me,
  Not of woods only and the shade of trees.

  சுவரைக் கட்டுபவர்கள் தனக்குள் ஒரு இருட்டறை கட்டுகிறார்கள்.
  என்றும் தோன்றுகிறது. அந்த இருட்டறைக் குள்ளே தன கண்களையும் மூடிக்கொண்டு இது தான் உலகம் என நினைப்பது போலவும் தோன்றுகிறது.

  இன்னொரு கோணத்தில் இது பற்றி நான் எனது வலையில் எழுதியிருந்தேன். ( இந்த கவிதையை குறிப்பிடவில்லை)
  ஒரு சுவர் என்பது ஒரு தடுப்பு என்று மனதில் கொண்டால்,
  அந்த சுவர் வெளியில் இருந்து வரும் வெளிச்சத்தை தடுக்கிறது.
  தகவலகளை தடுக்கிறது.
  புதிய அறிவு உட்புகுவதை தடுக்கிறது.

  அது மட்டுமல்ல.
  தன்னைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார்கள் என்பதையும்
  தெரிந்துகொள்ளத் தடுக்கிறது.

  இக்கருத்தில் இன்னும் கொஞ்சம் ஆழமாக சென்றால்,

  தான் யார் என்பதை தனக்குத் தெரிந்த அளவுகோல் கொண்டு தான் இவர்கள் அளக்க இயலும் எனவும் தெரிகிறது.

  தன்னைப் பற்றி மற்றவர், அந்த சுவருக்கு வெளியே இருப்பவர்கள் , என்ன நினைக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, தன்னை புதுப்பித்துக்கொள்ள, அவர்கள் செய்ய இயலும் உதவியிலிருந்தும்
  தன்னை ஒதுக்கிகொள்வதாகவும் தெரிகிறது.

  இது போன்ற மனிதர்கள் ஒரு தீவாக ஆகிவிடுகிறார்கள் இல்லையா !!

  சுவரை உடைத்தால் மற்றவர்களை விட
  சுவர்குப் பின் , சுவருக்குள் இருப்பவருக்குத்தான்
  அதிக நன்மை என்றும் புரிகிறது இல்லையா.

  இருந்தாலும், இத்தனை சொன்னாலும்,
  நாம் எல்லோருமே,
  நமக்கென்று ஒரு வீடு கட்டி,
  அந்த வீட்டில்
  நமக்கென்ற ஒரு அறையும் கட்டி,
  அந்த அறைக்குள் ஒரு தடுப்பும் கட்டி,
  என்னை நீ டிஸ்டர்ப் செய்யாதே என்று தானே
  மனைவியிடம்/கணவனிடம்/குழந்தைகளிடம்
  சொல்கிறோம். .

  பங்கிம் சந்தர் சட்டோபாத்யா என்ற ஒரு மனவியல் வல்லுநர்,
  எழுதுகிறார்.

  கடற்கரையில் யாருமே இல்லாத
  எந்த சுவரும் இல்லாத,
  அமானுஷ்ய நிலப்பரப்பில்
  ஒரு ஐந்து நிமிடங்கள் கூட
  தனியாக நிற்க பயப்படும் ஒரு
  சராசரி மனிதன்,
  தனக்கென ஒரு வீட்டில்,
  தனக்கென அதில் ஒரு அறையில்,
  கதவுகளை மூடிக்கொண்டு,

  தனியாகவே இருப்பதில்
  ஒரு தனி சுகம் காண்கிறான்.

  அதெல்லாம் இருக்கட்டும்.

  சுவர் எங்கு இல்லை ? !!!


  சுப்பு தாத்தா.
  www.Sury-healthiswealth.blogspot.com
  www.subbuthatha72.blogspot.com
  www.movieraghas.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ ! உங்களிடம் பி,ஜி.படிக்காமல் போனேனே:((
   அதனால் என்ன உங்க ப்ளோகுக்கு அடிக்கடி வந்தால் போச்சு!
   அசத்துறிங்க சார், அப்புறம் மென்டிங் வால்ஸ் கவிதையை மொழிபெயர்க்க வேண்டுமென்ற நீண்ட அவா. ஆனால் அதற்கு நான் இன்னும் பண்படவேண்டும் என்று தோன்றுகிறது. இவ்வளவு ஆழமான வாசிப்பும், நினைவாற்றலும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.ஹாட்ஸ் ஆப் யூ சார்!!

   நீக்கு


 6. ///படைப்பை படைப்பாளியோடு சேர்த்து பார்க்கக்கூடாது என நினைப்பவள் நான்///
  இதை நான் 100 % ஒத்துக்கொள்கிறேன்.. நல்ல கருத்து & சிந்தனை

  பதிலளிநீக்கு
 7. சகோதரி! Frost பற்றி பின்னர் வருகிறேன்! முதலில் உங்கள் கேள்வி! இத இதத்தான் நான் படம் பார்த்த அப்பவே அதாவது வருடங்களுக்கு முன் கேட்டது! எங்கனு கேக்கறீங்களா? அப்ப இந்த மாதிரி வலைப்பூ எல்லாம் ஏது? சும்மா மனசுக்குள்ளயும், நம்ம வட்டத்துக்குள்ளயும் தான்!

  ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி இதுதானே நம் சமூகம்! மனைவியை இழந்த கணவன் அடுத்த மாதமே/நிமிடமே கூட மறுமணம் செய்து கொள்வான்! ஆனால், ஒரு கைம்பெண் மற்மணம் செய்தால்? இந்த சமூகம் ஏற்ற்கு கொள்கிறாதா?!!! பாரதியும் இதைப் பாடி சலிச்சுருப்பாருனு நினைக்கிறேன்!

  பாலுமகேந்திராவிடம் இதற்கு கண்டிப்பாக பதில் இருக்காது! அவரால் பதில் சொல்ல முடியாது! நாங்கள் சினிமாவில் சொல்வதெல்லாம் ஊருக்குத்தான்! எங்களுக்கல்ல. ஊருக்குத்தான் உபதேசம்! அது எங்களுக்கல்ல!

  பதில் இருக்கோ இல்லியோ அவரு இல்லையே இப்ப பதில் சொல்ல!!?? எந்த ஒரு ஆணினாலும், இதற்கு நேர்மையாக பதில் சொல்ல முடியாது! அவனது ஈகோ அதற்கு இடம் கொடுக்காது! பெண்ணியம் என்று முழக்கம்தான் இருக்கிறதே தவிர அதை ந்டைமுறைப்படுத்த பெண்களே முயல்வதில்லையே! சகோதரி!...எல்லாம் பாழாய் போன சென்டிமென்ட்ஸ்தான்! காரணம்! - (இதைப் பற்றி நேற்று இரவுதான் நானும் துளசியும் ஒரு கதை டிஸ்கஷனில் பேசிக் கொண்டோம்! இதைச் சார்ந்த சில சினிமா பாடல்கள், திரைப்படங்களின் கதை எல்லாம் கலந்து கட்டி! இன்று உங்கள் இடுகைக்கு பதிலாகி விட்டது! )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா மேடம்! surprisingly நான் உங்ககிட்ட எதிர்பார்த்த கமெண்டை சுப்பு தாத்தா கொடுத்திருக்கார் . நிலவன் அண்ணா விடம் எதிர்பார்த்த கருத்தை நீங்கள் தந்திருக்கிறீர்கள்/ /இதைப் பற்றி நேற்று இரவுதான் நானும் துளசியும் ஒரு கதை டிஸ்கஷனில் பேசிக் கொண்டோம்// ஆஹா great people think alike ,do alike!!யாரு கிரேட் ன கேட்டிங்க அட நாம தான்பா ;) ஆழமான கருத்தூட்டதிர்க்கு நன்றி தோழி!

   நீக்கு
 8. தலைப்பைப் பார்த்து கொஞ்சம் ஏமாந்துட்டேன் சகோ, நீங்க ஏதோ புதுசா ஒரு படம் எடுக்குறீங்க போலன்னு நினைச்சுக்கிட்டேத்தான் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா அப்படியெதுவுமில்லாமல் என்னைய ஏமாத்துட்டீங்களே!!!

  பதிலளிநீக்கு
 9. இப்ப நீங்க கேட்டிருக்கிற கேள்விக்கு அவர் உயிரோட இருந்திருந்தாலும் அவரால பதில் சொல்லியிருக்க முடியாது, ஏன்னா இது தான் ஆண் ஆதிக்க சமுதாயமாச்சே.

  பதிலளிநீக்கு
 10. ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் பெண் தனித்து வாழ்ந்து தான் கற்பை கடைசிவரை நிலை நாட்டவேண்டும் என்கிறாரா இயக்குனர்?
  >>
  ஆணுக்கொரு நீதி. பெண்ணுக்கொரு நீதிதானே நம் சமூகத்தில்!?

  பதிலளிநீக்கு
 11. ஆணியம் , பெண்ணியம் பற்றியோ இல்லை FROST & சுவரை நமக்கு ஒன்றும் தெரியாது டீச்சர் .

  //ஆனால் பெண் தனித்து வாழ்ந்து தான் கற்பை கடைசிவரை நிலை நாட்டவேண்டும் என்கிறாரா இயக்குனர்?//


  ஏன் அப்டி பார்க்குறீங்க . ஒரு ஆணின் துணை இல்லாமல் என்னால் வாழ முடியும் என்று ஒரு பெண் வாழ்ந்து காண்பிக்கிறார் என்று POSITIVE ஆ பார்க்க வேண்டியதுதானே .

  ஒருவேளை அரவிந்த்சாமியை ஏற்றுக்கொள்வது போல அமைந்திருந்தால் , ஒரு பெண்ணுக்கு கண்டிப்பாக ஆணின் துணை தேவையென்று இயக்குனர் சொல்ல வருகிறாரா என்றும் தோன்றலாம் இல்லையா ...

  பதிலளிநீக்கு
 12. //ஒருவேளை அரவிந்த்சாமியை ஏற்றுக்கொள்வது போல அமைந்திருந்தால் , ஒரு பெண்ணுக்கு கண்டிப்பாக ஆணின் துணை தேவையென்று இயக்குனர் சொல்ல வருகிறாரா என்றும் தோன்றலாம் இல்லையா ...//ஆமால்ல !!!
  அருமையான மாற்று கருத்து சகோ!! எனக்கும் கூட வேறுயாராவது எடுத்த படம் என்றால் எனக்கும் அப்படி positive சிந்தனை தோன்றி இருக்கும் சகோ . ஆனா கிட்டத்தட்ட ஒரு ரியல் லைப் கதையா படம்பிடித்திருக்கும் இயக்குனர் இப்படி ஒரு சந்தேகத்தை விதைக்கிறார்!!

  பதிலளிநீக்கு
 13. 'ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் பெண் தனித்து வாழ்ந்து தான் கற்பை கடைசிவரை நிலை நாட்டவேண்டும் என்கிறாரா இயக்குனர்?'
  பாலுமகேந்திரா நல்ல கலைஞர். இவரைப்போலவே நல்ல கலைஞர்கள் என்று பெயரெடுத்தவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா மைதிலி? “முதல் மரியாதை”, “ரெட்டை வால் குருவி” “மறுபடியும்“ “அந்த ஏழு நாட்கள்“ ஆகிய படங்கள், பெரிய தமிழ் இயக்குநர்களின் பெரிய தமிழ்ப் படங்கள். முறையே பாரதிராஜா, பாலச்சந்தர்(?) பாலுமகேந்திரா மற்றும் பாக்கியராஜ் என்னும் தமிழின் மாபெரும் “பா”இயக்குநர்களின் படங்கள்.
  முதல்மரியாதை–1985, ரெட்டைவால் குருவி–1987, மறுபடியும்–1993
  இந்த மூன்றும் ஒரே மையக் கருத்தில் வந்தவை.
  பாக்கியராஜின் அந்த ஏழு நாட்களின் இறுதிக்கட்ட வசனங்கள், பிரபு-குஷ்பு நடித்த பி.வாசுவின் “சின்னத்தம்பி“படத்தின் இறுதி சண்டைக் காட்சியில் உள்ள செய்தி இரண்டும் ஒன்றே.
  இப்போது, மறுபடியும், மறுபடியும்படப் பாடல்-
  “ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன் – நலம் வாழ...
  தமிழ்ச்சினிமாவின் போக்கு புரிந்திருக்கும்.
  இது கட்டுரையாகிவிடுமோ என்னும் அச்சத்தில் தந்தி மொழியிலான பின்னூட்டமாக்கும்.... எனினும்...
  பட்டுக்கோட்டையைச் சொல்லி முடிக்கிறேன் -
  “மனைவியை இழந்தவன் கிழவனே ஆனாலும்,
  மறுமணம் பண்ணிக்கிட உரிமை உண்டு - இளம்
  மங்கையை மணப்பதுண்டு மண்டை வறண்டு,
  கணவனை இழந்தவள் கட்டழகி ஆனாாலும்
  கடைசியில் சாகமட்டும் உரிமை உண்டு - இதில்
  கதைகளும் கட்டிவிடும் ஊர் திரண்டு” போதுமா தாயி? பாட்டுகளச் சொன்னா தனீ புத்தகமே போடணும்.. ஆணாதிக்க உலகமம்மா... அதிலென்ன சந்தேகம்? சிலகுரல்கள் தனித்து நிற்கும் நாம்தான் கண்டுபிடிக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை இதை இதை தான் எதிர்பார்த்தேன்!
   நான் இந்தப்படம் பார்க்கும்போது மூன்றாம் வகுப்பா,நாலாம் வகுப்பானு தெரியலை. சிந்திக்கத்தோடங்கியபோது இன்னும் எத்தனையோ விசயங்களில் கருத்து திசை திரும்பிருச்சு. இப்போதான் திடீர்னு ஞானோதயம் வந்துச்சு!! நன்றி அண்ணா !!

   நீக்கு
 14. படைப்பையும் படைப்பாளியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எந்தப் படைப்பையும் ரசிக்க முடியாது.,...

  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 15. "Art for life's sake" என்ற கோட்பாடு இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவை.

  பதிலளிநீக்கு
 16. நல்ல பகிர்வு....

  பல படங்களில் வாழ்க்கையில் நடப்பவற்றையும், நடந்ததாய் கேள்விப்பட்டதையும் திரைக்கதையாக சொல்கிறார்கள்...... இருந்தாலும் எதற்கு இந்த ஒப்பிடல்.....

  மற்றபடி பாடல் எனக்கும் பிடித்த பாடல்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படைப்பாளியை மற்றொரு படைபாளியோடு ஒப்பிடவில்லையே!
   அவரின் படப்போடு தானே ஒப்பிட்டேன்! நன்றி சகோ!!

   நீக்கு
 17. அருமையான பதிவு. பாலு ஒரு அற்புதமான சிந்தனைவாலி. என்னைபொருத்தவரை ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்ப்பது தவறு அல்ல. இருகோடுகள் தத்துவம் தான். ஒப்பிட்டு பார்ப்பது தவறு என்றால், வள்ளுவனின் உவமை அணியே நமக்கு கிட்டி இருக்காதே.

  பதிலளிநீக்கு
 18. நல்ல பாயிண்ட் தான்! நன்றி சகோ தங்கள் முதல் வருகைக்கு!

  பதிலளிநீக்கு