திங்கள், 27 ஜூலை, 2015

வாங்கண்ணா!! வணக்கமண்ணா!

                                   உங்களுக்கும் என்னைப் போல  மழை தொடங்கும் மண்வாசம் பிடிக்குமா? பொழிந்து கொண்டிருக்கையில் தேநீர் பிடிக்குமா? மழை ஓய்ந்தபின் கிளை உலுக்கி நனையப்பிடிக்குமா? புதுப் புத்தகத்தை பிரித்தவுடன் நுகரப்பிடிக்குமா? உச்சி வெயில் ட்ராபிக்கில் அடுத்த வண்டியில் பிஞ்சு கையசைக்கும் பிள்ளை நிலாக்கள் உங்களை ஆற்றுப்படுத்துமா? அப்போ கண்டிப்பா இதுவும் பிடிக்கும்.
                                                   
             
 
             தினம்தினம் ரகரகமாய் பதிவிடும் கலக்கல் பதிவர் சிலர் மது, விஜூ அண்ணா, மதுரைத் தமிழன், தோழி உமையாள்,எங்கள் blog  போல. வாரம் ஒரு பதிவு, மாதம் ஒரு பதிவு என கரந்தை அண்ணா, தமிழ் இளங்கோ அண்ணா,  போல பதிவிடுவோரும் உண்டு. மற்றபடி எப்போ பதிவு, எப்படிப் பதிவு என தெரியாமல் வரவேண்டிய நேரத்தில் (?!) அப்பப்போ என்னைப் போலவே பதிவிடும் என் நண்பர்கள்கள் தான் ஏராளம்.

                                                    ஆனால் சிலர் இருப்பார்கள். அவர்கள் குறிஞ்சி பூ போல அவ்வவ்போது பதிவிடுவோர். சீவிய பென்சிலை மேலும் மேலும் சீவி கூர்தீட்டி பதிவிடுவார்  டி.டி அண்ணா. பேனாவில் (கீபோர்டில்) வியர்வை நனைத்து நிதர்சனம் காட்டுவார்  ஜோதிஜி அண்ணா. சூரிய ஒளியில் எழுத்துக்களை சூடாக்கி பதிவிடுவார்  அகசிவப்புத்தமிழ் ஞானப்பிரகாசம் சகா. எழுத்தெலாம் லயம் கோர்த்து இசை கசிய வைப்பார் காரிகன் சகோ. ஆனால் ஒருவர் இருக்கிறார். இன்னும் மயில் பீலி கொண்டுதான் எழுதுகிறாரோ என ஐயப்படவைக்கும் அழகு சாயல் எழுத்துக்காரர். பரணை சுத்தம் செய்யத் தொடங்கும் போது கிடைத்துவிட்ட சிறுவயது செப்பு சாமான் போல நினைவுகளை மீட்டெடுக்கும் எழுத்துக்குச் சொந்தகாரர். எதிர்பாராத அற்புதங்களை நிகழ்த்தி, பயணம் முடிந்த பின்னும் மனதில் தடதடக்கும் தொடர்வண்டி பயணம் போன்ற பதிவுக்குச் சொந்தகாரர்.
                                                       பதிவிட்டிருகிறாரா என அவ்வவ்போது போய்ப் பார்ப்பேன். சரியாய் நான் தவறவிடும் சமயத்தில் பதிவிட்டு அசத்தும் சாமானியன் சாம் அண்ணா இந்த முறை வலைச்சரப் பொறுப்பேற்றிருக்கும் நிகழ்வால் எனக்குத் தோன்றியது இது தான். சாம் அண்ணாவின் எழுத்தை இந்த வாரம் முழுக்கப் படிக்கலாம். உங்களுக்கும் என்னைப் போல  மழை தொடங்கும் மண்வாசம் பிடிக்குமா? பொழிந்து கொண்டிருக்கையில் தேநீர் பிடிக்குமா? மழை ஓய்ந்தபின் கிளை உலுக்கி நனையப்பிடிக்குமா? புதுப் புத்தகத்தை பிரித்தவுடன் நுகரப்பிடிக்குமா? உச்சி வெயில் ட்ராபிக்கில் அடுத்த வண்டியில் பிஞ்சு கையசைக்கும் பிள்ளை நிலாக்கள் உங்களை ஆற்றுப்படுத்துமா? அப்போ கண்டிப்பா சாமானியன் அண்ணாவின் எழுதும்  பிடிக்கும். வாழ்த்துகள் சாம் அண்ணா. உங்கள் வலைச்சரப்பணி உங்களின் தேர்ந்த நடையால் சிறப்பாக அமையட்டும்:)

டிஸ்கி: இந்த பதிவில் குறிப்பிடவேண்டும் என்றால் என் பல நண்பர்களை குறிபிட்ட வேண்டும். அதற்கு வலைச்சரத்தின் ஒருவாரம் கூட போதாது. எனவே என் இனிய நட்புகள் "அப்பப்போ என்னைப் போலவே பதிவிடும் என் நண்பர்கள்கள் தான் ஏராளம்." என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் முடித்திருக்கிறேன். உங்களிடம் அதை நான் எதிர்பார்க்கலாம் என்ற முழு நம்பிக்கையுடன்
                                      உங்கள் தோழி!
                                       மைதிலி

34 கருத்துகள்:

 1. வணக்கம்

  சாமானியன் அண்ணாவின் வலைச்சரப்பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் தலைப்ப பார்த்து மயங்கி விட்டேன்... படித்த போதுதான் அறிந்து விட்டேன்பகிர்வுக்கு நன்றி


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. சாம் அண்ணாவிற்கு வாழ்த்தும் உங்களுக்கு நன்றியும்.

  த ம 1

  பதிலளிநீக்கு
 4. ஆம் ஆத்மியின் பதிவுகளுக்கு நானும் காத்திருக்கிறேன் ,உங்க பதிவைப் பார்த்தால் ஆவல் அதிகமாகிறது :)

  பதிலளிநீக்கு
 5. பிடிக்கும் …. …. … முதல் பாராவில் நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் பிடிக்கும். சாமானியனை இனிமேல்தான் பிடிக்க வேண்டும்; படிக்க வேண்டும்.

  த.ம. 4

  பதிலளிநீக்கு
 6. கவிதை எழுதாம இப்படி நீங்கள் பதிவு போடுவது எனக்கு பிடிக்கும்

  பதிலளிநீக்கு
 7. என் சகோ கிரேஸ் பெயரை இந்த லிஸ்டில் காணவில்லையே ஒரு வேளை கலைஞரை போல இதயத்தில் சேர்த்து வைத்திட்டீங்களோ? ஹீஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹெலோ சகோ..நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு :)

   மைதிலியின் நட்பு பேர் சொல்லித் தெரிய வேண்டியதா என்ன? மைதிலி டியர், டோன்ட் வொர்ரி :)

   நீக்கு

  2. நான் வம்பு இழுக்கும் ஒரே ஆள் மைதிலி டீச்சர்தான் அதனாலதான்... இதெல்லாம் நீங்க சீரியஸாக எடுத்து கொள்ள கூடாது கிரேஸ்

   நீக்கு
 8. உங்களின் இந்த பதிவினால் என் வலைச்சர பணி தாமதப்பட்டுவிட்டது...
  பின்ன ? கண்கள் பனித்ததினால் கம்ப்யூட்டர் திரை மறைத்து பின்னூட்டமிட தாமதம் !

  நீங்கள் குறிப்பிட்ட நண்பர்களையெல்லாம் வாசித்து வியக்கும் என்னை நீங்கள் வியப்பது ஆச்சரியம் !

  தன்னடக்கத்துக்காக சொல்லவில்லை சகோதரி... எனது அறிவும் தெளிவும் மிகச் சிறிது !

  நீங்கள் என் எழுத்தில் கானும் ரசவாதத்தின் ரகசியம் நான், நீங்கள் உட்பட இந்த பதிவில் குறிப்பிட்ட அத்தனை பேரின் பதிவுகளையும் படித்து கற்றதுதான் !

  அடையாளம் மறைத்த என்பால் நீங்கள் கொண்ட நட்பை பெற என்ன தவம் செய்தேன் நான் ?

  மனமார்ந்த நன்றி சகோதரி

  பதிலளிநீக்கு
 9. \\\\மயில் பீலி கொண்டுதான் எழுதுகிறாரோ என ஐயப்படவைக்கும் அழகு சாயல் எழுத்துக்காரர். பரனை சுத்தம் செய்யத் தொடங்கும் போது கிடைத்துவிட்ட சிறுவயது செப்பு சாமான் போல நினைவுகளை மீட்டெடுக்கும் எழுத்துக்குச் சொந்தகாரர். எதிர்பாராத அற்புதங்களை நிகழ்த்தி, பயணம் முடிந்த பின்னும் மனதில் தடதடக்கும் தொடர்வண்டி பயணம் போன்ற பதிவுக்குச் சொந்தகாரர்.////
  அட அட அட அம்மு மயக்கும் எழுத்துக்கள். அப்படி ஒரு இனியநடை வாரத்தைகள் சரளமான கோர்வையுடன் கூடிய எழுத்து. இதை விட வேறெப்படி வர்ணிக்க முடியும்.wow wow ஐயோ! அம்மு ரொம்பவே ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. அட! நண்பர் சாமைக் குறித்து நாங்கள் சொல்லும் வரிகள்! கை கொடுங்க சகோதரி! சூப்பர்! வரவேற்பு!

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் !

  தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_28.html

  நன்றியுடன்
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 12. முதல் சில வரிகளைப் படித்தவுடன் இவங்க என்னை வேவு பார்த்திருக்கிறாரோ என்று எண்ண வைத்துவிட்டீர்கள் டியர்..புத்தக வாசனை உண்மையாகவே நாசி வருடிவிட்டது.
  இதெல்லாம் பிடித்ததால் உன்னையும் பிடித்தது தோழி :) (இங்க 'உங்கள'னு போட்டா அவ்ளோ ஸ்ட்ராங்கா இல்லை, மன்னிக்கவும்)
  சாம் சகோவிற்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 13. இவ்வாரம் சாமானியன் எழுத்தினை படிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கு.

  பதிலளிநீக்கு
 14. அப்படியா? வாழ்த்துகள் சாமானியன் ஸார்.

  பதிலளிநீக்கு
 15. இது நல்ல ஐடியா மைதிலி! வலைச்சர ஆசிரியர்கள் அவர்கள் ஆசிரியர் பொறுப்பேற்கும்போது (உங்களுக்குப் பரிச்சயமான) அவர்களைப் பற்றி இதுபோல் "மகிழ்நிறைச்சரத்தில்" ஒரு பதிவெழுதலாமே? :)

  "4 மாதத்துக்கு ஒரு பதிவெழுதிக் கொண்டு இருக்காரே நம்ம சாம்" னு யாரோ சதி செய்து அவரை வலைச்சரத்தில் இழுத்துப்போட்டு ஆசிரியராக்கித் தொடர்ந்து பதிவெழுத வச்சுப் பழி வாங்கிட்டாங்க, பாவம்! :)))

  பதிலளிநீக்கு
 16. ----உங்களுக்கும் என்னைப் போல மழை தொடங்கும் மண்வாசம் பிடிக்குமா? பொழிந்து கொண்டிருக்கையில் தேநீர் பிடிக்குமா? மழை ஓய்ந்தபின் கிளை உலுக்கி நனையப்பிடிக்குமா? புதுப் புத்தகத்தை பிரித்தவுடன் நுகரப்பிடிக்குமா? உச்சி வெயில் ட்ராபிக்கில் அடுத்த வண்டியில் பிஞ்சு கையசைக்கும் பிள்ளை நிலாக்கள் உங்களை ஆற்றுப்படுத்துமா? ----


  இதெல்லாம் நான் கேட்க வேண்டிய கேள்விகள். கொஞ்சம் முந்திக் கொண்டீர்கள்..அபாரம். அதிலும் புத்தகத்தை வாங்கியவுடன் எதோ ஒரு பக்கத்தைப் பிரித்து அந்த வாசனையை நுகர்வது ஆஹா ..ரசனையான எழுத்து.

  சாம் மிக அருமையாக எழுதக் கூடியவர். அவர் பதிவுகளை முதலில் (காமிக்ஸ் பற்றி எழுதியிருந்தார்) படித்த போதே அந்த பாணியில் ஒரு ஆழம், வசியம் இருந்ததை கவனித்தேன். உங்களோடு சேர்ந்து நானும் அவரை வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 17. சாமானியன் எழுத்தில் சாமானியர் அல்லர். நானும் படிக்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 18. சாமானியன் அவர்களுக்கு மகிழ்வு நிறைந்த வாழ்த்துக்கள்
  நன்றிசகோதரியாரே
  தம +1

  பதிலளிநீக்கு
 19. நம் இனிய நண்பர் சாம் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  என்னால் முடிந்தளவு வாரம் ஒரு முறை... ஞாயிறு அன்று எழுதி... சரி பார்த்து... புதன் அன்று... ஒரு பதிவு... அவ்ளோ தான்...!

  பதிலளிநீக்கு
 20. நடுவில் ஒரு தொய்வு விழுந்ததும் வலைச்சரம் பக்கம் அடிக்கடி போவதில்லை ஆனா, சாமான்யனின் அறிமுகங்களை படித்தேன். எப்போதாவது எழுதுபவர்கள் அவ்வப்போது எழுத வேண்டும்
  ஓரளவு இடைவெளி விட்டு எழுதுபவர்கள் மட்டுமே நீண்ட நாட்கள் எழுத முடியும் என்பது என் கணிப்பு. சிலர் இதில் விலக்காக அமைந்திருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 21. ஓ...! நல்ல பகிர்வு தோழி!

  நன்றியுடன் பதிவர் சாமனியன் அவர்களுக்கும்
  உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 22. வலைச்சர ஆசிரியரை இங்கே அறிமுகம் செய்தது அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 23. சாம் இதுவரை நான் அறியாத ஒருவர்! அறிய வைத்தீர்! நன்றி

  பதிலளிநீக்கு
 24. வணக்கம்,
  உச்சி வெயில் ட்ராபிக்கில் அடுத்த வண்டியில் பிஞ்சு கையசைக்கும் பிள்ளை நிலாக்கள் உங்களை ஆற்றுப்படுத்துமா?,,,,,,,,,,,,,,,
  அருமையம்மா,,,,,
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வலைச்சர ஆசிரியர்க்கு தங்கள் வலைத்தளத்தில் அறிமுகம்.....அருமை சகோ. வாழ்த்துகள் உங்களுக்கும் சாமானியன் சகோவிற்கும். நன்றி தோழி. தம 16

  பதிலளிநீக்கு
 26. இரு தினங்களுக்கு முன் வாசித்தேன்...
  கருத்து இடவில்லை...
  இன்னும் இரு தினங்கள் இருக்கும் நிலை என்றாலும் அவரின் வலைச்சரப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம்

  இன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

  உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

  நன்றி

  பதிலளிநீக்கு
 28. சகோதரி...

  உங்கள் அனைவரின் அன்பான ஆதரவினாலும், ஊக்கத்தாலும் என் வலைச்சர பணியை இனிதே முடித்தேன்.

  நன்றிகள் பல

  பதிலளிநீக்கு
 29. //சூரிய ஒளியில் எழுத்துக்களை சூடாக்கி பதிவிடுவார் அகசிவப்புத்தமிழ் ஞானப்பிரகாசம் சகா// - ஆகா! இப்பேர்ப்பட்ட பாராட்டுக்களுக்குத் தகுதியானவனா நான்?!...

  பட்டியலிட முடியாத அளவுக்கு உங்களுக்கு நண்பர்கள் இருந்தும் அந்தத் தேர்ந்தெடுத்த பட்டியலில் என்னைச் சேர்த்த உங்கள் அன்பை என்னென்பேன்!! நன்றி சகா! நெஞ்சார்ந்த நன்றி!!!

  சாமானியன் அவர்களின் எழுத்துக்களையும் படித்துக் கொண்டுதான் வருகிறேன். குறிப்பாக, அவருடைய 'விஷ்ணுபுரம் தேடல்' இன்னும் நினைவில் மணக்கிறது. இதோ, அடுத்து அவர் தளத்துக்குத்தான் செல்கிறேன். நினைவூட்டியமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு