இதோ மார்கழியும் வந்துவிட்டது. கோலங்கள் பற்றி எழுதாமல் இருக்கமுடியுமா? மனம் பின்னோக்கி பறக்கத்தொடங்கிவிட்டது. ஹல்லோ
என்ன மேல பாக்குறிங்க. பிளாஷ்பேக்னா மேலதான் பார்க்கணுமா? இது மார்கழி சோ, கீழ.
சின்ன அத்தை கல்யாணமாகி போகும் வரை வாசல் அவங்க கண்ட்ரோல்தான். 32 புள்ளி கோலமெல்லாம் அசால்ட்டா (ஒரு நகைமுரண் ஆங்கிலத்தில் அசால்ட் என்றால் திடீர் தாக்குதல் அப்டின்னு அர்த்தம். தொழில் புத்தி, விட்டுத்தள்ளுங்க) போடுவாங்க. கோலத்தை முடித்தவுடன் ராஜம் அக்கா புள்ளி எண்ணாமல் இருக்க கொஞ்சம் modify பண்ணுவாங்க. கனகா அக்காவுக்கு 5 புள்ளி 5 வரிசையே தெரியாது. பாவம் எங்க தெரு கைபிள்ளை. அத்தைக்கு கலர் பொடியில் மண் கலக்க யாரு வீடு கட்டுறாங்கனு நடு ராத்திரில நானும், பாலு அண்ணாவும் அப்பவே மணல் தேடி, கடத்தல் பண்ணுவோம். அத்தை கல்யாணமாகி போனவுடன் அவரது பழைய கோல நோட்டும், வாசலும் என் கட்டுபாட்டிற்கு வந்தது.
மேல்நிலை பள்ளிநாட்கள். கற்பகம், சுந்தரி ரெண்டு பேரும் என் tough competitors. நான் எவ்ளோ அழகா கோலம் போட்டாலும் அம்மாக்கு கற்பகம் ரெட்டைகோட்டில் போடும் சிக்கு கோலங்கள் தான் பிடிக்கும். ஆனால் நான் சிக்கு கோலம் போட்டால் அம்மா"சும்மா சிக்கு கோலம் போடாதே, வாழ்க்கை சிக்கலா இருக்கும் "அப்டின்னு போடவிடமாட்டாங்க. நாலு மணிக்கு அலாரம் வைத்து. பாலு அண்ணாவை எழுப்பி பிள்ளையார் கோவிலில் பாட்டு போடசொல்லிவிட்டு, கோலம் போடதொடங்கினால் ஐந்து மணிவாக்கில்
தெருவில் உள்ள குட்டீஸ் எல்லாம் சுத்தி நிக்கும்.
என் தெருத்தோழிகள் எல்லோர்க்கும் பன்னிரண்டாம் வகுப்போடு திருமணம் ஆகிவிட, நான் மட்டும் ட்ரைனிங் முடித்து வீட்டுக்கு பக்கத்தில் இருந்த பள்ளியில் பி.டி.ஏ ஆசிரியராக ரெண்டு வருஷம் குப்பை கொட்டிய சமயம். வீட்டை சுற்றி உள்ள என் உறவுக்கார குட்டிஸ் டீச்சருக்காக மணல் கடத்தினார்கள்.
இன்னைக்கு காலைல எட்டாம் வகுப்பு கீர்த்தி கேட்டாள் "டீச்சர் உங்க மாசம். அதான் நல்ல வரைவிங்களே. என்ன கோலம் போட்டிங்க "ஹி .ஹி இன்னும் கலர் பொடி வாங்கலைடா என்று சமாளித்தேன். வீதியெல்லாம் சிமின்ட் ரோடு போட்டு வாசல் எங்க இருக்கு? இதுல இன்னொன்னு காலையில் கிளம்பிறதே பெரிய அலங்கோலமா இருக்கு. பொங்கலுக்காவது பெரிய கோலமா போடலாம்னு இருக்கேன் பார்ப்போம்.
பொங்கலன்று உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி DD அண்ணா தங்கள் வருகைக்கும் கருத்துக்குமாக
நீக்குகோலம், வீட்டுக்குள் அடை(க்கப்)பட்ட பெண்களின் உளவியல் (அவுட்லெட்) வெளிப்பாடாகவும், அங்கீகாரத் தேடலாகவும் கருதப்படுவது ஒருபக்கமிருக்கட்டும். கிழமைக்கு ஏற்பக் கோல வகைகள் உண்டாமே? எங்கள் வீட்டில் இப்பவும் காலையில் எழுந்து கோலம் போடுவதற்கு நானும் உதவிசெய்வேனாக்கும்... அதாவது அவர்கள் கேட்கும் கலர்ப்பொடிகளை வாங்கித் தருவது, அவர்கள் கோலம்போடத் தயாராகும்போது ஸ்கார்ஃப் கட்ட ஞாபகப் படுத்துவது... போல...ஆனா, கோலங்களில் சிக்கிய புள்ளிகள் பாவம்ல?
பதிலளிநீக்குகிழமை ஏற்ற கோலம் எல்லாம் நூலின் வேலை (புரிகிறதா?)
நீக்குஅதை விடுங்கள் என் தம்பி கூட எனக்கு உதவுவான்.இந்த கலருக்கு இது கான்ட்ராஸ்ட்டா இருக்கும் அப்டின்னு கருத்து சொல்வான் .கலர் பொடி எடுத்து தருவான்
.கோலங்களில் சிக்கிய புள்ளிகள் பாவம்ல?#கவிதை அண்ணா
கஸ்தூரி போட்ட கோலத்தை போட்டோ எடுப்பதோடு சரி .
சகோதரிக்கு வணக்கம்
பதிலளிநீக்குதங்கள் இளமை கால நினைவுகள் முதல் இன்று வரை அலசியிருப்பது கண்டதும் மனம் மகிழ்வாக இருந்தது காரணம் பக்கத்து தெரு தான் நான். நமது மண்ணின் நினைவுகளை வலைத்தளத்தில் பார்க்கும் போது ஏதோ ஒரு வித மகிழ்ச்சி.
நீங்கள் ட்ரைனிங் முடித்து வீட்டுக்கு பக்கத்தில் இருந்த பள்ளியில் பி.டி.ஏ ஆசிரியராக ரெண்டு வருஷம் பணி புரிந்த அந்த பள்ளியில் 1 முதல் 12 வரை படித்தேன் என்பதை நினைவு கூறும் போது மனம் மாணவ பருவத்திற்கு பின்னோக்கி நகர்கிறது. தங்களின் பொங்கல் கோலம் மிக சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் .சும்மா கலக்குங்க. பகிர்வுக்கு நன்றிகள்..
சகோ இந்த பதிவை எழுதும் போதே நீங்கள் என் தங்கை(சித்தப்பா பெண்) பிரியா வோடு தியாகேசர் ஆலை பள்ளியில் படித்தது நினைவு வந்து விட்டது .
நீக்குபள்ளியை பார்த்தீர்களா எப்படி வளர்ந்து விட்டது .இப்போ நம்ம ஊரு கூட மாறிடுச்சு .
ரைட் விட்டுங்க ஊர் எப்டி இருக்கு ?
வணக்கம்
பதிலளிநீக்குகோலங்கள் பற்றிய பதிவு மிகச்சிறப்பாக உள்ளது...தனபாலன் அண்ணா சொன்னமாதிரி. பொங்கல் அன்று உங்கள் ஆசை நிறைவேறும்...வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் சார் தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்
நீக்குஅருமை! அருமை!
பதிலளிநீக்குஜாலங்கள் காட்டும் கோலங்கள்!
கொடுத்து வைத்தவர்கள் நீங்களெல்லாம். இங்கு கதவு திறந்தால் தொடர் மாடிப்படி. அதனையும் தாண்டி அடுத்த கதவைத் திறந்தால்.. சர்..சர்ர் என வண்டி வாகங்கள் ஓடும் பிரதான தெரு. அவ்வளவும்தான்...:)
பொங்கலின்போது உங்கள் கைவண்ணம் காண ஆவலுடன் நானும்..:)
வாழ்த்துக்கள் சகோதரி!
நீங்கதான் கோலத்தில் விட்ட குறை தொட்ட குறையை
நீக்குக்வேளிங்கில் தூக்கி விழுங்கி விடுகிறீர்களே
சமீபத்திய க்வேளிங் frock கலக்கல்
நன்றி சகோதரி வருகைக்கும்,வாழ்த்துக்கும் !
அழகான கோலங்கள். தங்களின் பெரிய கோல ஆசை நிறைவேற அன்பான வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிகுந்த நன்றி தங்கள் முதல் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்
நீக்குகோலம் போட எனக்கும் ஆசை தான் ஆனால் அப்பவும் முடியல( சின்னப்பிள்ளை) இப்பவும்( இங்க இளமதி சொன்னது போல் தான்) முடியல.அத்துடன் உடம்புக்கும் முடியல. நீங்களாவது பொங்கலுக்கு அசத்துங்க. வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குஅடடா ,உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் தோழி
பதிலளிநீக்குஉங்கள் கவிதைகள் அருமை சகோதரி
தங்களது முதல் வருகையும் ,வாழ்த்தும்
மனதுக்கு உற்சாகமாக இருக்கிறது .
get well soon ,sis
அடடா தப்பாப் போச்சே என் உடம்புக்கு பெரிதாக ஒண்ணுமில்லை தோழி
நீக்குகுனிந்து இருந்து கோலம் போடு அளவுக்கு பழக்கம் இல்லை அதனால் உடம்பு இடம் கொடுக்காது என்பதை தான் அப்படி சொல்லி விட்டேன்.மற்றபடி திடமாக இருக்கிறேன் என்று சொல்லமுடியாது சுமாராக இருக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.
அருமை என் பள்ளி நாட்களை நினைவூட்டியது .மார்கழி பனியில் 4 மணிக்கௌ எழுந்து கோலம் போட்டு விட்டு யார் கோலம் சிறப்பு என அதிகாலையில் விவாதிப்பதென இனிமையான நாட்கள்..
பதிலளிநீக்குநன்றி சகோதரி தங்களக் வருகைக்கு
நீக்குபொங்கலுக்காவது பெரிய கோலம் போடணும்......
பதிலளிநீக்குஉங்கள் ஆசை நிறைவேறட்டும்.
முதல் கோலம் அழகு..... ரசித்தேன்.
இப்போதான் உங்க ஷார்ட் FILM கு கமெண்ட் போடணும்னு நெனச்சேன் நீங்க வந்துடிங்க .அருமையான படத்தேர்வுகள் .தங்கள் முதன் பின்னூட்டத்திற்கு
பதிலளிநீக்குமிகுந்த நன்றி
அன்புடையீர்,
பதிலளிநீக்குஉங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_10.html
தங்கள் தகவலுக்காக!
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
அன்பின் மைதிலி - கோலம் அத்தனையும் நன்று - இரசித்தேன் - ஆமா வெங்க்ட சொல்லி இருக்காரே - பொங்கல் அன்னிக்கு என்ன செய்யணும்னு - 2014 பொங்கல் அன்னிக்குச் செஞ்சீங்களா ? இல்ல வெங்கட் கிட்டே கேட்டுக்கவா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஇந்தப் பதிவுக்குள் என் கருத்து ஏற்கனவே உள்ளதே.ம்..ம்... குட்
பதிலளிநீக்குதண்ணிக்குள்ளயே.....கோலம்போட்டவுங்களாச்சே
பதிலளிநீக்குதரையில் போடுவதா ப்ரமாதம்.
அழகிய நினைவலைகள் டியர்.. :)
பதிலளிநீக்குநானும் பள்ளி கல்லூரி நாட்களில் கோலம் போட்டதுண்டு...தீபாவளிக்கு குடும்ப நண்பரின் பெண்களுடன், கிறிஸ்துமசிற்கு சர்ச்சிலிருந்து வந்தவுடன் இரவு ஒன்றரை மணிக்கு கேக் கட் பண்ணிவிட்டு, ரங்கோலி போட ஆரம்பிப்போம்,, விடிய விடிய ..ஐந்து மணி ஆகிவிடும் :) என் தங்கை தான் அழகாக வரைவாள், நான் கலர் தான் , அதுபோலவே நியூ இயரிலும்..அப்புறம் பொங்கல் .... பெரிதாக ரங்கோலி போட்டுவிட்டு தெருவில் போவோர் வருவோரெல்லாம் நின்று பார்த்துவிட்டு செல்வது கண்டு மகிழ்வோம்..
நினைவுகளை எழுப்பிவிட்டீர்கள் டியர் :)