ஞாயிறு, 15 நவம்பர், 2015

புத்தம்புது மலரே என் ஆசை சொல்லவா?

                                       உன் ஆசை என்ன என ஒருபோதும் நம் பெற்றோர் கேட்பதில்லை. அவர்கள் நம் ஆசைகளை தெரிந்தே வைத்திருப்பார்கள். நம் வாழ்கைத்துணையும் கேட்பதில்லை. அவர்கள் நமக்குத் தெரியாமல், அதை கண்டுபிடித்து நமக்கு வியப்பை தர விரும்புவார்கள். ஆனால் நான் சிறுவயதில் படித்த கதைகளில் தேவதைகள் திடீர் என தோன்றி அப்படி கேட்டதுண்டு. வளர்ந்த பின் தான் தெரிந்ததெனக்கு தோழிகள் தான் தேவதைகள் என்று. இதோ அப்படி ஒரு தேவதை என்னிடம் கேட்டிருக்கிறது "உங்க ஆசை என்ன மைதிலி டியர்?"


          கிரேஸ் எனும் தேவதையே! கடவுளை விட்டுவிடுங்கள், உங்க ஆசையை மட்டும் சொல்லுங்கள் என்று சொன்னதற்காக உங்களுக்கு ஒரு பூங்கொத்து :) இனி என் ஆசைகள்.

1. தன்னை தானே கட்டுபடுத்திக்கொள்ளும் தெளிவுடன் கூடிய சுதந்திரம் எங்கெங்கும் வேண்டும். தனி நபர் முதல் ஈழம் முதலான தேசம் வரை. ஏனெனில் அடிமைகளுக்கு சுவர்க்கம் கிடையாது. சுதந்திரம் தான் உயிர்மூச்சை விட அவசியமானது.

2.பணம் எனும் விஷ(ய)ம் இல்லாமல் போகவேண்டும். தானே சமத்துவம் பிறக்கும்.

3.சாதி, இனம் துவேசம் கற்பிக்கும் மனநோயாளிகளுக்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் தோன்ற வேண்டும். (அவர்கள் அங்குமட்டும் இருக்கட்டும்).

4.பசி எனும் நோய்க்கு நிரந்தர தீர்வு வேண்டும்.

5.எல்லா நோய்க்கும் ஏழைகள் வாங்கும் படியான விலையில் மருந்து வேண்டும்.

6.இடர்கள் வேண்டும். அதுஎதிர்க்கும் ஆற்றலும்,தெளிவும் வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கை அலுத்துவிடுமே.

7.பணத்திற்காக அல்லாமல் புத்தியை மலர்த்துவதற்காக படிக்கும் நிலை வரவேண்டும்.

8.உலகின் எந்த மூலையிலும் தனி இரவில் ஒருத்தி தெருவிளக்கில் இருளையே கவிதையாய்  படிக்கவோ, குடிக்கவோ, வடிக்கவோ முடிகின்ற சூழல் வேண்டும்.

9.எல்லைகோடுகள் இல்லா நிலை வேண்டும்.

10.குறைந்த பட்சம் ஒன்றே ஒன்று உலகத்தார் அனைவருக்கும் வேண்டும். அது தன்னை போல மற்றவர்களை மதித்தல் (empathy).



இது எதுவுமே பொதுநலம் எல்லாம் இல்லை. காலையில் காபி குடிக்கையில் கையில் கிடக்கும் செய்தித்தாள் கண்ணீரில் நனையும் அல்லது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என் நிலை மாறவேண்டும் எனும் சுயநலம் தான். ஆசைகள் நிறைவேற வழி இருக்கா நண்பர்களே!

டிஸ்கி
இது கில்லர்ஜி அண்ணா தொடங்கி வைத்த தொடர்பதிவு. நானும் பத்து பேரை அழைக்கிறேன். கடவுளிடம் அல்ல இந்த தோழியிடம் ஆசை சொல்ல. வேற ஒண்ணும் இல்ல. இவங்க எல்லாம் நான் எப்போ வேணா, எப்டி வேணா இவங்களை disturb பண்ணலாம்னு ஏற்கனவே பர்மிஷன் கொடுத்திருக்காங்க:)

நண்பர்கள்

மலர்த்தரு கஸ்தூரி ரெங்கன்

வளரும் கவிதை நிலவன் அண்ணா

அவர்கள் உண்மைகள் மதுரைதமிழன்

ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண்

மின்னல்வரிகள் பாலாண்ணா (இவர் சீனு, ஆவி எல்லாரையும் சேர்த்துடுவார்)

தில்லையகம் சகாஸ்

எதிலும் புதுமை ஸ்ரீமலையப்பன்

சினேகாஸ்ரீ

நம்ம blog ஸ்ரீராம்

தென்றல் சசி


59 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. சரி! உங்க ஆசையை சொல்லுங்க சகா!

      நீக்கு
    2. ஏற்கனவே சகோதரி கிரேஸ். என்னை தொடர அழைத்திருக்கிறார். எங்கள் வாராந்திரப் பதிவு தினங்களுக்கு அடுத்து வரும் செவ்வாய் அன்று எங்கள் ஆசைகளை வெளியிட உத்தேசம்!! அழைப்புக்கு நன்றி.

      நீக்கு
  2. அன்புச் சகோதரி,

    ‘சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
    முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை’

    நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும்.

    த.ம.2

    பதிலளிநீக்கு
  3. ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள்மா...

    பதிலளிநீக்கு
  4. உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  5. ஆஹா! எனக்குத் தேவதைகள் வேண்டும் என்று கேட்டால், என்னைத் தேவதையாக்கிவிட்டீர்களே :-)
    ஆசைகள் நிறைவேறட்டும்.

    பதிலளிநீக்கு
  6. உங்க எல்லா ஆசையும் நிறைவேற வாழ்த்துகள் சகோ!

    பதிலளிநீக்கு

  7. தலைப்பை பார்த்ததும் குழந்தை தின விழாவிற்கு ஒரு குழந்தை எழுதிய பதிவோ என்று நினைத்து வந்தேன்

    பதிலளிநீக்கு
  8. புரட்சிகாரருக்கு எங்க வீட்டு பொண்ணை கொடுத்ததினால் எங்க வீட்டு பொண்ணும் புரட்சிகரமான ஆசைகளை வெளியிட்டு இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ!! நாங்கலாம் அப்பவே அப்டி! தெரியும்ல. உங்க மாப்ளைய கேளுங்க:))

      நீக்கு
  9. ///குறைந்த பட்சம் ஒன்றே ஒன்று உலகத்தார் அனைவருக்கும் வேண்டும். அது தன்னை போல மற்றவர்களை மதித்தல் (empathy)...\\

    அய்ய நான் என்னையையே மதிக்க மாட்டேன் அதனால என்னை போலவே மற்றவர்களை மதித்தால் வம்புதானுங்க

    பதிலளிநீக்கு
  10. ஆசைகளை படித்தவுடன் சொர்க்கத்தில் இருந்த உணர்வு...!

    பதிலளிநீக்கு

  11. என்னைப் போல ஆட்கள்கிட்ட போய் உங்க ஆசைகளை சொல்லுங்க என்று கேட்கலாமா? நான் சொல்ல ஆரம்பிச்சா எல்லோரும் துடைப்ப கட்டையைதான் எடுத்து வாருவாங்க அது தேவையா? சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க பேரை சேர்க்கும்போது எனக்கு தோணுச்சு. என்ன பண்றது. உங்களை எல்லாம் உரிமையா disturb பண்ணலாம் அதான்:)

      நீக்கு
  12. சரி சரி நான் என் ஆசைகளை சொல்லுகிறேன் ஆனால் படிச்சுகிட்டு வந்து திட்டக் கூடாது

    பதிலளிநீக்கு
  13. என் ஆசைகள்னு என்ன சொல்றதுன்னு சட்னு தோணல... உன்னைப் போல எல்லாருக்காகவும் ஆசைப்பட முடியுமான்னும் தெரியலம்மா. இரவு யோசிச்சு உனக்காக நாளைக்கே என் பதிவை வெளியிட்டுடறேன். ரைட்டா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க நகைசுவை மிளிரும் அசை பட்டியலுக்காக வெய்டிங் அண்ணா:)

      நீக்கு
  14. பேராசை கொண்ட சகோதரியே, படிக்கக்கொஞ்சம் சிரமமாய் இருக்கிறது..கொஞ்சம் கவனியுங்களேன்...
    இல்லை எனக்குத்தான் கண் போச்சான்னு தெரியலயே..நான் வேறு 10 ஆசைகளை முன்னாடியே எழுதிட்டேன்.....
    கண்ணையும் கொஞ்சம் காப்பாற்றச்சொல்லனும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **பேராசை கொண்ட சகோதரியே* ஹாஹாஹா
      **படிக்கக்கொஞ்சம் சிரமமாய் இருக்கிறது..கொஞ்சம் கவனியுங்களேன்...** fontகலர் மாத்திருக்கேன் அண்ணா. இப்போ ஈசியா இருக்கும்னு நினைக்கிறேன். இதுபோலும் கருத்துக்கள் தளத்தை மேம்படுத்த உதவும். மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
  15. முத்தான பத்தும்
    நல்ல சிந்தனைக்கே!

    பதிலளிநீக்கு
  16. கில்லர்ஜி ஆரம்பித்தது தொடர்கிறது. நல்ல ஆசைகளே. சிந்திக்கவும் வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  17. உலகை மேம்படுத்தும் உயரிய ஆசைகள்!

    நான் கடவுளாயிருந்தால் உடனே அளித்திருப்பேன்:(

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹே ராம் படத்தில் கமல் சொல்வார் அடுத்தவங்களுக்காக கண்ணீர் சிந்துறீங்களே நீங்கதான் கடவுள் என்று. எனக்கும் இப்போ அப்டிதான் தோணுது. :)

      நீக்கு
    2. அது ஹே ராம் இல்லை. அன்பே சிவம்!

      நீக்கு
  18. வணக்கம் சகோ நல்ல ஆசைகள் எல்லாமே விரைவில் நனவாகுக.....
    இரண்டாவது - ஸூப்பர் பணம் என்ற விஷம் ஆம் அது விஷமே ஆகவே பல மனித மனங்களைக் கொள்கிறது அருமை.
    நான்காவது - பொதுநலமான ஆசை நன்றே...
    எட்டாவது – பல நாடுகளில் இந்நிலை இன்றும் இருக்கின்றது சகோ இங்கு யூ.ஏ.ஈ யில் சாதாரணமாக நள்ளிரவில் பெண்கள் டாக்ஸியில் ஏறிப்போகலாம் நம்நாட்டில் இல்லாததால்தான் நமக்கு கோபம் வருகிறது

    இதில் தாங்கள் கோர்த்த பல பதிவர்களும் பலரிடம் மாட்டி விட்டார்கள் குறிப்பாக என்னிடம் வில்லங்கத்தார் சாரி தில்லை அகத்தார்
    நீங்களும் என்னதான் செய்வீர்கள் பாவம்

    எனது தளத்துக்கு(ம்) வந்து எனது இணைப்பை எடுத்து சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சகோ.
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒ!! அவர்கள் ஏற்கனவே மாட்டிகொண்டார்களா!!! உங்கள் நீண்ட, அழகிய பின்னூட்டதிற்கு நன்றி அண்ணா! உங்கள் தொடர்பதிவு வலையுலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
  19. எனக்கு தர்ம சங்கடம் கொடுக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் என்னை அழைக்காமல் விட்டதற்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது நீங்க இன்னும் சிக்கலையா!!!!!!! பாஸ், அதெல்லாம் முடியாது. இந்த போறேன் என் மருமகள் சினேகா கிட்ட. நீங்க எதுவரை மாட்டலேன்னா அவகிட்ட சொல்லி உங்கள மாட்டிவிடுறேன்.

      நீக்கு
  20. தங்களின் ஆசைகள் அருமையானவை
    நிறைவேறட்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
  21. நல்ல நல்ல ஆசைகள். நிறைவேறட்டும்.....

    பதிலளிநீக்கு
  22. வணக்கம்
    தங்களின் ஆசை வித்தியாசமாக உள்ளது... இப்படியான தொடர் பதிவின் வழி நமது வலையுலகம் உச்சகமாக உள்ளது...வாழ்த்துக்கள் த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  23. காலையில் காபி குடிக்கையில் கையில் கிடக்கும் “செய்தித்தாள் கண்ணீரில் நனையும் அல்லது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என் நிலை மாறவேண்டும் எனும் சுயநலம்“ இதிலேயே உன் பத்து ஆசைகளும் நிறைவேறும் ஆசை வந்துவிட்டதுப்பா.. சாரிடா.. கொஞ்சம் வேலைகள் கொஞ்சம் உடல்நலம்..கொஞ்சம் பேத்தியுடன் கொஞ்சல் என்று 4,5நாளாகவே வலைப்பக்கம் வர முடியல.. என்னை, நீயும் தங்கை கீதாவும் கடவுளிடம் சிக்கவைத்திருக்கிறீர்கள் அவர் பாவம்! என்னிடம் என்னபாடு படப்போறாரோ? பார்ப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *இதிலேயே உன் பத்து ஆசைகளும் நிறைவேறும் ஆசை வந்துவிட்டதுப்பா* ஆமால்ல:)

      இத்தனை வேலைப்பளுவுக்கு இடையிலும் என் ஆசையை நிறைவேற்றியமைக்கு நன்றி அண்ணா!

      நீக்கு
  24. கிரேஸ் சொன்னபடியே என்னையும் மாட்டி விட்டுட்டீங்களா மைதிலி! என்னுடைய ஆசைகள் எல்லாம் பொதுவாக பொதுநலம் கருதியே இருக்கும். நெஜம்மாத்தாங்க! :) ஆனால் என்ன எல்லாரும் நல்லாயிருந்தால் நம்ம நிம்மதியா இருக்கலாமே என்கிற வடிகட்டிய சுயநலனா நான் என்னவென்று தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரேஸ் சொன்னபடியே என்னையும் மாட்டி விட்டுட்டீங்களா மைதிலி!* ஹாஹாஹா
      *
      ஆனால் என்ன எல்லாரும் நல்லாயிருந்தால் நம்ம நிம்மதியா இருக்கலாமே என்கிற வடிகட்டிய சுயநலனா நான்* same pinch வருண் . அதை தானே நானும் சொல்லிருக்கேன்!
      பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  25. வணக்கம் சகோ !

    நல்ல நல்ல ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள் !
    ஆமா மீண்டும் தொடர்பதிவு புயல் கெளம்பிடிச்சாஆ ஆஆஆஆஅ

    பதிலளிநீக்கு
  26. நல்ல நல்ல ஆசைகள்...ம்ம்ம் கமலின் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால்...இந்தியாவில் இது நடக்காதுன்னு சொல்லல...நடந்தா நல்லாருக்குமேனுதான்....

    நம் எல்லோரது ஆசைகளையும் சேர்த்து இந்தியா வல்லரசாகி அதற்குக் காரணம் கில்லரைப் பிரதமரும் ஆச்சியாச்சுப்பா...

    பதிலளிநீக்கு
  27. சுயநலம் சார்ந்த பொது நலம்!
    நல்ல மனது உங்களுக்கு;நடக்கட்டுமே இவை!

    பதிலளிநீக்கு
  28. போகிற போக்கைப் பார்த்தால் பட்டியல் இடுவதற்கு ஆசைகளே கிடைக்காது போல் இருக்கிறதே! - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  29. ஆசைகள் எதுவும் பேராசையல்ல... அனைத்தும் நியாயமான ஆசைகள்.. நிறைவேறினால் உலகமே அன்புமயமாகும். அமைதிமயமாகும்... நிறைவேறுமா? ஆசையுடன் நானும்... வாழ்த்துகள் மைதிலி.

    பதிலளிநீக்கு
  30. "மானுட சமுத்திரம் நானென்று கூவும்" பாவேந்தர் கண்ட புதுமைப்பெண் தாங்கள் என்பதையே தங்கள் உள்ளக் கிடக்கைகள் காட்டுகின்றன! அருமை!... அருமை!!... அருமை!!!...

    எல்லாவற்றுக்கும் மேலாக, இது எதுவுமே பொதுநலம் இல்லை என்று கூறி அதற்கான காரணமும் கூறினீர்களே... அங்கேதான் வானளாவி நிற்கிறீர்கள் தாங்கள்!

    பதிலளிநீக்கு
  31. நல்ல நல்ல ஆசைகள் அக்கா... நிச்சயம் நிறைவேறும்

    பதிலளிநீக்கு