சனி, 12 டிசம்பர், 2015

கடல் கடந்து நீண்ட கருணைக்கரம்          சென்னை மழையில் திறந்து விடப்பட்ட ஏரிகள், இண்டு இடுக்கெல்லாம் புகுந்து வீதிக்கு இழுத்து வந்த எரிவாயு சிலிண்டர்களை போலவே வியப்பில் மிதக்க வைக்கின்ற அது சாலைக்கு இழுத்துவந்து சேவை செய்ய வைத்த சாதி மதம் கடந்த, ஊர்கள், எல்லைகள்  தாண்டிய  ஈரமும். அப்படி வியப்பில் ஆழ்த்திய, ஒரு கடல் கடந்த கருணைப் பெண்ணைப் பற்றிய உங்களோடு பகிர்த்து கொள்ள விரும்புகிறேன்.

டிசம்பர் ஒன்றாம் தேதி சென்னை கொட்டித் தீர்க்கப்போகிறது என தகவலோடு தொடங்கிய இரவில், “மக்களே, உங்களுக்கேத் தெரியும் என்றாலும்... அலைபேசியில் சார்ஜ் வைத்துக்கொள்ளுங்கள். மின்சாரம் இல்லாத நிலையில் முகநூலோ வாட்ஸ் அப்-போ வேண்டாம். வீட்டில் வெள்ளம் வராமலிருக்கட்டும் என்பதே விருப்பமாக இருந்தாலும், ஒரு சிறு பையில் தேவையான மாத்திரைகள், டார்ச் லைட், தின்பண்டங்கள், உடை என்று தயாராக வைத்துக் கொள்ளுங்கள். Better be prepared, Take care and Stay safe!தொடங்கிய என்று தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களது முகநூல் பதிவில் அன்று தொடங்கி இந்த நொடி வரை மீட்புப் பணிகள் குறித்த பகிர்வுகள், உதவி குரல்களின் எதிரொலிகள் மட்டுமே உரக்கக் கூவிக் கொண்டிருக்கிறது இவரது முகநூல் பக்கம்.

       நாம்  உதவிசெய்தி என நினைத்து மீட்புக்குழுவின் தொடர்பு எண்களை  பாய்ந்துபாய்ந்து பகிர்ந்து வேளையில் கொண்டிருந்த தொடர்பு எண் எதையுமே தொடர்பு கொள்ள முடியவில்லையே என கவலைதெரிவித்து ஸ்டேடஸ் இடுகிறார். இந்த வகை ரத்தம் தேவை என பரவிக்கொண்டிருக்கும் ஸ்டேடஸ் ஒன்றை நாம் share செய்ய நினைக்கும் முன்னே, அதற்கான தொடர்பு எண்ணை அழைத்துப் பேசி, சிறிது நேரத்தில் அந்த குழந்தை நலம் என பகிர்கிறார். முகநூல் நட்புக் குடும்பம் ஒன்றின் தலைவர் வெளியூரில் இருக்க, சென்னையில் சிக்கிக்கொண்ட அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தேட இரவெல்லாம் விழித்திருந்து சென்னையின் ஒவ்வொரு பகுதி மீட்புக்குழுவுக்கும் தொடர்புகொண்டு தேடுகிறார். பதினோரு மணி இருக்கும் இந்த ஏரியாவிற்கு உணவு தேவை. என் நட்புகுழுவில் தீர்ந்துவிட்டது உங்கள் நண்பர்கள் யாரேனும் களத்தில் இருக்கிறார்களா என கேட்டு செய்தி அனுப்புவார். அது அவருக்கு பகல் பொழுது தானே என கேள்வி தோன்றும். அடுத்த நாள் நமக்கு பகல் பொழுதில் மெடிசின்ஸ் இருக்கா  டியர் என பதைபதைப்பார். டயாலிசிஸ் தேவைப்படும் மூத்தாட்டி ஒருவரை மீட்புக்குழு நபர் ஒருவரிடம் பேசி மூதாட்டியின் மகளோடு சேர்த்து வைக்கிறார். ஒரு வாரம் பார்த்தேன் "கிரேஸ்! நாம் உதவாலாம், ஆனால் நாம் மட்டுமே அத்தனையையும் சரி செய்ய முடியாது, ப்ளீஸ் , எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் மனதை தெளிவாய் வைத்துக்கொள்ளுங்கள், கலங்காதீர்கள் என்றெல்லாம் ஒரு பத்து நிமிடம் லெக்சர் அடித்தேன். சொன்னாரே ஒரு வார்த்தை "இன்னைக்கு சீக்கிரம் தூங்கனும் டியர்" அதில் ஒரு வாரத்தூக்கம் தெரிந்தது. புதுகையில் இருந்து சென்னை கிளம்பும் தன்னார்வலர்களிடம் நன்கொடையும் தந்து தானும் இணைத்து கொள்கிறார். இன்னும் அவர் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உதவ வேண்டும் என்று நினைத்து விட்டால் தொலைவு ஒரு தடையல்ல என நிறுவிக்கொண்டிருக்கும் தோழி கிரேஸ் பிரதீபாவுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள்.

டிஸ்கி
 இந்த இடர்காலத்தில் ஷாஜகான் அவர்கள், ரபீக் friend  மற்றும் கிரேஸ்  ஆற்றிய பணிகள் அளப்பரியது. களத்தில் பணியாற்றிய ஆயிரம், ஆயிரம் ஈர மனங்களுக்கும் என் வணக்கங்கள், என் வரையில் எத்தனை தொலைவில் இருந்தாலும் இந்த மூவரும், இவர்கள் போலும் நான் அறியாத வெளிநாட்டு அல்லது வெளியூர் நண்பர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் களப்பணி செய்ததாகவே கருதுவதன் விளைவே இப்பதிவு. சரியான பணிகளை உரிய நேரத்தில் பாராட்டி விடவேண்டும் இல்லையா நண்பர்களே? நீங்கள் அறிந்த ஆர்வலர்களையும்  பின்னூட்டத்தில் பாராட்டலாமே!!

77 கருத்துகள்:

 1. நான் முகநூல் பக்கம் வருவதில்லை டா. ஆனாலும் தங்கை கிரேஸின் பதிவுகளில் அந்தப் பதற்றத்தைக் கண்டேன். எனது வாட்ஸப்பிலும் அவரது தனிச்செய்திகள் வந்தவண்ணமே இருந்தன... என்ன ஒரு இளகிய நெஞ்சுக்குள் என்ன ஒரு இரும்புபோலும் செயல்திறன்!
  வலைப்பக்கத்தை நான் தொடங்கிய பிறகு எனக்குக் கிடைத்த -உன்போலும்- செயல்திறம் மிக்க தமிழ்நெஞ்சங்களில் முக்கியமானவர் தங்கை கிரேஸ். அவரைப் பற்றிய சரியான அறிமுகத்திற்கு நன்றிடா. நான் முகநூல் பார்க்காததால் நீ சொன்ன செய்திகள் எனக்கு அவரைப் பற்றிய அன்பை மீதூரச் செய்கின்றன. எத்தனை தொலைவில் இருந்தாலும் இந்த மூவரும், இவர்கள் போலும் நான் அறியாத வெளிநாட்டு அல்லது வெளியூர் நண்பர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் களப்பணி செய்ததாகவே கருதுவதன் விளைவே இப்பதிவு என்று நீ சரியாகச் சொல்லிவிடடாய் மைதிலி. நம் ஊரில் நிறைய நண்பர்கள் காலநேரம் பணம் என்று நிறையவே செய்தார்கள் அவர்களில் நம் வலைவிழாவில் வந்து நின்றாரே அண்ணன் பஷீர் அலி அவரைப் பற்றி கஸ்தூரியிடம் கேள்... நிறையச் சொல்லலாம் அவரைப் பற்றி ஒரு முறை நானும் எழுதுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா..நீங்கள் எல்லோரும் அங்கிருந்து செய்தீர்கள். நான் இங்கிருந்து என்னால் முயன்றதைச் செய்தேன், அவ்வளவே.பகிர்ந்து பாராட்டிய மைதிலி போலும் உங்கள் போலும் உறவுகள் கிடைக்க நான் கொடுத்துவைத்தவள் என்று மகிழ்கிறேன்.

   நீக்கு
  2. அண்ணா , முதலில் தாமதமான பின்னூட்டதிற்கு மன்னியுங்கள்....உண்மையில் இத்தனை அருமையான வலைப்பூ நட்புக்கள் எனக்கு கிட்டியமைக்கான காரணகர்த்தாகளில் முக்கியத்துவம் வாய்ந்த தங்களுக்கு என் நன்றிகளை நான் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.. மிக்க நன்றி அண்ணா

   நீக்கு
  3. சரி சரி... பொங்கல் கழித்து அடுத்த வலைப்பதிவர் பயிற்சிக்குத் தயாராவோமா? எல்கேஜி தனியா, உநிமேநி தனியா, கல்லூரி லெவல் தனியா நடத்தத் திட்டமிடணும்.

   நீக்கு
  4. ஒகே நான் எண்ண ஆரம்பிக்கிறேன். அதனால ஸ்டார்ட் ந்வ் .......நீங்க நன்றி சொல்லுவதை நிப்பாட்டுறீங்களா இல்லையா என நான் பார்க்கனும்

   நீக்கு
 2. டியர், முதலில் உங்கள் அன்பிற்கு மனம் நெகிழ்ந்த நன்றி!கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது..ஆனால் நான் செய்தது மிக மிக மிகக் குறைவு..அங்கு எத்தனை பேர் இரவும் பகலும் பாராமல் நீரிலும் சேற்றிலும் களப்பணி செய்கிறார்கள். அண்ணா மற்றும் நம் நண்பர்கள் பலரும் களப்பணி செய்திருக்கிறார்களே. நீங்களும் உதவியிருக்கிறீர்கள்..பதினொரு மணிக்கு உங்களை அழைத்தபொழுது உடனே நண்பர்களைத் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்தீர்களே. என்னால் முடிந்த சிறு உதவியே நான் செய்தது. அதை நீங்கள் பாராட்டுவது உங்கள் அன்புதான். அதற்கு நான் கொடுத்துவைத்தவள்...மீண்டும் மனம் நிறைந்த நன்றி டியர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுங்க டா....இல்லாததையா சொன்னேன். ரொம்பத்தான் தன்னடக்கம்:) உங்கள் அன்புக்கு என்றுமே என் வணக்கங்கள் dear

   நீக்கு
 3. உண்மைதான்! மனமார்ந்த வாழ்த்துகள் க்ரேஸ் சகோ. மைதிலி சகோவிற்கும் வாழ்த்துகள் இதை இங்கு சொல்லியதற்கு. நமக்குத் தெரியாமல் இன்னும் எத்தனையோ உதவிக்கரங்கள் நீண்டிருக்கின்றன. அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அண்ணா.
   ஆமாம் அண்ணா, உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றிகள்!

   நீக்கு
  2. நமக்குத் தெரியாமல் இன்னும் எத்தனையோ உதவிக்கரங்கள் நீண்டிருக்கின்றன. ** உண்மைதான் கீத்து , அதற்காகத்தான் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
   மிக்க நன்றி சகாஸ் :)

   நீக்கு
 4. பாராட்டுக்குரியவர் தான் சந்தேகமில்லை. களப்பணியில் ஈடுபட்டவர்கள், உதவி செய்தவர்கள் என அனைவருக்கும் பாராட்டுகள்.....

  இந்த மழையால் விளைந்த நட்புகளும் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா.
   இங்கிருந்து அழைத்தாலும் அங்கு உணவிற்கு ஏற்பாடு செய்த இன்னும் பிற உதவிகள் செய்த ஒவ்வொருவருக்கும் நன்றிகளும் வணக்கங்களும்.

   நீக்கு
  2. ஆம் அண்ணா, அந்த ஈர நட்புகள் தொடர வேண்டும். மிக்க நன்றி அண்ணா,

   நீக்கு
 5. நானொன்றும் பெரிதாக செய்துவிடவில்லை சகோ.
  ஊரிலிருந்து களப்பணியாற்ற முடியவில்லையே என்பதே இன்றளவும் என் வருத்தம்....,,
  இருப்பினும் உங்களன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் ரபீக் friend என நினைக்கிறேன் சகோ...அந்த நிவாரணப் பணியில் உங்கள் பங்கை பார்த்துக்கொண்டே, வியந்து கொண்டே இருந்தவள் நான், உங்கள் மனம் போல மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள் சகோ.

   நீக்கு
 6. சகோதரி பாராட்டிற்குரியவர்
  பாராட்டுவோம்
  போற்றுவோம்
  நன்றி சகோதரியாரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா. நிலவன் அண்ணாவின் பின்னூட்டத்தில் சொன்னதுபோல் உங்கள் அனைவரின் அன்பிற்கு நான் கொடுத்துவைத்தவள். நான் செய்தது சிறியதே.

   நீக்கு
 7. சரியான நேரத்தில் மதிப்பில்லா உதவிகள் செய்த கிரேஸ்கிகு வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 8. கிரேஸ் என்ற பெயருக்கு ஏற்றுவாறு செயல்பட்ட அவருக்கு பாராட்டுக்கள். அதை பதிவாக இட்டு பெருமைபடுத்திய எங்கள் டீச்சரம்மாவிற்கும் எனது பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ. ஆமாம், மைதிலி பாராட்டப்பட வேண்டியவர்.

   நீக்கு
  2. ஒருவார்த்தை என்றாலும் நச்...அதுதான் தமிழன் சகா...ஆமா அவர் கிரேஸ் என்ற பெயர்க்கு பொருத்தமானவர் தான்.என்னையும் பாராட்டியதற்கு நன்றி சகா:)

   நீக்கு
 9. அருமை அம்மா....நல்ல அறிமுகம்....காலாத்தால் செய்த உதவி...மறக்க முடியாது...நாம் நன்றி மறப்பவர்கள் இல்லை என்பதுமட்டுமல்லாமல்..மனிதர்கள் என்பதை உறுதிசெய்யும் பதிவு...இன்னும் செய்யுங்கள்

  பதிலளிநீக்கு
 10. Great soul. .பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் வார்த்தைகளில் அடக்க முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனமார்ந்த நன்றி சகோ..ஆனால் மீண்டும் சொல்கிறேன், நான் செய்தது அவ்வளவு பெரிதில்லை.

   நீக்கு
  2. ஸ்ரீராம் சகோ! கிரேஸ் மிகவும் தன்னடக்கத்தோடு சொல்கிறார் இல்லையா? மிக்க நன்றி சகோ!

   நீக்கு
 11. நானும் ஃபேஸ் புக் பக்கம் அதிகம் வருவதில்லை. எனக்கு ஃபேஸ்புக் நட்புகளும் குறைவு. நானறிந்தவரை என் வலைப்பூ நண்பர் சுந்தர்ஜியும் நிறையவே களப்பணிகள் ஆற்றி இருப்பது தெரிகிறது. கிரேசுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா. உங்கள் நண்பர் சுந்தர்ஜி அவர்களுக்கும் நன்றியும் வணக்கங்களும்

   நீக்கு
  2. உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மிகுந்த வணக்கங்கள். மிக்க நன்றி அய்யா!

   நீக்கு
 12. பாராட்டுக்குரிய சேவை. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
  த ம 7

  பதிலளிநீக்கு
 13. பாராட்டுக்கள் கிரேஸ்.சமூக வலை தளங்களை சிறப்பாக தக்க நேரத்தில் பயன் படுத்தி காலத்தினால் செய்த உதவிகள் சாதரணமானதல்ல . வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. அன்புச் சகோதரி,

  காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
  ஞாலத்தின் மாணப் பெரிது.

  கிரேஸ் கிரேட்...!

  நன்றி.
  த.ம.9

  பதிலளிநீக்கு
 15. அம்முக் குட்டி எப்படி இருவரையும் பாராட்டுவது என்றே தெரியவில்லை உண்மையில் புல்லரிக்க வைக்கிறது உங்கள் அளப்பரிய செயல்கள். தேனு என்று அழைப்பதும் பொருத்தமே அவரை நெஞ்சம் நெகிழவைத்தது அவர் எண்ணமும் செயலும்.இருவருக்கும் என் நன்றிகளும் பாராட்டுக்களும்..... வாழ்த்துக்கள்மா ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா இனியாச்செல்லம்! தேனு பேருக்கு ஏற்ப தேன் போல தான் இனிக்கிறார் உங்களை போல !! நன்றி டா!

   நீக்கு
 16. கிரேஸ் என்றால் கருணையல்லவா..? நானும் முகநூலில் வந்ததும் அவள் பக்கத்தில் சென்று பார்த்து பிரமித்துத்தான் போனேன். பெருமிதமும் அடைந்தேன். பாராட்டை அவள் எதிர்பாக்க மாட்டாள் எனினும் பாராட்டுதல், வாழ்த்துதல் நம் கடமை. இன்னும் இன்னும் நல்ல செயல்கள் செய்ய பலரை அது தூண்டும் என்கிற காரணத்தால் கிரேஸுக்கு ஒரு சல்யூட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் நிறைந்த நன்றி அண்ணா ..
   ஆமாம், மைதிலி என்னை நண்பர்களின் பாராட்டிலும் அன்பிலும் நெகிழ வைத்துவிட்டார்.

   நீக்கு
  2. சரியா சொனீங்க அண்ணா! நானும் வைக்கிறேன் salute! நன்றி அண்ணா!

   நீக்கு
 17. பாராட்டுகள் மேடம்!தொடரட்டும் தங்கள் பணி.

  பதிலளிநீக்கு
 18. வருகை தந்து கருத்துசொன்ன அனைவருக்கும் நன்றி. பொறுப்பாய் பதில் அளித்த கிரேசுக்கும்:) கொஞ்சம் வேலைப்பளு. மன்னியுங்கள். விரைவில் சந்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :-)
   நான் தகுதியுள்ளவளா என்று கேள்வி மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தாலும் நண்பர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மகிழ்ந்து நன்றி சொல்கிறேன்

   நீக்கு
 19. வாழ்த்துக்கள் கிரேஸ் அக்கா..அமெரிக்காவில் இருந்து கொண்டு இங்கே என்னவெல்லாம் நடத்தியிருக்கீங்க.. என் நட்பில் இருக்கும் Dhanalakshmi thangam அக்காவும் (நம்ம ஊர்க்காரங்க தான் தெரியும்னு நினைக்கிறேன்.) அங்கே இருந்து கொண்டு போன், உதவி என விடாமல் இன்னும் செய்கிறார்.. இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றிகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா அபி!! தனா மேடமுக்கும் என் வாழ்த்துக்கள்! நன்றி டா அபி!

   நீக்கு
  2. பாசகாரங்க மதுரைகாரங்க ! மனமார்ந்த வாழ்த்துக்கள் கிரேஸ் ! நன்றி .

   நீக்கு
  3. இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி அபி .

   நீக்கு
  4. ஆமாம் தனலக்‌ஷ்மி :-)
   உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றியுடன்

   நீக்கு
 20. கிரேஸ் அவர்களுக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.
  இதனை தெரியப்படுத்திய வாத்தியார் அம்மாவிற்கு வாழ்த்துக்கள். (நானும் முகநூல் பக்கமே செல்லாதவன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆத்தி!! சொக்கன் சகா...நீங்க கொஞ்ச நாளா வலைப்பக்கம் கூட வரவில்லையே!! நலம் தானே அண்ணா!

   நீக்கு
  2. நன்றி சகோ

   @மைதிலி டியர், சொக்கன் சகோவிற்கு புதல்வன் பிறந்திருக்கிறான். :-) அதனால்தான் விடுமுறை எடுத்து வந்திருக்கிறார்!

   நீக்கு
 21. அனைவரின் பணியும் மிகவும் சிறப்பானது ...அனைவரும் பாராட்டிற்க்கு உரியவர்கள் ....வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 22. இருந்த இடத்திலிருந்தே இவ்வளவு சேவை புரிந்திருக்கும் சகோதரி கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியவர்! என் பாராட்டுக்களும், பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவன் எனும் முறையில் என் அன்பார்ந்த நன்றிகளும் அவருக்கு உரித்தாகுக!

  பதிலளிநீக்கு
 23. சகோதரி கிரேஸிற்கு இனிய வாழ்த்துக்களும்மனமார்ந்த பாராட்டுக்களும்! அவருடைய ந்ற்செயல்களைப்பற்றி இங்கே அறிவித்து, பின் பாராட்டிய உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு