வியாழன், 7 ஜனவரி, 2016

பயணங்கள் முடிவதில்லை.

               பயணம் ஒரு வாசிப்பு. அல்லது பயணம் ஒரு வாழ்க்கை. பயணம் ஒரு தோழன். அல்லது ஒரு குரு. இப்படி என்ன வேணா சொல்லலாம். ஆனால் பயணம் பிடிக்காது என சொல்பவர்கள் ரொம்ப, ரொம்ப குறைவு. வயதானாலோ, உடல் நிலை சரியில்லாமல் போனாலோ பயணிக்க முடியவில்லையே என்றும் தான் பலருக்கும் இருக்குமே தவிர பயணம் பிடிக்கவில்லை என கருதுவது குறைவு தானே. இவ்வளவு ரசிக்கும் பயணத்தைப் பற்றி ஒரு பேட்டி (என்னைய மதிச்சு யாரு கேட்கப் போறா? so நானே கேட்டுகிட்டேன்:)


1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

இரண்டாம் வகுப்பா, மூன்றாம் வகுப்பா என நினைவில்லை. நானும் அப்பாவும், அவரது நண்பர் ஒருவரும் பயணித்ததாக நினைவு. சென்னைக்கு, ஏசி கோச். அப்பா எங்கே நான் பெர்த்தில் இருந்து உருண்டு விடப்போகிறேனோ என ஒரு வெள்ளை விரிப்பை தரையில் விரித்து படுக்க வைத்திருந்தது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.

2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
      சென்ற முறை மதுரையில் நடந்த பதிவர் விழாவுக்கு ஒரே காரில் டிரைவரையும், நிறை குட்டியையும்  சேர்த்து பனிரெண்டு பேர் பயணித்து வந்தோம். எல்லோரும் வெவ்வேறு வயதினர், ஆனால் அப்படி ஒரு அட்டகாசமான நட்பு புதுகை பதிவர்களுக்குள். நிலவன் அண்ணா மற்றும் அண்ணி, கஸ்தூரி, ஜெயாம்மா, கீதாக்கா, மகாசுந்தர் அண்ணா, மாலதி டீச்சர், அனு, ஸ்டாலின் சகா என அந்த பயணத்தை மறக்கவே முடியாது. அவ்ளோ கலகலா, அவ்ளோ லகலகா.

எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

முக்கியமான செமினார்கள் அல்லது இலக்கியக்கூட்டங்களில் பார்த்தோம்னா மேடைல பேசுகிறவரை விட கீழே பேசுகிறவர் சத்தம் தான் அதிகமா இருக்கும் ஆனா ஒரு பஸ்ல ஏறிட்டா அது ஏனோ தெரியல மக்கள் அவ்ளோ அமைதியா இருப்பாங்க. நான் என் தங்கை, அனிதா போன்ற நெருக்கமான தோழிகளோடு பயனிப்பதென்றால் ஸ்டாப்பிங் கூட மறந்துபோகும் அளவு பேசிக்கேட்டே இருப்போம். ஏதோ செய்யக்கூடாத தப்பை செய்துவிட்டது போல சிலர் திரும்பி, திரும்பி எங்களை பார்த்து, நாங்கள் நொந்து போனதும் உண்டு. இத்தனைக்கும் யாரும் சத்தமாக சிரிக்கவும் மாட்டோம். அப்புறம் எதுக்குதான் இப்படி பார்க்கிறார்களோ!!!

பயணத்தில் கேட்க விரும்பும் இசை 

பலருக்கும் பயணம் என்றாலே  ஹரிஹரன் அல்லது P.B.ஸ்ரீனிவாஸ். கோல்டன் மெலடி தொகுப்பு ஒன்று இருக்கிறது. அந்த தொகுப்பை இரவின் மடியில் அல்லது தேன்கிண்ணம் என இன்றும் எப்.எம் ரேடியோவில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கின்றன. அது போன்ற பாடல்களை கேட்கும் போது இன்னும் கொஞ்சம் நேரம் பயணித்துக்கொண்டே இருக்கலாமா என்று கூட தோன்றும். இந்த பாட்டை கேட்டுபாருங்களேன்.



விருப்பமான பயண நேரம்

இரவில் நிலவோடும், இசையோடு பயனிப்பது  அத்தனை அலாதியாய் இருக்கும். நம்மோடு நாமே பயணிப்பது போன்ற மனதுக்கு மிக நெருக்கமானதாக இருக்கும். எதில் பயணித்தாலும் இரவில் பயணிக்கும் அனுபவம் இருக்கிறதே அதற்கு இணை அதுவே தான். அதற்காக கூட நான் முன்பு ஒரு பதிவே எழுதியிருக்கிறேன்.

விருப்பமான பயணத்துணை.

 கஸ்தூரியோடு பயணிப்பதென்றால் ஒரே ஹெட் செட்டில் பாடல் கேட்டபடியே பயணிப்போம். பிள்ளைகளோடு மட்டும் பயணம் என்றால் கண்டிப்பாக ஒரு புத்தகம் கையில் இருக்கும் அவர்கள் தூங்கத் தொடங்கிய அல்லது கேள்விகள் கேட்டு ஓய்ந்த பின் படிக்கத் தொடங்குவேன். 

பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

 பெரும்பாலும் நாவல்கள் பிடிக்கும். ரொம்ப ஆழமாய் சிந்தனையை தூண்டுவது போல் இல்லாமல் சும்மா பாப்கார்ன் கொறிப்பது போல ராஜேஷ்குமார், பி.கே.பி, ரமணிச்சந்திரன், காஞ்சனா ஜெயதிலகர் போல எதையாவது வாசிப்பதுண்டு. இப்படி பயணித்தில் படிப்பது கண்ணுக்கு கெடுதல் என்று கஸ்தூரியிடம் இப்போது வரை வாங்கிக்கட்டிகொண்டிருப்பது வேறு விஷயம்.

விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

மழையில் ரைட் அவ்ளோ பிடிக்கும். மழையில் டிரைவ் (காரில்) போவதை காட்டிலும் நனைந்தபடி பைக் ரைட் போவது அத்தனை சுகம். நானும் கஸ்தூரியும் அதுபோல பலமுறை பயணித்திருக்கிறோம். ஈரம் சொட்டசொட்ட அப்போதிருந்த ஆர்.ஆர் ரெஸ்டாரண்டில் போய் ஒரு சிக்கன் கிளியர் சூப் குடிப்போம். இப்போ ஏதோ உள்ளூர் அரசியல் அந்த ரெஸ்டாரண்டை சூப்பு போட்டு குடித்துவிட்டது.

பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

அந்த நேரத்தில் எது அட்டகாசமான மெலடியோ அது. ஸ்கூட்டி வாங்கிய புதிதில் மூணு என்கிற படத்தில் அனிருத் அறிமுகமான நேரம். போ நீ போ .....என்றொரு பாடல். பனிவிலகாத காலைகளில், சற்றே நீளமான அய்யனார் கோயில் குளக்கரையில், வண்டியை செலுத்தும் வேளையெல்லாம் பிடரியில் ஊடுருவும் காற்று நினைவுபடுத்திச்செல்லும் அந்த பாடலில் நடுவே வரும் "ஒ.....ஒ..." எனும் ஹும்மிங் வரிகளை. (சேராத இடம் சேர்ந்த பசுவாய் இப்படி போய்ட்டியே அனிருத்!:( )



கனவுப் பயணம் ஏதாவது ?

பிள்ளை பருவத்தில் டாக்டர் ஆவேன், வக்கீல் ஆவேன்னு விதவிதமா கனவு கண்டு, பின் பக்குவப்பட்டு ஒரு இலக்கை நிர்ணயம் செய்வோம் இல்லையா?, அது மாதிரி எங்கெங்கேயோ போகணும் என்ற ஆசைகள் இப்போ ஒரு குவிமையத்தில் நிற்கிறது. பின்லாந்து நாட்டின் உயரிய கல்வி முறைகளை பற்றி அறிந்த பின், அங்கே பள்ளிகளையும், பாட நடைமுறைகளையும் நேரில் சென்று பார்க்கவேண்டும் என்பது தான் .இப்போதைய ஆசை.

பத்து கேள்வியை படிச்சவுடனே புரிந்திருக்குமே இது ஒரு தொடர்பதிவுன்னு. new year சமயத்தில் தோழி கீத்து ஒரு sms அனுப்பிஇருந்தார்கள். மதுரைதமிழனை நாம பேட்டி எடுக்கிறோம் என்பது போல இருந்தது செய்தி. ஹை! புது வருடத்தில் ஒரு தொடர்பதிவு அழைப்பு போல என எதிர்பார்த்து வந்தால் அப்படியில்லை. என்றாலும் அந்த பதிவு ரொம்ப ஜாலியா இருந்தது.  சரி நாமலே ஏன் ஒரு தொடர் பதிவை தொடங்கக்கூடாதுன்னு தோணுச்சு. மைக்கை நீட்டினா அறிவு இருக்கான்னு கடன் கேட்காத, காறித் துப்பாதா, எந்நேரமும் என்னை தொந்தரவு செய்யலாம்னு எனக்கு லைசன்ஸ் கொடுத்திருக்கும் பத்து நண்பர்களிடம் இந்த கேள்வியை பாஸ் செய்கிறேன். நீங்களும் இதை பத்து பேரிடம் தான் கேட்கவேண்டும் என்றில்லை. அதை தொந்தரவாய் நினைக்காத நண்பர்களிடம் கேட்கலாமே. நம் நட்பின் பயணம் தொடங்கட்டும் இந்த புத்தாண்டில்........









பகவான் பாஸ் (ஜோக்காளி)


65 கருத்துகள்:

  1. இப்போ ,மணியைப் (நேரத்தைக் சொன்னேன் )பாருங்க ,என் பதிவுக்கே மண்டைக் காயுது ,முயற்சி செய்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் உங்களுக்கு ஜ௨ஜ௨பி பாஸ். சும்மா கலக்குங்க

      நீக்கு
  2. யம்மாடியோவ் தொடர் பதிவா...ஏற்கனவே பயணம் பற்றி ஒரு பதிவு முன்னாடி கட்டுரை ஒண்ணு போட்டோம்....

    பயணம் என்பது ரொம்பப் பிடித்தமான விஷயம்தான்...கீதாவின் பயணக் குறிப்புகள் இப்பதான் ஆரம்பிச்சுருக்கு..நாளை அதன் அடுத்த பகுதி அப்புறம் அதன் தொடர் என்று நினைத்திருந்தோம்....சரி சரி நம்ம சகோ/மைத்து கேட்டா விட முடியுமா....
    துளசி அடுத்த வாரம்தான் ஃப்ரீ..கீதா 13 வரை சென்னை ஃபில்ம் ஃபெஸ்ட் கொஞ்சம் பிசி...ஹிஹிஹி...இருங்க ரெண்டு பேரும் எப்படியாவது அடுத்த வாரம் பேசி முடிவுக்கு வந்து உங்கள் பயணத்தைத் தொடரப்பார்க்கின்றோம்...பயணம் தாமதமாகும் பரவாயில்லை தானே!!?? இதே கேள்விகள் தானா???!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திங்கட்கிழமை அவ்ளோ தூரத்தில் இல்லை சகாஸ். I am waiting :)

      நீக்கு
  3. “மைக்கை நீட்டினா அறிவு இருக்கான்னு கடன் கேட்காத, காறித் துப்பாதா, எந்நேரமும் என்னை தொந்தரவு செய்யலாம்னு எனக்கு லைசன்ஸ் கொடுத்திருக்கும் பத்து நண்பர்களிடம் இந்த கேள்வியை பாஸ் செய்கிறேன்“ - சிரிச்சு உருண்டுட்டேன் பா. இரண்டு நாள் லீவு கொடு. (நாளை லயோலா போய் உன் அண்ணியை அழைத்துக் கொண்டு வந்து ஞாயிறு எழுதுவேன்..சத்தியமா..) இருந்தாலும் உன் பதில்களைப் படித்ததை மறந்து எழுத இவ்வளவு பில்டப்பா னு கேக்க வேண்டாம் டா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ. அண்ணா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவார்ல. வாங்க அண்ணா வாங்க

      நீக்கு
  4. பயண அனுபவங்கள் அத்தனையும் அருமை!

    பதிலளிநீக்கு
  5. நலமா சகோ ?....

    பயணம் பற்றிய என் நினைவுகளை மீன்டும் சுகராகமாய் மீட்டி எழுப்பிய பதிவு...

    ஒன்பதாம் வகுப்பு விடுமுறை ஒன்றில் வெளியூரில் வசித்த நண்பன் ஒருவரை நாங்கள் ஐந்து நண்பர்கள் பார்க்க சென்றதுதான் என் முதல் தனியான பயணம் ! நாகப்பட்டினம் பஸ் ஸ்டாண்டில் டீ நன்றாக இருந்ததால் அடுத்தடுத்து அளுக்கு இரண்டு என வாங்கி குடித்ததும், பலர் எங்களை " ஒரு மாதிரியாக " பார்த்ததும் இன்றும் நினைவில் நிற்கிறது !

    ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு, சென்ற முறை ஊர் சென்றிருந்த போது மீன்டும் அதே போன்ற அனுபவம்...

    திருச்சி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த போது குடித்த டீயிலும் அலாதி ருசி ! என்னுடன் வந்திருந்த நண்பனும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்...

    நாகப்பட்டிணம் பஸ் ஸ்டாண்டில் என்னுடனிருந்த பால்ய நண்பர்களில் அவனும் ஒருவன் !

    வாழ்க்கை தொடரும் வரை பயணங்களும் முடிவதில்லைதானே... அத்துடன் அவை நமக்களிக்கும் சுகானுபவங்களும் !!!

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர்களோடு செய்த பயணத்தை மறக்கவே முடியாது இல்லையா அண்ணா. நீங்கள் பயணம் பற்றி எழுதினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் சாம் அண்ணா. ஆனா நீங்க பிஸி. அதனால தான் தொந்தரவு பண்ணலை. but செயின் ல நீங்க எழுதினா ரொம்ப சந்தோசம்.

      நீக்கு
  6. பயணங்கள் சுகமானவைதான். மழை என்றாலே பயப்படும் அளவு செய்து விட்டது சமீபத்திய மாமழை. ஒருமுறை பாடல்க கேட்டுக் கொண்டே பயணம் செய்தால், ஒருமுறை புத்தகம் படித்துக்கொண்டே... ஒருமுறை இயற்கையை ரசித்துக் கொண்டே..
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ ஸ்ரீராம் உங்களுக்கும் வரும்....வெங்கட்ஜிக்கும் வரும்...முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, கில்லர்ஜி (அவரு கனவுலேயே பயணம் செய்பவர்!!!!) ஆவி (இவரும் நிறைய பயணம் செய்வாரு!!!)கூட்டாஞ்சோறு செந்தில்னு ஒரு லிஸ்ட் இருக்குப்பா.....இவங்க எல்லாம் ரிசர்வ்ட் ஹிஹிஹி..அடடா அதுக்குள்ள வேற யாராவது உங்கள் எல்லாரையும் சூஸ் பண்ணிடுவாங்களே.....அல்ரெடி ஆட் ஆயிட்டீங்களோ...ஹிஹிஹி திங்கள் கிழமை நைட் வரைக்கும் பொருங்கப்பா...

      கீதா

      நீக்கு
    2. மைதிலி சகோ ரியலி வி எஞ்ஜாய்ட் யுவர் போஸ்ட்..

      நீக்கு
    3. ஸ்ரீராம் சகோவை உங்களுக்கவே விட்டுவைத்தேன். இன்னும் சிலரும் இங்கே பயணம் பிடிக்கும்னு சொல்லிருக்காங்க. விட்டுடாதீங்க:) நன்றி ஸ்ரீ சகா, நன்றி சகாஸ்:)

      நீக்கு
    4. கீதா, ஆவியைச் சேர்த்துப் பின்னர் இங்கு உங்கள் பின்னூட்டம் பார்த்தவுடன் நீக்கி விட்டேன், உங்களுக்காக. சீக்கிரம் பிடித்துவிடுங்கள் அவரை :)

      நீக்கு
    5. அவ்வ்வ்வ்.. நான் இங்கு வரவுமில்லை. இதை படிக்கவுமில்லை.. ;)

      நீக்கு
  7. அன்புச் சகோதரி,

    ‘பயணங்கள் முடிவதில்லை’ பயணத்தைப் பற்றிய பேட்டி நன்றாக இருந்தது.

    த.ம.5

    பதிலளிநீக்கு
  8. பயண சுகம் அலாதியானது அவஸ்தைகளும் உண்டு. நானும் எழுதணுமா? எழுதிடறேன். அப்புறம் ஏண்டா எழுத சொன்னோம்னு நினைக்காம இருந்தா சரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. * அப்புறம் ஏண்டா எழுத சொன்னோம்னு நினைக்காம இருந்தா சரி * never ever. மதுரை தமிழன் என்றால் காமெடியா பதில் சொல்வார், வருண் சீரியஸ் பதில் கொடுப்பார். guess பண்ண முடியும். ஆனா உங்க பதிலை guess பண்ணவே முடியலை. காமெடி சிக்ஸர் தட்டுவீங்களா? கருத்து ஆக்கர் அடிப்பிங்களானு தான் waiting:)

      நீக்கு
  9. "No place like home" கேள்விப்பட்டு இருக்கீங்களா? நான் அந்த வகை. இருந்தாலும் தொடர நீங்க அழைத்ததால் ஏதாவது எழுத முயல்கிறேன், மைதிலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சின்சியர் பதில்களுக்காக வெய்டிங் வருண்:)

      நீக்கு
    2. பாஸ் வெயிலில் இருந்தால்தான் நிழல் ருசிக்கும் ..
      பயணங்கள் இருந்தால்தானே வீடும் பிடிக்கும்..

      நீக்கு
  10. வந்தேன் அன்புத்தோழி, நட்பின் பயணத்தைக் கண்டிப்பாய்த் தொடர்வேன். உங்கள் பதில்கள் கலக்கல், மீண்டும் வருவேன் விரிவான கருத்திட.
    நிலவன் அண்ணா சொல்லியிருப்பது போல் அவ்வரிகளுக்கு நானும் சிரித்தேன் டியர். :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் night டிரைவ் விடியோவின் இரண்டு விசிறிகள் இங்கே இருக்கிறார்கள் டியர் :))) அவர்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கிறேன்:)

      நீக்கு
    2. ஆஹா! அப்படியா :) நன்றி டியர்.
      உங்கள் ரசனை மிகவும் பிரமாதம். எனக்கும் என்னவருக்கும் ஒலியளவில் எப்பொழுதும் பிரச்சனை..அவருக்கு அதிகம் வேண்டும், எனக்குக் கம்மியாக! காரை அவர் எடுத்துச் சென்றிருந்தால் நான் ஸ்டார்ட் செய்தவுடன் முதலில் ஒலியளவைக் குறைப்பேன்.பயணத்தில் என்னால் வாசிக்க முடியாது. மற்றபடி மழையில் பயணிக்க எனக்கும் பிடிக்கும்.
      சரி டியர், பயண எழுத்தாக்கம் துவங்கறேன் :)

      நீக்கு
  11. பயணம்..... இச்சொல்லைக் கேட்ட உடன், படித்த உடன் துள்ளிக் குதிக்கும் என் மனம்....

    நல்ல கேள்விகள்.... அனைவருடைய பதில்களையும் படிக்க ஆவலுடன் நானும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் அண்ணா, பயணம் என்ற சொல்லை கேட்டாலே இப்போ பதிவுலகில் உங்க பேர் தான் நினைவு வரும். முரளி அண்ணா உங்களை book பண்ணிடார்னு நினைக்கிறேன்:) இருவருக்கும் நன்றி!

      நீக்கு
  12. கிளம்பிட்டாங்கய்யா,கிளம்பிட்டாங்க!
    உங்கள் சுய பேட்டி சுவை பேட்டி!
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கெளம்பிட்டோம்னு சொல்லுங்க சார்:)) நன்றி ! நன்றி!

      நீக்கு
  13. பயணங்கள்...முடிவதில்லை உண்மை தான்....
    பயணங்களும் தொடரும்....அதன் நினைவுகளும்...திரும்ப திரும்ப...மனந்தனில் தொடரும்....சுகானுபவம்...தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுபயணங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கட்டும் தோழி! உங்களை நீண்ட நாள் கழித்து இங்கு கண்டது மிக மிக மகிழ்ச்சி:) மிக்க நன்றி!

      நீக்கு
  14. பயணம் என்றால் எனக்கும் பிடிக்கும் நிறையவே அனுபவங்கள் நினைவுக்கு வருகிறதுவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே இருக்கிற பத்து நண்பர்கள் கவனத்திற்கு.G.M சார்க்கு பயணம் னா ரொம்ப பிடிக்குமாம். அவரை பிடிச்சு போடுடுங்க:)
      மிக்க நன்றி சார்!

      நீக்கு
  15. தொடர் பதிவில் நானுமா?
    சிறிது அவகாசம் கொடுங்கள் சகோதரியாரே
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு வேண்டிய நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அண்ணா. ஆனால் உங்கள் சுவாரஸ்யமான தகவல்களுக்கு நாங்கள் காத்திருக்கிறோம் என்று மறவாதீர்கள்:)மிக்க நன்றி அண்ணா.

      நீக்கு
  16. பத்து கேள்விகள் பத்து பேருக்கு அழைப்பு! படிக்க சுவாரஸ்யம்தான். அந்த 10 பேரும் என்ன சொல்வார்கள் என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா அய்யா, நானும் அதை தெரிந்துகொள்ள ஆசையா இருக்கேன். மிக்க நன்றி !

      நீக்கு
  17. நல்லா ரசிக்கிறீங்க அக்கா.. எனக்கு மலைப் பகுதியில் பயணிப்பது ரொம்பவே இஷ்டம்.ஊரும் அப்படியே கிடைத்தது ரொம்ப சந்தோஷம்.நினைத்ததும் கிளம்பி மலையில் 15 கி.மீ ஆவது போய் வருவோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் நீளம் கருதி நான் கத்தரித்த பகுதியில் அதுவும் ஒன்னு அபிக்குட்டி. எனக்கும் மலைப்பகுதிகளில் பயனிப்பதென்றால் அவ்ளோ பிடிக்கும். என்ஜாய் டா:)

      நீக்கு
  18. காலையிலெயே படிச்சிட்டேன். முக்கியமா...

    “மைக்கை நீட்டினா அறிவு இருக்கான்னு கடன் கேட்காத, காறித் துப்பாதா, எந்நேரமும் என்னை தொந்தரவு செய்யலாம்னு எனக்கு லைசன்ஸ் கொடுத்திருக்கும் பத்து நண்பர்களிடம் இந்த கேள்வியை பாஸ் செய்கிறேன்.”

    “ டேய் உனக்கிது தேவையா?”


    .
    .
    .
    .
    .
    நான் என்னச் சொன்னேன்.

    ஹ ஹ ஹா


    அருமை .

    தொடர்க!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ நீங்க எனக்கு லைசன்ஸ் கொடுக்கலை பாஸ். அதனால் தான் விட்டுவிட்டேன்:)))) ஆனாலும் என் பொதுவான ரசனைக்கும் உங்கள் ரசனைக்கு ரொம்ப வித்தியாசம் இல்லன்னு தான் நினைக்கிறேன் அண்ணா:) மிக்க நன்றி!

      நீக்கு
  19. கேள்வியும் நானே பதிலும் நானேன்னு ஆரம்பித்து சிறப்பான பதிவர்களை மாட்டிவிட்டிருக்கிறீர்கள்...

    தொடரட்டும்...

    போ நீ போ... எனக்கும் பிடித்த பாடல்... தங்கமகனில் கூட ரெண்டு அழகான மெலோடி போட்டிருக்கான்... இப்படி தேவையில்லாம தனக்குத்தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டான்... இருந்தும் காலம் எல்லாம் மறக்கும்... மாற்றும்... இப்ப நாம வெள்ளத்தை மறக்கலையா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர்களை மாட்டிவிட்டிருக்கிறீர்கள்...* :))))
      இசையை ரசித்தாலும் இனி அணிருத்க்கு முன்பிருந்த அபிமானம் இருக்கபோவதில்லை அண்ணா. நீங்க ஒரு நல்ல இசை ரசிகர் என்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
  20. பயணம் தொடரட்டும் பல இனிமையான பாடல்கள் பயணத்தை சுவாரசியமாக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் நேசன் சகோ! பாடல்கள் ஒரு டைம் மெசின் போல பயணத்தை எங்கெங்கோ கொண்டுசெல்லும் :) மிக்க நன்றி

      நீக்கு
  21. கிரேஸ் பதிவில் சொன்ன மாதிரி இங்கே பின்னூட்டம் போட்ட எல்லோருமே பயணம் பிடிக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்... முடிந்தவரை எல்லோருடைய பயணத்தையும் படித்துப் பார்க்கிறேன்... அதுவே பயணம் சென்ற அனுபவத்தை எனக்குக் கொடுக்கும் என நினைக்கிறேன்.. ஒரு சுவாரசியமான துவக்கத்தைக் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மேடம். பயணக்குறிப்புகள் சுவைமிகுந்தை. மிக்க நன்றி!

      நீக்கு
  22. கிரேஸ் பயணம் இங்கும் தொடர்வதறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  23. இனிமையான பதிவு! 'மறக்க முடியாத பயணம்' - கேள்விக்கான பதில் சுவை! ஆனால், பேருந்தில் பேசிக்கொண்டே பயணிப்பது பற்றி இதுவரை நான் சிந்தித்தது கூட இல்லை. எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள் எனவும் தெரியவில்லை. மூன்று, நான்கு பேருக்கு மேல் பயணிக்க இயலாத மகிழுந்து, தானி போன்றவற்றிலும் மிகவும் விழிப்புடன் ஓட்ட வேண்டிய ஈருருளிகளிலும் பயணிக்கும்பொழுது பேசிக்கொண்டே போகிற நாம், அவ்வளவு இடம் இருக்கிற பேருந்தில் ஆர அமரப் பேசியபடி பயணித்தால் என்ன? மேற்படி ஊர்திகளில் தெரிந்தவர்களுடன் மட்டுமே பெரும்பாலும் பயணிக்கிறோம் என்று காரணம் சொன்னாலும், அறிமுகமில்லாதவர்களுடன் பயணிக்கும் தொடரிகளில் மட்டும் எப்படி அடுத்தவருடன் பேசிக்கொண்டு செல்கிறோம் எனும் கேள்வியும் எழுகிறது. ஒருவேளை, சென்னைப் பேருந்து நெரிசல் காரணமாய்ப் பேருந்து என்பது நிறைய இடம் உள்ள ஊர்தி என்பதே எங்களுக்கெல்லாம் மறந்து விட்டதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை அந்த நகரின் பரபரப்பும், நெரிசலும் உங்களை பேசவிடாமல் செய்திருக்குமோ என்னவோ:) நீங்க சாம் அண்ணா மாதிரி பிஸியானவர் என்பதால் தான் தொல்லை செய்யவில்லை சகா:) மிக்க நன்றி !

      நீக்கு
    2. மும்முரமாக இருந்தால்தான் குறைவாக வேலை செய்ய வேண்டும் என்றில்லை சகா, சோம்பேறித்தனம் கூடப் போதும் அதற்கு! :-) (என்னைச் சொன்னேன்!) :-D
      (சாமானியன் ஐயா கோபித்துக் கொள்ளப் போகிறார்).

      நீக்கு
  24. நல்லதோர் துவக்கம்
    தொடரட்டும் பயணம்

    பதிலளிநீக்கு
  25. ஐய அம்மு என்ன இது !ம் ம்..ம் என்னையும் மாட்டியதற்கு ரொம்ப நன்றி அம்மு. பார்க்கலாம் ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாட்டிவிட்டத்தை இம்புட்டு மகிழ்ச்சியாய் சொல்லும் தோழிகள் இருக்கும்வரை எனக்கு என்ன கவலை இனியாச்செல்லம்:) சீக்கிரம் எழுதுங்க. படிக்க ஆவலா இருக்கேன்.

      நீக்கு
  26. உங்களுடைய அழகான பயண அனுபவங்களையும் பயணம் தொடர்பான சிந்தனைகளையும் ரசித்தேன்மா. உங்கள் விருப்பத்துக்கிணங்க, இன்று நானும் தொடர்பதிவை வெளியிட்டுள்ளேன். தாமத பதிலுக்குப் பொருத்தருள வேண்டுகிறேன்மா.

    பதிலளிநீக்கு
  27. ஆஹா அருமை மா...நாம் போன அந்தப்பயணம் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று....தான்.

    பதிலளிநீக்கு
  28. அன்புடையீர் வணக்கம்! தாங்கள் தொடங்கி வைத்த தொடர் பதிவு ஒன்றினைத் தொடர்ந்து நானும் எழுதியுள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html

    பதிலளிநீக்கு
  29. பயணங்கள் முடிவதில்லை... http://avargal-unmaigal.blogspot.com/2016/02/travel-never-end.html

    பதிலளிநீக்கு