ஞாயிறு, 22 டிசம்பர், 2013

வளரும் முகமூடிகள்

மண்ணில் பிறந்த மானிடர்க்கெல்லாம்
வருடமெல்லாம்  வளரும்
முகமூடிகள் ஒவ்வொரு பிறந்தநாளிலும்
ஒரு மெழுகுவர்த்தி தான் கூடும்
முகமூடியின் எண்ணிக்கையோ
கணக்கில் அடங்காது

மனம் சிரிக்க முகம் அழும்
உள்ளே குறுகுறுக்கதான் செய்யும்
மனம் அழ முகம் சிரிக்கும்
வெட்கித்தலைகுனிய வேண்டியதுதான்

வெங்காய சருகாய்
உரிக்க உரிக்க முகமூடிகள்
எனக்கு மட்டுமல்ல
எவர்க்கும் தான்

என்றேனும் பார்க்கும்
உண்மை முகங்கள்
உறைய வைத்துவிடுவதால்
எவரையும் துன்புறுத்தாமல் இருக்க
உவகையோடு அணிகிறேன்
இன்னொரு முகமூடி

                                             -கஸ்தூரி23 கருத்துகள்:

 1. உண்மை விரும்பவில்லை என்றாலும் சில நேரங்களில் முகமூடி தேவைப்படுகிறது அனைவருக்கும்.ஆழ்ந்த கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. (இன்றைக்கு) அதிக முகமூடிகள் தேவைப்படுவது உண்மை தான்...

  பதிலளிநீக்கு
 3. //வெங்காய சருகாய்
  உரிக்க உரிக்க முகமூடிகள்
  எனக்கு மட்டுமல்ல
  எவர்க்கும் தான்//
  நன்று சொன்னீர்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 4. அழகான கவிதை தோழி. வாழ்த்துகள் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தோழி தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ..

   நீக்கு
 5. உண்மையான போதும் முக மூடி தானோ என்றல்லவா எண்ணத் தோன்றுகிறது.
  ஆனால் உண்மையும் தான் தேவையும் தான்.
  மிக்க நன்றி....! வாழ்க வளமுடன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தோழி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ..

   நீக்கு
 6. அப்படியே நான் உறைந்து போனேன்!...

  கண்டிப்பாக அனைவரிடமும் அழகாய், அகோரமாய், அருவருப்பாய்....
  எத்தனையோ விதவிதமான முக மூடிகள் இருக்கத்தான் செய்கின்றன..

  மனம் நிறைத்த உண்மைக் கவிதை!

  நானும் வெளியே சிரித்தும் உள்ளே அழுதும் இப்படி நிறமும் வடிவமும்
  மாற்றிக்காட்டும் முகமூடியோடுதான் அலைகிறேன்!...
  என்ன செய்வது... நியதி!!

  மனமார்ந்த வாழ்த்துக்கள்! தோழி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவ்வளவு ரசித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி தோழி
   நன்றி உங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்

   நீக்கு
 7. பதில்கள்
  1. நன்றி தோழி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ..

   நீக்கு
 8. எவரையும் துன்புறுத்தாமல் இருக்க
  உவகையோடு அணிகிறேன்
  இன்னொரு முகமூடி

  சரி விடு...
  பொய்மையும் வாய்மை இடத்த...
  நல்ல கவிதைன்னு சொல்ல பயமாயிருக்கு... இதுவும் முகமூடியோ? இல்லைதான், என்றாலும் ஒரு கவிதைக்குள் எல்லாரும் தன்னைப் பார்க்க முடிந்தால்... அதுதான் வெற்றி. படம் எங்கதான் சுடுவியோ... இல்ல உனக்காக யாராவது சுட்டு ரெடியா வச்சிருக்காங்களோ? படமும் அருமை. வழக்கம்போல தலைப்புத்தான் நிறைவாக இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்பு வைக்கையில் கொஞ்சம் முனைப்பு வேண்டும்என்று சொல்கிறீர்கள் .சரி முற்சிக்கிறேன் அண்ணா

   நீக்கு
 9. சகோதரிக்கு வணக்கம்
  ஒவ்வொருவரும் நேரத்திற்கு தகுந்தாற்போல் முகமூடியை மாற்றிக் கொண்டு தான் உள்ளோன். தங்கள் கவி மூலம் அவரவர் முகம் பார்க்க ஒரு வாய்ப்பை நல்கியுள்ளீர்கள். சிறப்பான ஆக்கம். இருப்பினும் முடிந்த வரை முகமுடி தவிர்க்கப் பார்ப்போம். குறைந்த பட்சம் அது முகமுடி என்று உணர்ந்து விட்டால் கலட்டி எறிய தயங்க வேண்டுமென்பது எனது கருத்து. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கழட்ட முடியாத சூழலை தான் கவிதையில் புலம்பி இருக்கிறேன் .முயற்சிக்கிறேன் சகோ

   நீக்கு
 10. நல்லாத் தான் சொன்னீங்க பாண்டியன், கடைசியில் “கலட்டி எறிய தயங்க வேண்டுமென்பது” மட்டும் “கழற்றி எறியத் தயங்க வேண்டாம்” என்று முடிந்திருக்க வேண்டுமோ? “எழுதிய மைதிலிக்கே புரிந்துவிட்டது, இடையில் நீர்என்ன?” என்கிறீர்களா? அதுவும் சரிதான்... (வாத்தியார் புத்தி போகமாட்டேங்குதே!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. comment போட்ட styleக்கு முகநூல் பாணியில் like like

   நீக்கு
  2. ஐயயோ! தயங்க வேண்டாம் என்பதற்கு தான் அப்படி எழுதி விட்டேன் ஐயா. சுட்டிக்காட்டியமைக்கு எனது நன்றி ஐயா. தவறைத் திருத்திப் படித்துக் கொண்ட எனது சகோதரிக்கும் நன்றிகள்.

   நீக்கு