ஞாயிறு, 29 டிசம்பர், 2013

கில்லி students !!!

                       வெட்டியாய் பொழுது போகும் நேரங்களில் you tubeபில் கழிவில் இருந்து கலைப்பொருட்கள் செய்யும் படங்களை பார்ப்பதுண்டு .பள்ளியில் பாட இணை செயல்பாடுகளில் நான்கற்றுகொடுத்ததை plastic bottle,paper cup ,egg carton ,jute மற்றும் வாட்டர் கலர்  வைத்து art and craft தேர்வில் என் வகுப்பு மாணவர்கள் அடித்த கில்லி இதோ

















இதில் சமூக அறிவியல் பாடத்திற்கு fa(a) செயல்பாடாக செய்த சனல் பொருட்களும் அடங்கும் .எப்டி என் பசங்க ?!

22 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி சார் தங்கள் வருகைக்கும் ,வாழ்த்திற்கும்

      நீக்கு
  2. நன்றாக உள்ளது.. பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்

      நீக்கு
  3. அருமை.....

    சண்டிகர் நகரில் ராக் கார்டன் என ஒன்று உண்டு. அதில் பல தேவையில்லாத பொருட்களைக் கொண்டு அழகழகாய் பொம்மைகள் செய்திருப்பார்கள். அது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார் தங்கள் வருகைக்கும் ,பாராட்டிற்கும் .என் மாணவர்களிடம் தெரிவிக்கிறேன்

      நீக்கு
  4. அருமைப்பா. என்னால் இப்படியெல்லாம் செய்ய முடியாது, செய்யக் கற்றுக்கொண்ட குழந்தைகளுக்கு என் வாழ்த்துகளும், கற்றுத்தந்த ஆசிரிய-நண்பர்களுக்கு என் பாராட்டுகளும். அந்தந்தக் கைவினைப் பொருள்களின் படங்களின் கீழ் அந்தந்த மாணவர் பெயரைச் சேர்த்து, அதையும் அவர்களிடமே காட்டினால் அதனால் வரும் மகிழ்ச்சியில் இன்னும் கூடுதலாகத் திறன்காட்டுவார்களல்லவா?
    தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது. அன்றோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! எல்லாருமே உன் வகுப்பு மாணவர்களா? எப்டிப்பாஃஃஃஃ?
      வழக்கமாக 100விழுக்காடு தேர்ச்சி பெறும் என் மாணவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்த என் நண்பன் கேட்டதை நான் உன்னிடம் கேட்கிறேன்...“உன்கிட்ட படிச்சும் எப்புடீ? ரொம்ப சொந்த புத்தி உள்ள பசங்களா இருப்பாய்ங்களோ?”

      நீக்கு
    2. குழந்தைகளின் மனஓட்டமறிந்து அவர்களை மேம்படுத்தும் உன் போன்ற ஆசிரியச் சகோதரிகளிடம் மாணவனாய் வந்து பாடம் கேட்க ஆசையாக இருக்கிறது தங்கையே... இத்துடன் தொடர்புடைய நம் நண்பர் முனைவர் வா.நேரு அவர்களின் இந்தப் படைப்பைப் படித்து நம் ஆசிரியச் சகோதர- சகோதரிகளுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன் -http://vaanehru.blogspot.in/2013/12/blog-post_29.html -உன் அன்பு அண்ணன்

      நீக்கு
    3. sorry அண்ணா ,பணிச்சுமை உடன் நன்றி தெரிவிக்க இயலவில்லை .
      இந்த வருடத்துவக்கத்தில் என் வகுப்பு நாலு பிரிவா (கேங் )இருந்தது .அதை போக்க தான் குழுசெயல்களாய் கொடுத்து எல்லோரையும் சேர்த்திருக்கிறேன்.படைப்புக்கு கிழே பெயர் போட்டால் மறுபடி பிரிவினை வரும்.இப்போ எல்லாரும் happy.தவறாய் பேசியிருந்தால் மன்னிக்கவும் .வாழ்த்தியமைக்கு நன்றி அண்ணா

      நீக்கு
  5. அட... மிகச் சிறப்பு! அசத்துறீங்க நீங்களும் உங்க மாணவர்களும்...:)

    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி ,கிறிஸ்மஸ் கொண்டாட்டம் எப்படி இருந்தது ?

      நீக்கு
  6. மாணாக்கரின் கைவண்ணம் அருமை !!! பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி ,உங்கள் பதிவை பார்த்தபின் தான் என் மாணவர் படைப்பையும் இப்படி போடலாம் என்றே தோன்றியது .அதற்காக spl thanks

      நீக்கு
  7. மாணவர்களை கல்வி மட்டுமன்றி,
    பாட இணை செயல்பாடுகளின் ஊக்குவிக்கும்
    தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது
    சகோதரியாரே
    தொடருங்கள் தங்களின் சீரிய பணியினை
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை போன்ற தகவல் கடலுக்கு முன் இது கம்மிதான் அண்ணா .வாழ்த்திற்கு நன்றி

      நீக்கு
  8. சகோதரிக்கு வணக்கம்
    தங்களது கலைத்திறனை மாணவர்களுக்கும் கற்று கொடுத்த தங்களுக்கு எனது அன்பான பாராட்டுகள். ஆர்வமுடன் கற்று தனது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் பாராட்டுகள் அவர்களிடமுள்ள தனித்திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பைத் தந்துள்ளீர்கள் இனி வரும் காலங்களில் அவர்கள் கலக்குவார்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ ,பாடங்கள் சுமையாகவும்
      வகுப்பறைகள் சிறையாகவும்
      ஆகாமல் இருக்க இவை உதவும் என்று நினைக்கிறேன் ,சரி தானே ?
      பள்ளிகள் பற்றிய தங்கள் பதிவு அருமை .சகோ happy new year

      நீக்கு
  9. vaalththukkal sis.maanavarkalai nesikkum aasiriyarukku new year vaalththukkal

    பதிலளிநீக்கு
  10. உங்க பேர்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மகிழ். அழகான தமிழ் பெயர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராஜி . so படைப்பு ஒன்னும் சொல்லிகிர மாதிரி இல்லை னு சொல்றிங்களா? lol .

      நீக்கு