புதன், 19 ஆகஸ்ட், 2015

கொஞ்சம் பதிவர் meet English!!!!- part xi

      எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கிச் செல்கின்றன என்பது போல எங்க பார்த்தாலும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பான அழைப்புகளும், செய்திகளும் தான். புதுக்கோட்டைக்கார நானும் என் பங்குக்கு அழைக்கணும் இல்ல, so இப்போ கொஞ்சம் English பகுதியில் என் invitation:)


                      எங்க பார்த்தாலும் இப்ப  flags and festoons (கொடியும்,தோரணமும்). புதுகை பதிவர் விழாக்குழுவினர் விழாவிற்காக நகரையே அதிரடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  (Our people are painting our town red) கஸ்தூரியின் வாட்ஸ் அப் பயன்பாட்டுக்கான செல்பேசியில் இப்போ மேலும் ஒரு குழு. பதிவர் சந்திப்பு விழாக் குழு. உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா புதுகை இலக்கிய மக்களே!! முதலில் தமிழ் கணினி சங்கம். அப்புறம் வீதி இலக்கியக் கூட்டம், பின் முழுநிலா முற்றம். இப்போ பதிவர் விழாக்குழு! கூட்டிக்கழிச்சுப் பார்த்த எல்லா குழுவிலும் ஏறத்தாழ அதே மக்கள் தான். ஆனாலும் எதை செய்யாலும் professionalல செய்வாங்கள நாம் ஆளுக்குங்க!  மிடுலப்பா. I am agape of your sincerity (ஆச்சிரியத்தில் வாய்திறந்து பார்க்கிறேன்). விழாவை இன்னும் இன்னும் எப்படி கலர்புல்லா, பவர்புல்லா நடத்தலாம்னு எப்போ பார்த்தாலும் இதே சிந்தனை தான். (We want to  make meeting a gala occasion).

       விழா நிச்சயமாக புத்துணர்ச்சியும், புதுமகிழ்ச்சியும் தரும்.(It will be ebullient and cheerful). உலகத்தமிழ்ப்பதிவர் மக்களே!! ஒரு முறை உங்கள் கவலைகளை ஒதுக்கிவிட்டு நம் நண்பர்களோடு மகிழ்ந்திருப்போம்.( let your hair down for once and enjoy with our friends). உலகம் பிறந்தது நமக்காக என பாடத்தோன்றும் அளவில் விழா ஏற்பாடுகள் இருக்கின்றன. (the arrangements make us  feel this world is our oyster). எனவே இந்த விழாவை தவறவிடாது முன்பதிவு செய்து, சகோதரி மாலதி அவர்களும், கீதா அக்காவும் கேட்டுகொண்டதற்கு இணங்க குடும்பத்தோடு வருகை தருமாறு புதுகை பதிவர் சந்திப்புக்குழு சார்பாக வேண்டுகிறேன். அப்புறம் என்ன  மக்களே! மூட்டை, முடிச்சை (bag and baggage) கட்டிக்கிட்டு கிளம்ப வேண்டியது தானே.


67 கருத்துகள்:

 1. வருகையைப் பதிவு செய்து விட்டேன்
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது சார்:) மிக்க நன்றி!

   நீக்கு
 2. எனக்கும் பங்கேற்க ஆசைதான் ஆனாலும் இப்போதைக்கு வர முடியாது இருப்பினும் இது எங்கள் குடுமபத்தார் (வலைத்தள சொந்தங்கள் )பங்கேற்று
  நிகழ்த்தும் விழா இவ் விழா சிறப்புற அங்கு செல்லும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழி ! பகிர்வுக்கு மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் மனம் இங்கே தானே இருக்கும் சகோ:) கவலை வேண்டாம், நீங்கள் புதுகைக்கு எப்போது வேண்டுமானாலும் வருகை தரலாம்:) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 3. (PeN) Singam Onnu Purappattuthe entra vagaiyil oru arikooval from Pudhugai. Ungal araikooval ulagam ellaam ketturuchchaam.....adiradithan ponga...puthugaiye adiruthunu kelvipattom....unmaithan unga pathivu solluthu...summa adiruthullanu.......kilambittomla..moota mudichoda....

  tamilfont thideernu velai seiya matenguthu..athan ...ippadi..sorry..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத்து டியர்!! awaiting :) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
  2. துளசி அண்ணாவிற்கு தனி invitation. அண்ணா அவசியம் வரணும்:) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 4. புதுமையாக ஓர் அழைப்பு! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. // எங்க பார்த்தாலும் இப்ப flags and festoons (கொடியும்,தோரணமும்). புதுகை பதிவர் விழாக்குழுவினர் விழாவிற்காக நகரையே அதிரடித்துக் கொண்டிருக்கிறார்கள். ///

  சகோதரி அவர்களே நீங்கள் சொல்வதைப் பார்த்தால், வலைப்பதிவர் மாநாட்டிற்கு முன்னரே புதுக்கோட்டையை ஒரு வலம் வந்து விடவேண்டும் போலிருக்கிறது.

  நடக்கட்டும்! நடக்கட்டும்! எல்லாவற்றையும் படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னாளில் பதிவு எழுத உதவும்.

  சகோதரி அவர்களது அழைப்பிற்கு நன்றி! ( இனிமேல்தான் வருகை குறித்து பதிவு செய்ய வேண்டும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. *சகோதரி அவர்களது அழைப்பிற்கு நன்றி! ( இனிமேல்தான் வருகை குறித்து பதிவு செய்ய வேண்டும்)* அவசியம் செய்யுங்க அண்ணா:) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 6. >>> அப்புறம் என்ன மக்களே!.. மூட்டை, முடிச்சைக் கட்டிக் கிட்டு கிளம்ப வேண்டியது தானே!..<<<

  அன்பின் அழைப்பிற்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ விழாவில் சிந்திப்போம் தானே அய்யா:) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 7. வணக்கம்
  நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. congrats for acheiving 100th follower pa...
  நூறாவதுபின்பற்றாளரைப் பெற்றமைக்கு வாழ்த்துகள் பா!
  (எனக்கென்னவோ இது நம்ம மேஜர் சுந்தர்ராஜனை நினைவூட்டுது) என்றாலும்வித்தியாசமாத்தான் இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா!!! கரெக்ட்டா கண்டுப்பிடுச்சுட்டீங்களே!!!! நன்றி அண்ணா!

   நீக்கு
 9. அழைப்புகொடுத்தவிதம் ,படம்அருமைடீச்சர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி டீச்சர்! எல்லாம் உங்களை பார்த்ததுக்கு பிறகு தான்:)

   நீக்கு
 10. குரலின் இனிமை யொன்று
  கேட்கிறதே காதினிக்க
  பாவி உன் பக்கம்
  வந்தமர முடியலையே
  மேடு பள்ளங்கள்
  இடையில் எத்தனையோ
  தாண்டி வரவெனக்கு
  தந்திரமும் தெரியலையே
  பயணம் தான் வெகு தூரம்
  பக்கம் தான் உள்ளது உம்முள்ளம் அம்மு ! அழைப்பிற்கு நன்றி !

  நிகழ்சிகள் சிறப்புற வாழ்த்துக்கள் அம்மு! கலக்குங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்லம்!
   உங்களுக்கு எப்போ முடியுதோ அப்போ வாங்க:) நம் புதுகை வலைப்பூ மக்கள் ரொம்ப நட்பானவர்கள். நீங்க வருகிறநாளை திருநாள் ஆக்கிவிடுவார்கள்:) கவலையே வேண்டாம்:) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 11. அன்புச் சகோதரி,

  புதுகை கலை கட்டட்டும்
  அதுவே அதிசயம் ஆகட்டும்
  அகிலம் வியக்க புகழை எட்டட்டும்!

  -வாழ்த்துகள்.
  த.ம. 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா! அவசியம் வந்துடுங்க:) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 12. நல்ல தலைமை,சிறப்பான திட்டமிடல், திட்மிட்டதை நிறைவேற்றத் துடிக்கும் அதிரடிப் படை, இவற்றை பார்க்கும்போது நிச்சயம் எதிர்காலத்தில் பேசப்படும் திருவிழாவாக அமையும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அண்ணா! இந்த உற்சாகமான வார்தைகள் எங்கள் குழுவுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும். மிகமிக நன்றி! புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 13. imformation உடன் கூடிய invitationக்கு நன்றி ,மூட்டை முடிச்சுக்கு நான் எங்கே போறது )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாஸ் !!! நீங்கள் கையை வீசிக்கிட்டு ஜாலியா வாங்க:) சும்மா ரைமிங்கா சொன்னேன்:) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 14. பதில்கள்
  1. ஆமா, ஆமா:) நீங்க ரொம்ப ரிசர்வ்ட் டைப் என்று கேள்விப்பட்டேன். வருவீர்கள் தானே சகோ??!! :) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 15. இந்த ஆண்டு பார்த்து இப்டிக் கொண்டாடுறீங்களேம்மா :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுங்க டியர்! மேல இனியாச்செல்லம் கமெண்டுக்கு கொடுத்த ரிப்ளையை பாருங்க:) உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியனுமா என்ன?!

   நீக்கு
 16. Mythili's unique touch to invite
  மைதிலியின் தனித்துவமான அழைப்பு

  வாழ்த்துகள் டியர், மின்னலா வந்து கலக்குறீங்க :)

  பதிலளிநீக்கு
 17. பதில்கள்
  1. எல்லாம் உங்க ட்ரைனிங் தானே அண்ணா! மிக்க நன்றி! :) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 18. பதில்கள்
  1. அப்படியா!!! மிக்க நன்றி அண்ணா! புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 19. பதிவர் சந்திப்பு இப்போதே களைகட்ட தொடக்கி விட்டது. அழகான பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார்! புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 20. கலக்குங்க கலக்குங்க......ஹும் நானும் இங்கு கலக்குறேன் வேற என்ன வரமுடியாத சோகத்தில் சரக்கைதான் நம்மால் கலக்க முடியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ! இப்டி என்னையேன் வம்புல மாட்டிவிடுறீங்க!!! இனியாவிற்கு சொன்ன ரிப்ளையை படிச்சுபாருங்க சகா! so நீங்க எப்போவந்தாலும் அது விழாவா இருக்கும்:) டீலா?

   நீக்கு
 21. மதுரைப் பதிவர் விழாவுக்கு பதிவு செய்தவர்கள் பலரையும் ஆவலுடன் காண விழைந்தபோது பலரும் வருகை தராததால் ஏமாற்ற மடைந்தேன் . ஒரு ஆர்வத்தில் பதிவு செய்பவர்கள் அவசிய ம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் please do not say yes when you mean no.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ நீங்க வரீங்க தானே சார்!!! மிக்க மகிழ்ச்சி :) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 22. பதில்கள்
  1. அப்பா!!! எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா சார்!!! நானும் தில்லையகம் தோழி கீதாவும் பேசிகொண்டிருக்கும் போது தெரிந்து கொண்டேன். அவங்க உங்க neighbourன்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோசம் சார்! அவசியம் வரணும் நீங்க:) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 23. இதுவரை எந்தப் பதிவரையும் சந்திக்காமலே பதிவுலகில் பல ஆண்டுகளாக குப்பை கொட்டும் என்னுடைய வாழ்த்துக்களை உங்களுக்கு சொல்லிட்டுப் போயிடுறேன்.

  If I had met you all, my personality would have been completely different from what I am now in the blog world! BTW, I am a gemini. Though I dont believe in astrology, one of my friends used to tell me that I have a "dual character" and that I am a "perfect gemini" -according to her. :) May be I am?. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. *இதுவரை எந்தப் பதிவரையும் சந்திக்காமலே பதிவுலகில் பல ஆண்டுகளாக குப்பை கொட்டும் என்னுடைய வாழ்த்துக்களை உங்களுக்கு சொல்லிட்டுப் போயிடுறேன்.** இதே மாதிரியான ஒரு டச்சிங் வாழ்த்தோடு தான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள் நினைவிருக்கா வருண்:) (மகியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து) வாழ்த்துக்கு நன்றிகள்!

   அந்த தோழி சொன்னதை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன். செம காட்டமாய் சில பதிவும், ரொம்ப மென்மையான (கிரேஸ், இனியா, மைதிலி போன்றோர்கான) சில கமெண்ட் ரிப்ளைகளையும் ஒண்ணா படிக்கும்போது அந்நியன் பட க்ளைமாக்ஸ் பார்க்கிற மாதிரியே இருக்கும்:)))

   ஆனாலும் once வருண் புதுகை வரணும்னு புதுகை சார்ப்பாகவும் வரவேற்கிறேன் சகா!

   நீக்கு
 24. ஒரு மொழியின் சொத்தே அதன் மரபுத்தொடர்களும், பழமொழிகளும்தாம் என்பர். அவற்றைக் கற்பிக்கும் விதமாக நீங்கள் எழுதும் இந்தத் தொடரை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன். சிறப்பான முயற்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. **ஒரு மொழியின் சொத்தே அதன் மரபுத்தொடர்களும், பழமொழிகளும்தாம் என்பர். அவற்றைக் கற்பிக்கும் விதமாக நீங்கள் எழுதும் இந்தத் தொடரை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன். சிறப்பான முயற்சி!**
   மிக்க நன்றி சகா!
   அதெல்லாம் சரி, நீங்க விழாவிற்கு முன்பதிவு செய்துட்டீங்களா?? :)
   அவசியம் வரணும் சகா!
   புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
  2. என்னால் வர இயலாது. அதற்காக வருந்துகிறேன் சகா! உங்கள் வரவேற்புக்கு நன்றி!

   நீக்கு
  3. வருந்த வேண்டாம் சகா! உலகம் இன்னும் வட்டம் தான்:) நிச்சயம் பார்க்கலாம்!

   நீக்கு
 25. அழைப்பிற்கு நன்றி மைதிலி.....

  வர இயலாமை..... நிச்சயம் பிறிதொரு சமயம் புதுக்கோட்டையில் உங்களனைவரையும் சந்திக்கிறேன்.....

  விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரிகிறது அண்ணா! என்றாலும் உங்களுக்கு நேரம் கிடைக்கையில் அவசியம் புதுகை வாருங்கள்:) ஆதி அண்ணியையும், குட்டீசையும் கூட்டிகிட்டு:)

   நீக்கு
 26. பதிவர் சந்திப்பு இனிதே இடம்பெற எனது வாழ்த்துகள்

  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார்! கண்டிப்பா வந்து பார்க்கிறேன். புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 27. பதில்கள்
  1. அப்டியெல்லாம் எஸ்கேப் ஆகிடாதீங்க மனோ மேடம், அவசியம் வரும்:) புதுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது

   நீக்கு
 28. அக்கா வித்தியாசமான பதிவு. அசத்தி விட்டீர்கள். வாழ்த்துகள். விழா சிறப்பாக நடைபெற உழைத்துக் கொண்டிருக்கும் நமது நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு