blogging உலகில் பரபரப்பான சில புதிய வார்த்தைகளை பார்த்தோம் இல்லையா? இப்போ வேற சில புதிய சொற்கள். சமயத்தில் செய்தித்தாள் வாசிக்கும் பொழுது சில அறிக்கைகளை பற்றி குறிப்பிட வார்த்தைகளே இல்லையோ என கையறுநிலையில் கவலைப்பட்டிருப்பீர்கள். இன்றைய உலக அரசியலில் பயன்படுத்த தெரிந்து கொள்ளவேண்டிய ஆங்கில சொற்கள் இங்கே. அப்புறம் எந்த வார்த்தையை எங்கே பயன்படுத்தனும்கிறது உங்க சாமர்த்தியம் .
oxymoron
தமிழில் முரண்தொடை என்று குறிப்பிடுவார்கள். முதல் வார்த்தைக்கு இரண்டாவது வார்த்தை எதிர்சொல்லா இருக்கும். கருணைகொலைமாதிரி.இதோ சிலஎடுத்துக்காட்டுகள்
1. A fine mess -தெளிவான குழப்பம்
2. A little big-கொஞ்சம் பெரிய
3. A new classic-புதிய பழமை(கிளாசிக் -ரசிக்கும் விதமான பழமை என கொள்ளலாம்)
4. Act naturally-இயல்பாய் நடி
5. Aging yuppie-வயதாகி கொண்டிருக்கும் இளைஞன்(yuppie நல்ல வேலையில் உள்ள மிக இளைமையானவன் "young urban professional" சென்ற ஆண்டு தீபிகா படுகோன் திருமணம் செய்து கொள்ள eligible bachelor யார் னு ஒரு சர்வே நடத்தினாங்கலாம். அதில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ராகுல்காந்தி வெற்றி பெற்றார்( connect பண்ணிட்டோம்ல)
ambiguities
ஒரு செய்தியை ஆளாளுக்கு ஒரு பொருள் கொள்ளும் படி கூறுவது.
1. She saw a little boy with binoculars
அவள் பைனாகுலர் வழியா ஒரு சிறுவனை பார்த்தாளா?
இல்லை பைனாகுலர் வைத்திருந்த சிறுவனை பார்த்தாளா?
2. A good life depends on a liver
நல்ல வாழ்க்கை அவரவர் கல்லீரலை சார்ந்ததா? இல்லை
நல்ல வாழ்க்கை என்பது வாழ்பவரை பொறுத்ததா?
நல்ல வாழ்க்கை அவரவர் கல்லீரலை சார்ந்ததா? இல்லை
நல்ல வாழ்க்கை என்பது வாழ்பவரை பொறுத்ததா?
3. They are hunting dogs
அவர்கள் நாய்களை வேட்டையாடினார்களா?
இல்லை அவர்களே வேட்டைநாய் போன்றவர்களா?
ஒரு சுவாரஸ்யமான அம்பிக்யுவிடி
சுதந்திர போராட்ட காலத்தில் நேரு புதுக்கோட்டை வழியாக ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருந்ததாம். வெள்ளைகார காவலர்கள் ஒரு அரசாங்க உத்தரவு கடிதத்தைக் காட்டி அவரை வழிமறித்தனராம். அதில் நேரு தனது காரில் புதுகை சமஸ்தானத்தை கடக்க அனுமதிக்கஇல்லை என இருந்ததாம். உடனே நேரு தனது காரை ஊருக்கு வெளியே அனுப்பிவிட்டு, நடந்தே சமஸ்தானத்தை கடந்தாராம். அந்த உத்தரவில் இருந்த அம்பிக்யுவிடி யை அருமையாய் பயன்படித்திருக்கார்ல?
அவர்கள் நாய்களை வேட்டையாடினார்களா?
இல்லை அவர்களே வேட்டைநாய் போன்றவர்களா?
ஒரு சுவாரஸ்யமான அம்பிக்யுவிடி
சுதந்திர போராட்ட காலத்தில் நேரு புதுக்கோட்டை வழியாக ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருந்ததாம். வெள்ளைகார காவலர்கள் ஒரு அரசாங்க உத்தரவு கடிதத்தைக் காட்டி அவரை வழிமறித்தனராம். அதில் நேரு தனது காரில் புதுகை சமஸ்தானத்தை கடக்க அனுமதிக்கஇல்லை என இருந்ததாம். உடனே நேரு தனது காரை ஊருக்கு வெளியே அனுப்பிவிட்டு, நடந்தே சமஸ்தானத்தை கடந்தாராம். அந்த உத்தரவில் இருந்த அம்பிக்யுவிடி யை அருமையாய் பயன்படித்திருக்கார்ல?
fallacy-tricky, deception, illusion
இது நிச்சயம் கட்டுக்கதை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று தெரிந்து விலைவாசி, மின்சாரம், மக்கள் நலன் இன்னும் எத்தனை எத்தனை fallacy !!!
bushism
இரண்டாம் புஷ் உளறிக்கொட்டுவதில் மன்னர். இவர் பேசியஅம்பிக்யுவிடி வாசகங்களை புஷிசம் என்றே செல்லமாய் அழைகின்றன அமெரிக்க பத்திரிக்கை உலகம். வேறு எங்கு சென்று ஏமாறாதீர்கள். எங்களிடம் வாருங்கள் என்பது போன்ற இவரது பேச்சின் ஒரு உதாரணம் இங்கே.
"I'm telling you there's an enemy that would like to attack America, Americans, again. There just is. That's the reality of the world. And I wish him all the very best." --George W. Bush, Washington, D.C., Jan. 12, 2009
( இவர் all the very best சொல்வது அமெரிக்கர்களுக்கா, தாக்க நினைக்கும் தீவிரவாதிக்கா)
"First of all, I don't see America having problems." --George W. Bush, interview with Bob Costas at the 2008 Olympics, Beijing, China, Aug. 10, 2008
அமெரிக்காவிற்கு எந்த பிரச்சனையும் இருப்பத தெரியவில்லை னு சொல்ல நினைத்து
அமெரிக்கர்களின் பிரச்சனை எனக்கு தெரியவே இல்லை னு சொல்லிட்டார். பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டார்போல.
இன்னும் நிறையா இருக்கு, but நான் உங்க பொறுமையை சோதிக்க விரும்பலை. அடுத்த முறை நியூஸ் பேப்பர் பார்க்கையில் இவை ஞாபகம் வந்த சரி:))
பயன் தரும் தகவல் ,பகிர்ந்தமைக்கு நன்றி !
பதிலளிநீக்குத ம 1
நன்றி பாஸ்!
நீக்குUseful information, Mythili. :) Trust me I learned a lot, especially "the Bushism"! lol
பதிலளிநீக்குHere is a situation for you! Some people are known to be very sarcastic, most of the time! But, occasionally they compliment some others' work or write-up or article or of such. Now they compliment TRULY! I mean what they say is "HONEST TRUTH". However, people do not believe them and people strongly believe that they are sarcastic here too!
Now, here is a question for you!
Whom we should feel sorry for here? I mean the person who used to be sarcastic all the time or the people who do not believe the HONEST TRUTH spoken at this time? Thanks. :)
its up his idea to build an image of himself. if tat sarcastic one really never bother about of such characterization build on him then its not at all a matter, but after all his best friend or soul mate will understand him.:)) so...we shouldn't feel sorry for both of them:))
நீக்கு//Trust me I learned a lot,// thank you so much!! you made my day:))
நீக்குவீட்டில் குழந்தைகள் படித்தார்கள்.
பதிலளிநீக்குஇதை விட சந்தோசம் என்ன இருக்கு!
நீக்குரொம்ப சந்தோசம் அண்ணா!
த.ம.3
பதிலளிநீக்குஆங்கில வகுப்பு பிரமாதம் தோழி. நேரு பற்றிய தகவல் புதிது எனக்கு..
வாழ்த்துக்கள்!
நன்றி தோழி! மிக்க மகிழ்ச்சி!!
நீக்குதகவல்...?!
பதிலளிநீக்குநன்றி...!
புரியல!!???
நீக்குநன்றி!!
வெகு சிறப்பு...நல்ல தகவல்கள் எளிமையாக விளக்கிய விதம்... உங்கள் மாணவர்கள் நீங்கள் நடத்தும் வகுப்புகளை விரும்பி கவனிப்பார்கள் என்று நினைக்கிறேன் சகோ...
பதிலளிநீக்குநன்றி சகோ!!
நீக்குரொம்ப தம் கட்டி எழுதிருகிங்க நல்ல கீது மேம் ...
பதிலளிநீக்கு(அப்பா ரெண்டு வாரத்துக்கு ஒழுங்கா காபி கிடைச்சுடும்)
உங்கள் கார் அறுபது கி.மி வேகத்தில் புதுக்கோட்டை நகரத்தை கடக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இணங்க நேரு காரை அறுபதில் போக சொல்லிவிட்டு நடந்தார் என்று அப்பா சொல்வார். என்னதான் இருந்தாலும் பாரிஸ்டர் அல்லவா.
நடந்த தூரம் திருக்கோகர்ணத்தில் இருந்து மாலையீடு வரை சாலையில் இருபுறமும் மக்கள் வெள்ளத்தில்...
ரோஜாவின் ராஜா குறித்து எனக்கும் கடும் விமர்சனங்கள் உண்டு.. ஆனால் 1857 புரட்சியை பற்றி நேரு எழுதியிருந்ததை படித்தவுடன் அத்துணை விமர்சனங்களும் பணிமாதிரி கரைந்து போய்விட்டன.. தாங்களும் படிக்கலாமே .. நூல் காலம் தோறும் பிரமணியம் பகுதி இரண்டு..
நன்றி கஸ்தூரி அவர்களே!
நீக்கு// தாங்களும் படிக்கலாமே .. நூல் காலம் தோறும் பிரமணியம் பகுதி இரண்டு.. // நானும் படிக்கலாம்னு தான் நினைக்கிறேன்:)
ரெண்டு நாளா தேடுறேன் .எங்க இருக்குனு சொல்லுறீங்களா ப்ளீஸ் !
வணக்கம்
பதிலளிநீக்குமிக அருமையன விளக்கம்.... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ!!
நீக்குஒரு வாக்கியத்தில் பல பொருள் ஒலிக்கும்படி செய்வதும் உண்டு.
பதிலளிநீக்குஉதாரணம் :
pankaj ! The door is open.
ஆசிரியர் மாணவனை உள்ளே வா அப்படின்னு சொல்றாரா? வெளிலே போலாம். என்கிறாரா ?
எப்ப போறது அல்லது வர்றது உன்னோட சாய்ஸ் அப்படின்னு சொல்றாரோ.
இன்னும் அதிக மீனிங் இருக்குல்லே.
ஒரு தடவை சத்யமூர்த்தி தில்லி சட்ட அவையிலே சொன்னாராம்.
Fifty percent of my colleagues here are fools.
உடனே, அங்கு இருக்கும் அனைவரும் வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு உன் சொற்களை என்று சத்தம் போட,
அவர்,
ஐ ஆம் சாரி, Fifty percent of my colleagues are not fools என்றாராம்.
oxymoron ல் இன்னும் பல உதாரணம் இருக்கே.
எல்லா ஹஸ்பன்ட் சொல்வது: என் அழகிய ராக்ஷசியே..
indecisive decision
agreed disagreement.
எனிவே, ரன் அண்ட் மார்டின் இன்னொரு தரம் புரட்டிப் பார்க்கவேண்டும்.
சுப்பு தாத்தா.
எப்டி சார் இப்படி அசத்துறீங்க!!!
நீக்குரொம்ப கிரேட் சார்! நீங்க இதை படிக்கறதே எனக்கு மிக்க மகிழ்ச்சி!! நன்றி சார்!!
அம்பிக்யுவிடியை தனக்கு சாதகமா பயன்படுத்தின நேருவின் புத்திசாலித்தனத்தை ரசித்தேன். இப்படில்லாம் அழகா உதாரணங்களோட பாடம் நடத்தற டீச்சர் எனக்குக் கிடைச்சிருந்தா ஆங்கில மொழிகூட என் மண்டையில ஏறியிருக்குமோன்னு ஏக்கமே வருதே தங்கச்சி...!
பதிலளிநீக்குஅண்ணா! ரொம்ப சந்தோசம்!!! நன்றி பாலா அண்ணா!
நீக்குஇப்படில்லாம் அழகா உதாரணங்களோட பாடம் நடத்தற டீச்சர் எனக்குக் கிடைச்சிருந்தா ஆங்கில மொழிகூட என் மண்டையில ஏறியிருக்கும். பூரிக்கட்டையில் அடி வாங்கும் போது அம்மான்னு அலறதுக்கு பதிலாக மம்மீன்னு அலறி இருப்பேன்... ஹும்ம்ம்
பதிலளிநீக்குமம்மி பாவம்:))))
நீக்குஇப்படில்லாம் அழகா உதாரணங்களோட பாடம் நடத்தற டீச்சர் எனக்குக் கிடைச்சிருந்தா ஆங்கில மொழி நன்கு கற்று ஆங்கிலத்தில் பதிவு எழுதி அமெரிக்கர்களை சாக அடித்து... ஆனால் அப்படி ஒரு ஆசிரியர் எனக்கு கிடைக்காதால் இப்படி தமிழ் பதிவு எழுதி தமிழர்களை சாக அடித்துக் கொண்டிருக்கிறேன்
பதிலளிநீக்கு//பாடம் நடத்தற டீச்சர் எனக்குக் கிடைச்சிருந்தா ஆங்கில மொழி நன்கு கற்று ஆங்கிலத்தில் பதிவு எழுதி // அமெரிக்காகாரன் கிரேட் எஸ்கேப்!! ROFL :)))))))))))))
நீக்குvocabulary of current politics)
பதிலளிநீக்குஅம்மா ஆட்சியில் கரெண்ட் தான் பாலிடிக்ஸ்
ஆனால் கலைஞர் குடும்பத்தில் 'பவர், தான் பாலிடிக்ஸ்
எப்டி இப்படி !!!!
நீக்குசெம !! சகா அரசியல் (அறுசுவை) பதிவர்னு காட்டுறீங்க!!!
இதிலிருந்து நேரு நிறைந்த சமயோசித புத்தியுள்ளவர் என்று தெரிகிறது. ஏனெனில் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம். அதே போன்று தான் தாங்களும். இப்படில்லாம் அழகா உதாரணங்களோட பாடம் நடத்தற டீச்சர் எனக்குக் கிடைச்சிருந்தா என்னோட நிலைமையும் வேறாகவே இருந்திருக்கும் அம்மு. என் தோழி எவ்வளவு அழகாக பாடம் நடத்துகிறார்.
பதிலளிநீக்குதங்கள் வகுப்பை கற்பனையில் கண்டும் ரசிக்கிறேன் ம்மா அனைத்தும் ரசித்தேன்.
இனியா செல்லம் நன்றி! நம்ம பிரிஎண்ட்ஷிப் கு அப்புறமே நிறைய changes இல்லையா மா:))) ரொம்ப நன்றி மா!
நீக்குஆங்கிலப் பாடம் அருமையாக புரியும் படி எழுதும் விதம் சிறப்பு! நிறைய அறிந்து கொண்டேன்! தொடருங்கள்! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ் சார்!!
நீக்குபுதிய சொற்களையும், பயன்பாடுகளையும் அறிந்தேன். நன்றி.
பதிலளிநீக்குwww.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in
நன்றி சார்!
நீக்குஉங்களுடைய ஒவ்வொரு உதாரணமும் ரொம்ப அருமை சகோ.
பதிலளிநீக்குஉங்கக்கிட்ட ஆங்கிலம் ரொம்ப ஈஸியா கத்துக்கலாம் போல இருக்கே!!!!.
அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள், நான் ரொம்ப சோம்பேறி, அதனால ஒவ்வொரு "கொஞ்சம் Englishpart " சென்ற பதிவுகளோட லிங்க் கொடுத்தீங்கன்னா, எனக்கு ரொம்ப ஈஸியா இருக்கும். (இதைத்தான் வாழைப்பழத்தை உரித்து கொடுப்பதுன்னு சொல்லுவாங்க!!!!)
முந்தய பதிவு என்று போட்டிருந்தேன்,இப்போ தெளிவா போட்டுருக்கேன்:)
நீக்குநன்றி சகோ!!
மிக அருமையான பதிவு. எழுத்தாளர் சுஜாதாவுக்கு பிறகு, இது போன்ற தகவல்களை இப்போதுதான் படிக்கிறேன், அதுவும் அவரின் எழுத்துகளிலுள்ள அதே சுவாரஸ்யத்துடன்.
பதிலளிநீக்குநேருவை பற்றி படித்தபோது, எனது சிறு வயது சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது... ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியிலிருந்து கேரளாவுக்கு சுற்றுலா போயிருந்தோம்... செங்கோட்டை வழியாக கேரளாவுக்குள் நுழைய வேண்டும். எல்லையில், சுங்கசாவடியில் பேருந்தை நிறுத்திய இன்ஸ்பெக்டரிடம் ரூட் பெர்மிட்டை கொடுத்தார் ஓட்டுனர்...
" இது செங்கோட்டா... நீ சாரிக்கோட்டா வழியா போய்க்கோ ! "
என தூக்கி வீசினார் அந்த இன்ஸ்பெக்டர் !
மேட்டர் என்னன்னா... செங்கோட்டை, சாரிக்கோட்டை என தவறாக டைப் பண்ணப்பட்டிருந்தது !
உடன் வந்த ஆசிரியர்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் மசியவில்லை... சட்டென ஒரு ஆசிரியர் பணப்பையோடு இன்ஸ்பெக்டரை சற்று தள்ளி அழைத்துப்போனார்... புன்னைகையுடன் திரும்பிவந்த இன்ஸ்பெக்ட்டருக்கு செங்கோட்டை சாரிக்கோட்டையாக மாறியிருந்தது !
எனக்கு பணநாயகம் அறிமுகமான நிகழ்வை எனது " தேர்தல் திருவிழாவில் " சொல்லியிருந்தேன்... இது எனக்கு லஞ்ச லாவன்யம் அறிமுகமான அனுபவம் !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
//எழுத்தாளர் சுஜாதாவுக்கு பிறகு, // பெரிய வார்த்தை சாமானியன் சார்!!
நீக்குஎனக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர்களில் ஒருவர்!! அதன் தாக்கமாக கூட இருக்கலாம்:) நீங்க சொன்ன இன்சிடென்ட் சுவராஸ்யம் ! தேர்தல் திருவிழாக்கள் படிக்க ஆவலாக உள்ளேன்!! நன்றி சார்!!
இந்த தமிழ்-ஆங்கிலம் கலந்து பேசற ஆளுங்கனால பிரச்னைதானப்பா. நேற்று ஒருவர் சொன்னார். "நாங்க 3 வருஷமா அவங்க வீடில்லதான் ரெண்டுக்கு இருந்தோம்னு". இந்த கருமத்தை ஏன் மூன்றாவது மனிதனிடம் சொல்லுறாரேன்னு நினைக்கையிலேதான் அருகில் இருந்த இன்னொருவர் விளக்கி சொன்னார். இவர் இருந்தது தமிழ் "ரெண்டுக்கு" இல்லையாம், ஆங்கில "Rentக்காம்"
பதிலளிநீக்குஹஹஹா இதே மாதிரிதான் பதிவர் அருணா செல்வம் ஒரு ஜோக் சொல்லி இருக்காங்க
நீக்குஹாஹாஹா சூப்பர்!!!!!!
நீக்குஒரு நல்ல ஜோக்கோடு முதல் முறை வந்திருகிறீர்கள் அண்ணா.
நீக்குஇந்த தமிங்கிலிஷ பத்தி நாம்ம பேசுறதே பெரிய ஜோக்குதான். நானும் அப்படித்தான் பேசுறேன்.
நீங்களும் விசு ஆவ்சம் தானே.. ஜஸ்ட் கிடிங்
நண்பர் முரளிதரன் அவர்களே... மண்டபத்தில் யாரும் எழுதி தந்த ஜோக் இல்லை ஐய்யா! நான் நானேதான் எழுதினேன்.
நீக்குஅன்புச் சகோதரி,
பதிலளிநீக்குதாமதமாகத் தான் வருகிறேன். அதனால் பலருடைய கருத்துக்களைக் காணநேர்ந்தது நன்மையாக அமைந்தது.
M.H. Abrams இன் “ A Glossary of Literary Terms “ ஐத் தமிழில் வாசிக்க நேர்ந்தது போன்ற அனுபவம். அதுவும் வழக்கில் பயன்படுத்தும் உதாரணங்களோடு.
கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதைத் தங்கள் பதிவு காட்டுகிறது.
இதனோடு, oxymoron க்கும் antithesis க்கும் உள்ள வேறுபாட்டையும்
Ambiguities க்கும் Paronomasia வுக்கும் உள்ள வேறுபாட்டையும் விளக்கினால் சுவாரசியமாய் இருக்கும் என்பது என் கருத்து.
பொதுவாக anecdotes பெயர் மாற்றம் பெற்று பலருடைய வரலாற்றில் நுழைந்து விடுகிறது. யாருடைய வாழ்க்கையில் நடந்தது என்பதை அறிய பாடுபட வேண்டியிருக்கிறது. என்னுடைய பேராசிரியர் “Half of this parliament are donkeys!” என சர்ச்சில் கூறியதாகவும், எதிர்ப்பு வரவே “. Half of this parliament are not donkeys.” என்றதாகவும் கூறினார். பின்பு அப்படிக் கூறியவர்
Cornelis Jacobus Langenhoven என்ற ஆப்பிரிக்க இலக்கிய வாதி என்றறிந்தபோது சிரித்துக்கொண்டேன். சுப்புத்தாத்தா சொல்லும் சத்தியமூர்த்தி கதை படித்ததும் இது நினைவுக்கு வந்தது. வேறொன்றுமில்லை.
bushism பற்றப் படித்ததும் சங்க இலக்கியங்களில் வரும் கோசர் இசம் பற்றிக் கூறத் தோன்றுகிறது. “ நன்மொழிக் கோசர் , என்ற அடையோடு பல இடங்களில் அவர்கள் காட்டப்படுகிறார்கள்.
கடைசியாய்,
“ இலன்என்னும் எவ்வம் உரையாமுன் ஈதல்
குலனுடையான் கண்ணே உள ” என்பதற்கு
தன்னிடம் வந்து கேட்பவர்களிடம் இல்லை என்னும் இழிசொல்லைச் சொல்லாமல் அவர்களுக்குக் கொடுத்தல் நல்ல குலத்தில் பிறந்தவர்களுடைய குணம்.
“நான் இல்லாதவன்“ என்னும் சொல்லை யாசிப்பவன் உரைப்பதற்கு முன்பாக அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் குறிப்புஅறிந்து அவனுக்குக் கொடுத்தல் நல்ல குலத்தில் பிறந்தவனிடத்து மட்டுமே உள்ள குணம்.
ஒருவனுக்குக் கொடுக்கும் ஈகையின் அளவாவது, அவன் அதன் பின்னர் வேறெங்கும் சென்று ‘இல்லை‘ என்று சொல்லிக் கேட்காத அளவில் கொடுத்தல். அப்படிக் கொடுப்பது நல்ல குலத்தில் பிறந்தவனுடைய குணமென்றும்
ஒருவருக்குக் கொடுத்த ஈகை பொருள் பெற்றுச் சென்ற அவன் அவனிடம் வந்து யாசிப்பவர்க்கும் இல்லை என சொல்லாது அவன் கொடுக்கும் அளவிற்கு ஈவது நல்ல குலத்தில் பிறந்தவனுடைய குணமென்றும்,
ஒரு குறளுக்கு நான்கு பொருள் கூறுவார் பரிமேலழகர்.
இது pun அல்ல.
இந்த interpretation ஐ எந்த வகையில் அடக்க?
விட்டால் நிறுத்தாமல் தொடர்வேனோ?
நன்றி!
தங்கள் நீண்ட ஆழமான பின்னூட்டத்திற்கு நன்றி சகோ..
நீக்குநாடு என்ன செய்தது உனக்கு என்ற அனக்டோடை கூட ஜான்.எப்.கென்னடி சொன்னதாக படிக்கிறோம் ஆனால் அதை வேறொரு கவிஞரிடம் இருந்து எடுத்தாண்டு இருக்கிறார். (கலீல் ஜிப்ரன் ?)
அந்த நீண்ட கவிதையில் ஒரு அரசியல் தலைவருக்கான கடமைகளை விவரிக்கும்முன் நாடு என்ன செய்தது உனக்கு என்று கேட்காதே நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என யோசி என்று தலைவனைப் பார்த்து கேட்ட கேள்வியை கென்னடி வெகு அருமையாக மக்களிடம் திருப்பி விட்டார். உலகின் பல தலைவர்கள் இலக்கியங்களை எடுத்தாள்பவர்களாத்தான் இருக்கிறார்கள்.ஆனால் மூலத்திற்கு உள்ள மரியாதையை அவர்கள் தருவதில்லை.
//Ambiguities க்கும் Paronomasia வுக்கும் உள்ள வேறுபாட்டையும் விளக்கினால் சுவாரசியமாய் இருக்கும் என்பது என் கருத்து.//
பார்ட் ஏழுக்கு மேட்டர் கிடைத்தது ரொம்ப நன்றி சகோ..
நல்ல பதிவு! நாங்கள் சொல்ல நினைத்த உதாரணங்களை தாத்தா சொல்லிவிட்டார்...அதாங்க சுப்பு தாத்தா.....ஆனால் அழகான ராக்ஷசியேனு நாங்க பாடல.....அந்த வம்புக்கு வரலப்பா நாங்க.......ஹாஹாஹா சுப்பு தாத்தாக்கு ஹாஸ்யம் நாடி நரம்பெல்லாம் ஓடுகின்றது!
பதிலளிநீக்குதமிழிலேயே கூடா இது போன்றவை நிறைய உள்ளன! அதுவும் மேலே விசுawesome சொல்லியிருப்பது போல தங்கிலிஷ்ல பேசினா இன்னும் நிறைய இருக்குதுதான்!!!!..
நாங்க முதல்ல ஒரு லேபல் போட்டு ஆங்கில வகுப்பு மெயினா....பேச்சு வழக்கு இலக்கணம் எல்லாம் எழுதலாம்னு யோசிச்சு (வடிவேலு சொல்றா மாதிரி )பெரிசா ப்ளான் எல்லாம் பண்ணினோம்...அப்புறம் மக்கள மொக்கை போடுவோமோனு (இப்ப மட்டும் என்ன பண்ணுறீங்கனு கேக்கப்டாது) நினைச்சு விட்டுட்டோம்!!...அதை நீங்க அழகா நிறைவேத்திட்டீங்க!....சூப்பர் சகோதரி! Well done!!!!!!!
ரொம்ப நல்ல பதிவு! தொடருங்கள்!
உங்கள் பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்..
நீக்குசீக்கிரம் கிராமர் கிளாசை ஆரம்பிங்க..
என்னைப்போன்ற அப்பாவிகளுக்கு சிறந்த பதிவு.
பதிலளிநீக்குநல்ல பாடம் எடுக்கறீங்க டீச்சர்.... சில விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குதெளிவான குழப்பம்
ஆகா
நன்றி அண்ணா! தம விற்கும் சேர்த்து!
நீக்குதம 9
பதிலளிநீக்குநன்றி!!
பதிலளிநீக்கு