செவ்வாய், 24 ஜூன், 2014

இளைப்பாறும் நெடுஞ்சாலை !

வெயில் உருகும் புறநகர் கடந்து
கருவேலம்புதர் காடுகள் தாண்டி

சிற்றோடை மேல் பாலமாய் உருமாறிய
நெடுஞ்சாலை இளைப்பாற
ஒருபுறம் குளித்துகரையேறி
மறுபுறம் கடக்கும்
மஞ்சள் முகத்து கிராமத்து தேவதைகள்
குழல் நுனி சிந்தும் சிறு கவிதைத்துளிகள்
போதுமாய் இருக்கிறது!!
34 கருத்துகள்:

 1. படமில்லாமலே கவிதை ஏதேதோ காட்சிப் படுத்துகிறது.
  படத்தைப் பார்த்தபின் கவிதை படிக்க விரியும் வரையறைகள் சுருங்குவது போல ஒரு தோன்றல்.
  நன்றாக எழுதுகிறீர்கள் சகோதரி.
  எனது தளத்திற்கு வந்து பின்னூட்டமிட்டதால் பதிலுக்குச் சொல்லுவதல்ல.
  உண்மை.
  நன்றி!

  பதிலளிநீக்கு
 2. கவிதை ரசித்தேன்....
  சாலையோர மரங்கள் இருந்தால் நிழலில் இளைப்பாறலாமே

  பதிலளிநீக்கு
 3. கவிதைக்குகேற்ற படம் அருமை பாராட்டுக்கள் என்னை பொருத்த வரையில் படம் இல்லாமல் வரும் பதிவு பொட்டு இல்லாமல் இருக்கும் பெண்களின் முகத்தை போல

  பதிலளிநீக்கு
 4. மஞ்சள் முகத்து கிராமத்து தேவதைகள் என்பதையே பதிவின் தலைப்பாக இட்டு இருக்கலாம் என்பது என் கருத்து

  பதிலளிநீக்கு
 5. என்னைப் பொருத்த வரையில் சேலை கட்டி வரும் பெண்கள் எல்லாம் தேவதைகள் தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க வூட்டம்மா!? ஓ! அமெரிக்காவுல இருக்குறதால ஜீன்ஸ், மிடிதான் போடுறாங்களா!? அதனாலதான் உங்க கண்ணுக்கு தேவதையா தெரியலியோ!!

   நீக்கு
  2. மறுபுறம் கடக்கும்
   மஞ்சள் முகத்து கிராமத்து தேவதைகள்
   >>
   இப்பலாம் கிராமத்தில் கூட 30 வயசுக்குட்பட்ட பெண்கள் மஞ்சள் பூசுவதில்ல.

   நீக்கு
 6. படமும் அது தந்த கவிதையும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. கவிதைக்காக படமா, படத்திற்காக கவிதையா என வியக்குமளவு மிகவும் பொருத்தமாக உள்ளது. வாழ்த்துக்கள்.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  பதிலளிநீக்கு
 8. குழல் நுனி சிந்தும் கவிதைத்துளிகள் - அழகிய ரசனை. பாராட்டுகள் மைதிலி.

  போதுமாய் என்பதை போதுமானதாய் என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பரிசீலிக்கவும்.

  பதிலளிநீக்கு
 9. கவிதையை ரசித்து படித்தேன் சகோ. படமும் மிக அழகு. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. காண்பதெல்லாம் கவிதையாய் வடிக்கும் திறன். எதையும் தப்பவிடாது கவிதையாய் காணும் உளம். என்ன என் அம்முகுட்டி எப்பிடி எல்லாம் அசத்திது.
  ம் ...ம் நன்றிம்மா வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 11. //வெயில் உருகும் புறநகர் கடந்து
  கருவேலம்புதர் காடுகள் தாண்டி// பாவம் அவர்கள், சிலர் தண்ணீரை வீணாய் இறைத்துக் கொண்டு...
  //மஞ்சள் முகத்து கிராமத்து தேவதைகள்
  குழல் நுனி சிந்தும் சிறு கவிதைத்துளிகள்// அருமை தோழி..
  த.ம.7

  பதிலளிநீக்கு
 12. நெடுஞ்சாலை இளைப்பாற நங்கையர் கூந்தல் நுனி சிந்தும் நீர்த் துளிகள். அழகான வர்ணனை. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  பதிலளிநீக்கு
 13. தலையில் குடம் முளைத்த தேவதைகளை ரசித்தேன் !
  த ம 8

  பதிலளிநீக்கு
 14. “கிராமத்துத் தேவதையின் குழல் நுனி சிந்தும் துளி“ படத்தில் மிஸ்ஸிங்.. அதுதான் கவிதையின் உ ச்சம்.. கூகுள் படங்களை நாமும் திருத்திப் போடும்படி யாராவது கண்டுபிடித்தால் நலலா இருக்கும்ல.. கவிதை அருமை பா.(வழக்கம்போல) பாவம் இப்பல்லாம் இந்தத் தேவதைகள் தண்ணீருக்கு அலைந்து தேவாங்குகளாய்த் திரிவதையும் பார்த்திருக்கிறேன்.என்ன செய்ய

  பதிலளிநீக்கு
 15. ஆங்கில உள்தலைப்பை எடுத்தது தான் சரி. (நான் நினைத்ததை எனக்கும் முன்னே யாரோ சொல்லிவிட்டார்கள்.. அலலது உனக்கே தோணிச்சா?)

  பதிலளிநீக்கு
 16. அஞ்சுகமே நின்கவி ஆழ்ந்த பொருள்கண்டு
  துஞ்சுமோ தோழரின் கண்!

  அருமை! அருமை!
  காட்சியும் கவிதையும் கவர்ந்தது என்னை!

  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
 17. அழகான சிறியகவிதை நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. கவிதையின் நடையழகும்...
  தேவதைகளின் இடையழகும்...
  தேன்... தேன்..
  ரசித்தேன்.
  அருமை.

  பதிலளிநீக்கு
 19. எனக்குப் போதுமானதாய் இல்லை...இவ்வளவு சிறிய கவிதையா?

  பதிலளிநீக்கு
 20. வணக்கம்

  கவிதையின் வரிகள் நன்று இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 21. வணக்கம்

  த.ம 10வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 22. நம்மளமாரி கணிணி முன்னால உக்காந்துகொண்டு பெருசா "வெட்டிமுறிக்க" முயலாமல், "மிதியணி அணியாமல் பூமித்தாயை தங்கள் பாதங்களால் உரிமையுடன் மிதித்து கொஞ்சி விளையாடிக்கொண்டு, உழைத்துக்கொண்டே தோழிகளுடன் நேர்முகமாகவே உறவாடிக்கொண்டு வாழ்வை அனுபவித்து வாழ்ந்துகொண்டு இருக்காங்க இவர்கள்"னு ஒரு பக்கம் இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது பொறாமையாத்தான் இருக்கு, எனக்கு.

  என்ன சொல்லுங்க, சாண்ஸ் கெடைக்கும்போது இந்த ஷூவையை ஷாக்ஸை கழட்டி எறிந்துவிட்டு தரையில் நடப்பதில் ஒரு தனி இன்பம்தான்! :) I am jealous of them! :(

  பதிலளிநீக்கு
 23. படமும் அருமை! கவிதையும் அருமை! ஆனால் இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாமோ??!!!!

  இந்தப் படத்தைப் பார்த்ததும், வறண்ட பாலைவனமாகிய ராஜஸ்தான் பெண்கள் தலையில் அடுக்கி வைத்த பானைகளையும், கையில் ஒரு பானையும் பிடித்துக் கொண்டு பல காத தூரம் நடந்து சென்று தண்ணீர் சேந்துவது நினைவுக்கு வந்தது! ஆந்திராவில் கூட அப்படித்தான்! மரங்கள் இல்லாத பிரதேசத்தில் சுட்டெரிக்கும் வெய்யிலில் ...நினைத்தாலே மனம் வேதனைப் படுகின்றது...இந்தத் தண்ணீர் இல்லா வனங்களில் தண்ணீர் சுமக்கும் எத்தனைப் பெண்களின் கண்ணீர் அந்தப் பானைகளில் இருக்கின்றதோ!!! நாம் இங்கு தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டு இருக்கின்றோம்! தண்ணீரின் அருமை தெரியாமல்!

  பதிலளிநீக்கு
 24. சிறந்த எண்ணங்களின் உடலாக
  தங்கள் கவிதை!

  பதிலளிநீக்கு
 25. படமும் படத்திற்கான கவிதையும் மிக அருமை.......

  பதிலளிநீக்கு