ஞாயிறு, 22 ஜூன், 2014

நீ, பழைய நீ தானா?கண்கள் ஓடிக்கொண்டிருக்கும் போதே
கவர்ந்திழுக்கும் சொற்கள் சில
எச்சில் முத்தமிட்டு இழுத்துவந்துவிடுகின்றன
என்னை உன்னிடம்.


முன்னெச்சரிக்கை இன்றி
முகத்தில் அமிலமூற்றும்
மூர்க்க வார்த்தைகள்
சிலவும் உண்டு .

கடிகாரம் திகைக்க -நாம்
கதை பேசிய காலத்தில்
நாம் கேலிபேசிய
எதிர்க்கட்சி தலைவர்களும்
காதலில் திளைத்த நடிகர்களும்
சேர்ந்தோ, பிரிந்தோ இடம்பெறும்
செய்தித்தாள் புகைப்படங்கள் -இன்று
கேலிசெய்கின்றன  என்னைப்பார்த்து

மீண்டும் வந்திருக்கும் நீ
என் நினைவிலேயே தங்கிவிட்ட
அந்த நீ தானா?

46 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஓ....ஓ... காதல் சுவை ததும்பும் அழகிய கவிதை படிக்க படிக்க திகட்ட வில்லை.அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரிவு என்றால் ஏன் காதல் என்றே கருத வேண்டும்? இது என் தோழி அனிதாவிற்காக எழுதப்பட்டது, ஆனால் எந்த பிரியத்திற்குரியவருக்கும் பொருந்துகிறது இல்லையா சகோ:) நன்றி

   நீக்கு
  2. இங்கு ரூபன் சொன்ன காதல் என்பது அன்பு என்ற அர்த்தத்தில் எடுத்து கொள்ள வேண்டும்

   நீக்கு
  3. நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்!

   நீக்கு
 2. சிறப்பான கவிதை! உவமைகள் அழகு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. ///அந்த நீ தானா?///
  என்ன காதலனுக்கு மரியாதை குறையுது......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க மனைவி எவ்ளோ க்ரேட்டுனு இப்போ தான் புரியுது. காதலனுக்கு மரியாதையா ?!! நான் இதுவரை கஸ்தூரியை பெயர் சொல்லித்தான் அழைக்கிறேன்:) ஹா...ஹ..ஹா...
   அப்புறம் ஒரு திருத்தம், படிக்க ரூபனுக்கு எழுதிய விளக்கம்!!

   நீக்கு

  2. என் மனைவி உங்களை மாதிரி பெயர் சொல்லி கூப்பிடமாட்டார்கள் பக்கதில் இருந்தால் ஒரு லுக் விடுவார்கள் தூரத்தில் இருந்தால் டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று மரியாதைகத்தான் அழைப்பார்கள். அது போல அவர்கள் கூப்பிட்டால் எள் என்றால் எண்ணெய் என்பது போல நானும் உடனே வந்துடுவேன். காரணம் அவ்வளவு அன்பு ஹீ.ஹீ

   நீக்கு
 4. சகா! மிக அழகான காதல் கவிதை.....ஏக்கம் நிறைந்த ஒன்று! ரசித்தோம்!

  பதிலளிநீக்கு
 5. அந்த நீ தானா, அவுங்க தானா?????

  கவிதை அருமை, சகோ. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு


 6. தள்ளிநீ போனாலும் தங்கிடும்கா தல்வலி
  உள்ளிருந்தே வாட்டும் உயிர் !

  அருமை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. மிக மிக அற்புதம்
  இறுதி வரிகள் வெகு நேரம்
  யோசிக்கவைத்தது
  மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களாவது கலாய்க்காமல் யோசித்தீர்களே :(((
   நன்றி சார் த,ம விற்கும்!!

   நீக்கு
 8. என்ன அம்முக்குட்டி ஏக்கம் தரும் அந்த நாள் ஞாபகங்களா wow அருமையான கவிதையும் அழகான படமும் தோழி. வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரிஞ்சுடுச்சா ? உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா???
   ஹா..ஹ...ஹா...நன்றி!

   நீக்கு
 9. கேலியை புறம் தள்ளுங்கள் தேவதையின் கரம் பற்றுங்கள் !
  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. friends ன கலாய்க்க தான் செய்வாங்க. அதுக்குல்லாம் feel பண்ணலாமா:))))
   த,ம விற்கு நன்றி!

   நீக்கு
 10. ஆஹா..'நீ'ங்கள் நினைக்கும் அந்த 'நீ' கொஞ்சம் பக்குவப்பட்டு வயதாகி மாறியிருந்தாலும் உள்ளே அதே 'நீ'யாகத் தான் இருக்குமோ? 'நீ'ங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா?
  அருமையான கவிதை தோழி, பிரிந்தும் சேர்ந்தும் தொடரும் நட்பைப் பாடுகிறது அருமையாய்..
  :) த.ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கிரேஸ் ! ஒரு தோழி இந்த கவிதையை முழுமையாய் புரிந்துகொள்ள முடியும் என்று கருதுகிறேன்:)

   நீக்கு
 11. இதயத்து உணர்வதை இழுத்து வந்து படம் காட்டும் கவிதை வரிகள்!

  அற்புதம்!
  தோழி! உங்கள் பதிவுத் தலையங்கத்தையே நான் உங்களிடம் கேட்கிறேன்...
  எத்தனை அழகிய கற்பனை! அருமை!

  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...ஹா...
   நான் உங்கள் பழைய நான் தான்:))
   நன்றி தோழி!

   நீக்கு
 12. ***முன்னெச்சரிக்கை இன்றி
  முகத்தில் அமிலமூற்றும்
  மூர்க்க வார்த்தைகள்
  சிலவும் உண்டு .***

  தோழி அனிதா அவர்கள் எதோ உணர்ச்சி வேகத்தில் தப்பா சொல்லீட்டங்கங்கறதை "முன் எச்சரிக்கையில்லாமல் முகத்தில் அமிலம் ஊற்றியதாக' இந்த கவிஞை கவிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

  ***மீண்டும் வந்திருக்கும் நீ
  என் நினைவிலேயே தங்கிவிட்ட
  அந்த நீ தானா?***

  IMHO, she will never be same! She may be better or worse than what she was before she "went away"!  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கவிஞை கவிப்பதை // god damn .what an expression!!!!
   ATMO, A rose by any other name would smell as sweet. (courtesy: Shakespeare)
   Ani is always ma Ani:)))

   நீக்கு
 13. சிறப்பான வரிகள், தோழிகளுக்கு உரித்தாக்கியதில் மேலும் சிறப்பு...

  பதிலளிநீக்கு
 14. மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதத்தை ஓர் எழுத்தும் மாற்றாமல் அப்படியே தன் தாய்தந்தையர்க்கு ஃபார்வேர்டு பண்ணுவான் கோவலன். அதுதான் புரிதல். அப்படித்தான் புரிதலில் போட்டிபோடும் நட்பும் காதலும். இரண்டிலும் வெல்வது அப்பழுக்கற்ற அன்பு. அதுதான் இந்தக் கவிதையி்ன் ஊடுபாவாக நின்று, காதலா நட்பா என்று பட்டிமன்றம் நடக்கக் காரணமானது கவிதை நின்று சிரிக்கிறது.. வார்த்தைச் செட்டு கவிதையை கனமாக்கும். உன் கவிதைகளில் அது தானா வந்து உட்காருதே எப்பிடிப்பா... வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அப்படியே தன் தாய்தந்தையர்க்கு ஃபார்வேர்டு பண்ணுவான் கோவலன்.// trend ல கலக்குறதுக்கு அண்ணா போல் ஆள் உண்டா! எல்லாம் தங்கள் ஆசிகள் தான் :)
   //அது தானா வந்து உட்காருதே எப்பிடிப்பா..//நன்றி அண்ணா!

   நீக்கு
 15. கேள்விக்குறியுடனான முடிவு நன்று !

  உங்களின் இந்த கவிதையை படிக்கும்போது பல வருடங்களுக்கு முன்னால் ஆனந்த விகடனில் படித்த கவிதையின் வரிகள் ஞாபகம் வருகின்றன...

  நண்பனின் மரணத்தைவிட‌
  என் மனதை பாதித்தது
  அந்த நட்பின் மரணம் !

  என்பதாக ஞாபகம்...

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ( தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைப்பூவினை படித்து உங்கள் எண்ணங்களை பதியுங்கள். நன்றி )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முதல் வருகைக்கு நன்றி,பேர்தான் சாமானியன் பதிவெல்லாம் அசாத்தியாம இருக்கு னு ஒரு டாக் வலைபூ வட்டத்தில் ஓடுது! தங்கள் வருகையால் மகிழ்ச்சி, இதோ வந்துட்டேன்:))

   நீக்கு
 16. எனக்கு கூட ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே....
  சும்மாகாச்சுக்கும் பழைய நினைவுகளை சொன்னேன். ஹூம்...

  பதிலளிநீக்கு
 17. உணர்ச்சி முட்டும் உண்மை வரிகள்

  பதிலளிநீக்கு