செவ்வாய், 22 ஜூலை, 2014

கைப்பை- 1அமென்!!

உலகின் வெகு சுவாரஸ்யமான விசயங்களில் ஒன்னு பெண்களுடைய கைப்பை என சொல்லகூடிய ஹான்ட் பேக்! ஒரு பெண்ணின் கைப்பை முழுமையாக பார்க்கமுடிந்தால் கூட அவளைப்பற்றி எடைபோட்டுவிட முடியாது. ஆனால் அத்தனை சுலபமாக அவளது கைப்பையையும்  (நம்பிக்கையை) பெற்று விட முடியாது!! இப்போதெல்லாம் கைப்பையின் அளவு குறையக்குறைய அதன் விலை அதிகமாக இருக்கிறது! பயன்படுத்தும் கைப்பையை கொண்டே அந்த பெண்ணின் ரசனையை, வயதைக்கூட  ஊகிக்கமுடியும்.வலைச்சரம் எனக்கு பல புதிய விஷயங்கள் கற்றுத்தந்திருக்கிறது. அதில் ஒன்று கம்போ பதிவுகள். இப்படி பதிவிடுவதால் பல சின்ன விசயங்களுக்காக தனிப்பதிவுகள் வீணாக்கவேண்டாம் அல்லவா? எனவே இனி கைப்பை எனும் தலைப்பில் இப்படி கம்போ போடலாம்னு பார்க்கிறேன்.

டைரி;
         பாரி முல்லைக்கு தேர் கொடுத்த கதையையும், பேகன் மயிலுக்கு போர்வை கொடுத்த கதையையும் கேட்கும் போது அவங்களுக்கு என்ன லூசா என்று தோன்றும். நான்  ஒரு முறை அண்ணா ரவி சார் கிட்ட அதை கேட்கவும் செய்தேன்" ஏன் சார் முல்லைக்கு தன் தேரை கொடுத்த பாரி நடந்தே அரண்மனை சேர்ந்தார்னு பாடத்தில் போட்டுருக்கே, தேரைதானே கொடுத்தார்? குதிரையில் அரண்மனை  திரும்பியிருக்கலாமே என்று? சார் சிரித்த படி" அட! ஆமா மைதிலி, ராஜா குதிரையையும் விட்டுட்டு வரவும், குதிரை முல்லைகொடியை சாபிட்டுடுச்சாம் என்றார். அவர் அப்படிதான் வகுப்பில் சொல்ல முடியாத விளக்கங்கள் என்றால் ஜோக் சொல்லி முடித்துவிடுவார். ஜெயா அம்மா அதற்கு வேறு விளக்கம் கொடுத்தார்கள். பிரபஞ்சனின் "துறவாடைக்குள் தொலைந்த காதல் மனம்" எனும் இலக்கிய ஆய்வு நூல் படித்த போது எனக்கு அம்மா சொன்னது சரிதான் எனத்தோன்றியது!

ஒடோமாஸ்;
      பின்ன எவ்ளோ நாள் தான் கொசுவத்தி சுத்துறது!! அது ஒருகிராமத்துக் கூட்டுக்குடும்பம். பயணம் முடிந்து வீடுவந்து சேர்ந்த அந்த மனிதர் தன் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு மாடியில் இருக்கும் தன் அறைக்குப்போய் பெட்டியில் உள்ள பொருட்களை எல்லாம் தன் அலமாரியில் அடுக்கிவிட்டு உடை மாற்றுவதற்காக கதவை சாத்தமுயன்ற போதுதான் கவனித்தார், அறையின் மூலையில் அந்த ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் அந்த ஒன்பது வயது சிறுமியை.
"பாப்பா, நீ அம்மாகூட ஊருக்கு போகலயாடா?
'அப்பா! நீங்க எப்போ வந்தீங்க?
அடுத்தநாள் மாலை தன் மகள் அழைத்த அப்பா "பாப்பா இப்போ லைட்டை போட்டுக்கிட்டு படிடா' என்றார்'அவள் தந்தை சொன்னதை செய்த போது வெளிச்சம் அறைமுழுக்க வெள்ளமென பாய்ந்தது. மற்ற சராசரி அப்பாக்கள்  என்றால் ஒன்பது வயதில் தராசு அல்லது நக்கீரன் (அப்பா அரசியல்வாதி அல்லவா? அந்த புத்தகங்கள் தான் அப்போது படிக்கக் கிடைத்தன) படிக்கும் மகளின் தனிமை மாற்ற முயன்றிருப்பார்கள். இப்படி லைட்டை மாற்றி இருக்கமாட்டார்கள் என்று பிற்காலத்தில் அவள் பல முறை நினைத்தபோதும் பதினைந்து வயதில் இவள் கையை பிடித்துக்கொண்டு "அம்மா குழந்தை மாதிரிடா! நீ தான் அவள் பார்த்துக்கொள்ளவேண்டும்" என்றவர். இவளுக்கு பதினேழு வயது ஆனபோது புத்தகங்கள் துணைக்கு வைத்துவிட்டு உயிர்பிரிந்தார் மைதிலியின் அப்பா!

பென் டிரைவ்;
   
  நான் ரிபீட் மோடில் போட்டு, இரவெல்லாம் கேட்கும் ஒரு பாடல்


பி.கு ;
முதல் முயற்சி! எப்டி இருக்குனு சொல்லுங்க:) அப்புறம் ஒரு விஷயம்.இது என் நூறாவது பதிவு!! ஐம்பதாவது பதிவில் படமெல்லாம் போட்டேன். இப்போ அனுபவம், நமக்கு மேல ஆயிரம், பத்தாயிரம் பதிவு போட்ட big shots எல்லாம் இருக்காங்க என்ற பாடத்தை தந்திருக்கிறது :))))

59 கருத்துகள்:

 1. இன்னும் பலநூறு பதிவுகள் தங்களால் வெளியிடப்படவேண்டும்.
  நாங்களும் அவற்றை வாசித்து மகிழ்ந்திட வேண்டும்.

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 2. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம2

  பதிலளிநீக்கு
 3. 'கைப்பையின்' பொக்கிஷங்கள் மிக அழகு! குறிப்பாக அந்தப்பாட்டு அருமை! நான் இது வரை கேட்டதில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொண்ணுங்க hand bag பத்தி பொண்ணுங்களுக்கு தானே தெரியும்:))
   மிக்க நன்றி சகோதரி! என்ன ஒரு மென் மெலடி இல்ல?

   நீக்கு
  2. எனக்கு என்ன தோனுதுன்ன பாரி மன்னன் ரொம்ப இளகியமனதுள்ளவர்னு . He cares. ஆண்களே பொதுவாக அப்படிதான் - உங்க தந்தையைப் போல!

   மேலும் பாரி அவர் தன் மனைவிக்கு பிடித்தமான ஹாண்ட் பேக் வாங்கிக்கொடுக்க முயன்றிருந்தார்னா நிச்சயம் அவளை திருப்திப் படுத்தி இருக்க மாட்டார். பெண்மனம் அப்படினு நன்கு அறிந்தவர். :))

   அதனால அப்படி முயலாமல் ஒரு உருப்படியான காரியத்தைச் செய்துயிருக்கிறார். மனைவியின் ஆடம்பரத்தையும் பகட்டையும் வெட்டி பந்தாவையும் ஒரு பொருட்டாகக் கருதாமல், அந்த கொடியின் இன்றியமையாத தேவையைப் புரிந்து அதை சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.

   He was a wise man for sure! :) I am impressed! :)

   நீக்கு
  3. I think your well experienced with hand bag:)) so its a valid point:))
   ஆன பாரி வேந்தன் பற்றிய கமெண்ட் ****just say ignorant is bliss*** பாரி விஷயம், நிலவன் அண்ணா, விஜு அண்ணா மாதிரியான தமிழ் மீன்களுக்கு போட்டப்பட்ட தூண்டில். பாப்போம் அவர்கள் சிக்கினால் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள முடியும். மேலும் நான் மேல குறிபிட்டுள்ள நூல் சங்க இலக்கியங்கள் காட்டும் விழுமியங்களின் ஆணிவேரை படம் பிடித்துக்காட்டுகிறது.
   by the way நீங்க wise man என்று சொன்னது என் அப்பாவையும் சேர்த்து தானே:)) நன்றி வருண்:)

   நீக்கு
  4. உண்மையைச் சொல்லணும்னு பாரியைப் பத்தி யாரோ ஒருவர் சொல்லி, அது இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம்னு ஆளாளுக்கு கற்பனைக் குதிரையை "பறக்க விட்டு" அவரை அனலைஸ் பண்ணுறோம். இதில் உண்மை எவ்வளவு இருக்குனு தெரியவில்லை. ஆனால் உங்க தந்தை பற்றி நீங்களே அழகா சொல்லியிருக்கீங்க. அவர் "wise man" னு கிரேஸின் அழுகையே அதை உறுதிப் படுத்துது. நான் வேற சொல்லி அதை மிகைப்படுத்தணுமா? Sorry to know that you lost him when you were very young, Mythily. :(

   நீக்கு
 4. நூறாவது பதிவு பல ஆயிரம் பதிவுகளை கடக்க

  வாழ்த்துகிறேன் தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அனிதா மேடம்! நேரம் கிடைக்கையில் hang out வாங்க . நீங்க போன கமெண்ட் ல கேட்ட விஷயம் பற்றி பேசலாம்.

   நீக்கு
 5. “கைப்பை” தொடருங்கள் தோழி.

  100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. மைதிலி கொடுத்து வைத்தவள். என் அப்பாவுக்கு இன்றும் குமுதம், ஜூவிலாம் கூட ஏதோ ஆபாச புத்தகம் ரேஞ்ச்தான். அப்பாக்கு தெரியாம திருட்டுத்தனமாத்தான் புத்தகங்கள் இன்றும் படிக்க்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா! நான் கொடுத்துவைத்தவள் தான். முன்பு கொஞ்சம் நாள் சென்சர் பண்ணிவிட்டு அதாவது சில பகுதிகளை நீக்கிவிட்டு வைப்பார். அப்புறம் அதுவும் இல்லை. எட்டாவது படிக்கும் போது எனக்கே எனக்காக அனந்த விகடன் சந்தா கட்டினார் அப்பா. இப்போ வரை படிக்கிறேன்:))

   நீக்கு
 7. 100 வதை கடந்து 101 வதைதொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சகோதரி..

  பதிலளிநீக்கு
 8. செம்மையான தொகுப்பு100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. கைப்பை பற்றி இனிச் சிந்திக்க வேண்டும்:)) உங்க அடக்கம் பார்க்கும் போது நான் இன்னும் பதிவு எழுதக்கற்க வில்லை என்று புரியுது:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பதிவு எழுதக்கற்க வில்லை என்று புரியுது:))//நீங்களே இப்படி சொல்லலாமா சகோ!!!
   //கைப்பை பற்றி இனிச் சிந்திக்க வேண்டும்:)) //ஏதாவது நல்லது நடந்தா சரி:))

   நீக்கு
 10. திருமணம் ஆவதற்கு முன்பெல்லாம் பெண்களோட ஹேண்ட் பேக்ல என்ன இருக்கும்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசையாக இருக்கும். இப்ப என் மனைவியோட ஹேண்ட் பேக்ல என்ன இருக்கும்னு பார்க்க வேண்டியதே இல்லை. ஏன்னா, அதை எடுத்துக்கிட்டு அவுங்க வெளிய கிளம்பினவுடனே, குப்பைங்க தான் என் ஹேண்ட் பேக்ல இருக்குதுன்னு புலம்ப ஆரம்பிச்சுடுவாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணி ரொம்ப அப்பாவியா இருக்காங்களே! இப்படியா உண்மையபோட்டு ஒடைக்கிறது:)) நன்றி சகோ!!

   நீக்கு
 11. கல்யாணவீட்டுக்கு வந்தவங்களுக்கு தாம்புழக் கவர் தருவாங்க அது போல வலைச்சரத்துக்கு வந்தவங்களுக்கு கைப்பை தரீங்க என்று ஒடிவந்து ஏமாந்தேனுங்க.... ஒரு ஏமாற்திலும் ஒரு சந்தோஷமுங்க.. பரிசா கைப்பை கிடைச்சா அந்த நேரம் மட்டும் சந்தோஷம் ஆனால் உங்க நீங்க தந்த கைப் பை தொடர்ந்து வரும் என்று அறிந்து மிக சந்தோஷம் அடைந்தேன்,, கைப்பை ஆரம்பமே சுவார்ஸ்யமாக உள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த விசயத்தில் நீங்க எல்லோரும் தானே முன்னோடி:))
   நீங்க சொன்ன சரி!!

   நீக்கு
 12. //ஒன்பது வயதில் தராசு அல்லது நக்கீரன்///
  எனக்கீடா எங்கிட்ட மல்லுகட்டிகிட்டு இருக்கும் போதே நினைச்சேன் இந்த பய புள்ளை(கஸ்தூரி மன்னிக்க நாக அப்படிதான் பேசுவோம் கண்டுக்காதீங்க்) சின்ன வயசில நாம படிச்ச புக்கை எல்லாம் படிச்சிருகுமோ என்று ஆனா மனசில தோன்றியது இந்த பொட்ட புள்ளைங்களாவது இந்த மாதிரி புக்கெல்லாம் படிக்கிறாதவது அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் மங்கையர் மலர் மஞ்சரி கல்கி அம்புலிமாமா என்றுதான் ஆனா இப்பதானே தெரியுது இவங்க நம்மை போல உள்ள இன்னொரு ரெளடி என்று

  பதிலளிநீக்கு
 13. பதினேழு வயதில் அப்பா பிரிந்தாலும் அதே ஆதரவை ( இந்த ஐம்பது வயதிலும் ) இப்போது உங்கள் வாழ்க்கை துணையான கஸ்தூரி தருகிறாரே....எவ்வளவு அதிர்ஷ்டசாலிங்க நீங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன பண்றது என்னைவிட ஒரு வயசோ அல்லது என் வயதிலோ எனக்கு நண்பனா கமிட் ஆகுறவங்கள "வாடா,போடா, டால்டா னு டா போட்டு மரியாதைய பேசுறது என் வழக்கம், என்னைவிட பத்துவயது(6௦) அதிகமான நண்பனாச்சே!! அதனாலதான் கஸ்தூரியை பற்றி தெளிவா புரிஞ்சு வச்சுருக்கீங்க:)

   நீக்கு
 14. பதினேழு வயதில் அப்பா பிரிந்தாலும் அதே ஆதரவை ( உங்களின்(மைதிலியின்) இந்த ஐம்பது வயதிலும் ) இப்போது உங்கள் வாழ்க்கை துணையான கஸ்தூரி தருகிறாரே....எவ்வளவு அதிர்ஷ்டசாலிங்க நீங்க

  திருத்தப்பட்ட கருத்து

  பதிலளிநீக்கு
 15. இன்னும் நெறைய எழுதுங்க எதிர்பாக்கிறேன் சகோ..வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 16. அடுத்தவங்க டைரி ,கைப்பையை பார்ப்பது நாகரீகமில்லை என்பதால் நீங்களே சொல்லிடுங்க ,ஜெயா அம்மா சொன்னது என்னானு நீங்களே சொல்லிடுங்க !
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை இன்னொரு பதிவில் சொல்லாம்னு பார்கிறேன் பாஸ்:))
   தம விற்கும் நன்றி!

   நீக்கு
 17. ரிபீட் மோடில் போட்டு கேட்கும்பாடல் ரசிக்கவைத்தது..

  நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்..

  கைப்பை அழகு...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்குள் இசை ரசனை ஒத்துப்போவதே நான் ஏற்கனவே உணர்த்திருக்கிறேன் தோழி:))
   நன்றி!

   நீக்கு
 18. நீங்களும் எங்க க்ருப்பில் இணைந்தமைக்கு வாழ்த்துக்கள் (காம்போகுருப்) நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 19. என்ன என்னவோ செய்றீங்க...
  ஓடோமொஸ் அழவைக்கிறது..எவ்வளவு நல்ல அப்பா!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சச்சோ! கிரேஸ் செல்லம் அழுத மனசு தாங்குது :((
   நன்றி கிரேஸ்!!

   நீக்கு
 20. வாழ்த்துக்கள்... 2...!

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

  வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டூ இன் ஒன் கமென்ட் போட்டு கலக்குறீங்க டி.டி அண்ணா!!
   நன்றி !

   நீக்கு
 21. பெண்களின் கைப்பையைத் திறப்பது அநாகரீகம் என்பார்கள்! ஆனால் நீங்க தந்திருக்கற, தரப் போற பையை எப்படிங்க பிர்க்காம இருக்க முடியும்....இப்ப இருக்கற ஃபேஷன் மாதிரி சின்னதா தருவீங்களா....இல்ல பெரிசா தரப்போறீங்களா? எப்படின்னாலும் ஓகேதான் !!!...ம்ம்ம் ஒரு 3, 4 அறை இருக்கறாமாதிரி கொடுங்க......

  இதுல டைரி படிச்சு வரும் பொதே தெரிஞ்சு போச்சு இது உங்க டைரிதான்னு......ச பரவால்லீங்க உங்க காலத்துல இந்த மாதிரி மாகஜின்ஸ் எல்லாம் கிடைச்சுருக்கே....எங்க காலத்துல கொஞ்சமே கொஞ்சம்தான்...அதுவும் வீட்டுல வாசிக்க முடியாது.......

  நல்லருக்குங்க கைப்பை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹ! அப்பவே படிக்க தொடங்கி இருந்தா??? இப்பவே இந்த போடு போடுறீங்களே!! ரொம்ப நன்றி சகா!

   நீக்கு
 22. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
  1. Facebook: https://www.facebook.com/namkural
  2. Google+: https://plus.google.com/113494682651685644251
  3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

  பதிலளிநீக்கு
 23. சகோதரி,

  நமது சமூகத்தில் உங்கள் தந்தையை போன்றவர்கள் மிக குறைவு ! வலைப்பூ ஆரம்பித்ததிலிருந்து, மற்றவர்களின் வலைப்பூக்களை தொடரும் போதெல்லாம் என் மனதில் படும் ஒரு விசயம் உண்டு...

  வலைப்பூ எழுத்தாளர்கள் ஏறக்குறைய அனைவருமே மிக சிறு வயதிலிருந்தே வாசிப்பு பழக்கம் உடையவர்கள். வாசிப்பு என்றாலே பள்ளி பாட புத்தகங்கள் மட்டும்தான் என்ற எண்ணம் நம்மிடம் உண்டு !

  பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு முதல் நாள் கூட பாலகுமாரன் கதை படித்துகொண்டிருந்தவன் நான் ! " இப்படி விட்டு வச்சிருக்கியே... உருப்பட்டமாதிரிதான் ! " என என் பெற்றோர்களிடம் குடும்பத்தினர் கூறும் போதெல்லாம் " அவனுக்கு எதை எப்ப படிக்கனும்ன்னு தெரியும் ! " என் புன்சிரிப்புடன் கூறுவார்கள் என் பெற்றோர்கள். நானும் 430 மதிப்பெண்கள் பெற்றேன் ! இன்று என்னால் வலைப்பூவின் மூலம் உங்களின் நட்பையெல்லாம் பெற முடிந்ததற்கு காரணம் செலவுக்கு கையில் காசில்லாத நிலையில் கூட நான் கேட்ட புத்தகங்களை மறுபேச்சில்லாமல் வாங்கி தந்த என் தந்தை. அந்த விசயத்தில் நாமெல்லாம் கொடுத்துவைத்தவர்கள்.

  ...அனுபவத்துடன் சொல்கிறேன்...ஹேண்ட் பேக் பத்தி சகோதரி சொன்னது ரொம்ப உண்மை ! ஹீ ஹீ ! தப்பா நினைச்சிடாதீங்க.... பிரான்ஸில் நட்பாக பழகும் பெண்களிடம் கூட ‍ஹேண்ட் பேக்கை பிடுங்கி கலாய்க்க வாய்த்திருக்கும் சுதந்திரத்தையே அனுபவம் என்றேன் !

  பிரபஞ்சனின் மற்றுமொரு நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி !

  The second secret of a woman is her face without make up !!! So the secret of her beauty is also inside her hand bag !!!

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !

  http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html

  ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு முதல் நாள் கூட பாலகுமாரன் கதை படித்துகொண்டிருந்தவன் நான் !// அதான் இவ்ளோ அட்டகாசமா எழுதுறீங்க!!
   //பிரபஞ்சனின் மற்றுமொரு நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி !// எனக்கு பிரபஞ்சன் ரொம்ப பிடிக்கும்:))
   //பிரான்ஸில் நட்பாக பழகும் பெண்களிடம் கூட ‍ஹேண்ட் பேக்கை பிடுங்கி கலாய்க்க வாய்த்திருக்கும் சுதந்திரத்தையே // அப்படியான ஆரோக்கியமான நட்புகள் கிடைப்பது பெரிய கிப்ட் தான்:) நன்றி சகோ!!

   நீக்கு
 24. தங்களது 100 ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்!
  த.ம.7

  பதிலளிநீக்கு
 25. நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் தோழி..அன்று சொல்லாமல் விட்டுவிட்டேன்.. :)
  மனம் ஒரு நிலையிலில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோழியின் மனம் எனக்கு தெரியாதா? இதுக்கு போய் வருந்தலாமா? ப்ரீ யா விடுங்க செல்லம்!! நன்றி!

   நீக்கு
 26. நூறு -
  நூறுநூறு ஆகி, ஆயிரம் லட்சம் பதிவு கண்டு,
  ஆயிரம் பிறைகண்டு நிறை(ப்ளஸ்மகி) வாழ்வு வாழ வாழ்த்துகள் பா..
  பிரபலம் ஆயிக்கிட்டிருக்கே...
  கூடவே பிராப்ளமும் வரும் சமாளி... அதுதானே வாழ்க்கை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா! உங்க வாழ்த்துக்காக தான் வெய்டிங்! இதோ இப்போவே அடுத்த போஸ்ட் போடுறேன்:) என்ன அண்ணா இவ்ளோ லேட்:(
   //கூடவே பிராப்ளமும் வரும் சமாளி... அதுதானே வாழ்க்கை?// அப்பாவும் இப்படிதான் பிரக்டிகல் அட்வைசா கொடுப்பாங்க:)) நன்றி அண்ணா:))

   நீக்கு